நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக நேற்றுவரை 58,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இவ்வனர்த்தங்களில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள் ளதுடன் கண்டி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 40 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் மேற்படி நிலையத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் மழை தொடரும் எனவும் இரவு நேரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதால் மின்னலிலிருந்து பொதுமக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.