வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியிருந்த வேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வவுனியா செயலகத்தில் காட்சிப்படுத்தப்படும். வன்னி சென்று திரும்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு மீள்குடியமர்வு மற்றும் அபிவிருத்திக்குமான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம் பெற்ற சந்தப்பில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.
நேற்றுமுன்தினம் வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் கொண்ட குழு, நேற்று பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியது. அகதி முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேற்றைய சந்திப்பில் தாங்கள் விவரமாக எடுத்து விளக்கியதாக அக்குழுவில் அங்கம் வகித்த என்.சிறிகாந்தா எம்.பி. தெரிவித்தார். நேற்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர் தெரிவித்தவையாவது:
*முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்ந்தவர்களைக் கைது செய்யும் செயற்பாடுகள் சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு முழு விசாரணைகள் முடிவுற்ற நிலையில் மீள் குடியமர்த்தப்பட்டவர்கள், தொல்லைகள் எதுவும் இன்றி வாழ அனுமதிக்க வேண்டும்.
* இடம்பெயர்ந்த மக்கள் வாழும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களைக் கைது செய்யும் போது, அவர்களது உறவினர்களுக்கு “ரசிது” வழங்க வேண்டும்.
* முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி ஆகியவற்றுடன் மேலதிகமாக மரக்கறி வகைகளை வழங்க வேண்டும்.
*போதியளவு பால்மா கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
*மீளக்குடியமர்ந்தவர்களுக்குப் போது மான அளவு கொடுப்பனவு வழங்க வேண்டும்