நாடாளு மன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் (02) எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார். இந்தநிலையில் விஜேதாஸ ராஜபக்ச, கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் தெரிவானார். அத்துடன் கட்சியின் மஹரகம அமைப்பாளராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலியின் இடத்திற்கே விஜேதாஸ ராஜபக்ச, கட்சியின் செயற்குழுக்கு தெரிவானார்.