எதிர்காலத் திட்டமெதுவும் இல்லாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கும் ஒரே நோக்கில்தான எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்துள்ளன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஒரே கொள்கையில் ஒன்றுபட முடியாத இவர்கள் எப்படி நாட்டை ஆளப்போகிறார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். விமல் வீரவன்ச அங்கு மேலும் கூறியதாவது இந்த நாட்டில் சர்வாதிகாரம் நடைபெறுவதாகக் கூறும் எதிhக்கட்சிகள் அதற்கான ஆதாரங்ளை முன்வைக்க வேண்டும். தேவையானளவு அதிகாரம் இன்றி எந்தக் கட்சியையும் கட்டியெழுப்ப முடியாது. குடும்ப அரசியலால் இந்த நாட்டுக்குப் பாதகம் இல்லை. அவர்களின் செயற்பாடுகளால் நாடு நன்மையடைந்தால் அதுவே பெரும் சேவையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
palli
உன்மைதான் அதில் சந்தேகம் இல்லை; ஆனால் உங்கள் அரசிடம் நிகழ்கால திட்டம் ஏதும் உண்டோ??