சந்திரனுக்கு நாய், குரங்குகளை அனுப்பிப் பரிசோதிப்பது போல் ஈழத்தமிழர் பிரச்சனைகள் நோர்வேயில் தான் பரீட்சிக்கப்படுகின்றன. காலாவதியான வட்டுக்கோட்டையைக் கொண்டு எவ்வளவு காலத்துக்கு மக்களை ஏமாற்றி மாறிமாறி ஓடப்போகிறீர்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கொண்டுதிரிந்த கி.பி அரவிந்தனே அதை கிழித்து பிரித்து எறிந்துவிட்டாராம். இதற்கு அவையினரின் அவியல் என்னவென்றால் கிபியை யாரோ வாங்கிவிட்டார்கள் என்பதுதான். புலியின் காலத்தில் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களைத் துரோகிகள் என்றார்கள். இன்று விலைபோனவர்கள் என்கிறார்கள். இப்படிக் காலத்திற்குக் காலம் கடைவிரித்து நன்றாகவே புலிவியாபாரம் செய்கிறார்கள். இறுதியில் புலம்(ன்)பெயர்ந்தவர்கள் புலிகளையே வித்துவிட்டார்கள்.
நோர்வேயில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கதாசிரியர்கள் என்று பலர் இருந்தபோதிலும் சென்ற 15.11.2009 நடைபெற்ற சுத்தமாத்துத் தேர்தலை மக்கள் மத்தியில் போட்டுக் கிழிப்பதற்கு ஒருவரும் முன்வராதது வேதனைக்குரியது. ஆயுதக் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த பின்பும் மௌனமாக இருக்கும் நோர்வே எழுத்தாளர்களே! உங்கள் வாய்களையும் கைகளையும் உணவுண்ண மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நாளை உங்கள் கதவுகள் தட்டப்படும், பின் உடைக்கப்படும். அப்போதும் பேசாமல் இருங்கள்.
ஈழத் தீர்மானத்தை எடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினரே சிந்தனை வாதங்கள் ஜதார்த்தத்துக்கு உதவாது என்று அதைக் கைவிட்டு வேறு பல தீர்மானங்களுக்கும், ஒப்பந்தங்களுக்கும் உடன்பட்டார்கள். திம்புகூட அப்படியாக உருவான ஒன்றுதான். தமிழீழம்தான் முடிந்தமுடிவு என்று நின்ற புலிகளே திம்புத் தீர்மானத்துக்கு ஒத்துவருகிறோம் என்றார்கள். இறுதியில் தமிழர்களுக்கு தருவதைத் தாருங்கள் என்று நின்றார்கள். இதுகூடத் தெரியாமல் புலமும் புலனும் பெயர்ந்த புண்ணாக்குகள் புலிவாலைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்களே. தமிழீழத்துக்காக ஜனநாயகவழியில் போராடிய கூட்டணியினரோ புலிகளால் கொன்று குவிக்கப்பட்டனர். இதன்பின் புலத்தில் என்ன புதிதாக ஜனநாயகம் வேண்டி இருக்கிறது? ஜனநாயக, ஆயத போராட்டங்கள் இரண்டுமே தோல்வியில் முடிந்த ஜதார்த்தங்கள். இதைக்கூட புரிந்துகொள்ள அறிவில்லாதவர்களை புலன்பெயர்ந்தவர்கள் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது. அவர்களுக்கு எதற்கு அரசியல். அரை அவியலைத்தான் தின்னப்போகிறோம் என்று அடம்பிடித்தால் நீங்கள் வாழும் நாடுகளில் ஈழம்கேளுங்கள். வன்னி மக்களை விட்டுவிடுங்கள் வன்னிப்போருக்கு என்றும் வன்னிமக்களுக்கு என்றும் திரட்டிய பணங்கள் எங்கே. அதைக் கொண்டு வாருங்கள் முதலில். அன்பின்பு பிரதிநிதித்துவத்தைப் பற்றிப் பேசலாம்.
நோர்வேயில் நடைபெற்ற அரை அவியல்களின் மந்தைகளுக்கு தேசியப்பட்டியல் பிராந்தியப்பட்டியல் என்று பட்டிகட்டி விட்டார்கள். அதற்குள் நின்று சிலர் பா பா என்று கத்தினார்கள். இவர்கள்தான் தேசியபட்டியல்காரர்கள். தேசமே இல்லாத மோசமான தேசியவாதிகள். பிறதேச பிரஜாவுரிமை கொண்டவர்கள்.
(Photos: TamilNet)இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியதுமான தகவல்கள் தேசத்திலோ வேறு இணைத்தளங்களிலோ தொடர்ந்தும் வரலாம். இவர்கள்தானாம் நோர்வேயின் பிராந்தியக் கட்டுப்பாட்டாளர்கள். முஸ்லீம்களையும், சிங்களவரையும் வடக்கு கிழக்கில் இருந்து கலைத்துவிட்டு தமிழீழம் கேட்டு நந்திக்கடலில் குதித்தோரின் வாரிசுகள். நோர்வேயிய மக்களை கலைத்துவிட்டு நோர்வேயில் ஈழம் அமைக்கப்போகிறார்களா? நோர்வே மக்களுக்கு இனி வாழ்க்கை நோ வேதான் (No-way). இந்த நோர்வே அவையின் கூத்துக்களை நோவேயிய அரசுக்கும் நோர்வே மக்களுக்கும் சரியாக எடுத்துக் கூற ஒரு சரியான ஆள் நோர்வேயில் இல்லையா? பிரிவினைவாதிகளால் நோர்வே சட்டத்தை அனுசரித்துப் போக முடியாதாம்; மக்களிடையே ஒற்றுமை பேணவேண்டும் என்கிறதாம் சட்டம். அவையின் திட்டம் அதுவல்லவே.
இந்தத் தேர்தலை வைத்து எந்தப் பாராளுமன்றத்துக்குப் போகப்போகிறார்களோ தெரியவில்லை. இங்குள்ள மக்களையோ ஈழத்திலுள்ள தமிழர்களையோ பிரதிநிதித்துவப் படுத்த நீங்கள் யார்? இந்தச் சர்வாதிகார உரிமையை தந்தது யார்? இவர்கள் கிட்லரை விட மோசமான நாசிகள் என்பதை ஏன் நோர்வேவாழ் தமிழ் தங்கங்களால் சொல்ல முடியவில்லை. அங்குள்ள மக்களின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்து அவர்களுக்காகப் போராட அங்கே மக்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் அங்கேயே உருவாகுவார்கள். பிரபாகன் என்ற தமிழ்இனஅழிப்பாளனும், கொலை வெறியனும், உங்கள் பிரதிநிதிகளும் அங்கே அம்மக்களிடையே தான் உருவானார்கள். புலம்பெயர் நாடுகளிலுள்ள அப்பாவித் தமிழ் தொழிலாளர்களை போர், விடுதலை என்று சுரண்டி தம்மை வளர்த்த புலிகளையும், பிரபாகரனையும் அழித்ததோடு நின்றுவிடாமல் இன்று நோர்வே நாட்டு மக்களுக்குப் படங்காட்டவும் நோர்வே நாட்டை நாசம் செய்யவும் தலைமை, பிரதிநித்துவம் என்று கொடி கொண்டு கோலோச்சத் திரிகிறார்கள் இந்தக் கொடியவர்கள். இவர்களுக்குக் கொம்பு சீவுபவர்கள் இருக்கும்வரை இவர்கள் காட்டில் மழைதான். இவர்களின் உண்மை முகங்களை அறிந்தும் இவர்களுக்கு தூபங் காட்டுபவர்களை என்ன என்று சொல்வது? கெடப்போகிறேன் பிடி பந்தயம் என்றால் யார் இவர்களைத் தடுக்க முடியும்?
பியோனார் முக்ஸ்னெஸ்: இவர் ஒரு நோவேயியர் சிவப்புச் சட்டைக்காரர். பெரும்பாலும் இவர் சார்ந்தகட்சி கட்டுக்காசை இழந்தே வந்திருக்கிறதாம். தேர்தலில் வாக்களிப்பவர்கள் பிறப்பில் தமிழராகவோ, தமிழர்களுக்குப் பிறந்தவர்களாகவோ அல்லது தமிழர்களைத் திருமணம் செய்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதுதான் அவையின் அரையவியல் சட்டம். தாம் உருவாக்கிய யாப்பையே மீறி ஒரு நோவேயியரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது அரை குறை அவை. இந்த முக்ஸ்னெஸ் என்பவர் எந்தத் தமிழிச்சியையும் திருமணம் செய்ததாகத் தெரியவில்லை. காந்தர்வமணங்கள் கணக்கில் எடுக்கப்படமாட்டா. வாக்களிக்கவே தகுதியற்றவர் எப்படி தேர்தலில் நிற்கமுடியும்? இதைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத அரையவியல்கள் தேர்தல் நடத்தினார்களாம். இனி அவையின் காட்டில் பணமழைதான்.
இந்த முக்ஸ்னெஸக்குத்தான் அதிகவாக்குக்கள் (1864) பதிவாகியிருந்தன. தமிழே தெரியாத ஒருவன் தமிழர்களுக்கு தலைமை தாங்கப்போகிறானாம். இவருக்கு எம்பிரச்சனைகளைச் சொல்ல மொழிபெயர்பாளர்களை அல்லவா கொண்டு திரியவேணும். இங்கேயும் அதிகார வெறியைப் பாருங்கள்; நோர்வே மொழி தெரிந்த தமிழர்கள்தான் பிரச்சனையை கூறலாம் என்ற நிலை வந்துள்ளதா இல்லையா? இதில் இருந்து என்ன தெரிகிறது. வல்லமையுள்ளது தான் வாழவேண்டும் என்ற புலிக்குணம் தெரியவில்லையா? எம்மை ஆழ்வதற்கு வெள்ளையன் ஒருத்தன்தான் சரியானவன் என்பது தெரியவில்லையா? 500 வருடங்களுக்கு மேல் வெள்ளையர்களுக்கு கீழ் அடிமையாக இருந்து அடிமை உணர்வில் ஊறிப்போய் வெள்ளையனுக்கு அடிமையாகியே நாறிப்போன சமூகத்தின் வேடிக்கைகளை உலகமக்களே பாருங்கள். இவர்களுக்கு சுதந்திரம் விடுதலை ஒரு கேடா. சுயமாகவே தன்னுள் விடுதலையடைய முடியாதவர்களுக்கு எதற்கு விடுதலை, சுதந்திரம். இச்சொற்களையே உச்சரிக்க அருகதையற்றவர்கள் இவர்கள்.
ஆதித்தன்: இவரோ ஒரு சுதந்திரமாகத் திரியும் சுத்துமாத்து. தமிழ்முரசம் எனும் புலிகளின் பிரச்சாரப்பீரங்கில் இப்படியொரு வெடிவைத்தாராம். ”தான் போராளியும், முதன் முதலில் சயனைட் உண்டு உயிர்நீர்த்த உரும்பிராய் சிவகுமாரனின் நண்பராம்”. இந்த ஆதியெனும் பொய்யன் பிறந்தது 1967ல். சிவகுமாரன் இறந்ததோ 1974ல். சிவகுமாரன் இறக்கும்போது இவருக்கு 7வயது. சிவகுமாரன் இவருக்கு சிலவேளை தூக்கி வைத்துப் பால் குடுத்திருக்கலாம். சிவகுமாரன்தான் தனது தந்தை என்று கூறியிருந்தால் கூட நம்பியிருக்கலாம். பெயருக்கும் புகழுக்குமாக மாற்றுக்கருத்தாளிடம் இருந்து மாறிப்போன ஆதி போன்றவர்களின் பொய்களை நம்பும் மக்கள் இருக்கும் வரையும் அவர்கள் காட்டில் மழைதான். அரசியல் அறிவிலும் ஆதிக்குப் பாதியில் வந்ததால் எல்லாமே பாதிதானாம். அரசியல் என்று வந்தபின் சபையில் சொல்லும் பொய்களை அவையில் போட்டு உடைப்பது கடமையல்லவா.
ரமணன்; தர்மசீலன்: இவர்களுக்கு ஏன் வோட்டுப் போட்டார்கள் என்று பார்த்தால் அவன் டொக்டர் இவன் இஞ்சினியராம். இஞ்சினியர் டாக்குத்தர்களுக்குத்தான் எல்லாம் உண்டு என்று அவர்களுக்கு மட்டும் தான் பெண்குடுக்கும் கலாச்சார வாரிசுகள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான். இனி டாக்குத்தருக்கும் இஞ்சினியருக்கும்தான் அரசியலும் தமிழ்ஈழமும்.
இதுபோலவே ஏதோ தேர்தல் எண்டார்கள் போட்டோம்: என்ன புள்ளடிதானே போட்டால்போச்சு: அவர் எனக்கு நல்லபழக்கம், இவர் வரச்சென்னார் போய் போட்டனான்: தமிழ் மக்களுக்காக பேசப்போகிறோம் என்றார்கள் அதனாலை போட்டனான்: எனக்கு ஒரே குழப்பமாய்தான் இருந்தது. அவை எங்களோடை நல்லமாதிரி அதனாலை போனனாங்கள் என்பது போன்ற காரணங்களுக்காகவும் வோட்டு வேட்டு வைத்தார்கள். எதற்கு வோட்டுப் போடுகிறறோம் என்று தெரியாமலே வோட்டுப் போட்டவர்களை மந்தை என்று வர்ணிக்காமல் வேறு எப்படி அழைக்கமுடியும். முக்கியமாக ஜெயசிறீ என்பவரைத்தவிர அரசியல் அனுபவமுள்ளவர்கள் இப்பட்டியலில் யாரும் இல்லை என்கிறார்கள்.
அரையவியல்களின் அவை யாப்பின்படி 50 சதவீதமானவர்கள் வோட்டுப் போட்டால் மட்டுமே இந்த தேர்தல் செல்லுபடியாகும் என்றார்கள். அவையின் அவியல்படியே 18வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் சிங்களவருடன் 8772 என்பதாகும். நோர்வே அரசின் புதுப்பிக்கப்படாத கணக்குப்படி 8582 என்பது அரச அறிக்கை. புதுப்பிக்கப்பட்டால் இது 10000தைத் தாண்டும் என்பது வேறுகணக்கு. நோர்வேக்கு தமிழர்கள் வரத்தொடங்கியதே 1960ல். தொழிலுக்கு என்றும், பாடசாலை பல்கலைக்கழகம் பின் அகதி என்று தமிழர்கள் காலம் காலமாய் நோர்வேயில் கொட்டுண்டார்கள். நோர்வேயில் ஈழத்தில் பிறந்த 18வயதுக்கு மேற்பட்ட தமிழர்கள் விசா இன்றி சட்டவிரோதமாக இருப்பவர்களே 3000 மேல் என்கிறது பொலிஸ் அறிக்கை. இவர்கள் மட்டுமே வோட்டுப்போட்டிருந்தால் அவைக்கு அவித்தவர்களை விட வோட்டுக்கள் கூட விழுந்திருக்கும்.
அவையின் கணக்குப்படியே நாம் கணக்கெடுத்தாலும் 50சதவீதத்தை எட்டாது. புதுப்பிக்கப்படாத கணக்குப்படி இலங்கைத் தமிழர்கள் ஆண்கள் 4491 பெண்கள் 4101. மொத்தம் 8582. அவைக்கு வந்த வோட்டுக்கள் அவையின் கணக்குப்படியே 2767. வீதாசாரப்படி 32.2 வீதம். அவையின் அவியல்களைப் பாருங்கள் கீழே.
(Photos: TamilNet)இவர்கள்தான் நோர்வேயின் பிராந்திய பருந்துகள். இந்த அரசியல் சூனியங்கள்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போகிறார்களாம். பணருசி கண்ட பூனைகள் சும்மாவா இருக்கப் போகின்றன. நோர்வே தமிழ்தங்கங்களே பணங்களை எடுத்துத் தயாராக வைத்திருங்கள் மாவீரர் தினத்துக்கு குலுக்கிக்கொண்டு வருவார்கள். எல்லா நாட்டிலும் குலுக்கத் தொடங்கி விட்டார்கள்.
மேலுள்ளவர்களுக்கான அவையின் பட்டியல்:
Votes polled: 2076
• Sivaganesh Vadivelu (1600)
• Rajendhrum Ponnuthurai (1597)
• Sivarajah Vallipuram (1546)
• Kannan Nagendram (1523)
• Mary Florida Judin Francis (1470)
• Rajaratnam Veluppillai (1465)
கணிதம் தெரிந்த சிறுவர்களிடம் இந்தக் தொகையைக் கூட்டச்சொல்லுங்கள் 2076 வருகிறதா என்று பார்ப்போம். ஒருவருக்கு 5 வோட்டு என்றால் சுமார் 10380வோட்டுக்கள். சரி 7 வோட்டு என்றால் 14532 வோட்டுக்கள். இங்கே களிவுகள் வந்ததாகத் தெரியவில்லை. களிவுகளுக்கு எப்படிக் கழிவு வரும் என்று கேட்கக்கூடாது. இவர்கள் பிணங்களை எண்ணி எண்ணியே கணக்குப் போடப் புலிகளால் பழக்கப்பட்டவர்கள் இப்படித்தான் போடுவார்கள். அவை சொல்வதை அப்படியே நீங்கள் கேட்க வேண்டியதுதான். ஏன் எதற்கு என்று தெரியாமல் வோட்டுகளையும் போடவேண்டியதுதான். இதுதான் புதிய ஜனநாயகம். இத்தேர்தலிலுள் பெரிய தில்லுமுல்லு என்னவென்றால் ஒருவர் பிராந்தியதுக்கு 7 வோட்டும், பிரதேசத்துக்கு 5 வோட்டும் போடலாமாம். அப்போதுதானே தொகையைப் பெரிதாகக் காட்டலாம். வோட்டுப் போடப் போனவர்களுக்கும் இந்தவிசயம் தெரியாதாம். மேலுள்ள எண்களோ கணக்குகளோ சோடிக்கப்பட்டதல்ல. அவையை ஆட்டித்திரியும் தமிழ்நெட்டில் இருந்தே எடுக்கப்பட்டது.
மேற்குப் பிராந்தியத்தில் பிராக்குப் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜயசங்கர் அசோகன் என்பவரும் வெள்ளிபார்த்துப் போட்டியிட்டு வென்றுள்ளாராம். வெள்ளிபார்க்கும் வெங்காயங்கள் இருக்கும் வரையும் இவர்கள் காட்டில் பணமழைதான். இனி எல்லோரும் தேர்தல் நடத்தலாம். தேர்தலில் நிற்கலாம். ஏன் எதற்கென்று தெரியாமல் வோட்டும் போடலாம்.
நோவேயிய குடியுரிமையை வைத்துக் கொண்டு வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அங்குள்ள மக்களிடமே போராட்டம் என்று பணம் திரட்டி தம்வங்கி வைப்பகங்களை நிரப்பும் இவர்கள் வன்னி மக்களைப்பற்றிப் பேசவோ பிரதிநிதப்படுத்துவோ அருகதையற்றவர்கள். நோர்வேயில் அடித்த காசுகளைப் மனச்சாட்சிப்படி கொடுக்க வக்கில்லை, வன்னிமக்களைப் பற்றிக் பேசுவதற்குப் புறப்பட்டு விட்டார்கள். புலிக்கென்று வாங்கி தங்கள் பணமூட்டையை நிரப்பிய பணங்களை எடுத்த முதலில் வன்னிமக்களுக்கு அனுப்புங்கள். அதன்பின் அவர்களைப்பற்றிப் பேசலாம்.
இந்தியாவையும் ஒரு வெள்ளைக்காரிதான் ஆளுகிறாள்; இலங்கைத் தமிழர்களை நோர்வேயில் ஒரு வெள்ளைக்காரன் ஆட்சிப்பொறுப்பு ஏற்றிருக்கிறான். காலணித்துவம் எம்மிடையே கால்கடுக்க நிற்கிறது. உயிர் கொடுத்து உயிர் பிழைத்து நிற்கும் ஈழம்வாழ் எம்முறவுகள் புலம்பெயர் புண்ணாக்குகளுக்கு சரியான பாடம் புகட்டுவார்களா? இன்று இவ்வளவு மக்களையும் அனாதைகளாக்கிக் கொன்று குவித்தது துவைத்தது அவையினர் என்பதை யார் எப்போ உணரப்போகிறீர்கள். இந்த வைரசுகள் எந்தநேரம் எப்படி வருவார்கள் என்பதை யாராலும் உணரமுடியாது. வைரசுகளுக்கு மருந்தும் இல்லை. தொற்றினால் தொற்றியதுதான். முடிவு சாவுதான். நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவை பன்றிக்காச்சல் போல் எம்நாடுகளுக்குள்ளும் பரவும் சாத்தியங்கள் அதிகமாகவே உண்டு. இந்தச் சாத்தான்களை நாட்டுக்குள் அனுமதிப்பதே அவமானம். இந்த மனிதவிரோதிகளை ஆணிவேருடன் அறுத்து விட முயற்சியுங்கள்.
மாவீரர் தினம் வருகின்றது. புலிகளால் பலாற்காரமாக அல்லது புலிகளை இரட்சகர் என்று நம்பி ஏமாந்து தன்னுயிர் நீர்த்த வீரர்களுக்குமாய் எங்கள் கண்கள் கசியும். புலிகளால் கொன்று குதறப்பட்ட ஒவ்வொரு மாற்று இயக்கத்தவர்களுக்குமாகவும், போரில் அப்பாவிகளாய் உயர்நீர்த்த எம் உடன்பிறப்புக்களுக்காகவும், புரியாது புலிப்பாசறைக்குப் போன பிள்ளைகளுக்காகவும், ஒரு நாள், ஒரு பொதுநாள் தெரிவு செய்யப்பட்டு துக்கதினம் அனுஸ்டிப்பது முக்கியமானது.
santhini
“ஆதித்தன்: இவரோ ஒரு சுதந்திரமாகத் திரியும் சுத்துமாத்து. தமிழ்முரசம் எனும் புலிகளின் பிரச்சாரப்பீரங்கில் இப்படியொரு வெடிவைத்தாராம். ”தான் போராளியும்இ முதன் முதலில் சயனைட் உண்டு உயிர்நீர்த்த உரும்பிராய் சிவகுமாரனின் நண்பராம்”. இந்த ஆதியெனும் பொய்யன் பிறந்தது 1967ல். சிவகுமாரன் இறந்ததோ 1974ல். சிவகுமாரன் இறக்கும்போது இவருக்கு 7வயது. சிவகுமாரன் இவருக்கு சிலவேளை தூக்கி வைத்துப் பால் குடுத்திருக்கலாம். ”
இப்படித்தானே கவிஞர் சேரனும் உரும்பிராய் சிவகுமாரனின் நண்பன் என்று ரைகர்ஸ் ஒவ் லங்கா எண்ட நாராயன் சுவாமியின் புத்தகத்தில் பொய் சொன்னதை நட்சத்திரன் செவ்விந்தியன் தேசத்தில் பின்வருமாறு அம்பலப்படுதிதயிருந்தார்.
“வயது தொடர்பாக சேரன் செய்த இன்னொரு மோசடி உரும்பிராய் சிவகுமாரன் சம்பந்தமானது. தான் 1973 – 1974 காலப்பகுதிகளில் சிவகுமாரனுடன் நெருங்கிப் பழகியதாகவும் சிவகுமாரன் ஒரு அமைதியற்ற பிறவி என்றும் அவர் ஒரு இரவு முழுவதுமே ஆயுதப் போராட்டம் ஒன்றின் தேவையை வலியுறுத்தி விவாதித்துக் கொண்டிறுப்பார் (பக்.28) என்றும் சேரன் Tigers of Lanka (Third Impression, 1995) என்ற நூலின் ஆசிரியர் நாராயன் சுவாமியிடம் கூறியுள்ளார். சிவகுமாரன் பிறந்தது 1950 இல். சேரன் 1958 இல். சிவகுமாரனின் ஊர் உரும்பிராய். சேரனின் ஊர் அழவெட்டி. சேரன் பல்கலைக்கழகத்துக்குப் போன பின்னரும் ஆயுதப் போராட்டங்களோடு சகவாசம் வைத்துக்கொள்ளாதவர். சேரன் தன்னுடைய 15, 16 வயதுகளில் (1973 : 1974) பள்ளியில் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று பால்வடியும் முகத்தோடு வன்முறைப்பக்கம் போகாது நல்ல பிள்ளையாக இருந்தவர். அப்படியான சேரன் தன்னைவிட எட்டு வயது கூடிய, அக்காலப்பகுதிகளில் மறைவிடங்களில் வாழ்ந்த ஒரு புயலான சிவகுமாரனுடன் நெருங்கிப் பழகினார் என்றால் சிவகுமாரன் என்ன கம்பி மஸ்தானா? (என்னச் சேரன்! வரலாற்றின் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நீங்கள் நிறைந்திருக்க வேண்டுமென்ற உங்கள் பரிதாபத்துக்குரிய Grandiose ஆசை எங்களுக்குப் புரிகிறது. ஆனால் பொய்யை சொல்கிறபோது பொருந்தச் சொல்ல வேண்டாமா”
http://thesamnet.co.uk/?p=8491
-சாந்தினி.
palli
இவர்களை பார்க்க மாவீரர் படம்தான் நினைவு வருகிறது, ஆனால் இவர்கள் அப்படியல்ல மாவீரரை வைத்து ஒரு சின்ன பெட்டிகடையாவது துறக்க நினைக்கும் குட்டி வியாபாரிகள், இது எனது வெள்ளோட்டம்;;
தொடரும் பல்லி;;;;
Muslim
சாந்தினி உங்கள் விவாதம் மற்றும் கருத்து சிறப்பாக இருக்கின்றது. ஆனால்> 1990ம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்களை குறித்த மணித்தியாலத்திற்குள் வெளியேற்றியது என்ன உண்மையில்லையா? அவ்வாறு ஏன் இங்கு நடக்காது.
ஆனால்> இங்கு நீங்கள் ‘கம்பி மஸ்தானா’ என யாரைக் கூறுகின்றீர்கள். இதில் இருக்கின்ற விளக்கம்தான் உங்களுக்குத் தொpயுமா? மீண்டும் மீண்டும் ஏன் இந்த முஸ்லிம்களை வித்தியாசமாகக் கூறுகிறீர்கள்.
ஒரு விடயம் கூறுவதற்கு முன்னர் சிந்திக்காமல் இருப்பதற்கு உங்கள் துரநோக்கு அறிவு எங்கே?
பிற மதம்> சமுகம். மனிதா;களை மதிக்கும் பண்புக்ள வளர வாழ்த்துகிறேன்.
MBBS
இதிலை பலருக்கு கோதபாயவுடன் தொடர்பாம்.
பார்த்திபன்
தங்களுக்காக எந்த மாற்றத்தையும் எப்போதும் செய்து பிழைக்கும் கூட்டமிது. வெள்ளை ஒன்று எந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டதென்று மண்டையை உடைக்க வேண்டாம். இன்று அற்ப வாக்குகள் பெற்றும், பெருவெற்றி என்று பிதற்றும் இந்தக் கூட்டத்திற்கு, அந்த வெள்ளை தான் தலைமை. நாளை இவர்கள் சுருட்டப்போகும் அத்தனைக்கும், அந்த வெள்ளையிலேயே பழி போட உதவுமல்லோ. அன்று தான் அந்த வெள்ளையும் தலையில் கை வைத்து தான் மோசம் போனதை உணர்ந்து கொள்ளும்………..
நிலவு
“முக்கியமாக ஜெயசிறீ என்பவரைத்தவிர அரசியல் அனுபவமுள்ளவர்கள் இப்பட்டியலில் யாரும் இல்லை” என்கிறார்கள். ஜெயசறீ அக்காவே தலைவரை 2 வருடங்களுக்கு வெளியே வரவேண்டாம் பாதுகாப்பு கருதி மிகக்கவனமாக இருக்கும்படி அவரது அரசியல் சாணக்கியத்தால் தலைவருக்கே அட்வைஸ் பண்ணுகிற அளவிற்கு அரசியலில் பாண்டித்தியம் பெற்ற ஆள் கண்டியளோ! வானொலியிலை வாறவ இப்ப தொலைக்காடிசியிலை வாறததற்கு கொஞ்சம் ஆசைப்படுகிற மாதிரிக்கிடக்குது. தன்னைத்தானே புலிஎன்று சொல்லி தன்னை புலியாக வளர்த்து இன்று யார் கெட்டாலும் வெல்லலாம் பட்டியலிலை ஜெயித்து வாக்குறிதிகளை அள்ளி வீசுகின்றார். விரைவில் தமழிழம் பெற்றுக்கொடுப்பது தானாம் அவரது நோக்கம் என்ற சாடையாக கயிறுவிடத் தொடங்கியுள்ளாவாம். தமிழீழம் கிடைத்தாலும் தன்ரை பிள்ளைகளை அங்க கொண்டு போகமாட்டாவாம்.
palli
சில திருமணங்களில்(சைவ) ஜயர் மணமகன் மணமகள் இருவருக்கும் பட்டபகலில் அருந்ததி வெள்ளி காட்டுவார், நானும் பலமுறை அந்த வெள்ளியை பார்க்க ஆசைபட்டு அண்ணாந்து பார்த்து கழுத்துக்கை பிடிச்சதுதான் மிச்சம், ஆனால் இந்த நோர்வே கெடுகுடியை பார்க்கும்போது ஜயர் காட்டியது உன்மையாக இருக்குமோ என யோசிக்கிறேன்,
இதைதான் சொல்லுறுத கரும்பிலை எறும்பு ஊர சக்கரை கட்டி மல்லுக்கு வந்திச்சாம் என,
MBBS
ஜெயசிறி பற்றி மிகவிரைவில் ஒரு செய்தி வரும். அதே நேரம் உங்கள் மக்களவை காறர் கனபேரடைய உறவினர் வீட்டுக்கு நித்தம் இப்ப இலங்கையிலை பொலிசார் போயினமாம்.
accu
//இந்தியாவையும் ஒரு வெள்ளைக்காரிதான் ஆளுகிறாள்//குலன். இதில் குலனுக்கு என்ன பிரச்சனை? புலியை அழித்ததில் கோபமா?
பாபு
பல்லி! எங்கிருந்தையா உந்த ஞானம் வந்தது. நீங்கள் ஒரு தமிழ் பண்டிதர் ஜயா; நிங்கள் யாரு என்று சொன்னால் உங்களிட்டை என்ரை பிள்ளைகளை தமிழ் கற்க அனுப்ப ஆவலக உள்ளேன் அந்தப்பாக்கியத்தை என் பிள்ளைகளுக்காக தருவீர்களா? “ஜயர் மணமகன் மணமகள் இருவருக்கும் பட்டபகலில் அருந்ததி வெள்ளி காட்டுவார்” இதை தவிர உந்த அரந்ததி காணும் மாட்டுமந்தைகளை வேறு எந்த வார்த்தைகளால் விபரிக்க முடியும். உந்த ஜயர் கூட்டத்தை (மக்களவை காறர்)ஆகாயத்திலை தேடவேண்டாம் என்றும் இனி குனிஞ்சு தேடச் சொல்லுங்கோ எங்காவது தமிழீழம் தெரியக்கூடும்.பாபு
palli
// பல்லி! எங்கிருந்தையா உந்த ஞானம் வந்தது//
பாபு ஒரு இயக்கம் அடித்தால் பரவாயில்லை எல்லாரும் தன்பாட்டுக்கு கேட்டு கேள்வி இல்லாமல் அடித்தால் வேறுஎன்னதான் வரும்; பாபு சொன்னா நம்ப மாட்டியள்; புலி கொண்டுபோய் அடித்தார்கள்; புலி ஏன் கொண்டுபோய் அடித்தார்கள் என கழகத்தார் அடித்தார்கள் இப்படி பல
தியாகத்துக்கு மத்தியில் வந்த பித்தமில்லா வார்த்தைகள்தான் உங்களை கவர்ந்ததோ??
//என்ரை பிள்ளைகளை தமிழ் கற்க அனுப்ப ஆவலக உள்ளேன் ::
பாபு தமிழ் உனர்வின்பால் இந்த பிள்ளைபிடிகாரரிடம் தமிழை ரமிலாக படிக்க அனுப்பிவிடவேண்டாம்;
//ஆகாயத்திலை தேடவேண்டாம் என்றும் இனி குனிஞ்சு தேடச் சொல்லுங்கோ எங்காவது தமிழீழம் தெரியக்கூடும்:://
உன்மைதான் ஆனால் நீங்க சொன்னது கிடைக்குதோ இல்லையோ பெற்றோலாவது கிடைக்குமல்லவா??
தொடர்ந்தும் பல்லியை வம்புக்கு இழுங்கள் பாபு;
Kulan
நிலவு; எம்பிபிஎஸ்! எனக்கு தனிப்பட யாரையும் தெரியாது. தகவல்களை நோவேயிலும் தளங்களிலும் திரட்டிதான் இக்கட்டுரையை எழுதினேன். இதை நோவேயில் இருப்பவர்கள்தான் இதை எழுதியிருக்க வேண்டும். எது நடந்தாலும் சரி வாய்மூடி மெளனியாய்தான் இருப்போம் என்று அடப்பிடிக்கும் நோர்வே எழுத்தாளர்கள் செய்திருக்க வேண்டிய வேலையை நான் இதற்கென்று பயணம் செய்து தகவலகளைத் திரட்டியே இதை எழுதினேன். தேர்தலில் நின்றவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியில் நோவே வாழ் என்நண்பர்கள் உறவுகள் சொன்னார்கள். தொடர்ந்த அவைக்காரர் அவை அவித்தால் எல்லோரையும் சந்திக்குக் கொண்டு வரவேண்டியது கடமை அல்லவா.
Kulan
// இந்த நோர்வே கெடுகுடியை பார்க்கும்போது ஜயர் காட்டியது உன்மையாக இருக்குமோ என யோசிக்கிறேன்
இதைதான் சொல்லுறுத கரும்பிலை எறும்பு ஊர சக்கரை கட்டி மல்லுக்கு வந்திச்சாம் என// இதுதான் பல்லி எதைச்சொன்னாலும் ஒரு காஸ்யத்துடன் சொல்ல வல்லவர்.
Kulan
////இந்தியாவையும் ஒரு வெள்ளைக்காரிதான் ஆளுகிறாள்//குலன். இதில் குலனுக்கு என்ன பிரச்சனை? புலியை அழித்ததில் கோபமா// அக்கு
நிச்சயமாக இல்லை. இந்த பாழ்பட்ட கீழத்தேயத் தேவாங்குகள் வெள்ளை என்றதும் கடவுள் பெரியவன் என்று எண்ணுகின்றனவே. ஆனை விழுந்து கிடந்தாலும் ஆள் உயரம் என்பதை விளங்காத கறுப்புக்களாக இருக்கிறோமே என்ற வேதைனைதான்.
Kusumbo
நோவேயில் ஆதி என்பவரைப்போட்டு தாளிக்கிறார்களாம் கராட்டி சிவா எனும் சிவகணேசனை வைவிட்டுவிட்டார்கள். அடித்துப்போடுவான் என்ற பயமோ? குலன் நீர் வெளிநாட்டுக்காரன் தானே பயப்படாமல் எழுதியிருக்கலாம் தானே?
palli
குசும்பு சிவாவை குலன் வாங்க தேவையில்லை; அவரை அவ ஆத்துகாரரே(புளி) கட்டம்போட்டு தாக்குவதாக கேள்வி; அந்த கெடுபிடியில்தான் வடிவேலுவையும்(தந்தை) கூட சேர்த்து கொண்டு சிவாவை சில காலம் (மனசாட்ச்சி) தூங்க வைத்து விட்டு பிள்ளை கருவாட்டை மீனாக்கி மீனை கடலிலே நீத்த விட்டு அளகு பார்க்க வந்திருக்கிறார்; கறுப்பு சட்டை போட்டால் மட்டும் போதுமா? சிறிதேனும் பகுத்தறிவு வேண்டாமா??
அது சரி சுருட்டலுக்கு பின்னடிக்கு உதவும் என நினைத்துதான் கராட்டியோ கரவெட்டியோ பளகினாரோ தெரியவில்லை, இருப்பினும் இந்த பாரிஸ் வாழ் புலிகளின் உண்டியல் மன்னர்களுக்கு சில ஆண்டு தேன்னிலவுக்காக சிறை செல்லும்படி தீர்ப்பாமே, புரிந்தால் சரிதான்;
ஒரு தன்மனிதனால் பல குடும்பங்கள் நடுதெருவுக்கு வரும்போது எப்படி அவரது குடும்ப பாதிப்பை எண்ணி அவரை இனம் காட்டாமல் இருக்க முடியும்; ஆக பல்லியின் நிலையில் மாற்றம் தேவையா? அல்லது வியாபாரிகள் மக்களை வாழவிட வேண்டுமா? கருத்துகள் கடன் வாங்கபட கூடாது என்பது என்கரு;
சந்தனம்
ஈழம் என்ற சொல்லின் பொருள் விளக்கம் என்ன???
சந்தனம்
கனடா பத்திரிகை கதிரொலியில் நோர்வே மக்களவையின் வாக்கெடுப்பை ஒரு கேலியாக கனடாவில் ஒருநாள் கடைக்கு இடியப்பம் வாங்கசெல்லும் தமிழ்மக்கள் தொகையே வாக்குபோட்டார்கள் என்று.
palli
குலனின் கட்டுரையில் பின்னோட்டம் இடவே பயமாக உள்ளது, காரனம் எதோ இருவரும் சொல்லி பேசி செய்ததாக என் காதில் கேக்கவே பலர் இருமுகிறார்கள்; அது எனக்கு கவலை இல்லை,ஆனால் நிதானமான ஒரு கட்டுரையாளன் பாதிக்கபட கூடாதல்லவா? அதனால் அடக்கி எழுதுகிறேன், ஆனாலும் முடியவில்லை,
நான் வாழும் நாட்டில் நாடுகடந்த பொல்லாப்புக்கு ஆள் தேவை,
விசா இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம்,
தகமைகள்,
(1) தமிழ் பேச தெரிய கூடாது (சிறப்பு)
(2) வயது 18 தாண்டகூடாது (சிறப்பு)
(3)ஈழ பிரச்சனை ஏதும் தெரியகூடாது,
(4) பொருளாதார ஆசை இருக்க வேண்டும்;
(5) மனிதரை மதிக்க கூடாது;
(6) புலியென புருடா விட வேண்டும்;
(7)கோஸம் அதுவே தமிழ் ஈழம்;
(8) தெரியவேண்டியது வட்டுகோட்டை,
(9) தெரியகூடாதது உயிரின் அருமை,
(10) தூக்க வேண்டியது மிருகத்தின் கொடியை;
இத்தனை தகமையும் உள்ளவர்கள் கீழ் உள்ள முகவரியுடன் தொடர்பை ஏற்படுத்தவும்,
கேடு கெட்ட ரமில் ஈலம்;
மே/ பா;நாடு கெடுத்த ரமில் ஏலம்;
26/27 கார்த்தைகை தெரு;
சர்வதேச ரோடு;
காசுகாரன் பேட்டை;
இதுதாண்டா ஈழம்;
T.P. 18 05 2009.
ஈமைல்;பரதேஸ்.புளி;
மேலதிக தொடர்புகளுக்கு பல்லி பல்லி;;
Jananayagam
தலைவரைப்பற்றி கதைக்ககூடாது, இயக்கத்தைப்ப்றி பேசாதே என்று வாய் பூட்டி வைத்த அரசியல் தலைமை இன்று தடுமாறுகிறது.
முதல்முதலாக் நோர்வேத்தமிழர்கள் உலகத்துக்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்கள்.ssb (statistisk sentral byro) தரவின்படி கள்ள வோட்டைக் கழித்தால், 10636 பேருக்குப்பதிலாக 2100 பேரே வாக்களித்து ஈழத்தமிழர் பேரவையை செல்லாக்காசாக்கி விட்டார்கள். ஒரு சர்வாதிகாரி 20 %
மக்களால் தெரிவு செய்யப்பட்டால் அதை உலகம் ஏற்றுக்கொள்ளலாமா?
80 % மக்களெங்கள் வேண்டுகோளை ஏற்று தேர்தலை பகிஷ்கரித்தார்கள். நன்றி ஐயா நன்றி. புலிகள் தான் ஏகபோக பிரதிநிதிகள் என்று துவக்குக்காட்டிச் சொன்ன காலம் போய்விட்டதே. எம்மைப்போலவே இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்கச்சொன்ன எல்லா நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!
இந்தத் தேர்தல் பிழையாக நடந்ததையும் தோல்வியில் முடிந்ததையும் ஒப்புக்கொண்டு, தேர்தலை ரத்துச்செய்து புதிய தேர்தலை வேறுவிதமாக நடத்த யோசிக்கும் தேர்தல் குழுவின் பெரும்பான்மைக்கும் நன்றி.
அந்த முடிவை மாவீரர் மேடையில் அறிவிக்காமல் அதற்கு முன்னரே அறிவியுங்கள். நன்றி. புலிகளுக்கு வால்பிடித்தால் தியாகி, மாவீரர். எதிர்த்தால் துரோகி. 80% நோர்வே தமிழர்கள் துரோகிகள் ( Bergan 90 % துரோகிகள் ) நன்றி துரோகிகளே! மற்ற நாடுகளில் இந்த மாதிரித்தேர்தல் விளையாட்டுக்களில் பலரும் இறங்காமல் எச்சரித்த நோர்வே மண்ணின் மணிகளுக்கு நன்றி ஐயா!! நன்றி!!
தேர்தலில் நின்றவர்களை தேடிச்தேடிச் சுட்ட ‘தலை’, உயிரோடிருந்திருந்தால் இந்ததத் தேர்தல் நடக்க விட்டிருக்குமா??
( ஒரே ஒரு கேள்வி : 27 ம் திகதியோடு TCCயைக் கலைக்கப் போகிறீர்கழாம். மெய்யா?. அதுதான் TCC யை விட பெரிய அமைப்பு வந்து விட்டதே . உங்கள் கொள்கை – ஒரு தலைவர் – ஒரு இயக்கம். ஒருதலைவன் போய்விட்டால் – ஒரு இயக்கம் தானே மிஞ்சி இருக்கின்றது, அது NCET தானே? )
SSB (statistically Sentarl byro-www.ssb.no)
தரவு நீங்கள் நேரடியாக சரி பார்த்துக்கொள்ளுஙகள்
Results of yesterday today NCET directors board election
Population with Srilankan background 1 January 2009: 13 436
Singahale people around -500
Children under 16 -2 300
Net vote bereta / voters 10 636
Source: tamilvalg.com
Votes 2479 – with false votes —
The correct numbers during 2100. We have evidence of fraudulent votes (Micro video camera)
Number not met the voting 8 557
Show the percentage relation. voting 20%
விழித்துக்கொண்ட தமிழ் மக்களமைப்பு 23 .11 .2009
நன்றி-tamil circle
thanu
இந்த கிபி அரவிந்தன் இதுதான் அவருடைய தொழிலே வேற ஆரிட்டையும் பழியை சுமத்தி தான் உழைச்சுக்கொண்டு போயிடுவது.
Kulan
ஜனநாயகம்; ஜனநாயகப்படியே எழுதியிருக்கிறீர்கள். நான் இக்கட்டுரை மூலம் இந்தத்தேர்தல் வியாதி மற்றயநாடுகளுக்கும் பரவக்கூடாது என்பதற்காகவே எழுதினேன். தயவுசெய்து உங்களிடமும் பின்னோட்டக்காரர்களிடமும் இருந்தால் எழுதுங்கள். தொடர்ந்த மக்களின் நம்பிக்கையில் மணபோடும் வேலைகளை நிறுத்துவதற்கு உதவும். மக்கள் எனும் மாசக்தியை சினிமாக்காட்டி மந்தைகளாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரியானது எது என்பதை சுட்டிக்காட்டுவது எமது கடமையல்லவா.
பல்லி;- //குலனின் கட்டுரையில் பின்னோட்டம் இடவே பயமாக உள்ளது, காரனம் எதோ இருவரும் சொல்லி பேசி செய்ததாக என் காதில் கேக்கவே பலர் இருமுகிறார்கள்; // எனக்குப் பல்லியின் பின்னோட்டத்தில் மிக ஆர்வம் உண்டு. பகிடியாகவும் சுவார்சியமாகவும் சொல்லும் பண்பு சிறப்பானதே. ஒரு எழுத்தை நேசிப்பதற்கு எழுதுபவரைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. பல்லியின் குரல் கூரையில் இருந்து மட்டும் கேட்கும் கேட்கிறது. ஆனால் பல்லியைக் காணமுடிவதில்லை. வெளியில் வந்து பல்லி இது நான்தான் என்று சொல்வதும் இல்லை. எனக்கும் பல்லிக்குப் பயம் தலைக்குமேல் நின்று குறி சொல்லி தலையில் விழுந்தால் மரணம் தானே. பகிடிக்காக எழுதினேன். உண்மையில் எனக்குப் பல்லியைத் தெரியாது எந்த ஊர் எந்த நாடு ஆணா பெண்ணா எதுவுமே தெரியாது. இது தேசக்காரருக்கே தெரியாதாம். எனக்கு எப்படித் தெரிய முடியும். நான் பல்லியின் பின்னோட்டத்தை மட்டுமல்ல கருத்துக்களையும் விருப்புபவன் அவ்வளவுதான்.
Norway Nackeera
சந்தனம்! /ஈழம் என்ற சொல்லின் பொருள் விளக்கம் என்ன???/
ஈழம் என்றால் உலோகத்தகடுகள் அல்லது பொன் என்று பலவிதமாகப் பொருள் கொள்ளப்பட்டது. இன்றைய இலங்கையில் இயக்கர் நாகர் என்று ஒரே இனத்தவர்கள் எலு எனும் ஒரு முற்றுப்பேறா மொழியைப் பேசிவந்தனர். எலு என்று நாம் இன்று திரிபடைந்த பெயரில் இயற்பெயர் ஈழு என்பதாகும். மொழிகளை வைத்தே இனம் பிரிக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே ஈழு மொழி பேசப்பட்ட தேசம் ஈழம்; ஈழமண்டலம் என்றும் அழைக்கப்பட்டது.ஈழம்; சீழம் எனத்திரிபடைந்து சியளம் பின் சிங்களமானது. ஆதாரம் வரலாற்றாசிரியர் செ இராசநாயம். ஈழம் சிறீ எனும் அடைமொழியுடன் சேர்ந்து சிகள என்ற பாழிமொழி வடிவமாகவும் சிம்கள எனும் வடமொழி வடிவமாகவும் மாறியது.இதுவே பின் சிங்களம் என்று அழைக்கப்பட்டது. ஈழத்தை எதிர்க்கும் சிங்களவன் தன்னைத்தானே தன் மூதாதையரை எதிர்ப்பதாக அமையும். குறிப்பு சரித்திரரீதியாயக மட்டுமல்ல இரத்தரீதியாகபும் பூகோள ரீதியாகவம் தமிழ் திராவிடர்களே.
சந்தனம்
ஈழம் என்றால் உலோகத்தகடுகள் அல்லது பொன் என்று பலவிதமாகப் பொருள் //
இது நக்கீரர் எமது தேசத்தில்லை ஆனால் நக்கீரர் ஈழம் என்றால் சகலவளங்களும் நிறைந்த ஒரு பிரதேசமும் உலகத்தின் முக்கியகேந்திர இடமாகவும் ஒரு சர்ச்சைகள்கள் உள்ள இடமாகவும் பல நாடுகளின் பந்தாகவும் ஆக்கிரமிப்புக்கள் உட்பட்ட பிரதேசமாவும் சுமார் 1000 வருடம் சண்டையின் பின் அந்த இனம் முற்றாக அழிக்கபட்டு இப்போது ஈரானின் ஆளுகைக்குள்ளது இங்குதான் ஈழம் உள்ளது இந்த ஈழம் எப்படி இலங்காபுரிக்குள் நுழைந்தது இது தான் ஆய்வு.
palli
//எனக்குப் பல்லியைத் தெரியாது எந்த ஊர் எந்த நாடு ஆணா பெண்ணா எதுவுமே தெரியாது. இது தேசக்காரருக்கே தெரியாதாம்.//குலன்::
குலன் தேசகாரருக்கு தெரிந்தால் உலகுக்கே தெரிந்த மாதிரிதானே; ஆனாலும் நானும் அவர்களுடன் தான் கபடி ஆடுகிறேன், அவசரபடாதையுங்கோ எனக்கும் சிறிது கடன் இருக்கு அதனால் நானும் இந்த நாடு கெட்ட ஈழத்துக்காக தேர்தலில் இறங்கலாம் என இருக்கிறேன், மறக்காமல் என் முகத்தில் குத்தவும்; எல்லாம் வெற்றி கனி பெற்று கடன் அடைக்கதான்,
Norway Nackeera
/இடமாகவும் ஒரு சர்ச்சைகள்கள் உள்ள இடமாகவும் பல நாடுகளின் பந்தாகவும் ஆக்கிரமிப்புக்கள் உட்பட்ட பிரதேசமாவும் சுமார் 1000 வருடம் சண்டையின் பின் அந்த இனம் முற்றாக அழிக்கபட்டு இப்போது ஈரானின் / நீங்கள் கூறும் ஈழம் நான் நெட்டில் வாசித்திருக்கிறேன். ஈழம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் வேறு மொழிகளில் உண்டு. நான் எழுதிய ஈழம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரத்தை என்சிற்றறிவுக்குத் தெரிந்ததைதான் சொன்னேன். இளம்; ஈழம் என்பது வேறு வேறு என்பது என்கருத்து. ஆனால் பேசிய மொழிக்கும் வடமொழிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இந்த வடமொழித் தொடர்வு தமிழ் சிங்களம் எனும் இரண்டு மொழிகளுக்கும் நிறையவே இருக்கிறது. இலங்கையில் ஈழம் என்று பெயர் ஈழு என்ற முற்றுப்பெறா மொழியைப் பேசியமக்கள் வாழ்ந்த தேசமே ஈழமானது என்பது வரலாற்று ஆய்வியல்.
Norway Nackeera
Elam was an ancient civilization located in what is now southwest Iran. Elam was centered in the far west and the southwest of modern-day Iran, stretching from the lowlands of Khuzestan and Ilam Province, as well as a small part of southern
Eelam (Tamil: ஈழம், īḻam) also spelled Eezham, Ilam or Izham in English is the native Tamil name for the South Asian island state of Sri Lanka. Eelam is also a name for the spurge (a plant), toddy (an intoxicant) and gold.[1] The exact etymology and the original meaning of the word are not clearly known, although there are number of conflicting theories. The Retroflex approximant l in Eelam is a unique phoneme for Dravidian languages, retained in closely related Tamil and Malayalam. Conventionally it has been represented in the Roman alphabet using the combination of zh.[2]
The earliest use of the word is found in a Tamil Brahmi inscription as well as in the Sangam literature. The Thiruparankundram inscription found near Madurai in Tamil Nadu and dated on palaeographical grounds to the 1st century BCE, refers to a person as a householder from Eelam (Eela-kudumpikan).[3] The inscription reads,
to Santhanam
Kusumpu
நோர்வே சேதுவின் இணையத்திலும் மற்றும் இணையத்தளச் செய்திகளின்படி அவையில் துவைத்தவர்களைப்பற்றி சில வரிகள். ஆதித்தன் என்பவர் புளொட் என்று புழுகிக்கொண்டு திரிந்தவர்; 4வருடத்தில் படித்து முடிக்கும் நேர்ஸ் படிப்பை 25 வருடம் படித்துத்தேறியவர். விசாவுக்காக வெள்ளைப் பெண்ணொருத்தியை கல்யாணம் கட்டியிருக்கிறார். படிக்கவென்று வந்து படிப்பைக்கோட்டை விட்டதால் ஏற்பட்ட விசாப்பிரச்சனை. அகதிகளை திருப்பி அனுப்பவேண்டும் என்றும்; அகதிகளைக் காட்டிக் கொடுப்பதிலும் மிக மும்மரமாக நின்றவர். “என்னை மாதிரி நீங்கள் யாராவது பாடுவீங்களா வாருங்கள் மேடைக்கு என்று மேடையில் நின்றே கத்திய மோடையன் என்கிறார்கள். யெயசிறி பெண்ணடிமைத்தனத்தைப் பற்றி மேடை மேடையாய் பேசும் இவ ஆணடிமை ஆதிக்கவாதி. பிரபாகரதை தெரியும் என்று பிரபாகரனுக்கே அல்வா கொடுத்தவர்.
சிவகணேஸ் (கராட்சி சிவா) ஒழுங்காகக கராட்டி படித்தவர் என்பது சந்தேகம் தான். ஒரு கறுப்புப்பட்டியை களுத்தில் கட்டிக் கொண்டு திரிகிறார். இவருடன் இணைந்த திரிந்ததால் தான் நோவேயில் ஒரு பொடியன் வெட்டுப்பட்டுச் செத்தானாம்.விசாவே இல்லாப் பொடியனை வேலைக்கு அமர்த்தியிருந்தானார்.
இராசரத்தினம் வேலுக்பிள்ளை பழைய ஈபிஆர்எல்எப் காய். புலிகளால் வெருட்டப்பட்டு நோர்வே வந்தவர். பேருக்காகவும் வருமானத்துக்காகவும் புலிகளுடன் சேர்ந்து புலிகளின் ஒரு சிறு குழுவுக்கோ அல்லது பள்ளிக்கூடப் பிரிவுக்கோ அல்லது கலை பண்பாடு ஏதோ எதுக்கோ பொறுப்போக இருக்கிறார். அவன் புலியில்லை இவன் புலியில்லை என்று தள்ளிவைப்பதில் முன்நிற்பாரார். ஆனால் உண்மையில் இவர் ஈபிஆர்எல்எப்யாம்.
யோகசீலன் மதியாபரணம் (சீலன்). ஒரு தமிழ்பெண்ணைக் காதலித்து அவளை அரைகுறையாகப் படம் எழுத்து மற்றவர்களுக்குக் காட்டித்திரியும் ஒரு வக்கிரவாதி. அதனால் அவள் இவனை விட்டுவிட்டுப்போய் விட்டாள். போனவருடம் கோவிலில் கணக்குவளக்குக்குப் பொறுப்பாய் இருந்து கணக்கு விட்டுக் கணக்குக் காட்டினார் இந்தக் கணக்காளர். தமிழ் நெட் இயக்குணர் யெயச்சந்திரனும் இந்தப் பஞ்சகுலசிங்கமும்தான் அவையின் சூத்திரதாரிகள். பஞ்சகுலசிங்த்தின் பஞ்சதந்திரம்தான் அந்த வெள்ளைக்காரன். இன்னும் கிடைக்கும் கொண்டுவந்து பதிகிறேன்.
பார்த்திபன்
இந்த வார விகடனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அசோகன் என்பவர் தானும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு அமோகமான வாக்குகள் கிடைத்து வெற்றியீட்டியதாகக் கூறியுள்ளார். ஆனால் மேலே தேசம்நெற் கட்டுரையில் விஜய் அசோகன் பற்றிய படமோ செய்தியோ ஒனறையும் காணவில்லை. நோர்வேயில் என்னப்பா நடக்குது?? மொத்தத்தில் தமிழர்களின் காதுகளில் நன்றாக பூ வைக்கின்றார்கள் என்பது தெரிகின்றது……
Kulan
பார்திபன்- /ஆனால் மேலே தேசம்நெற் கட்டுரையில் விஜய் அசோகன் பற்றிய படமோ செய்தியோ ஒனறையும் காணவில்லை/
இருக்கிறதே பார்த்திபன், வெள்ளிபார்த்த வெங்காயம் என்று குறிப்பிட்டது யாரை? 118 வாக்குகளை மட்டும் வெற்று தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிபவரின் படத்தைப் போட்டு இடத்தைப் பழுதாக்கச் செல்கிறீர்களா. அவர்களின் படங்களையும் தேசத்துக்கு அனுப்பி வைத்தேன்.
பாபு
வைகோ வின் தோஸ்துதான் இந்த அசோகன் தேவையான வண்டவாளங்கள் எல்லாம் வெகு விரைவில் தர காத்திருக்கிறான் நோர்வேத்தமிழன்
பல்லி
குலன் நோர்வே தேர்த்தல் (புலிகளது) அவர்கள் எதிர் பார்ப்புக்கு வெற்றியா தோல்வியா?
Kulan
சந்தேகமே இல்லை பல்லி. முழுப்படுதோல்லி. முக்கியமாக வாக்களித்தவர்கள் ஏன் எதற்கு வாக்களிக்கிறோம் என்றே அறியாமல் கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்ற மாதிரியே எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது. முக்கியமாக வாக்களித்தவர்களில் நான் பேசிய 150-200 தமிழர்களில் எனக்குக்கிடைத்த முக்கிய தகவல் அங்குள்ள சனத்துக்காகக் கதைப்பதற்கு இங்கு ஒரு அமைப்பத்தேவைதானே என்பதுதான். இந்தக்கட்டப்பட்ட அமைப்பு முன்பே ரிசிசி என்ற பெயரில் அதாவது தமிழர் கோடிநேற்ரிங் கொமிட்டி என்ற பெயரில் புலியியக்கமாக இயங்கிவந்தது. காலத்துக்குக் காலம் பெயர்களையும் மாற்றிக் கொள்வார்கள். முக்கியமாக வாக்களித்தவர்கள் யார் எனில் முன்பு புலிக்குக் காசு சேர்ந்தவர்களே. வேட்பாளர்களிலோ அன்று வாக்காளர்களிலே புதிதாக யாரும் இணைந்து கொள்ளவில்லை. சுருங்கச் சொல்லின் ஊரைச் சுறுட்டி உலையில் போட்டவர்கள். பல்லி இதில் மிக மிக வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் புலி எதிர்பாளர்கள் மாற்றுக்கருந்தாளர்கள் என்று நோர்வேயில் பலர் இருந்தும் இந்த அனியாயத்தை முட்டாள் தனத்தை சொல்ல யாரும் முன்வரவில்லை என்பதுதான். மாற்றுக்கருந்தாளர்கள் சொன்ன செய்தி ” சொன்னால் கேட்கவா போறாங்கள்; இன்னும் உணரவில்லை என்றால் நாம் என்ன செய்வது? பட்டும் பட்டும் திருந்தவில்லை என்றால் என்ன செய்வது. நாம் எங்கடை வேலையைப் பார்க்கிறதைத் தவிர ஒன்றுமே செய்ய இயலாது” சரி நீங்கள் அவர்களின் கூட்டங்களுக்குப் போய் உங்கள் கருத்தையும் எதிர்ப்பையும் காட்டியிருக்கலாமே என்றபோது கிடைத்த பதில் ” உங்களுடன் கதைப்பதுபோல் தெருவில் நின்று எம்கருந்தைச் சொல்லவே துரோகி என்றும் அரசாங்கம் வாங்கிப்போட்டுது என்றும் யோசிக்கமாமல் கூறுவர்கள் கூட்டத்தில் எமது சொல்ல ஏறுமா என்று என்னைத் திருப்பிக்கேட்டார் உண்மையில் அரசியலில் நன்கு பரீட்சயமுள்ள படிப்பறிவுள்ள ஒருவர். இதில் இன்னுமொரு வேடிக்கை என்ன வென்றால் வேட்பாளர்களுக்கே தெழிவில்லை தனது பணி என்ன? எதற்காக தேர்தலில் நிற்கிறேன் என்ற தெளிவில்லாமலேயே வேட்பாளராக நிற்கிறார்கள். இக்கட்டுரையை நோர்வேயிலுள்ள எழுத்தாளர்கள் தான் முறையில் எழுதியிருக்க வேண்டும். நான் எனது சொந்த முயற்சியிலேயே போய் அங்கு நின்றே அதை எழுதினேன்.
சந்தனம்
புலிகளே புலிகளிற்கு ஆப்பு வைத்த தேர்தல்( பொட்டர் ராஐதந்திரமேலிடம்)
Kulan
பல்லியின் கேள்விக்கு நோர்வேயில் வாழ்பவர்களைத்தவிர மற்றவர்களால் பதில் சொல்வது கடினம். இத்தேர்தல் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பதுதான் அவர்களின் நிலமை. எமது சமூகத்தில் உள்ள பெரும் குறைபாடு பிழைகளைப் பிழைகள் என்று ஏற்றாது விதண்டாவாதம் பண்ணி பிழைகளுக்குச் சரியான காரணங்கள் கற்பிக்க முயற்சித்து பிழையைச் சரியாக்குவது. பிழைகளைப் பிழைஎன்று எம் அரசியல்வாதிகளும் புலிகளும் அன்றே ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று தமிழ்மக்களும் புலிகளும் இப்படியான ஒரு பேரழிவை எதிர் கொண்டிருக்க மாட்டார்கள். பிழைகளைப் பிழை என்று ஏற்றுக்கொள்ளாத மனிதனே சமூகமோ திருந்துவதற்காக சாத்தியக்கூறுகள் இல்லை. தலைவர் சொல்லிப்போட்டார் என்பதற்காகவே தமிழீழம்தான் முடிவு என்று நிற்கும் முட்டாள் கூட்டம்தான் இது. தலைவர் என்ன கடவுளா? கடவுளாக இருந்திருந்தால் நடக்கப்போவதை உணர்ந்து தன்னைத்தானே காப்பற்றியிருக்கலாமே. சும்மா இருந்த மதியக்காவையும் கற்பிணியாக்கி குடும்பமாகவே அழிந்த பிரபாகரனையும் அவர் ஈழக்கனவையும் கொண்டு திரிபவர்கள் என்றும் சுயமாகச் சிந்திக்க இயலாதவர்களே. பிரபாகரன் சொந்தப்பிள்ளை மனையியைக் கூட தன்கனவுகளுக்குப் பலிகொடுத்த கொலைகாரன் என்றே கருதத்தோன்றுகிறது. மனிதநேயத்தின் மட்டத்தில் நின்று பார்த்தால் மதிவதனி அக்காவையோ பாலன் பாலச்சந்திரனையோ பலிகொடுப்பதற்கு இவர் யார்? முட்டாள்தனமான முரட்டுப் பிடிவாதக்காரன் என்பதைத்தவிர வேறு இல்லை. தமிழர்கள் சாகும் போது சும்மா சாவதில்லை இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு சுமையைச் சுமத்தி விட்டுத்தான் போவார்கள். யாராவது ஒருவரைக் கையில் பிடித்துக்கொடுத்து விட்டுபோவார்கள் அல்லது குடும்பச்சுமையை மூத்தபிள்ளையின் தலையில் சுமத்திவிட்டுப் போவார்கள். இப்படி செத்ததுகள் செய்யும் அட்டகாசமோ ஏராளம். இதில் ஒன்றுதான் பிரபாகரனும் செய்தது.
santhanam
திரு விஜய்சங்கர் அசோகன் நான் தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு. நோர்வேக்கு வந்து 2 வருடம் ஆகவில்லை. இந்த அமைப்பிலை புகுந்து வேலை செய்யவேணம் என்டு விரும்பினன். இந்த அமைப்புக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்கோ என்டு தெரியல்லை. புலிகளுக்கும் இவங்களுக்கும் தொடர்பு இருந்தால் நான் வேற விதமாக செற்படுவன். இந்த தேர்தலுக்கு பணம் புலிகள் செலவு செய்ததாக சொல்லுகிறீர்கள் ஆனால் எனக்கு தெரியல்லை எதிர்காலத்திலை இதை கண்டறிஞ்சால் நான் வடிவாக சிந்திப்பன் நோர்வே தமிழரவையை பற்றி என்ன தெரியும் என்டு விசாரித்தபோது தற்போதுதான் ஆராந்து வருகிறேன். எனக்கும் புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவங்கள் புலிகளோட இரகசிய தொடர்பு வைத்திருந்தால் நான் யோசித்து முவு எடுப்பன் இவங்கள் இந்த அமைப்பு உறுப்பினர்கள் புலி ஆதரவாளர்களடன் எந்த தொடர்பும் வைத்திருக்க கூடாது. புலிகளோட இவங்கள் இரகசிய தொடர்பு வைத்திருந்தால் இந்த அமைப்பு ஒரு சனநாயக அமைப்பாக இருக்காது. ஏன்று எமக்கு தெரிவித்தார். — தகவல் தமிழ் வெப் நியுஷ்
பல்லி
குலன் மீண்டும் உம்முடன் வருகிறேன்; எனக்கு இந்த தேர்தல் பற்றிய விபரம் சரியாக தெரியவில்லை, தாங்கள் கட்டுரையாளர் என்பதால் இது பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும்;
பலர் சார்பாய் பல்லி;
இந்த தேர்தல் எதற்க்கு?
புலம் பெயர் தேசத்தில் ஈழம் அமைக்கவா?
ஈழம் தமிழருக்கு வேண்டும் என்பதை சர்வதேசத்துக்கு காட்டவா?
இதில் தெரிவு செய்யபடுபவர்கள்தான் இனி தமிழர் முதலாளிகளா?
இந்த தேர்தலில் எப்படி வாக்கு அழிப்பது, ஈழம் வேண்டும் என்றுமட்டுமா?
அல்லது இதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவும் வாக்களிக்கலாமா?
நாடு கடந்த ஈழம் தேவையா இல்லையா எனவா?
இப்படி பல கேள்விக்கு மத்தியில் இந்த தேர்தலில் நான் இருக்கும் நாட்டில் 75000 தமிழர் உள்ளோம்; இதில் 22000 பேர் வாக்குரிமை அற்றவர்கள் (தகவல் அவர்கள்தான்) மிகுதி 53000 பேரில் எப்படிதான் குத்தி குரங்காட்டம் ஆடினாலும் 15000 பேர் வாக்களிப்பது கடினம்; அப்படியாயின் மிகுதியாக உள்ள 38000 பேரும் இந்த எதுக்கோ ஒன்றுக்கு ஆதரவில்லை என சர்வதேசம் நினைக்கமாட்டார்களா? இது கூட அவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை;
இழயோர் சதிராட்டம் முள்ளிவாய்க்காலை பறிகொடுத்தது போல் இதுவும் சர்வதேச நிலைபாட்டை தமிழருக்கு எதிராக உருவாக்காதா?
சரி அபடிதான் எல்லாம் பழமானாலும் இந்த நாடு கடந்த ஈழத்தை இங்கே கட்டி எழுப்பி வணங்கா மண் கப்பலிலா ஏற்றி கொண்டு போவது, இந்த நோர்வேயில் தெரிவு செய்ய பட்டவர்கள் செயல் பாடு (இனி)என்ன? இறுதியாய் செயல்பாடாளர் புத்திஜீவிகளா?
அல்லது மக்களாகிய நாம் முட்டாள்களா??
பார்த்திபன்
சந்தானம் நீங்கள் இணைத்திருப்பதற்கும் ஆனந்த விகடனில் இவர் அளித்த பேட்டிக்கும் நிறையவே வித்தியாசமுள்ளது. அதனையும் பாருங்கள்.
”நான் தர்மபுரி மாவட்டம் பெண்ணகரத்தை சேர்ந்தவன். ரெண்டு வருடங்களுக்கு முன்புதான் ஆராய்ச்சிப் படிப்புக்காக நார்வே வந்தேன். ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் சுமக்கும் மாபெரும் வலி, ஒரு தமிழனாக என்னையும் வதைத்துக் கொண்டிருக்கிறது. ரத்தத்தை கொடுத்தும் சுதந்திரக் காற்றை ஈழத் தமிழர்களால் சுவாசிக்க முடியவில்லை. அதனால் அரசியல்ரீதியான பலத்தில்தான் ஈழத்தின் சுதந்திரத்துக்கு ஒளி கொடுக்க முடியும். ஆகவே, நார்வே ஈழத் தமிழர்கள் அவைக்கான தேர்தலில் போட்டியிட்டேன்.அவர்கள் என்னை பெருவாரியான வாக்குகள்வித்தியா சத்தில் தேசியபிரதி நிதியாக்கி இருக்கிறார் கள்…” என்றவரிடம் அடுத்த கேள்விகளை வைத்தோம்.
”தமிழ்நாட்டு தமிழரான நீங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு விமர்சனங்கள் எழுந்திருக்கிறதே?”
”தமிழ்நாட்டு தமிழர்களின் ரத்தத்தில் தமிழ் ரத்தம் ஓட வில்லையா? தமிழர்களிடம் துண் டாடும் வித்தைகளைவிதைத்ததே, சிங்கள இனவெறியர்கள் தான். ஈழத்தில் உக்கிரமான போர் நடந்த போது, தமிழகத்தின் உதவியையும்உறுதுணை யையும் ஈழத் தமிழர்கள் பெரிதாக எதிர்பார்த் தார்கள். அவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் தங்கள் உயிரையே தீக்குத் தின்னக் கொடுத் தார்கள். ஈழத் தமிழன் வீழ்ந்தாலும், வெந்தாலும் தமிழ்நாட்டுத் தமிழன்கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும் என நினைக்கிற அரக்க சக்திகள்தான், வேண்டுமென்றே நமக்குள் துண்டாடலை நடத்திக் கொண்டிருக் கின்றன!”
”நீங்கள் புலிகளின் பணத்தை நிர்வகிக்க நினைப்பதாக இலங்கையின் முன்னாள் தூதர் குற்றம்சாட்டி இருக்கிறாரே?”
”சிறிதளவும் உண்மையோ, அடிப்படையோ இல்லாத குற்றச்சாட்டு இது. அவர் அப்படி சொல்லியதைக் கேட்டு விவரமறிந்தவர்கள் சிரிப்பார்கள்!”
”நாடு கடந்த தமீழழம் சாத்தியம்தானா?”
”ஆயுதம் தாங்கி எந்தளவுக்கு போராட முடியுமோ போராடிப் பார்த்துவிட்டார்கள். சிங்கள ராணுவத்துக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமான தாக்குதல்களை நடத்தி, தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழி செய்த அவர்களின் வீரியப் போராட்டத்துக்குப் பலன் கிடைக்காமல் போய்விட்டது. ஆயுதம் தாங்கிய போராட்டங்களுக்கு இனரீதியான வதைப்புகள் தான் காரணம் என்பதை உலக மனசாட்சியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் அரசியல் சார்ந்த பக்குவங்களைக் கையாண்டே தமிழீழத்தை நம்மால் உருவாக்க முடியும். எத்தனையோ நாடுகள் இந்த வகையில் சுதந்திரத்தை எட்டி இருக்கின்றன.
நார்வே ஈழத் தமிழர் அவை மூலமாக நாடு தழுவிய கட்டமைப்பொன்றை உரு வாக்குவதற்கான ஆரம்ப முன்னெடுப்புகள் 2008-ம் ஆண்டே எடுக்கப்பட்டிருக்கின்றன. நார்வேயில் உள்ள தமிழர்களிடத்தில் நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பில் 99 சதவிகிதத்தினர் சுதந்திரமும் இறையாண்மையும் பொருந்திய தமிழீழத் தனியரசு அமைவதையே வலியுறுத்தி இருந்தார்கள். அவை மூலமாக நார்வே அரசுக்கு அனைத்துவிதமான வலியுறுத்தல்களையும் செய்வோம். நார்வேயில் சில இடங்களில் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்கள் இருந்தாலும், இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அதன் மூலமாகவே தமிழீழக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். ஒவ்வொரு திசையிலும் இத்தகைய கோரிக்கைகள் உரத்து முழங்கப்பட்டால் கண்டிப்பாக தமிழீழம் சாத்தியம்தான்!”
”ஆரம்பம்தொட்டே ஈழ விவகாரத்தில் சமாதானம் ஏற்படுத்துவதற்காக போராடிய நார்வே அரசு, இறுதிக்கட்ட போரின்போது அமைதியாகி விட்டது ஏன்? குறிப்பாக, மே 18-ம் தேதி நடந்த பெருந் துயரங்களுக்கு நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹைமும் ஒருவகையில் காரணமாகிவிட்டார் எனச் சொல்லப்படுகிறதே?”
”இந்தக் கருத்து நார்வேயிலும் நிலவுகிறது. கடைசி நேரத்தில், எரிக் செய்த சில குளறுபடிகளால்தான் புலிகள் ஏமாந்து போனார்கள் என இங்கு பிரசாரமே நடக்கிறது. அதேபோல், நார்வே அரசும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து சில உதவிகளை வழங்கிக் கொண்டுதான் இருந்தது. ஆதிக்க அரசுகளுக்கு தலையாட்டியதால் தமிழர்களின் துயரங்களை நார்வேயால் தடுக்க முடியவில்லை. ஈழத்தில் வீழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் ரத்தத் துளி நார்வே மீதும் படிந்திருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை!”
”பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் கொல்லப்பட்டு விட்டதாகவும்… குழப்பம் நீடிக்கிறதே?”
”தலைவர் இருந்தாலும் மடிந்தாலும் தமீழத்தைக் கட்ட எல்லாவித போராட்டங்களையும் அவர் நடத்தினார். அவருடைய பெருங்கனவு தனித் தமிழீழம்தான். அதை நிறைவேற்ற எல்லோரும் கைகோத்தால் அதுவே அந்த தமிழ் வீரனுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்!”
Kulan
பல்லி!நான் சாமக்கோளியானதால் வேலைக்குச் செல்லுவேண்டியுள்ளது. நிச்சயமாக நாளை பதில் அளிக்கிறேன். உங்கள் கேள்விகளுக்குப் பதில் ஒரு கட்டுரையாக அமைந்து விடும்போல் இருக்கிறது. இந்n நோர்வேயின் தொற்று நோய் பிரான்சு இலண்டனுக்கும் தொற்றியுள்ளது. இது தொடர்ந்து தொற்றாது இருக்க வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை எழுதினேன். முக்கியமாக பிரான்ஸ் இலண்டன் வாழ் தமிழ்மக்கள் எமக்கென்ன என்று இருப்பதை விட்டு விட்டு எதிர்பிரசாரம் செய்து வேட்டுப்போட விரும்புபவர்களுக்கு சரியானதை எடுத்துச் சொல்வது முக்கியம். முக்கியமாக மின்னஞ்சல்; குறுங்செய்திகள்.; இணையத்தளச் செய்திகளை மக்கள் மத்தியில் உலாவ விடுவது முக்கியம். முக்கியமாக நீங்கள் இருக்கும் நாடுகளின் பொலிசுடன் தொடர்பு கொண்டு புலிகள் பயங்கரவாதத்தை ஜனநாயம் எனும் பெயரில் கட்டமுயற்சிக்கிறார்கள்.அதன் விளைவு இங்கேயும் குண்டு வெடிக்கும் என்று உண்மையை சொல்வது முக்கியம். இளம் பிள்ளைகளைத்தான் புலத்துப் புலி பயன்படுத்துகிறது. பல்லி! நாளை நிச்சயமாக நான் உங்கள் கேள்விக்குப் பதில் அழிப்போன்.
/இந்த தேர்தல் எதற்க்கு?/பல்லி— இக்கேள்விக்குப் பதில் வோட்டுக் கேட்டவனுக்கும் தெரியாது வாக்குப் போட்டவனுக்கும் தெரியாது. கும்பலில் கோவிந்தா தான். விபரமாக நாளை பதில் சொல்கிறேன்.
Kusumpu
பார்த்தீபன் சந்தானத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்கள். அவர் எழுதியது சேதுவின் இணையத்தளத்தில் இருந்தே எடுத்தே எழுதியுள்ளார். சந்தானம் தவறுதலாக அந்தப்பக்கத்துக்குப் போயிருக்கலாம். சேது தெருவில் நின்றவர்கள் சொன்னதைக் கூட கற்பனையில் எழுதி புலிகளிடம் அடிவாங்கியதாகவும் கேள்வி. சேது சேத்துக்குள் நின்று சேறடிக்கத்தான் சரி.
Kulan
பல்லி! //புலம் பெயர் தேசத்தில் ஈழம் அமைக்கவா?// இது சாத்தியப்படாத ஒன்று. ஆனால் இதில் ஆபத்துக்கள் பல உண்டு. இப்படி ஒரு தேர்தலை வைத்து நாம் வாழும் நாடுகளில் காட்டுவதன் மூலம் புலத்துத்தமிழர்களின் பிரதிநிதிகள் நாம் தான் என்பதைக் காட்ட முயற்சிக்கிறார்கள். தமிழர்கள் பற்றிய கேள்விகள் தமிழர்களுக்கான வளங்களை வழங்குதல் போன்று புலத்து நடவடிக்கைகளுக்கு தாமே ஏகப்பிரதிநிதிகள் ஆகலாம் என்று எண்ணமும் அடியில் இழையோடித்தான் இருக்கிறது. நோர்வேயில் தேர்தல் வைத்த அவை உருத்திரகுமாரின் பின்னால் நிற்கும் நாடுகடந்த தமிழ்ஈழத்தாருடன் முரண்பாடுடையவர்கள். தேர்தலில் நின்றவர்களிடமும் கதைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் எந்தவித தெளிவும் இல்லாமலும்; எவ்வளியில் தாம் பயணம் செய்யப்போகிறோம் என்ற எண்ணமே இல்லாமலும் தான் இருக்கிறார்கள். தமிழர்களுக்கு ஒரு அமைப்பு வேண்டும் அது இங்குள்ள தமிழர்களைக் கட்டுப்படுத்துவதாகவும்; ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். புலிகள் அங்கே வெவ்வேறு பெயர்களில் பல அமைப்புகள் நடத்தி அரசிடம் இருந்து பணம் கறந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் அந்த அமைப்புகள் போதாதா? வழித்தால் குடும்பி அடித்தால் மொட்டை என்பது போல் அகிம்சைபோர் பின் ஆயுதப்போல் இப்போ ஜனநாயகம் எந்த சனநாயகமும் இல்லாத சவநாயகம் தான் இது.
//ஈழம் தமிழருக்கு வேண்டும் என்பதை சர்வதேசத்துக்கு காட்டவா?இதில் தெரிவு செய்யபடுபவர்கள்தான் இனி தமிழர் முதலாளிகளா?இந்த தேர்தலில் எப்படி வாக்கு அழிப்பது ஈழம் வேண்டும் என்றுமட்டுமா?அல்லது இதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவும் வாக்களிக்கலாமா?நாடு கடந்த ஈழம் தேவையா இல்லையா எனவா?//
ஈழம் வேண்டும் என்று சர்வதேசங்களுக்கும் 1976ல் இருந்து காட்டிக்கொண்டுதானே வருகிறார்கள். இதில் என்ன புதிதாகத் திறந்து காட்ட வேண்டியிருக்கிறது. இங்கே இரண்டு தேர்தல்கள் நடந்தது ஒன்று கிபியின் தேர்தல் அதாவது வட்டுக்கோட்டைத் தீர்மானப்படி தமிழீழம் வேண்டுமா வேண்டாமா? இரண்டாவது கடசியாக நடந்தது இதில் இருவகை உண்டு ஒன்று நாட்டுக்குள் பிரதிநிதித்தும் அதாவது பிராந்திய தேர்வு. அதாவது மாகாணங்களில் பிரதிநிதிகள். மற்றயது தேசியபிரதிநிதிகள் நோர்வே முழுவதுமுள்ள தமிழர்கள் தெரிவு செய்யும் உறுப்பினர்கள். இதில் பெரிய பகிடி என்ன வென்றால் ஊருக்குள் உள்ளவர்களுக்கே தெரியாதவர்களை நாடு பூரா உள்ள தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றால் எப்படி. டக் டிக் டொஸ் தான்.
கூட்டங்கள் எல்லாம் ஒஸ்லோவில் தான் நடந்தது. வடக்கில் உள்ளவர்கள் எல்லோரும் வெள்ளிபார்த்து வெங்காயங்கள் போல் அணில் ஏறவிட்டு விட்டு நின்றவர்கள் தான். தமிழநாட்டுத் தலைவிதி ஒன்றைப்பற்றி சந்தனமும் பார்த்திபனும் எழுதியிருக்கிறார்கள் பாருங்களேன்.
பல்லி நீங்கள் கேட்ட கேள்விகளை அவர்களிடம் நாங்களும் கேட்டோம் பதில் இல்லை. வோட்டுப்போட்டால் அதுதான் ஜனநாயகம் என்று கருதும் கூட்டம்தான் இது. என்று எம் அரசியல் தலைவர்களோ வேராட்டு வீமாக்களோ தமிழ்மக்களின் பிரச்சனையையும் அரசியலையும் சரியாகப் புரிந்து கொண்டவர்கள். நேற்றைய செய்திப்படி மனோகணேசன் தமிழர்களிடம் ஊடகங்க ஊடாக சரத்த்துக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்: இந்த அரசியல் தீர்க்கதரிசி. இந்த தேர்தலைக் கொண்டு திரியும் கூட்டங்களுக்குப் பின்னால் தலைமறைவாக சிலபுலிகள் உள்ளார்கள். இது மிக மிக ஆபத்தானது. இவர்கள் பயங்கரவாதத்தைக் கட்டமைக்கத் தொடங்கினால் புலத்திலும் புண்ணெடுப்புத்தான். இதை நீங்கள் வாழும் நாடுகளில் பொலிசிடமோ அரசியல்வாதிகளின் காதுகளிலோ போட்டு வைப்பது அவசியம். அப்படிச் செய்யவில்லை என்றால் உங்களின் பிள்ளைகளை நாளை நீங்கள் இழக்க வேண்டி வரும். வெட்ட வெட்டத்தளைப்போம் என்று கத்திக் கொண்டு தீரிகிறார்கள் தலையறுந்தவர்கள். இன்னும் வெட்டுப்படவோ தளைக்க நிற்கிறார்கள். தமிழர்கள் மட்டுமல்ல தலையும் குடும்பத்துடன் போயும் உணராக கனவுகாணும ஜன்மங்களை…………
Kulan
பல்லி! தொடர்கிறேன்;இந்தத் தேர்தல்வாதிகளின் பின்னால் புலிகள் நிற்கிறார்கள் என்பது உண்மை. அதிலும் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதப்படுத்தி ஆயுள்பூராகவும் சுருட்ட வேண்டும் என்பதும் உண்மையின் மேல் உண்மை. காரணம் தேர்தலில் நின்றவர்கள் ஏறக்குறைய அனைவரும் புலிக்குப் பணம் பண்ணியவர்களே. ருசிகண்ட பூனைகள் சும்மா இருக்குமா. போட்டுப் போட்டுவர்களில் பலருடன் கதைத்தபோதுதான் தெரிந்தது அவர்களும் அடிமுட்டாள்கள் என்று. இதை உங்கள் தேசத்திலும் பார்க்கலாம். பல்லி உங்கள் கேள்விக்கான பதில்களை நான் எழுதுவது சரியானதா என்பதை உறுதி செய்த பின்தான் எழுதுகிறேன்.
//இழயோர் சதிராட்டம் முள்ளிவாய்க்காலை பறிகொடுத்தது போல் இதுவும் சர்வதேச நிலைபாட்டை தமிழருக்கு எதிராக உருவாக்காதா?// சர்வதேசம் சர்வதேசம் என்று நாங்கள்தான் கதைக்கிறோமே தவிர சர்வதேசம் எம்பிரச்சனையை சாதாரண விடயமாகக் கூடப்பார்க்கவில்லை. இவ்வளவு மனிதப்பேரழிவு நடந்தபோதே சும்மாய் இருந்து சர்வதேசங்களா இவர்களின் வேட்டைக்கண்டு பயப்படப்போகிறார்கள். முள்ளிவாய்காலுக்குப் போகிறேன் என்று கூறிய உபாமாவே போகவில்லை இனி யார் போகப்போகிறார்கள். யூதர்களுக்கு அமெரிக்கா உதவி செய்தே ஆகவேண்டும். அமெரிக்காவின் மூளைவளத்தில் இருந்து மூலவளங்கள் வரை யூதர்களின் கையில்தான் உள்ளது. சொந்த மூளையில் சிந்திக்க முடியாத வோட்டுப்போட்ட கூட்டத்திடமா சர்வதேசம் சரணடையப்போகிறது சும்மா பகிடி விடாதீர்கள் பல்லி.
Kulan
பல்லி மீண்டும்: //நோர்வேயில் தெரிவு செய்ய பட்டவர்கள் செயல் பாடு (இனி)என்ன? இறுதியாய் செயல்பாடாளர் புத்திஜீவிகளா?
அல்லது மக்களாகிய நாம் முட்டாள்களா??//
செயற்பாடு போட்டியிட்டவருக்கே தெரியாது. இறுதியான செயற்பாட்டாளர் பத்திஜிவியோ இல்லையே தெரியாது புத்தி சீவி எறிந்தவர் என்று மட்டும் தெரிகிறது. இத்தேர்தலின் பின்புலத்தில் இருந்தவர்கள் நெடிலன் முகிலன் இவர்கள் இப்போது தலைமறைவு. இன்று முகமாக அனுப்பட்டுள்ளவர் தமிழ்நெட்டின் உரிமையாளாளர். இவர் புத்தி ஜீவியோ இல்லையோ கணனியில் கணக்குக் காட்டக்கூடியவர்: கணக்கு விட்டும் கணக்குக் காட்டலாம் தானே. மன்னிக்க வேண்டும் மக்களாகிய நாம் முட்டாள்களா என்று கேட்டீர்கள். உங்களையும் என்னையும் முட்டாள் பட்டியலில் சேர்க்க இயலாது. காரணம் நாம் வேட்டுப்போடவில்லை; நோர்வேயில் வாக்குரிமையும் எமக்கு இல்லை. இருந்தாலும் போட்டிருக்க மாட்டோம் என்பது உறுதி.
kamal
இந்த தேர்தலில் எப்படி வாக்கு அழிப்பது
ஈழம் வேண்டும் என்று மட்டுமா?
அல்லது இதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவும் வாக்களிக்கலாமா?
நாடு கடந்த ஈழம் தேவையா இல்லையா எனவா?//பல்லி
இதற்கான பதிலை காணவில்லை குலன்.
வாக்களிக்கப் போனவருக்க தமிழீழத்தை(நாடு கடந்த கடக்கா) ஏற்கவோ நிராகரிக்கவோ என்று தெரிவு உண்டா?
இல்லையாயின் போனவர்கள் தமிழீழத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் போகாதவர்கள் தமிழீழத்தை நிராகரித்தவர்கள் என்றும்தானே பொருட்படும்.
Kusumpu
//நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பில் 99 சதவிகிதத்தினர் சுதந்திரமும் இறையாண்மையும் பொருந்திய தமிழீழத் தனியரசு அமைவதையே வலியுறுத்தி இருந்தார்கள்//வெள்ளி பார்த்த வெங்காயம் இந்த எண்ணை எங்கிருந்து பொறுக்கினார். சாதாரண வீதாசாரமே தெரியாதவருக்கு ஆய்வுப்படிப்பு ஒரு கேடா.
//ஒவ்வொரு திசையிலும் இத்தகைய கோரிக்கைகள் உரத்து முழங்கப்பட்டால் கண்டிப்பாக தமிழீழம் சாத்தியம்தான்!// அப்பனே பெருமானே” உங்கள் நெடுமாறனும் வைக்கோல் வைகோவும் எந்தத் திசையைப் பார்த்து கத்தினார்கள். கருணாநிதிக்காவது கேட்டதா? ஏனையா சும்மா புதற்றுகிறீர்?
/”இந்தக் கருத்து நார்வேயிலும் நிலவுகிறது. கடைசி நேரத்தில் எரிக் செய்த சில குளறுபடிகளால்தான் புலிகள் ஏமாந்து போனார்கள்/ பிரபாகரன் செய்தது குளறுபடியில்லை எறிக்சூல்கெயும் செய்தது தான் குளறுபடி. ஏன் உங்கள் இந்தியச்சாமியாருக்கும் தானே போன் பண்ணினார்கள் புலிகள் என்ன பண்ணினீர்கள்.முதலில் சுயவிமர்சனம் செய்யுங்கள் அதன்பின் பிழைகளுக்கான பரிகாரத்தைச் செய்யுங்கள் அதன்பின்பே எதிர்காலத்தைபற்றி யோசிக்கலாம். இவர்களின் கருத்துப்படி பிரபாகரன் செய்த தவற்றால் அவர் சாகவில்லை எரிக் செய்த பிழையால்தான் செத்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. நோர்வே சொன்னதா பேச்சு வார்த்தைகளை முறியுங்கள் சிங்களவருக்கு அடியுங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாயிருக்கும் உங்கள் தமிழ்மக்களையே கொல்லுங்கள் என்று சொன்னதா? மற்றவர்களைக் குற்றம் சாட்டும் போது கூற அறிவில்லாமல் கதைகிறார்கள் அறிவறுத்த வெங்காயங்கள்.
/ஈழத் தமிழன் வீழ்ந்தாலும், வெந்தாலும் தமிழ்நாட்டுத் தமிழன்கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும் என நினைக்கிற அரக்க சக்திகள்தான் வேண்டுமென்றே நமக்குள் துண்டாடலை நடத்திக் கொண்டிருக்கின்றன!”/ இதோ பாருங்கள் புலிப்பாசை வந்திருக்கிறது. தலைகழுவியே தற்கொலை செய்ய அனுப்பும் அரக்கர்கள் தானே புலிகள். இதில் இப்படி வெள்ளிபார்த்தவர்கள் இருக்காமலா போவார்கள்.
//”தலைவர் இருந்தாலும் மடிந்தாலும் தமீழத்தைக் கட்ட எல்லாவித போராட்டங்களையும் அவர் நடத்தினார். அவருடைய பெருங்கனவு தனித் தமிழீழம்தான். அதை நிறைவேற்ற எல்லோரும் கைகோத்தால் அதுவே அந்த தமிழ் வீரனுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்!”// கோத்து நின்ற கைகளையே கொத்திப்போட்டு ஓடியவர் உங்கள் தலைவர். இப்ப கொத்துவாங்கி செத்திருக்கிறார். இனியென்ன புதிதாகக் கைகோக்கவேண்டி இருக்கிறது.
பல்லி
மிக்கநன்றி குலன் இல்லாத ஊருக்குதான் உங்களிடம் வழி கேட்டேன்; இருந்தும் நீங்களும் அது தெரிந்தும் மிக தெழிவாக பதில் தந்தீர்கள், இதை பலர் புரிய வேண்டும் என்பதே இந்த குட்டி பல்லியின் அவா,
இதோ குலன் உங்கள் தூக்கத்தை கெடுத்ததுக்காய் பல்லியின் சில வரிகள்,
(குசும்பு கோவிக்க வேண்டாம்)
நாடு கடந்த ஈழம்;
கேக்க நல்லாய் இருக்கு;
நாளும் இவர்கள் தொல்லை;
நடு தெருவில் தமிழர்;
வெள்ளை புறா நாட்டில்;
தேர்தல் முடிந்து போச்சு;
முடிந்த தேர்தல் சொல்லும்;
வெக்க கேடு என்று;
ஈழ தமிழர் வாழ்வில்;
ஈழம் தொலைந்து போச்சு;
இதுக்காக தானோ;
இழந்தோம் பல உயிரை;
குலன் சொல்லும் கருத்து;
பல்லிக்கா பகுத்தறிவா,
இல்லை அது இல்லையென்பேன்;
தமிழருக்காய் சொல்லுவதால்;
நட்புடன் பல்லி;
kulan
கமல்! முதலில் கிபியின் ஆதரவுடன் வட்டுக்கோட்டைத்தீர்மானப்படி தமிழ்ஈழம் வேண்டுமா வேண்டாமா என்று வைத்தார்களாம். அது சுமார் 3மாதங்களுக்கு முன் நடந்ததாக அறிந்தேன். சுமார் 5800 பேர் வாக்களித்தார்கள். இதை 99வீதம் என்று உளறிக்கொண்டு திரிந்தார்கள். இதை வெற்றி என்று கருதியிருந்தால் கிபி ஏன் வட்டுக்கோட்டைத் தீர்மானமே வேண்டாம் என்று ஒதுங்கினார். இந்தத் தேர்தலில்தான் தமிழீழம் வேண்டுமா வேண்டாமா என்று வேட்டுப்போட வேண்டி இருந்ததாம். முக்கிய குறிப்பு இந்த வாக்கெடுப்பு நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் மட்டுமே நடந்தது. இரண்டாவது தேர்தல் நாடு பூராக நடந்தது பிரதிநிதிகள் தெரிவுக்காய். வாக்களித்தவர்கள் 2076பேர். இதை 50வீதம் என்று அலம்புகிறார்கள். கணக்கு வளக்கு கூட்டல் களித்தல் எங்குபடித்தார்களோ. முதலாவது வாக்கெடுப்பில் ஒஸ்லோவில் மட்டும் 99வீதம் 5800 நாடுபூராகவும் 50வீதம் 2070. ஒஸ்லோவில் நடந்த ஈழம் வேணுமா வேண்டாமா என்று வாக்களித்தவர்களின் தொகையின் அரைப்பங்கு கூட இல்லையே. சுருக்கமாக: முதலாவது தேர்தல் தமிழீழம் வேண்டுமா வேண்டாமா? இரண்டாவது தேர்தல் பிரதிநிதித் தெரிவு. அதாவது தனிப்பட்ட மனிதர்களுக்கு வாக்கிடுதல். ஒருவர் 7வாக்குப்போட்டு 8ஆவது ஆளைத் தள்ளி விழுத்தலாம். சகலவிடயங்களையும் தெளிவாக மேலே எழுதியுள்ளேன். அரையவில் அவையின் யாப்புப்படி அதாவது சட்டதிட்டப்படி 50சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் வாக்களித்தால் மட்டுமே தேர்தல் செல்லுபடியாகும். உண்மையில் நோவேயில் வாக்குரிமையுள்ள 18வயதுக்கு மேற்பட்டு இலங்கைப்பிரஜைகள் 15000 மேல் என்பது அறிக்கைகள். தலைமறைவாக இருப்பவர்களே 3000 மேல் என்கிறதாம் பொலிஸ். சுமார் 13வீதத்தினர் மட்டுமே வாக்களித்தார்கள் என்பதே உண்மை. இதை 50சதவீதம் என்று புலிகள் பாணியில் பொய்யை உண்மையாக்கி அலைகிறார்கள். பன்னாடைப்புலிகள்.
kulan
கமல்//வாக்களிக்கப் போனவருக்க தமிழீழத்தை(நாடு கடந்த கடக்கா) ஏற்கவோ நிராகரிக்கவோ என்று தெரிவு உண்டா// நாடுகடந்த தமிழீழத்துக்கான தெரிவு கிடையாது. அதுபற்றிய வாக்கெடுப்பு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. நடத்தப்பட்டு முதல் வாக்கெடுப்பு தமிழீழம் வட்டுக்கோட்டையை தீமானம் பற்றியது மட்டுமே.
//இல்லையாயின் போனவர்கள் தமிழீழத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் போகாதவர்கள் தமிழீழத்தை நிராகரித்தவர்கள் என்றும்தானே பொருட்படும்.// இதை உண்மையில் சரியாக விளங்கியிருக்கிறீர்கள். இதை எப்படி புலிகளுக்கு விளங்கப்படுத்தப் போகிறீர்கள். இன்னும் பிரபாகரன் வருவார் என்று நம்புபவர்கள் அல்லவா இவர்கள் வோட்டுப் போட்டவர்களிலும் விசயம் தெரியாமல் தெரிந்தவர்களுக்குக் கீறியவர்கள்தான் அதாவது முகத்தில் குத்தியவர்கள் தான் 80வீதமானோர்.
kulan
கவிதைக்கு நன்றி பல்லி. கட்டுரை என்று எழுதிவிட்டு நான் எழுதியதை மட்டும் வாசியுங்கள் விளங்காவிட்டால் விட்டுவிடுங்கள் என்று நான் போவதில்லை. சமூகத்துக்காக எழுதுகிறோம். விளங்காதவர்கள் வித்தியாசமாக யோசிப்பவர்களின் கேள்விகளுக்கு எமக்குத் தெரிந்தவரையில் பதில் அளிப்பது என்கடமை என்றே கருதுகிறேன்.