பாகிஸ் தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு அருகிலிருக்கும் மசூதியில் மக்கள் நிறைந்திருந்த நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நாற்பது பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அங்கே தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குறைந்தது நான்குபேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். மசூதியின் ஆண்கள் மற்றும் பெண்கள் தொழுகை செய்யும் இரண்டு பகுதிகளிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே மனிதர்கள் விலங்குகளைபோல படுகொலை செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
தாக்குதல்தாரிகளுடன் பாதுகாப்பு படையினர் சுமார் ஒரு மணித்தியாலம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும், இறுதியில் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தம்மீது கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரியும் இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலரும் இந்த மசூதிக்கு வருவது வழமை.