‘தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதி ராம் கைது செய்யப்படவில்லை’ – தவிபு சிரேஸ்ட தளபதி நகுலன்

Nakulan_LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட்ட தளபதி ராம் கைது செய்யப்படவில்லை என மற்றுமொரு முக்கிய தளபதியான நகுலன் ஊடகங்களுக்கு (24 Nov 09) அனுப்பி வைத்துள்ள ஒலிப்பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் நவம்பர் 21ல் வெளியிட்ட அறிக்கையிலும் அதனை மறுத்திருந்தனர். ராம் மற்றும் நகுலன் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற பொய்ப் பிரச்சாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

Nakulan_LTTEநவம்பர் 19 முதல் 22 வரை சுவிஸ்ர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு வந்திருந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு இலங்கையில் உள்ள போராளிகள் பற்றி மிக மோசமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். தான் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதாகத் தெரிவித்த அவர் அப்போராளிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தங்கள் நடமாட்டத்தை மேற்கொள்வதாகவும் புலத்தில் நடாத்தப்படுகின்ற பிரச்சாரங்கள் அவர்களது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளதாகவும் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இவ்வாண்டு மாவீரர் தின உரையை எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் தாங்கள் வெளியிட உள்ளதாகவும் நகுலன் தனது ஒலிப்பதிவில் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • senthil
    senthil

    LTTE’s EP leader Ram recaptured by Hemantha Randunu

    The LTTE Eastern province leader Ram, who had escaped from Army, was arrested yesterday. The Army nabbed him following a massive search operation conducted in the Minneriya jungles.

    Ram had been under interrogation in an army camp in the Giritale Area in Polonnaruwa, when he fled last Saturday (7) With the escape of the LTTE Eastern Province leader, the Army commenced a search operation with over 3,000 soldiers deployed to trace him down. Ram was captured while he was hiding in the jungle near the Minneriya tank.

    Ram had been appointed to the leadership of the LTTE’s Eastern Province following the defection of Karuna Amman. He had a through knowledge of the terrain in the East and led a number of attacks against the security forces. Ram had left for the North after his members were killed by the STF during confrontations.

    Reply
  • இ. மாறன்
    இ. மாறன்

    அமில மழை (திரு ராம் தொடர்பான தகவல்) 17/11/09

    சொல்லவும் முடியாமல் சகிக்கவும் முடியாமல் சில சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெறுவது உண் ஆனால் எப்போது எந்தெந்த விடயங்களை சொல்லவேண்டும் என்பதில் தடம் புரள்வதால் அது எதிர்காலத்தில் பல ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்பதும் உண்மை.

    அண்மை காலமாக விடுதலைப்புலிகளின் பேரளிவுக்கு பின்னர் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் தமிழீழ தேசம், மக்கள் விடுதலை கருதி மறைப்பதும் அதே நேரம் அவை கசிவதுமாக இருக்கின்றது.

    இதனால் இன்று விடுதலைப்புலிகள் பல இயக்கங்களாக உருவெடுப்பது போன்ற தோற்றங்கள் எழுந்தவண்ணம் உள்ளது சிலவேளை நிஜமாக கூட வரலாம்.

    புலம்பெயர் சமூகத்தில் தான் இவை அதிகமாக இருந்த போதும் தாயகத்திலும் இன்று இரண்டு இயக்கங்கள் போல உருவெடுக்கும் அபாயம் எழுந்துள்ளது. ஒன்று இராணுவத்தினராலும் கருணாவினாலும் நடத்தப்படும் இயக்கம் மற்றது என்ன செய்வதென்று தெரியாமல் தத்தமது பாட்டில் குழுக்களாக மறைந்து வாழும் இயக்கம்

    இராணுவத்தினரால் நடாத்தப்படும் இயக்கம் பற்றி முதலில் பார்ப்போம். மே 17 இற்கு பின்னர் சரணடைந்த சில பொறுப்பாளர்கள் மற்றும் ஏற்கனவே இராணுவத்துடன் தொடர்பில் இருந்தவர்கள், இரட்டை முகவராக செய்ற்பட்டோர்கள், கருணா ஆகியோர் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்த விடுதலைப்புலிகள் ஆனால் கருணாவுடன் இரகசிய தொடர்பை வைத்திருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து இராணுவத்தின் வழிகாட்டுதல்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை நடாத்த ஆரம்பித்துள்ளனர்.

    இதன் மூலம் விடுதலைப்புலிகளின் எஞ்சி இருக்கின்ற போராளிகள் பொறுப்பாளர்களை கண்டுபிடித்தல், விடுதலைப்புலிகளின் இராணுவ தகவல், ஆயுத கிடங்குகளை கண்டுபிடித்தல், புலம்பெயர் நாடுகளில் உள்ள வலையமைப்பினை ஊடுருவி தாக்கி அழித்தல், அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இடையே பிளவுகளை ஏற்படுத்தல் என்ற வகையில் இவை அமைந்தது.

    இந்த வகையில் ஆரம்பத்தில் திரு.கே.பி அவர்கள் தலைமையில் அனைவரும் கூடிய போதே இராணுவத்தினரின் வழிகாட்டுதலில் இருக்கும் புலிகள் அமைப்பு செயற்பட தொடங்கியது. இதில் முதற்கட்டமாக தயா மோகன் என்பவர் மலேசியாவுக்கு அனுப்பபட்டார் இவர் இராணுவத்தின் வழிகாட்டுதலில் கருணாவினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு முஸ்லிம் நபர் ஒன்றின் பெயரில் பாஸ்போட் செய்து மலேசியா வந்தடைந்தார். இதே காலப்பகுதியில் ஒன்பது பேர் கொண்ட சரணடைந்த புலிகளும் இந்தியாவுக்கு அனுப்ப பட்டிருந்தனர். இதில் என்ன துன்பகரமான விடயம் என்றால் இவர்களுக்கான நிதிகளை புலம்பெயர்ந்த சில ஆதரவாளர்களும் புலிகளும் அனுப்பியுதவினர் என்பதே ஆகும் (திரு. தயாமோகனின் வாக்குமூலத்தின்படி).

    தயாமோகன் வந்தபின்னர் திரு கே.பி அவர்கள் தயாமோகனிற்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து சகலவசதிகளையும் செய்து கொடுத்தார். தனது ஆதரவுக்காக தயாமோகனை பாவித்த கேபி அவர்கள் தயாமோகனூடாக கருணா, இலங்கை அரசு ஆகிய தொடர்புகளையும் ஏற்படுத்தி விரும்பியோ விரும்பாமலோ இராணுவத்தினரால் நடாத்தப்படும் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கு ஏற்ப நடந்துகொண்டார். இதேவேளை இந்திய றோ அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய கே.பி, அவர்கள் ஊடாக தனது பாதுகாப்பினையும் உறுதி செய்து கொண்டார்.

    இவர்களது தயாரிப்பில் உருவான திட்டங்களின்படி கே.பி புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டும் முயற்சியிலும், நாடுகடந்த அரசு போன்ற சில திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் கே.பி க்கும் ஏனைய சில புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் வலுத்தமை உங்களுக்கு தெரியும்.

    இந்த முரண்பாடுகளை பயன்படுத்தி புலம்பெயர் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் பலர் இவர்களுள் புலிகளின் முக்கிய பொறுப்பில் முன்பு இருந்தவர்களும் உள்ளடங்குவதுடன் புலிகளால் துன்புறுத்தப்பட்டவர்களும் சேர்ந்துகொண்டனர். கூடவே முக்கியமாக சில இணைய தளங்கள், ஊடகவியலாளரும் அடங்குவர். உதாரணமாக கே.பி தலைமையிலான முதலாவது ஒற்றுமை படுத்தல் கூட்டத்தில் அது இரகசியமானது என்றும் முக்கியமானவர்களே பங்கு பற்றலாம் என்றும் கூறப்பட்டதாம் ஆனால் முக்கிய புலி உறுப்பினர் ஒருவர் தனது ஸ்கைப் ஊடான கூட்டத்தில் டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களையும் கூட வைத்துக்கொண்டே கூட்டத்தை நடாத்தி இருக்கின்றார் என்பது அண்மையில் தான் கசிந்துள்ளது. வாழ்த்துக்கள் அந்த புலி உறுப்பினரின் வெளிப்படைதன்மைக்கு.

    இவ்வாறு இந்த காலப்பகுதிக்குள் கே.பி மற்றும் உறுப்பினர்கள் முறுகல் நிலையினை எட்டினாலும் தேச நன்மை கருதி பிரிந்து செல்லும் நிலையினை தோற்றுவிக்க கூடாது என சிலர் மெளனமாகவே ஆமா போட்டுகொண்டு இருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் மிக சாதூரியமாக இந்திய ரோவினையும் ஏமாற்றி தன்னால் நடாத்தப்படும் புலிகள் அமைப்பின் ஒருபகுதியூடாக சூட்சுமமாக தகவல்களை திரட்டி கே.பி இனை கடத்தி சென்றமை (அழைத்து சென்றமை) நடந்து முடிந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிப்பொறுப்பாளர்கள் இலங்கையில் உள்ள புலிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

    திரு. ராம்

    ராம் அவர்கள் நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் பழகி புலம்பெயர்ந்தவர்களிடம் நம்பிக்கையினை ஏற்படுத்தி, இரக்கத்தினை ஏற்படுத்தி மாதாந்தம் நிதிகளை பெற்றுவந்தார். கூடவே தலைவர் தனக்கு இறுதியாக பல கட்டளைகளை பிறப்பித்ததாகவும் அதனை நிறைவேற்றவேண்டும் எனவும் அனைவரிடமும் நம்பிக்கையினை ஏற்படுத்தி பல வேலைகளை ஆரம்பித்தார்.

    1 இலங்கையில் ஆங்காங்கே உள்ள போராளிகளின் தொடர்புகளை தரும்படி கேட்டு அதனை பெற்றுகொண்டு அதன்படி போராளிகள் இருக்கும் இடங்களை கண்டுபிடித்தார்.

    2 அவர்களூடாக இருக்கும் ஆயுத கிடங்குகள், தகவல்களை திரட்டினார்

    3 போராளிகளை பாதுகாத்து வைத்திருக்கும் பொதுமக்கள் இடங்களையும் சிலரிடம் பெற்று கொண்டார்.

    4 புலம்பெயர் நாடுகளில் பல பொறுப்பாளர்கள், அமைப்புக்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொண்டார்.

    5 தலைவர் உண்மையில் இறந்து விட்டதாகவும் அதனை தனக்கு தலைவரின் ஆட்களும் சூசையும் சொன்னதாகவும் கூறி சிலரை நம்பவைத்தார்.

    6 புலம்பெயர் நாடுகளில் நிதி வரவு விபரங்கள், ஆயுத கொள்வனவுகள் பற்றிய விடயங்களையும் கேட்டறிந்து கொள்ள முற்பட்டார்.

    ஆனால் இவை அனைத்தையும் இவர் மிகவும் இலாவகமாக எங்கிருந்து செய்தார் என்பது உங்களுக்கு மட்டுமல்ல ஏமாந்த புலிபொறுப்பாளர்கள் சிலருக்கும் தெரியாது.

    உண்மையில் இவை அனைத்தையும் திரு இராம் அவர்கள் எங்கிருந்து மேற்கொண்டார் என்றால் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமில் இருந்துதான். இவை அனைத்தையும் இராணுவத்தின் வழிநடாத்தலில் மேற்கொண்டார்.

    இந்த விடயம் புலிகளில் உள்ள சிலருக்கு தெரியும் அதாவது நாட்டில் இருக்கும் புலிகளின் மிக முக்கியமானவர் சிலருக்கும் வெளி நாட்டில் இருக்கும் சிலருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்தது ஆனால் அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர். ஏன் என்று தெரியவில்லை.

    நாட்டில் இருக்கும் புலனாய்வு துறை, இம்ரான் பாண்டியன் படையணி, ராதா வான் காப்பு அணி, கரும்புலிகள் அணி மற்றும் புலிகளின் இராணுவ புலனாய்வு அணிகள் திரு இராம் அவர்களிடம் தமது விபரங்களை ஒப்படைக்காது அதே நேரம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்று நடித்துள்ளனர். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளி இருக்கும் புலிகளின் சில பொறுப்பாளர்கள் திரு இராம் அவர்களுடன் கதைக்கும்படி தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்த வண்ணம் இருந்தனர்.

    இது இவ்வாறு இருக்க இவரின் உண்மைதன்மை எங்கு இருக்கின்றார் என்பதனை கண்டறிய இரு கரும்புலி அணிகளை சேர்ந்தவர்களும் அதே நேரம் புலிகளின் புலனாய்வு அமைப்பும் பல பக்கங்களில் செயற்பட்டனர். இறுதியாக சில கரும்புலி உறுப்பினர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கினர். திரு இராம் அவர்களுடன் நேரடியாக பேசி வெளி நாட்டில் உள்ள ———- என்பவர் நீங்கள் தான் படையணிகளுக்கு பொறுப்பு என்று கூறியதாகவும் சாமான்களையும் ஆட்களையும் பற்றி கதைக்கவேண்டும் என கூறியபோது திரு. இராம் அதற்கான திகதி நேரம்இ இடம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். அந்த போராளி அங்கு சென்றார் ஆனால் செல்லும்போது அவர் தனது கைத்தொலை பேசியில் கூறும்போது ரோட் கிடங்கும் பள்ளமுமாக இருக்கு என சங்கேத மொழியில் கூறினார். இறுதியாக கூறும்போது வந்திட்டன் ஆனால் மை போல கிடக்கு என கூறினார். அதன்பின்னர் தொடர்பு இல்லை. ஆனால் திரு இராம் அவர்கள் பின்னர் வெளி நாட்டில் உள்ளவர்களிடம் பேசும்போது அவங்கள் ஆமியோட கூட்டு மற்ற மாதிரி என பேச்சினை முடித்துகொண்டார்.

    அடுத்த சோதனையாக இவர் நிதி அடிக்கடி அனுப்பசொல்வது வழமை ஆகவே இந்த நிதி வங்கி கணக்கிற்கு அல்லது உண்டியல் அல்லது மணிகிறாம் ஊடாக பெற கூடியவாறு விபரங்களை திரு இராம் அனுப்பியுள்ளார். இவ்வாறு புலம்பெயர்ந்த நாடு ஒன்றில் இருக்கும் ஒரு புத்திசாலி புலி அங்கிருக்கின்ற ஆதரவாளர் மற்றும் சில புலி அங்கத்தவர்களுடன் பேசி குறிப்பிட்ட ஒரு நகரத்தினை சொல்லி இந்த இடத்தில இந்த நாள் நீங்கள் போய் நில்லுங்கள் காசு எடுக்கவருவார்கள் என்ன மாதிரி என்று பார்த்து சொல்லுங்கள் என தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் இராம் அவர்களின் உதவியாளருக்கும் தகவல் வழங்கப்பட்டது அதாவது வழமையான இடத்தில் இந்த திகதியில் போய் எடுக்கலாம் என அறிவித்துள்ளார்கள் . சொன்னதன்படி இராம் அவர்களின் உதவியாளர் வந்தார் ஆனால் சும்மாவா வந்தார் இரண்டு பீல்ட் பைக்கில்ஸ் உடன் பாதுகாப்பாக வந்து சிறிது தூரத்தில் இறக்கிவிடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நபர் பணத்தினை எடுத்து சென்றிருக்கின்றார்.

    அடுத்ததாக இவரிடம் வழங்கப்பட்ட தகவல்களின் படி சில போராளிகள் பிடிபட்டனர், ஆயுத கிடங்குகள் பிடிபட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போராளிகளும், புலம்பெயர் புலிகள் சிலரும் கேட்டபோது அது பழைய சாமான்கள் கருணாவோட காலத்தில செய்தது இப்ப எடுக்கிறாங்கள் என்று கூறியுள்ளார். சில நேரம் நம்மட பிடிபட்டவங்க காட்டி கொடுக்கிறாங்க என்று சமாளித்துள்ளார். ஆனால் போராளிகளின் கருத்துப்படி இவர் ஆயுத விபரங்களை கேட்டபோது அவர்கள் உண்மையான இடத்தினை சொல்லாது சில ஆயுதங்களை புதிய இடங்களில் பதுக்கி வைத்து விட்டே தகவல்களை வழங்கி இருக்கின்றனர். இதன்படி முன்பு பிடிபட்ட போராளிகளுக்கு அந்த விடயங்களே தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதே நேரம் இங்கு புலிப்பொறுப்பாளர்களுடன் கதைக்கும் போது தமக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை என்றும் போன் சார்ச் பண்ண முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறுவார். ஸ்கப் வசதி நமக்கு இல்லை போனிலதான் பேசவேண்டும் என்று கூறும் இவர் அதே நாள் சில மணித்தியாலங்களில் தனக்கு நெருங்கிய நண்பரிடம் ஸ்கைப்பில் பேசியுள்ளார். என்னதான் நடக்குது என்று குழம்பிபோயினர் சில புலிகள்.

    அடுத்ததாக சில பெண்போராளிகளை அம்பாரை மட்டகளப்பு போன்ற இராணுவ முகாம்களில் வைத்து சித்திரவதை செய்து அவர்களூடாகவும் பணம் பெறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட யாழ் மாவட்டத்தை சேர்ந்த போராளி இவ்வாறு நிர்க்கதியாகி இவர்களின் திட்டத்திற்கு அமைவாக செயற்பட்டார். இதன்படி தான் காயப்பட்டு இருப்பதாகவும் தனக்கு அப்பா அம்மா சகோதரங்கள் யாரும் இல்லை என்றும் தான் இந்தியா செல்ல இராம் அண்ணா ஒழுங்குபடுத்தி இருப்பதாகவும் 10 இலட்சம் ரூபா உடன் தேவை என்றும் வெளினாடுகளில் காசு கேட்டுள்ளார். சிலர் இரக்கம் பார்த்து பணம் அனுப்பினர். ஆனால் பின்னர்தான் தெரிய வந்தது அந்த பெண்போராளிக்கு அப்பா அம்மா உட்பட சகலரும் இருக்கின்றார்கள் மட்டுமன்றி சகோதரன் கூட வவுனியாவில் உள்ளார்.

    மாவீரர் நாள் உரை

    இதே நேரம் இவ்வருட மாவீரர் நாள் உரை நான் தான் விடப்போகின்றேன். நான் வீடியோவிலும், வொஇஸ் கட் இலும் தருவேன் அதனை போடுங்கள் ஒரு எஃப் ரி பி இல போட்டு தருவோம் நீங்கள் அதனை பிரசுரியுங்கள் என நேற்று பல இணைய தளங்களுக்கு கூறியுள்ளார் திரு. இராம். அது மட்டுமன்றி புலிகளின் தலைவராக தாம் ஒருவரை நியமித்து உள்ளதாகவும் துணைத்தலைவர் தான் என்றும் செயலாளர் அல்லது பேச்சாளர் திரு நகுலன் என்றும் கூறியுள்ளார். (இந்த ஒலிப்பதிவு சில இணைய தள ஆசிரியர்களிடம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.).

    சிம் காட்டிற்கே வசதி இல்லாம நிற்குறோம் ஐயா என சொன்ன இராம் இந்த நவீன வசதிகளுடன் இப்போது இருக்கின்றார் என்பது சந்(தேக)தோசமாக இருக்கின்றது அல்லவா.

    நடந்தது இதுதான் அம்பாரையில் மட்டகளப்பில் இருந்த ———- என்ற புலிபொறுப்பாளர் ஏற்கனவே கருணா ஊடாகவும்இ இராணுவத்தினரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார். இவர் வன்னியில் போர் ஊகிரமடைந்து வருகையில் மணலாற்று காட்டுப்பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தார் தலைமையின் சொல்லை கேட்பது போன்று இராணுவமும் இவரை மண்கிண்டி மலை பகுதிக்கு அனுப்பியது. பின்னர் நகுலன் அவர்களையும் இவர் ஊடாக வரவழைக்கப்பட்டபோது நகுலனும் இராணுவத்தினர் போட்ட வலையில் சிக்கினார். தொடர்ந்து நகுலன் மற்றும் மட்டு பொறுப்பாளர் அவருடன் இன்னுமொரு முக்கிய பொறுப்பாளர் எல்லோரும் சேர்ந்து ராம் அவர்களை அழைப்பது போன்று வரவழைத்து இராணுவம் போட்டதிட்டத்தில் சிக்கி கொண்டனர். இவர்களுடன் ஒரு கொம்பனி போராளிகளும் உள்ளடங்குவர்.

    இவர்களை வைத்தே இப்போது இராணுவம் இயக்கம் ஒன்றை நடாத்தி வருகின்றனர். இந்த அடிப்படையில். வெளி நாட்டில் இருக்கின்ற சில பொறுப்பாளர்கள். நாடு கடந்த அமைப்பின் முக்கியஸ்தர்களும் நாட்டில் இருந்து வந்த சில பொறுப்பாலர்கள் தயா மோகன் உட்பட எல்லோரும் சேர்ந்து மாவீரர் நாள் அறிக்கை தயரிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த அறிக்கையில் தலைவர் பிரபா இறந்துவிட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி இயக்கத்திற்கு புதிய தலைவர், துணை தலைவர், செயலர் ஆகியோரை நியமித்து அறிக்கை வரவுள்ளது. தலைவராக கே.பி அல்லது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஒரு புலிதலைவர் ( இது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது ஆனால் திகைப்பூட்டும் வகையில் அந்த பெயர் இருக்கலாம்) நியமிக்கப்படுவர். இந்த அறிக்கையில் தமிழீழம் என்ற இலட்சியத்தினை விடுத்து அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இலங்கைகுள் கூட்டு அரசியலை நோக்கிய திட்டம் ஒன்று அறிவிக்கப்படலாம். புலம்பெயர் மக்களை ஏமாற்ற நாடுகடந்த அரசுக்கும் ஆதரவு தருமாறும் அறிக்கை வரலாம்.

    அண்மையில் திரு இராம் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வந்திருந்தமை உங்களுக்கு தெரியும் ஆனால் இதுதான் நடந்தது.

    ராம் நகுலன் ஆகியோர் இராணூவத்திடம் இருக்கின்றனர் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து பலர் அவருடனான தொடர்பை துண்டித்து கொண்டனர். இதனால் திட்டம் பிசக போகுது என்று அறிந்த சிங்கள இராணுவம் ராம் அவர்களை தப்பி ஓடுவது போல விட்டு பின்னர் பிறிதொரு இடத்திற்கு மாற்றினர்.

    ராம் அவர்களும் முன்னேற்பாடாக இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் எனக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கு சில நேரம் மெடிக்ஸ் தேவைப்படலாம் ஆட்களை ஒழுங்கு பண்ணூமாறு வடபகுதியில் உள்ள போராளிகளிடம் கேட்டுள்ளார். பின்னர் இந்த சம்பவத்தின் பின்னர் உடனடியாக வெளி நாட்டில் உள்ளவர்களுக்கும் அங்குள்ள சில போராளிகளுக்கும் சொல்லியுள்ளார் சிக்கல்தான் ஒருமாதிரி உடைத்து கொண்டு வந்திட்டன் இப்போ முன்பு இருந்த இடத்தில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    ஆனால் இன்னொரு புதினம் இவர் இராணுவத்திடம் ஏற்கனவே மாட்டியுள்ளார் என நம்பிக்கையாக தெரிந்த ஒரு பொறுப்பாளருக்கு சொல்லியுள்ளார் நான் மாட்டிதான் இருந்தனான் ஆனால் இப்போ நல்ல பிள்ளைபோல் நடித்து வெளியே தப்பி வந்திட்டேன் என்று கூறியுள்ளார். ம்ம்ம் என்னதான் நடக்குது !!!??

    எது எப்படி இருப்பினும் மக்களே உசாராக இருங்கள்கிழக்கில் இருந்த 200 மேற்பட்ட போராளிகளும் ராம் நகுலன் என்பவர்களும் அரச இயந்திரத்தினால் நடாத்தப்படும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்பதனை மனதில் கொண்டு செயற்படுங்கள். இவ்வளவினை சொல்லும் நீ யார் என கேட்கலாம் நான் மாவீரர்களுக்காகவும் இறந்து போன எம் மக்களுக்காகவும் அவர்களின் இலட்சியங்களை சுமந்து வாழும் ஒருவன் இதனை நம்புவதும் நம்பாததும் உங்கள் பொறுப்பு ஆனால் காலம் உங்களுக்கு உணர்த்தும்.

    தேசிய தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பதுபற்றி யாருக்கும் எதுவும் தெரியாது

    தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இறுதி வரை யுத்தத்தில் ஈடுபட்டார். 16 ம் திகதி அதிகாலை முள்ளிவாய்க்கால் கடற்கரை வழியாக ஒரு விசேட கொமாண்டோ அணி உடைத்து ஊடறுத்து கொடுக்க தேசிய தலைவர் கரும்புலி அணிகளோடு வெளியேறினார் முன்பு சென்ற அணி கெப்பாபுலவு ரோட்டில் இருபக்கமும் பொக்ஸ் அடித்து அதனூடாக தலைவரின் அணியை வெளியேற்ற உதவியது என தகவல். அணியின் தலைவராக கேணல் லக்ஸ்மன் செயற்பட்டார். லக்ஸ்மன் அவர்களின் இறுதி செய்தி أ¢â‚¬â„¢நான் கடந்திட்டேன் ஆனால் காயப்பட்டுவிட்டேன்أ¢â‚¬â„¢ என்பதே ஆகும். ஆனால் அவர் தலைவரைப்பற்றியோ தன்னைப்பற்றியோ இதுவரை எந்த செய்தியினையும் சொல்லவில்லை. அதன்பின்னர் தொடர்பு ஒருவருக்கும் இல்லை என்பது எனது அனுமானம்.

    தலைவர் செல்லும்போது தனது போராளிகள், சாரதி, தொலைதொடர்பாளர், மருத்துவர் என அனைவரையும் விட்டுவிட்டு கரும்புலிகள் அணியுடந்தான் சென்றார். அவர் சென்றது சில முக்கியமான தளபதிகளுக்கு கூட தெரியாது. இதே நேரம் கேணல் சூசை மற்றும் திரு பொட்டு அம்மான் உட்பட பலர் 17 ம் திகதி காலை வரை முள்ளிவாய்க்கால் உட்பகுதியிலேயே சண்டை பிடித்துகொண்டு நின்றார்கள் என்பதும் உண்மை.

    நன்றி
    இ.மாறன்

    Reply
  • naane
    naane

    எனக்கென்னவோ மாறன் சொல்வது உண்மை போல் தான் உள்ளது.பொறுத்திருந்து பார்ப்போம்.ஒன்றுமே தெரியாத புலம் பெயர் தமிழர் தான் தலையை பிச்சுக்கொள்ளப் போகின்றான்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மயக்கம் தெளியாத மாயை தீராத புலிவிசுவாசிகளில் ஒருவர் தான் இந்த இ.மாறன். இவர் என்ன சொல்ல வருகிறார்?.
    1. புலிகள் தோற்கவில்லை தமது முயற்சியில் இன்னும் ஈடுபட்டுகொண்டிருக்கிறார்
    கள் என்பதா?
    2. சிங்களமக்களுடனும் அரசுடனும் ஈழத்தமிழ் மக்கள் வாழமுடியாது என்பதா?
    3. புலிகள் நீண்டகாலம் இலங்கையில் தமது அடாவடித்தனத்தை நடத்திக் கொண்டிருந்ததற்கு புலம் பெயர்புண்ணாக்குகள் தான் காரணம் என்பதை அறிந்து புதுகதை சொல்லுகிறார்ரா?.
    4. மர்ம கதைகளை கேட்பதில் புலத்தில் உள்ளவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பதா?
    5. தேசம்நெற் வாசகர்கள் எல்லோரும் இழிச்சவாய்களாக இருந்து விடுவார்கள் என்பதா?.
    இப்படி பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இந்த மாறன் உங்கள் சூத்திரம் இனி எதுவுமே பலிக்கப் போவதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாளையும் மறுநாளையும் வருகிற வசூலைக்கொண்டு நீங்கள் புதுவாழ்வை தேடிக்கொள்வது தான் உங்களுக்கு உகந்தது. ஈழத்தமிழ்மக்கள் மரணகண்டத்தை தாண்டி வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களைப்போல் உங்களைப் போல் வாழ ஆசைப்படுகிறார்கள். புதுகதைகளை சொல்லி திசைதிருப்ப நீங்கள் முயற்சிக் வேண்டாம். புலத்தில்லுள்ள எல்லா உள்ளங்களும் தமது சுயபுத்தியை இழந்தது அல்ல. போசாக்கு குறைவாக வளர்ந்து வந்த மக்கள் தாய்தகப்பனை இழந்து அனாதைகளாக விடப்பட்ட சின்னம் சிறுசுகள். கல்வியைஇழந்த இளம் தலைமுறைகள் முடமாகிப்போன ஆயிரக்கணக்காண மனித ஜென்மங்கள். விதவையாகிப் போன விதவைகளின் கண்ணீர்கள். இவைகளே எம் நின்மதியை கெடுத்து அலையவைக்கிறது. இவ்வளவு துன்பத்திற்கும் காரணம் நீங்களே மாறன். அதற்கு சாட்சியாக இருக்கிறது உங்கள் பின்னோட்டம். இதை விட வேறு என்ன விளக்கம் வேண்டும்?. இனிவரும் காலங்களில் உங்கள் புலன்ஆய்வுகளை நிறுத்தி வையுங்கள்.முடியாவிட்டால் தேசம்நெற்றில் ஆவதுலிருந்து தூரநில்லுங்கள்.

    Reply
  • மேளம்
    மேளம்

    மாறனின் கற்பனைக் கதையை வாசித்து மகிழ்ந்தேன். இவரைப் போன்ற அறிவாளிகள் தம்மை இனம் காட்டாமல் வாழ்வதால்தான் நம் இனம் இன்னும் பின்னடைவுகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. மாறன் உம்மைப் போன்ற எத்தனையோ அரசியல் கற்றுக்குட்டிகளை நாம் கண்டுவிட்டோம்.

    புலம்பெயர் அறிஞர்களிடம் உங்கள் திறமையைக் காட்டுங்கள். நம் நாட்டில் மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள். அவர்கள் இனியும் உம்மைப் போன்றவர்களின் புருடாக்களைக் கேட்டு ஏமாறத் தயாரில்லை. தயவுசெய்து இலங்கையில் வாழும் மக்களை ஒற்றுமையாக வாழ வழிவிடுங்கள். தப்பிப்பிழைத்து வாழும் புலிகளால் சுயவிருப்பத்துக்கு மாறாக இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரை இனியாவது நிம்மதியாக இருக்க விடுங்கள்.

    தயாமோகன் எங்கிருக்கின்றார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

    Reply
  • palli
    palli

    //சொல்லவும் முடியாமல் சகிக்கவும் முடியாமல் சில சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெறுவது உண்மை//உங்கள் பின்னோட்டம் போல்தானே;

    //அண்மை காலமாக விடுதலைப்புலிகளின் பேரளிவுக்கு பின்னர் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.//அதுக்கென்ன கேடு இப்போ;

    //இதனால் இன்று விடுதலைப்புலிகள் பல இயக்கங்களாக உருவெடுப்பது போன்ற தோற்றங்கள் எழுந்தவண்ணம் உள்ளது சிலவேளை நிஜமாக கூட வரலாம்.//மீண்டும் ஒரு முள்ளி வாய்க்காலா?

    //சரணடைந்த சில பொறுப்பாளர்கள் மற்றும் ஏற்கனவே இராணுவத்துடன் தொடர்பில் இருந்தவர்கள், இரட்டை முகவராக செய்ற்பட்டோர்கள், கருணா ஆகியோர் மற்றும் கிழக்குமா காணத்தில் இருந்த விடுதலைப்புலிகள் ஆனால் கருணாவுடன் இரகசிய தொடர்பை வைத்திருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து இராணுவத்தின் வழிகாட்டுதல்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை நடாத்த ஆரம்பித்துள்ளனர்//
    அப்படியா? ஆக உன்மையான ஒட்டு குழு புலிகள்தான் என்பதை தாங்கள் வாக்குமூலமாக சொல்லுகிறீர்கள்;

    //உங்களுக்கு மட்டுமல்ல ஏமாந்த புலிபொறுப்பாளர்கள் சிலருக்கும் தெரியாது//
    இது உங்களுக்கு எப்படி தெரியும் என பல்லி கேட்டால்??

    //தலைவர் செல்லும்போது தனது போராளிகள், சாரதி, தொலைதொடர்பாளர், மருத்துவர் என அனைவரையும் விட்டுவிட்டு கரும்புலிகள் அணியுடந்தான் சென்றார். அவர் சென்றது சில முக்கியமான தளபதிகளுக்கு கூட தெரியாது. இதே நேரம் கேணல் சூசை மற்றும் திரு பொட்டு அம்மான் உட்பட பலர் 17 ம் திகதி காலை வரை முள்ளிவாய்க்கால் உட்பகுதியிலேயே சண்டை பிடித்துகொண்டு நின்றார்கள் என்பதும் உண்மை.//
    ஏதோ தலைவர் மதிவதனியின் கொள்ளு பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு போனது மாதிரி உங்க கதை முடிகிறது;
    கதை ,,,,சுமார்;
    கற்பனை ;;;;அதிகளவு;
    விடுப்பு,,,,கிடையாது;
    போலி;;;உன்மைநிலை;
    புளுகு;;;குறைவே இல்லை;
    பாராட்டு;;;;யாருக்கு;;
    மக்கள்,,,, அப்படியானால்;
    தலை;;;மறைவு;
    சூசை ;;;;காணோம்;
    பொட்டு,,,,வேட்டி மாத்துகிறார்;
    ராம்,,ஒட்டுகுழு;
    கருனா;; கெட்டிகாரன்;
    மாறன், ,,, ?????
    மாறனின் பின்னோட்டத்தை பிரித்து பார்க்க நினைத்தேன், ஆனால் நண்பர்கள் சோந்து போய் பல்லிக்கு கல் எறிவார்கள் என்பதால் இதுடன் இந்த
    பின்னோட்டத்தை முடிக்கிறேன்;
    தொடரவும் நினைக்கிறேன்;;;;

    Reply