கனடாவில் இலங்கைத் தமிழர்கள் நடத்திய மாவீரர் தினத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கனடாவின் சட்டத்தை மீறும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் சட்டத்துக்குப் புறம்பான அவரது பேச்சு என்னவென்பது வெளியிடப்படவில்லை.
தினமணி
accu
கனடாவுக்கு மாவீரர்தின நிகழ்ச்சிக்கு சிறப்புரையாற்ற வந்த சீமான் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிகக் கேவலமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அந்த மூன்றாம் தரமான உரையை வானொலியில் கேட்க நேர்ந்தது. அப்போ நினைத்தேன் இப்படியானவர்களை எப்படி கனடா போன்ற நாடுகள் உள்ளே வரவிட்டார்களென்று. ஆனால் இன்று Nov 26 அவர் கனடாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
vs
நாடு கடந்த ஈழத்தை சாட்டி காசு திரட்டிய சீமானை நாடு கடத்தி கனடாக்காரன் கவிட்டு விட்டுட்டானே
Poorni
புலிகள் போய் இப்ப ஈழத் தமிழர்களுக்கு சாபக்கேடு வைகோ நெடுமாறன் சீமான் வடிவில் வந்துள்ளது.
National Post
This Tamil Tiger supporter deported after speaking at rally
Stewart Bell, National Post Published: Thursday,November 26, 2009
http://www.nationalpost.com/news/canada/story.html?id=2273146#ixzz0Y2wJvCOJ
………….He was also targeted by the Indian press after photos surfaced showing him smiling and posing with the late leader of the Tamil Tigers, Velupillai Prabhakaran.
During his speech in Toronto on Wednesday, Mr. Seeman talked about restarting the civil war in Sri Lanka, according to several Tamil-Canadians who heard it on the radio or watched it on the Internet.
He also spoke harshly about the ethnic Singhala who are the majority in Sri Lanka. “No Singhala can live,” he said, according to the witnesses. He also said the war would have ended differently had the rebels bombed 100 Singhala schools for every Tamil school bombed by the Sri Lankan forces.
In the video of his speech, a flag bearing the militaristic emblem of the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, can be seen in the room. The Tigers are a banned terrorist organization under Canadian law.
பார்த்திபன்
//நாடு கடந்த ஈழத்தை சாட்டி காசு திரட்டிய சீமானை நாடு கடத்தி கனடாக்காரன் கவிட்டு விட்டுட்டானே //
சீ சீ அப்படி யார் சொன்னது?? சீமானுக்கு திடீரென வயிற்றுக்குள் கடா முடாச் சத்தம் கிளம்பியதால், அவர் தாமாவே நாடு திரும்பியுள்ளார். இதைப்போய் சீமான் கைது, நாடு கடத்தப்பட்டாரென இலங்கை-இந்திய அரசுகளெல்லோ கதை விடுகின்றன என்று புலிப்பினாமிகளின் செய்தி வந்து விட்டது கவனிக்கவில்லையோ??
palli
கமராவின் முன் நடிப்பது சுலபம்;
சர்வதேசத்தில் கிழிப்பது கடினம்;
கனடாவில் சீமான் புலியானார்;
அதனாலே திரும்பினார் மீனம்பாக்கம்;
சீமான் செய்தி
கனடாவில் உள்ள ரொறன்ரோவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான்,
பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசு என்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது.
பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலை செய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலை செய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது.
ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீ.ஆர். அவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.
பார்த்திபன்
//பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஒரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம் //
சீமான் வடிவேலுவிற்கே சவாலாக காமடி எல்லாம் பண்ணுகின்றார். சிலவேளை 2009 இற்கான சிறந்த நகைச்சுவை நடிகர் விருது சீமானுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
BC
கனடாகாரனுக்கு பயங்கர பொறாமை சீமானும் மற்றும் அறிவார்ந்த தமிழரும் சேர்ந்து தமிழீழம் என்று ஒரு வல்லரசை அமைத்து விடுதார்களா என்று தான்.
palli
பார்த்திபன் வடிவாய் கேளுங்கோ;
வல்லரசா வல்லையரசா என,
Lanka Expat
This Indian Guy is causing great damage to the unity and integrity of Canada. this Guy is a “threat to one of the fundamental interests of society, There was a superficially plausible argument that verbal terrorism led to mass murder .So Canadian police was right to forbidden to his preach and removal.
Murali
இனி சீமான் இயக்கிற படம் மட்டும் தான் புலத்துத் தமிழர்கள் (எலிகள்) பார்க்கவேண்டும்??
பார்த்திபன்
பல்லி,
சிலவேளை சீமான் (முள்ளி)வாய்க்காலரசைச் சொல்லுகின்றாரோ தெரியவில்லை??
அறிவழகன்
லண்டன் மாவீரர் தின சிறப்பு பேச்சாளராக வைகைப்புயல் பேசவுள்ளார்
சந்தனம்
சிலர் தாங்கள் விளம்பரமா வேண்டுமானல் பெரிய தலைவர்களுடன் எடுத்த படத்தை முதலில் விளம்பரபடுத்துவார்கள் ஆனால் சீமான் உலக பயங்கரவாதியின் படுத்தை விளம்பரபடுத்தி விட்டார் அவரிற்கு அதுதான் ஆப்பு. தமிழ்நாட்டு தமிழன் இலங்கையனில்லை என்பதை சீமான் உணர்வார.
சீமான் செய்தி
வியாழக்கிழமை இரவு சீமான் கனடாவை விட்டு இந்தியா கிளம்பினார். வியாழக்கிழமை இரவு சீமான் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை மொன்றியலில் பேசுவதாக இருந்தார்.