சவூதி அரேபியாவில் புனித ஹஜ்ஜுக்குச் சென்றோரில் நான்கு பேர் இன்புளுவென் சியா நோயினால் மரணமடைந்துள்ளனர். சுமார் 25 இலட்சம் மக்கள் இம்முறை ஹஜ் கடமைக்காக மக்கா, மதீனா நகரங்களில் கூடுகின்றனர்.
இவர்களில் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாகவும் மொரோக்கோ, சூடான், இந்தியா, நைஜீரியாவைச் சேர்ந்தவர்களென்று சவூதிஅரேபிய சுகாதார அமைச்சு அறிவி த்துள்ளது. 17 வயதுச் சிறுமியும் 75 வயது மிக்க முதியோருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
புனித ஹஜ்ஜுக்காக சவூதிஅரேபியா வருவோர் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவதுண்டு. இவ்வாறு சான்றிதழ்களைப் பெற்று வந்தோரில் இருபது பேருக்கு இன்புளு வென்சியா கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இவர்களில் 12 பேர் தடுப்பூசி ஏற்றப்பட்டனர். நான்கு பேர் வைத்தியசாலைகளில் அனு மதிக்கப்ப ட்டுள்ளனர்.
நான்கு பேர் உயிரிழந்தனர்.சவூதிஅரேபியாவில் இம் முறை 25 இலட்சம் மக்கள் ஹஜ்ஜுக்காக வரவுள்ளதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விசேடமாக மருத்துவ ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவ நிலையங்களும் சேவையிலுள்ளன. மதவைபவங்களுக்காகப் இலட்சக்கணக்கானோர் கூடும் இடமாக சவூதிஅரேபியா உள்ளது.