நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் புதிய தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளார். கேப்டன் டிவி என்ற இந்த தொலைக்காட்சி எதிர்வரும் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பை ஆரம்பிக்கவுள்ளது.
இந்தத் தொலைக்காட்சிக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என பெரிய விளம்பரமெல்லாம் கொடுத்திருக்கிறார் விஜய்காந்த்.
இந்த தொலைக்காட்சி மட்டுமல்லாமல், புதிய பத்திரிகையும் ஆரம்பிக்கவுள்ளாராம். இது வாரப் பத்திரிகையாக முதலில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாளிதழாக மாறும் என்கிறது தேமுதிக வட்டாரம். ஏற்கெனவே மூன்று இணையதளங்களைத் ஆரம்பித்துள்ளார் விஜய்காந்த்.