அடுத்த பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த பிரிட்டன் எதிர்ப்பு

அடுத்த பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதைத் தடுக்கும் முயற்சிகளை பிரிட்டன் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரை இலங்கை அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வெகுமதி வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் 60 வருட நிறைவையொட்டி பிரிட்டனில் காலனித்துவ ஆட்சியிலிருந்த 53 நாடுகளின் தலைவர்கள் ட்ரினிடாட் அன்ட் டுபாகோவின் தலைநகரான போர்ட் ஒவ் ஸ்பெயினில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களில் ஒன்றாக 2011 இல் நடைபெறவுள்ள அடுத்த பொதுநலவாய உச்சி மாநாட்டை எங்கு நடத்துவது என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்படவுள்ளது.

அடுத்த மாநாட்டை நடத்துவதற்கு போட்டியிடும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்நிலையில், இவ்வாய்ப்பு இலங்கையைச் சென்றடைவதைத் தடுக்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணின் முயற்சி கலந்துரையாடலில் கடும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாய்ப்பைப் பெறுவதற்கு இலங்கை போட்டியிடுவது தொடர்பில் பிறவுண் உண்மையில் கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கும் டவுணிங் தெரு தகவல்களில்முறையான மனிதாபிமான வசதிகளின்றி பல்லாயிரக்கணக்கானோரை இடம்பெயர வைத்து அவலத்திற்குள்ளாக்கியதன் மூலம் பொதுமக்கள் மீது பாரிய தாக்கமொன்றை ஏற்படுத்திய இலங்கையின் நடவடிக்கைக்கு வெகுமதி வழங்கும் நிலைப்பாட்டை இலகுவானதாக எம்மால் எடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • சாந்தன்
    சாந்தன்

    ஸ்ரீலங்காவின் இந்த முயற்சிக்கு கனடாவும் ஒத்துழைக்காது என கனேடிய பிரதமர் தெரிவித்திருக்கிறார். கனடாவின் இந்த முடிவுக்கு ஒன்ராரியோ மாநிலத்தின் முன்ன்னைநாள் பிரதமர் பாப் ரே இம்முடிவை வரவேற்றுள்ளார். மேலும் இன்ரனசனல் கிரைசிஸ் குறூப், ஐ.நா மனித உரிமை ஆணையம் போன்றனவும் இம்முடிவை வரவேற்றுள்ளன.

    Reply