பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சிவ்மார்ஷல் ராவ் ஒமார் சுயெல்மான் இலங்கைக்கு வியாழக்கிழமை வருகை தந்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விமானப்படைத்தளபதி எயார் சிவ்மார்ஷல் ரொஷான் குணதிலக மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளை அவர் சந்திக்கவிருக்கிறார். தமது விஜயத்தின்போது கட்டுநாயக்க விமானப் படைத்தளத்திற்கும் அவர் செல்வார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.