Tuesday, August 3, 2021

”ஜெனரல் பொன்சேகா இரானுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்க்கு வாய்ப்பு இல்லை” SLMC துணை பொதுச்செயலாளார் நிசாம் காரியப்பர் – கலந்துரையாடல் தொகுப்பு : ராம்ராஜ் ரிபிசி

Nisam_Karriyapparதமிழ்பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் பலமாகவும் ஜக்கியத்துடனும் செயற்படும்போது தான் ஆளும் வர்க்கத்திடம் இருந்து உரிமைகளை பெற்றுகொள்ள முடியும் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணை பொதுச்செயலாளார் நிசாம் காரியப்பர் ரிபிசியில் வியாழக்கிழமை (12 Nov 09) நடைபெற்ற விசேட அரசியல் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்

இந்த அரசாங்கம் சிறுபான்மைக்கட்சிகள் மற்றும் இனவாத கட்சிகள் அனைத்தையும் சின்னாபின்னமாக்கி சிதறடித்த தனது அரசியல் தேவைகளைகளை பூர்த்தி செய்து ஜனநாயக போக்குகளை நிராகரித்து செயற்படுகின்ற நிலையில் தான் ஒரு ஜக்கிய கூட்டமைப்பை உருவாக்கவேண்டிய தேவை ஏற்பட்டது எனவும் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணைப் பொதுச்செயலாளார் நிசாம் காரியப்பர் அதன் அடிப்படையில்தான் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்

சர்வகட்சி குழுவில் பலவிடயங்கள் பேசப்பட்டு அவை ஒரு இணக்கப்ப்ட்டுக்கு வந்தபோதிலும் அதனைக் கூட ஜனாதிபதி நடைமுறைப்படுத்த வில்லை எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி முறையினை இல்லாது ஒழிப்பதாகக் கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் மங்களசமரவீர  போன்றவர்கள் ஆதரவு வழங்கிய அடிப்படையியே ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டார் எனவும் ஆனால் அவர் வழங்கிய வாக்கு உறுதியினை செயற்படுத்தத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு பாரளுமன்றத்தில் அதிநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை தற்போதும் இல்லாமால் செய்யமுடியும் எனவும் அப்படி செய்ய முன்வருவாரானால் ஜக்கிய தேசியக்கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் விடுதலை முன்னணி போன்றகட்சிகள் முழுமையான ஆதரவினை வழங்கும் எனவும் அதன் போது ஒரு ஜனாதிபதி தேர்தல் அவசியம் அற்றது எனவும் தெரிவித்தார்.

இதே போன்று ஜக்கிய தேசிய கட்சியின் பொதுவேட்பாளராக கூறப்படுகின்ற அல்லது கருதப்படுகின்ற ஜெனரல் சரத்பொன்சேகா  ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யபட்டால்  அதிநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை இல்லாமால் செய்வாரா என்று கேட்கப்பட்ட பொழுது அப்படி அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டு அதிநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிக்காவிட்டால் பாரளுமன்றத்தில் ஒரு சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது எனவும் ஏன் எனில் எந்த கட்சியிலும் அதிகாரம் செலுத்துவதற்க்கு அவர்க்கான அங்கீகாரம் இல்லை எனவும் தெரிவித்தார்.

வடகிழக்கு மாகாணம் இணைக்கபட வேண்டும் ஆனால் அது நிபந்தணையுடன் இணைக்கபட வேண்டும் அத்தோடு தமிழ்பேசும் அரசியல் கட்சிகள் இத்தருணத்தில் இணைந்து செயற்படவிட்டால் தமிழ்பேசும் மக்களின் வளங்கலும் நிலங்களும் திட்டமிட்டு பறிக்கபடுவதையும் தவிர்க்கமுடியாது எனவும் எச்சாரித்தார் தமிழ்தேசியத்தின் தேவைகளை சிங்களமக்கள் மத்தியில் கெண்டுசெல்ல தமிழ் தலைமைகள் தவறிவிட்டனவா என கேட்கபட்டபோது தமிழ் தேசியத்தின் தேவைகளை சிங்களமக்கள் மத்தியில் கொண்டுசெல்ல முயற்சி செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் போன்றவர்களை இனவாதிகள் திட்டமிட்ட கொலைசெய்து தமிழ் தேசியத்தின் தேவைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை நிராகரித்தனர் எனவும் சுட்டிகாட்டினார்

ஜெனரல் சரத்பொன்சேகா போன்றோர் இரானுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்க்கு இப்பொழுது வாய்ப்பு இல்லை என கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணை பொதுச்செயலாளார் நிசாம் காரியப்பர் இப்பொழுது இரானுவ ஆட்சிபோன்றே உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துனை பொதுச் செயலாளார் நிசாம் காரியப்பரருடன் அரசியல் அவதானி  மயில்வாகனம் சூரியசேகரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் ஒன்றியத்தின் பிரித்தானியா கிளையின் முன்னால் தலைவர் நஜாமுகமட் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர்  வி.சிவலிங்கம் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும்ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்துரையாடினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  ராணுவ சதி புரட்சி கொழும்பில் நடக்கலாம் என்ற அச்ச்சத்தில் இந்திய படைகள் கூட ராஜபக்சேயின் வேண்டுகோளை அடுத்து நாலு வாரங்களுக்கு முன் உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
  தற்போதைய ராணுவ தளபதிக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையே நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன அவ்வாறே கோத்தபாயவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன
  அமெரிக்காவில் இருந்து பொன்சேகா இலங்கை திரும்பிய பொது அவரின் சிங்க ரெஜிமென்ட் பாதுகாவலர்கள் எல்லாம் இடமாற்றப்பட்டிருந்தனர்

  Reply
 • மாயா
  மாயா

  சரத் பொண்சேகா ஜனாதிபதி தேர்தலுக்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில் , ஜனாபதி மகிந்த , பொதுத் தேர்தலை சந்திப்பதா அல்லது ஜனாபதி தேர்தலை சந்திப்பதா என முடிவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது சரத் பொண்சேகாவுக்கு எதிரான கடும் பிரச்சாரமொன்றை தொடங்க அரசு தரப்பு தயாராகி வருகிறது. பொண்சேகா , அமெரிக்காவுக்கு சென்று நாட்டை காட்டிக் கொடுக்க முனைந்தார் என்றும், யுத்தத்தின் போது தமிழர்களுக்கு சொந்தமான தங்கங்களையும் , பொருட்களையும் பொண்சேகா கொள்ளையடித்தார் என்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்க மகிந்த குழு முனைகிறது. படையினரில் எவராவது அரசியலுக்கு இறங்கினால் அவர்களுக்கு எதிரான பிரச்சாரமொன்றை எவ்வழியிலாவது மேற் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. காறி உமிழும் பரப்புரைகளை மேற் கொள்ள அரசு தயாராகி வருகிறது.

  இதன் மறு பக்கம்தான், அரசுக்கு எதிராக தேர்தலில் இறங்கும் ஐதேகவுக்கு கிடைக்கும் என நம்பப்படும் தமிழர் வாக்குகளை சிதறடிக்க தமிழர் அரசியல் குழுக்களை ஒன்று திரட்டும் பணி ஒன்றுக்கு மறைமுகமாக அரசு உதவி செய்து வருகிறது என நம்பப்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் சுவிஸில் எதிர்வரும் கார்த்திகை மாதம் 19,20,21,22 ஆகிய திகதிகளில் கூட்டப்படவிருக்கும் இரகசிய மாநாடு ஆகும்.

  Reply
 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  மக்களால் தெரிவு செய்யப்பட ஜனாதிபதி சரத் பொன்சேகா வீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் நாட்டுமக்களுக்கும் சரத் பொன்சேகா செய்த பச்சை துரோகமே அவரின் சதி புரட்சி முயற்சி.
  புலிகளை ஒழிக்க பயங்கர கொடூர திமிர் பிடித்த ராணுவ தளபதி தேவைப்பட்டது. ஆனால் புலி ஒழிக்கப்பட்ட பின் இத்தகைய தளபதி தேவைப்படவில்லை என்பது வெளிப்படை..
  தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்ற சரத் பொன்சேகா இலங்கை அரசியலில் கோமாளியான ரணிலுடன் கூட்டு சேர்வதே ஒரு கோமாளித்தனம்
  கடைசி நேரத்தில் தானும் தேர்தலில் குதித்து தனது நரி வேலையை ரணில் செய்தாலும் செய்வார்.

  Reply
 • Thamil
  Thamil

  While brave patriot forces gave their life to get rid of LTTE, the son-in-law of Sarath Fonseke, Danuna Tillakaratne profits from every bullet fired in the war. As exclusive agent of the Pakistani arms dealer and ISI agent Ahmed Nissar he got $2 for every 100bullets procured and $20 for every shell. His company HiCorp is made up of the relatives of the Former Air force Commander, and were involved in purchase of Migs from Ukraine, uniform and telecommunication equipment from China. Food rations from Malaysia and even tank transporters from Russia.

  Hicorp supplied ration packs, which were past their shelf life and bought cheaply from a Malaysian importer of Chinese made ration packs. According to both, Brig Shavendra Silva of the 58 division and Col. Suraj Bansajayah of 58-3 brigade who were involved in the heavy fighting, and whose soldiers bore the brunt of the terrorists attack, the ammunition supplied by the Pakistani arms dealer Ahmed Nissar, failed to explode. At least 30% of the ammunition fired by soldiers, failed to explode. So not only Tillakaratne wasmaking money on the bullets he was also even party to supplying duds to soldiers.

  Hicorp , Nexsel and British Bourne – Companies of his son in law made millions of dollars in commission. Sarath Fonseka is a war hero who embezzled nation’s money through his son in law’s companies to build a political empire for the next presidential election.

  Army Hq security camera system was awarded to Hicorp under the influence from then commander Gen fonseka – Hicorp has failed to implement the system as specified in the agreement but Gen Fonseka got involved and asked to pay them more money to finish the project in which hicorp and some Brigadiers who were involved in this matter made millions of rupees. Gen Fonseka gave up the security of the army HQ to a company (His son in laws company) allowing his son in law to make millions of rupees when his company had not even installed a security camera system or has an office space in Colombo! The system started to fall apart even before army made the payment to hicorp and nobody questioned this matter due to any backlash from the general.Col Rohan Wijesundara influenced many of the tender boards
  How about the Gas mask deal gave away to son in law’s company?
  How about millions of dollars in commission from Tanks deal?
  How about the commission from satellite deal? Th son in law’s company still supply satellite images to Sri Lanka army and made millions of dollars in commission
  How about the commission from Uniforms and boots?Fonseka awarded the boots and uniform tender to the son in law’s company who represented as an agent for Brig Tilakeratne’s company (Son-in-law’s father’s company)
  How about the commission from MBR?
  How about commissions from Mig deal?
  How about communication equipments deals from Brg Bashir and NRTS?
  How about the commissions from the compasses the son-in-law supplied to army?

  Reply
 • Thamil
  Thamil

  இன்றுவரை சொந்தமாக இலங்கையில் ஒரு பரப்பு காணியே வாங்க நினைக்காத சரத் பொன்சேகா அமெரிக்க கிரீன் காட்டை எடுத்து மகள்மாரையும் இலங்கை சரியில்லை என்று அமெரிக்காவில் குடியேற்றிவிட்டு நூற்றுகணக்கான கோடி பெறுமதியான இராணுவ கொன்றாக்ட்களை மருமகனின் கம்பெனிக்கு எடுத்து கொடுத்து கோடிகணக்கில் மக்கள் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு தற்போது கொழும்பில் மாதம் மில்லியன் வாடகையில் குடியிருக்கிறார். மில்லியன் வாடகை கொடுக்க பணம் எங்கிருந்து வருகிறது ?

  Reply