குர்பானி விவகாரம்: அசெளகரியம் ஏற்படுத்த வேண்டாமென ஜனாதிபதி பணிப்பு

macca.jpgஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு குர்பானுக்காக வேண்டி கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாத்தளை மாநகர முதல்வர், ஹில்மி கரீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே இப்பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு பொலிஸ் மாஅதிபர் பொலிஸாரைப் பணித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • VS
  VS

  நாம பெத்த புள்ளைகளையே ஆயிரக்கணக்கில் கொடூரனுக்கு குர்பானி கொடுத்துவிட்டு இருக்கோம்.

  Reply
 • ahmed
  ahmed

  //நாம் பெத்த புள்ளைகளையே ஆயிரக்கணக்கில் கொடூரனுக்கு குர்பானி கொடுத்துவிட்டு இருக்கோம்.//

  இந்தப் பின்னோட்டம் எத்தகைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதோ சரியாக விளங்கவில்லை. இருப்பினும் இச்செய்தியைப் பொறுத்தமட்டில் இப்பின்னோட்டம் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியதொன்றே.

  இச்செய்தியின் பிரகாரம் குர்பான் என்பது முஸ்லிம்களின் ஹஜ் கடமை அனுஸ்டானங்களுடன் இணைந்தது. குர்பான் என்று கூறும் போது மனிதர்களை பலியெடுப்பது என்ற பொருளல்ல. குறிப்பாக ஆடுää மாடுää ஒட்டகம் போன்ற மிருகங்களை வசதியுள்ளவர்கள் இஸ்லாமிய முறைப்படி அருத்து வசதியில்லாதவர்களுக்கு வழங்குவதே இவ்விடத்தில் குர்பான் என்று பொருள் படுகின்றது. இது விடயத்தில் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்குமாரே பொலிஸ் மாஅதிபரை ஜனாதிபதி பணித்திருந்தார்.

  கடந்த முப்பது ஆண்டு கால வரலாற்றைப்பின் நோக்கிப் பார்க்கும் போது ஆயிரக்கணக்கான உங்கள் பிள்ளைகள் பலியாகி இருக்கலாம். அதே போல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் பலியாகியுள்ளார்கள். யுத்த அனர்த்தங்களின் பலியினையிட்டு தமிழர்கள் மாத்திரமோ, முஸ்லிம்கள் மாத்திரமோ தனித்தனியாக வேதனைப்பட்டுக் கொள்ள முடியாது. இவ்விடத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் கவலை கொள்ள வேண்டிய விடயமே அது.

  பின்னூட்டமிட்ட சகோதரர். இவ்விடத்தில் ஒரு விடயத்தை தெளிவு பெற்றுக் கொள்ளல் வேண்டும். இலங்கையில் இனவாத சக்திகளைத் தூண்டி வரும் ஹெல உறுமய போன்ற அமைப்புகள் தமிழர்களைப் போலவே முஸ்லிம்களையும் திட்டமிட்ட நசுக்கி வருகின்றன. முஸ்லிம்களின் பல உரிமைகளைப் பரிப்பதற்கு இந்த சக்திகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே முஸ்லிம்களின் ஹஜ் கடமை அனுஸ்டானங்களுடன் இணைந்த குர்பான் கடமையை நிறைவேற்ற பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே தான் இவ்விடயத்தில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு குர்பானுக்காக வேண்டி கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

  இந்த செய்தியை பின்னூட்டக்காரர் சரியான முறையில் விளங்கியிருந்தால் இவ்விடத்திற்கு இப்பின்னூட்டம் பொருத்தமானதல்ல என்பதை விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

  நொந்து போயுள்ள முஸ்லிம், தமிழ் உறவுகளை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்று செயற்பட்டு வரும் இக்காலத்தில் இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்களை சிந்தித்துப் பயன்படுத்துவது அவசியமானது என்பதே என்னுடைய அபிப்பிராயம்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //நாம பெத்த புள்ளைகளையே ஆயிரக்கணக்கில் கொடூரனுக்கு குர்பானி கொடுத்துவிட்டு இருக்கோம். //

  அகமெட்,
  இச்செய்தியை ஹஜ் கடமையுடன் நீங்கள் ஒப்பிட்டு கலங்க வேண்டாம். மேலே இதனை எழுதியவர், ஒருவேளை பிரபாகரன் என்ற தனி ஒரு அரக்கனின் உயிரைக் காப்பாற்ற, அப்பாவி இளைஞர்களை பலி கொடுத்ததை அவர் நினைவு கூருகின்றாரோ என்னவோ??

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  மக்கள் பிரச்சினைக்குள் மதத்தை இழுக்கக்கூடாது என்பது இவ்வகையான குளறுபடிகளை தடுக்கத்தான். இவ்வளவு நாளும் கால்நடைகளை வாகனங்களில் கொண்டுசெல்வதில் தடைகள் இருந்திருக்கிறது அது அரசியல்வாதிகளுக்கும் தெரிந்திருக்கிறது ஆனால் பெருநாளுக்கு மட்டும் கண்திறந்து ஒருவர் கோரிக்கை வைக்க மற்றவர் ஆணையிடுகிறார்கள். ஒரு மக்கள் பிரதிநிதி என்பவன் அனாவசிய தடைகள் சிக்கல்களைத்தீர்க்கவே தெரிவுசெய்யப்படுகிறான். ஆனால் இங்கே மதம்…எல்லாம் எலெக்சன் வருகிறது என்கின்ற பயம்தான். முஸ்லிம்கள் காலநடைகளை வெட்டுவது சம்பந்தமாக எவ்வளவு நாட்களாக போராடுகிறார்கள். ஸ்ரீலங்க்காவில் புத்த மதவாதிகள் இதற்கு எவ்வளவு தடையாக இருக்கிறார்கள் என நான் சொல்லி அஹமட்டுக்கு தெரிய வேண்டியதில்லை!

  மேலும் இங்கே அஹமட் ஏன் கோபப்படுகிறார். மதவாசனை கொண்ட உவமானம் உவமேயம் இங்கே தண்ணி பட்ட பாடு. இதில் கிறிஸ்தவம்/ இந்து/ பெளத்தம் என்கின்ற வேறுபாடே இல்லாமல் உவமான உவமேயங்கள் கையாளப்பட்டன. ஆனால் ‘குர்பானி’ என்றவுடம் மட்டும் தான் சிக்கலா? அப்போ ‘குர்பானி’ என்கின்ற ஒரு திரைப்படம் வந்து அதன்பாடல்கள் மூலை முடுக்கெல்லாம் கொடிகட்டிப் பறந்ததே? அப்பாடல்களைப் பாடிய பெண் நாசியா ஹசன் பாகிஸ்தானிய முஸ்லிம். அவருக்கு என்ன தண்டனை?
  இவ்வாறுதான் அமெரிக்காவில்( ஆம் பலர் சொல்வதுபோல யூதர்களுக்கு அடிபணியும் அதே ஏகாதிபத்திய அமெரிக்காதான் !)இருக்கும் லஸ்வேகாஸ் நகரை ‘சூதாட்டங்களின் மெக்கா’ எனச் சொல்லப்போக முஸ்லிம்களிடம் இருந்து ஒரே எதிர்ப்புத்தான். காலை மாலை என ரி.வியில் விவாதம். இது நடந்து 10-12 வருடங்கள் ஆகிறது. இரண்டு மாதங்களின் முன்னர் ஒரு கடைக்குச் சென்றேன். கடையின் பெயர் என்ன என நினைக்கிறீர்கள்? “ மெக்கா மாட்” கடையில் லொட்டோ (சூது) பியர் விற்பனைக்கு உண்டு. உரிமையாளர் ஒரு முஸ்லிம்!

  இவற்றை எல்லாம் விடுங்கள்…..ஜிஹாத் என்றால் என்ன? அல்லாவுக்க்காக அவரின் வழியாக போராடுவது என அறிந்திருந்தேன். ஆப்கானிஸ்தானில் முஜாஹதீன்கள் ”இஸ்ரேலியர்களுக்கு அடிபணியும் அமெரிக்க ஏகாதிபத்திய” உதவியுடன் போரிட்டபோது அது அல்லாவின் வழி ஆனால் 9/11 தாக்குதல்களின் பின்னர் ஜிஹாத்துக்கு சொன்ன விளக்கம் “ ஒரு மனிதன் அல்லாவை அடைய தன்னுள்ளேயே போராடுவது” என்று ! ஜிஹாத்துக்கு விளக்கம் கூட அமெரிக்காவின் கண்ணசைவில் தங்கி இருக்கிறது!

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ’…நாம பெத்த புள்ளைகளையே ஆயிரக்கணக்கில் கொடூரனுக்கு குர்பானி கொடுத்துவிட்டு இருக்கோம்…’

  இந்த ‘குர்பானி’ அனுட்டானம் எவ்வாறு வந்தது….

  ஏறக்குறைய நான்காயிரம் வருடங்களின் முன்னர் இப்ராஹிம் அவரது மனைவி சராவினால் ஹஜிரையும் அவரின் மகன் இஸ்மயிலையும் கடவுளின் ஆணை எனக்கூறி பாலைவனமாக இருந்த மெக்காவுக்கு அழைத்துவர கட்டளையிடப்பட்டார். அவ்வாறு அழைத்துவர ஆனையிடப்பட்ட காரணம் இப்ராஹிமின் மனைவி சரா குழந்தைபெறும் வயதினை தாண்டி இருந்ததே. தன்னால் ஒரு குழந்தை பெற முடியாது போன சாரா இப்ராஹிமுக்கு ஹஜிர் ஒரு குழந்தையை (இஸ்மயில்) பெற்றுக்குடுத்து விட்டிருந்தாள் என்கின்ற பொறாமை. அக்கட்டளையை சிரமேற்கொண்ட இப்ராஹிம் ஹாஜிரையும் இஸ்மாயிலையும் அழைத்துவந்து மெக்கா பாலைவனத்தில் விட்டார். அப்போது ஹாஜிர் இப்ராஹிமை நோக்கி எம்மை இப்பாலைவனத்துக்கு அழைத்து வர கட்டளையிட்டது யார் எனக் கேட்க அவரோ ‘கடவுள்’ என பதிலிறுத்தார். அவ்வாறாயின் கடவுள் எங்களைக்கை விடமாட்டார் எனச் சொன்ன ஹாஜிர் அங்கே தங்கினார். ஆனால் பாலைவனத்தில் தாகம் எடுக்கவே ஹாஜிர் இரண்டு மலைகளுக்கிடையே தண்ணீர்ர் தேடி ஓடிக்களைத்து இஸ்மாயில் அருகே மயங்கி விழுந்தார்.

  அவ்வாறு மயக்கமடைந்து விழுந்த ஹாஜிர் அல்லாவை நோக்கி இறைஞ்சியபோது தேவதூதன் கபிரியேலின் அருளால் நீரூற்று கிளம்பி பாலைவனமாக இருந்த மெக்க்கா சோலை ஆகியது.

  கடவுளின் ஆணை என்பதனால் (எனச் சொல்லி தன்மனைவியின் பொறாமைக்காக) பாலைவனத்தில் தன்மகனையே பலிகொடுக்க துணிந்த நிகழ்வை நினைவுபடுத்தும் ஒருநாளை ஈழப்போரின் பெயரால் ‘நாம பெத்த புள்ளைகளையே..’ பலிகொடுத்த ஒருவனுடன் ஒப்பிடுவது தவறுதான்!!!!!

  Reply