இலங் கையின் தமிழ் தேசிய நாளிதல் ஒன்றில் கடந்த செவ்வாயன்று வெளியான முகம்மது நபி (ஸல்) அவர்களுடையதென பிரசுரிக்கப்பட்ட படம் ஒன்று தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிர்ச்சியடைந்ததாகவும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது முஸ்லிம்களின் கலாசாரத்தில் உருவப்படத்துக்கு முக்கியத்துவமளிக்கப்படுவதில்லை. அதிலும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை எங்கும் காணமுடியாது.
இந்த உருவப்படம் வெளியான தகவல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள, பிரமுகர்களினாலும் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துகு கொண்டுவரப்பட்டபோதே ஜனாதிபதி இது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்
அந்தப் பத்திரிகை நிறுவத்தின் தவறு காரணமாக இச்செயல் இடமபெற்றிருந்தாலும் அதனால் பாதகமான வேறு விளைவுகள் ஏற்படக்கூடாதென்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகு உத்தரவிடடுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.