தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார், கிளிநொச்சி, துணுக்காய் உட்பட நிவாரணக் கிராமங்களுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது-
கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களும் நாளை திங்கட்கிழமை காலை புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
நாளை காலை 7.00 மணிக்கு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் வவுனியா புறப்பட்டுச் செல்லும் இவர்கள் வவுனியா விமானப்படை தளத்திலிருந்து ஹெலிக்கொப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
முதலில் மன்னார் பகுதிக்கு விஜயம் செய்யும் இவர்கள் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் துணுக்காய் பகுதிக்கும் விஜயம் செய்வர். கிளிநொச்சி பகுதிக்கும் செல்லும் இவர்கள் வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் செல்லவுள்ளனர்.
திங்கட்கிழமை காலை முதல் மாலைவரை இப்பகுதிக்கு விஜயம் செய்யும் கூட்டமைப்பினர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுடனும் உரையாடுவர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட அனுமதி தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வந்ததும்தெரிந்ததே.
palli
போங்கோ; நல்லதயே பேசுங்க, அவர்கள் குறைநிறைகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்; எம் பி யாக போகாதீர்கள், மனிதராக போங்கள், முடிந்தால் அந்த மக்களிடம் இதுவரை நீங்க விட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்க; எக்காரணம் கொண்டும் அரசியல் பேசாதையுங்க, அது உங்களுக்கு மட்டுமல்ல அந்த மக்களுக்கும் எதிர்காலத்தில் ஆபத்தாகி விடும்; எம் பி என்னும் அந்த அடையாளத்தை கொழும்பில் விட்டுவிட்டு போங்க; திரும்ப வந்து அதை வைத்து ஏதாவது அந்த மக்களுக்கு ஏதாவது செய்யலாமா என யோசியுங்கள்; அதைவிட்டு எம்பி என முகாமில் போய் பந்தா காட்டினால் அந்த மக்களை கட்டுபடுத்துவது அங்கு கடமையில் இருக்கும் பாதுகாவலருக்கு கடினமாய் போகும்; இப்படி எல்லாம் இந்த கூட்டமைப்புக்கு அறிவுரை சொல்ல வேண்டும் போல் உள்ளது; எதுக்கு வம்பு என்பதால் ஆதங்கத்தை நம்ம தேசத்தில் எழுதுவோமே;
kamal
போகும்போது சனங்களுக்க தேவையான ஏதாவது உதவிகளுடன் போங்கோ. உங்கடை முகங்களை காணவில்லையென்று யாரும் அங்கு தவிக்கவில்லை
chandran.raja
நான் நினைக்கிறேன் மன்னார் வவுனியா கிளிநொச்சி இடங்களில் தாட்டு-புதைத்து வைத்திருக்கிறவற்றை எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டு கம்பிநீட்டப் போகிறார்கள் என்று. முகாம்களுக்கு போகமாட்டார்கள் முகாம்மக்கள் சில புலிகளை அடித்துக்கொண்ட செய்தியைக் கேள்விப்பட்டிருப்பார்கள். போனால் முள்ளுக்கம்பிக்கு வெளியே தான் நின்று பார்ப்பார்கள். அந்த நேரம் இவர்கள் கோலத்தைப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன்.
Thaksan
ஒண்டைக் கவனிச்சனீங்களே? முகாமுக்கு போகமுதல் ஒரு தீர்மானம் எடுத்திருக்கினம். வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் தமிழர் தாயகம்> சுயநிர்ணய உரிமை என்பதுதான் தங்கட இறுதி தீர்மானம் எண்டு இண்டைக்கு சொல்லியிருக்கினம். தமிழீழத்துக்கும்(புலிக்கோசம்) மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி(டக்ளஸ் கோசம்) கோரிக்கைக்கும் இடையால புகுந்து விளையாடுகினமாம். புளட் சித்தரின்ட கோசம்(13 அரசியல் திருத்தம் +++) தான் பறிபோகப் போகுது. அதுதான் போனகிழமை சந்தித்து கதைச்சவையோ?? அது சரி> தமிழரசுக் கட்சியை தான் வளர்க்க வேணும் எண்டு மாவையின் செயலர் இண்டைக்கு சுடரொளியில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். சிறீகாந்தா கிழடுகள் தமிழ் அரசியலில் இருந்து ஒதுங்கவேணும் எண்டு கேட்டிருக்கிறார். என்னதான் நடக்குது நாட்டில??
மாயா
//என்னதான் நடக்குது நாட்டில??//
பழைய படம் , கலரில வருது. ஆனால் கதை ஒன்றுதான். பெல்பொட்டம் மாதிரி?
Thaksan
அகதிகளை (வேடிக்கை) பார்க்கப்போன கூட்டமைப்புக்காரரை சனம் கழுத்தைப் பிடிச்சு கொல்லாத குறை தானாம். ஆமியோட சேர்ந்து போனதால அரும்பொட்டில தப்பிச்சினமாம். வன்னிச் சனத்துக்கு தான் தெரியும் வருத்தம் என்ன? வந்த காரணம் என்ன?வென்று. எமனுக்கே இடியப்பம் தீத்தி தப்பி வந்தவையெல்லோ??