தென்னிந்திய திரையுலகிற்குள் காலடி வைக்கிறார் வரதரின் மகள் நீலாம்பரி

Neelambari_Perumalஈபிஆர்எல்எவ் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் மகள் நீலாம்பரி தென்னிந்திய திரையுலகிற்குள் காலடி வைக்கின்றார். உமமர் கரிகட் இயக்கும் ‘பொம்பே மிட்டாய்’ என்ற மலையாளப் படத்தில் நீலாம்பரி பெருமாள் அறிமுகமாகின்றார். இலங்கைத் தமிழர்கள் ஓரிருவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்த போதும் ஒரு ஈழத் தமிழ் அரசியல் புள்ளியின் மகள் தென்னிந்தியத் திரைக்கு வருவது இதுவே முதற்தடவை.

மலையாளப் படத்தில் நடிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பையிட்டு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள நீலாம்பரி மலையாளப் படங்கள் சமூக அக்கறையுடையவையாகத் தரமானவையாக இருந்த போதும் அவை பரந்து பட்ட மக்களைச் சென்றடையும் நிலையை எட்டவில்லை எனத் இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவில் வாழும் இளம் பெண் ஊடகவியலாளர் தனது தாயகமான தென்னிந்தியாவுக்கு செல்கிறார். அங்கு ஒரு கொலைக்குப் பின்னுள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதே கதை.

சட்டப்படிப்பை முடித்துக்கொண்ட நீலாம்பரி பெருமாள் கலையில் நாட்டம் கொண்டவர். அரங்கியலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இப்படத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தன்னை அதனுடன் இணைத்துக் கொண்ட ஒரு போராளியின் மகள் நீலாம்பரி. 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட மாகாண சபையின் முதல்வராக இருந்தவர் நீலாம்பரியின் தந்தை வரதராஜப்பெருமாள். 1991ல் இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியெறியபோது அவர்களுடன் வரதராஜப் பெருமாளும் வெளியேற வேண்டிய நிலை உருவானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் முக்கிய புள்ளியாக இருந்த வரதராஜப்பெருமாளதும் அவரது குடும்பத்தினரதும் உயிரைப் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு இந்திய அரசுக்கு இருந்தது.

இலங்கை அரசியலில் செல்லாக்காசாகிப் போனாலும் வரதராஜப்பெருமாள் மற்றும் ஈஎன்டிஎல்எப் ராஜன் போன்றவர்களது உயிரைப் பாதுகாப்பது இந்தியாவை நம்பும் தலைமைகள் கைவிடப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த அவசியமாக இருந்தது.

இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் நீலாம்பரியினது இளமைப்பருவம் பெரும்பாலும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்குள்ளேயே அமைந்தது. பெரும்பாலும் வட இந்தியாவிலேயே இவரது இளமைக்கால வாழ்வு அமைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட நிலையில் தென்னிந்திய சினிமாவினுள் இவரது நுழைவு அவருக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றே கருத இடமுண்டு.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • senthil
    senthil

    சந்திரகாசனின் மகள் ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    அவருடைய திரையுலக வருகை வரவேற்கத்தக்கது. நான் அடிப்படையில், இந்திய திரையுலக ஆதிக்கத்திற்கு எதிரானவன். பல நூறுவருடங்களாக இந்திய அடயாளத்திற்கு இரத்தம் சிந்தியவர்கள் வழியில் வந்த நான், அதன் அடையாளமாக “பாலிவுட்” இருப்பதை வெறுப்பவன் (எல்லீஸ் ஆர் டங்கன் உருவாக்கிய). வரதராஜ பெருமாள், பிரபாகரனைப் பொருத்தவரை, இருவரையுமே மனதார விரும்புபவன். இருவருக்கிடையேயான முரண்பாடுகள் துரதிஷ்டவசமானவை!. பிரபாகரன், வரதருக்கு மட்டுமல்ல தனக்கும் அதே நியதியைதான் வகுத்துக் கொண்டார். இலங்கைத் தமிழர்களின் மண்டையில், “காலனித்துவத்தால்” போலியாகப் புகுத்தப்பட்ட, கண்களை மறைத்த “மண்டைக் கணத்திற்கு” எதிர்மறை அடையாளமே, “வரதராஜ பெருமாள்”!. இந்த மண்டைக் கணத்தை, திறமையாக மதித்து, மண்குதிரையை அதீதமாக நம்பி, போராட்ட ஆற்றில் இறங்கியவரே பிரபாகரன்!. பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார்!, ஆனால், “பிரச்சனையை சரியாக முன்வைக்காத காரணத்தால்!”, அருமையான ஒரு போராட்டம் “அவமானத்தில்” சிக்கவைக்கப்பட்டுள்ளது!.

    Reply
  • sekaran
    sekaran

    நீலாம்பரி! உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி. துவாரகா வந்திருந்தாலும் மகிழ்ச்சி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இங்கு வரதரின் மகளென இணைக்கப்பட்டுள்ள படம் தவறானது. இதே படத்தை இந்திய இணையத்தளமொன்றில் வேறொரு நடிகையின் படமாக முன்பு பார்த்துள்ளேன். எதற்கும் தேசம்நெற் நிர்வாகம் இந்தப்படத்தை சரிபார்ப்பது நல்லது.

    Reply