ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு ஈ.பி.டி.பி. முடிவு செய்துள்ளது. இதனை விளக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார்.
மக்கள் நலன் சார்ந்த 10 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், அவைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறினார். அதேநேரம் 10 அம்சங்களையும் நிறைவேற்றுவதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ளாரெனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.
கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் தேவானந்தா, வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அரசியல் தீர்வும் வெளிப்படும் எனக் கூறினார்.
13 வது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஜனாதிபதியில் நம்பிக்கை வைத்துச் செயற்படுகிறோம். அரசியல் தீர்வு வெளிப்படும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் பாராளுமன்ற தேர்தல் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அதன் பின்னர்தான் வடக்கில் அரசியல் தலைமைத்துவம் இல்லையென்ற குறை போக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஓர் அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்திருப்பதால் அதன் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நடைமுறை சாத்தியமான வழிமுறை யிலான பத்து அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தியிருப்பதானது எமது மக்களின் அரசியல் இலக்கை எட்டுவதற்கான சூழலை நிச்சயம் உருவாக்கியே தீரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அந்த பத்து அம்ச கோரிக்கைகளுள் பிரதானமானவை வருமாறு:
1. தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக 13 வது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து படிப்படியாக கூடுதல் அதிகாரங்களைப் பெற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுதல்.
2. தமிழர்கள் இலங்கையர்களாகவும் அதேவேளையில் தமிழர்களாகவும் இருப்பதற்கான அவர்களது விருப்பங்களை உறுதிப்படுத்துதல்.
3. இலங்கையர் என்ற நிலையான சமத்துவ உணர்வையும் இனக்குழுமம் என்ற அடிப்படையான பண்பாட்டையும் இனங்களுக்கு இடையில் சமத்துவத்தையும் பேணுதல்.
4. வன்னிப்பகுதியில் இருந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்தும் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வியல் உரிமைகளுக்கான செயற்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தல்.
5. கடந்த மூன்று தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வன்முறைகள் அற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல்.
6. இலங்கையின் ஏனைய பகுதிகளைப் போல் ஏ-9 பாதை உட்பட ஏனைய போக்குவரத்திலும் தடைகளற்ற பயணத்தை உறுதிப்படுத்துதல்.
vasan
டக்ளஸ் மக்களின் தேசத்துரோகி யென்றுதான் நாம் நினைத்தோம் ஆனால் இன்று டக்ளஸ் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நோயாலும் பட்டினியாலும் மனதாலும் கம்பிக்கூட்டிற்குள்ளும் இருந்து வேதனைப்பட்டுக் கொண்டு இருந்த மக்களை மீளக்குடியமரவைத்து அவர்களை பாரபட்சம் பாராது எல்லேரும் சொந்த இடங்களில் குடியமர்வதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதை நினைக்கும் பொழுது மனம் நெகிழ்கின்றது — லண்டணில் இருந்து வாசன்.
jalpani
மக்கள் நலன் சார்ந்த 10 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் அவைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறினார்”
ஏற்றுக் கொண்டுள்ளதாக மகிந்த டக்ளஸிடம் தான் சொல்கிறார். மக்கள் முன் அல்ல. கண்கள் இருட்டுகின்றன.
சாந்தன்
அவ்வாறாயின் இவ்வளவு நாளும் (1995 இல் என நினைக்கிறேன்) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாக்குறுதி அளித்துள்ளது எனச் சொல்லித்திரிந்தாரே?
இதில் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, வடக்குகிழக்கு என்றும்பிரிக்கமுடியாத அலகு என பி.பி.சி வரை முழங்கினார். அண்மையில் மகிந்தா அந்தக்கதையெல்லாம் புலியோட முடிஞ்சுது எனச் சொல்லி இருக்கிறார். இவர் 10 அம்சக் கோரிக்கை…வாக்குறுதி என்கிறார். வாக்குறுதி காற்றில் பறக்கவிட்டார்கள் எனச் சொல்லித்தானே யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் கூட்டம் (படிப்பு) நடத்தினார்கள்.
13ம் திருத்தமே காத்தில பறக்கும் போல இருக்கு. அதில் இருக்கிற மாடு/ஆடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றனவே ஒழுங்காக செய்யமுடியவில்லை என்கிறார் பிள்ளையான். இதில அப்பால போகிறேன் என்கிறார்.
பத்து அம்சக்கோரிக்கை என்கிறார்கள். ஆனால் இங்கே ஆறுதான் உணடு. ஏன் என்று தெரியவில்லை
appu hammy
Then make pressure before election.
mathan
7. கடந்தகாலங்களில் பொருளாதார அபிவிருத்தி கவனிக்கப்படாமலும் நீண்டகால யுத்த சூழ்நிலைகளால் அபிவிருத்தி காணப்படாமலும் இருக்கின்ற தமிழ் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
8. இலங்கையின் ஏனைய பகுதிகளைப் போல் ஏ9 பாதை உட்பட ஏனைய போக்குவரத்திலும் தடைகளற்ற பயணத்தை உறுதிப்படுத்துதல்.
9. தமிழ் மொழிக்குரிய சமத்துவ அந்தஸ்தை நிர்வாக ரீதியில் திட்டமிட்டு விரிவாக்கி, இலங்கை அரச நிர்வாகத்தில் தமிழ் பேசும் மக்கள் அந்நியப்பட்டவர்கள் என்ற நிலையை அகற்றி எமது மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதோடு தமிழ் பேசும் மக்களும் இந்நாட்டின் பங்காளிகளே எனும் நிலையை உருவாக்குதல். இலங்கையின் மத்திய பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளில் இனவிகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதை உறுதிப்படுத்துதல்.
10. தமிழ் பேசும் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வரலாற்று வாழ்விடங்களிலிருந்து தாம் அகற்றப்பட்டு விடுவோம் என எழுந்திருக்கும் சந்தேகங்களை நீக்கி ஐக்கிய இலங்கைக்குள் அவர்களது வரலாற்று வாழ்விடம் அவர்களுக்கே உரியது என்ற நம்பிக்கையினை உறுதிப்படுத்துதல்.
jalpani
தாம் கிளப்பி விட்ட இனவாதப் பூதத்திற்கு இப்போது அவர்களே அஞ்ச வேண்டியுள்ளது. இந்த பத்து அம்சங்களையும் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்று மகிந்தாவால் ஆதரவு திரட்ட முடியுமா? இனவாதத்தையும், அது தரும் வாக்குளையும் மட்டுமே குறிக் கோளாக கொண்டுள்ள இலங்கை அரசியல் எப்போதும் திருந்தாது. முகாம் மக்கள் விடுதலை, பாதைகள் திறப்பது , மீள்குடியேற்றம் அபிவிருத்தி திட்டங்களின் அறிவிப்பு எல்லாம் தேர்தலுக்கான நாடகங்களே. முதலில் வாக்களியுங்கள், பிறகு அரசியல் தீர்வை சொல்லுகிறேன் என்ற அரசியல் எங்கும் இருக்க முடியுமா? தமிழ் மக்கள் இவர்களை புறந்தள்ளி விட்டு இடதுசாரி கடசிகளுடன் தங்கள் உறவை தொடங்க வேண்டும். ஓடும் குதிரை, ஓடாத குதிரை என்பதெல்லாம் அரசியல் “வியாபாரம்” என எண்ணுபவர்களுக்கே.
Thaksan
11. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஈபிடிபி யை தவிர வேறு யாருக்கும் பஸ் ரூட் பெமிசன் குடுக்க கூடாது.
12. சங்கரிக்கு எந்தக்காலத்திலும் வட மாகாண ஆளுநர் பதவி தரக்கூடாது.
13. ….
14. ……
……………
இதெல்லாம் பகிரங்கபடுத்தக்கூடாது.
jalpani
டக்ளஸ் முன்னுக்கு பின்முரணான கருத்துக்குளை கூறி மக்களை ஏமாற்ற முயற்சியா?
அரசின் உத்தியோபூர்வ இணையம் பொய் சொல்கின்றதா?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் டக்ளஸ் தலைமையிலான ஈபிடிபி ஜனாதிபதி மஹிந்தவிற்கு நிபந்தனைகளற்ற ஆதரவினை வழங்க முன்வந்துள்ளதாகவும் அதை அவர் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் இலங்கை அரசின் உத்தியோக பூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது. .
அதே நேரம் இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி எனும் நாளாந்த தமிழேட்டின் இணையச் சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா தான் அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அக்கோரிக்கைகள் பலவற்றை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் அக்கோரிக்கைகளை ஏற்று தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கும் பட்சத்தில் அவற்றிற்கு தாம் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் உத்தியோக பூர்வ இணையத்தளம், டக்ளஸ் நிபந்தனைகள் அற்ற ஆதரவினை புரிய முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், தமிழ் மக்களால் இலங்கையில் அதிகம் நம்பப்படுகின்ற தமிழ் ஊடகம் ஒன்றில் தோன்றி தான் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்க விரும்புவதாக டக்ளஸ் கூறியிருப்பதன் பின்னணி பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது. அவ்வாறாயின் இலங்கை அரசின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதா என்ற விடயத்தை அரச தரப்பு அல்லது ஈபிடிபி வட்டாரங்கள் மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் என பலரும் எதிர்பார்கின்றனர்.
அரசின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் வெளிவந்த செய்தியை கீழே காண்கின்றீர்கள்
EPDP offers unconditional support to President
Wednesday, 02 December 2009
The EPDP of Minister,Douglas Devananda will support President Mahinda Rajapaksa at the forthcoming polls. This decision was disclosed to the media by Minister Douglas Dewananda, General Secretary of the EPDP.
He said the EPDP has now confirmed their support to the President at the upcoming polls. He said it was the President who initiated action to develop the Northern Province and improve the living standards of the northern population.
He referred to the valuable service provided by the President to the Tamil community while eradicating terrorism. They will not ask anything from the President. He assured unconditional support to the President.
Last Updated ( Wednesday, 02 December 2009 )
nathan
அதைநீர் இனம்தெரியாமல் போன புலிகளிடம்தான் கேட்கவேண்டும். அல்லது பிரபாகரனால் நாணக்கயிற்றில் கட்டிவிட்டிருந்தவர்கள் இப்போது கட்டாககாலியா திரிபவரிடம் கேழும்….?எந்த தலைவர்களையாவது சிறிலங்கா அரசு சுட்டதாய்யா ?உம்மிட பிணம்தின்னி தலைவர்தானையா சுட்டவர்; அந்த மனிசனும் பாவம் பிள்ளைகள் சிறையில உண்ணாவிரதம் இருக்குதுகள் என்று பார்கச் செண்றமணிசன அடிச்சுக்குதறி சக்கொண்டு போட்டியளே; மீண்டும் அந்தமனிசன் யேசுநாதர் உயிர்தெழுந்து வந்தமாதிரி வந்து புலிகளால நடுத்தெருவில விட்டமாக்களை எப்படியாவது பாதுகாத்திட வேனும்மென்டு அந்தமனிசன் பாடபடுகிறார். அந்த மனிசனட்டப்போய் விதண்டாவாதமா. புலியால் தேசத்துரோகியெண்டும் அரசால் புலியெணறும் காணாமல் போனய்கொணடு இருக்கிற பட்டியலை அந்மனிசன குறைக்க வேனுமெண்ட பார்க்குது. அதைநீர் கேள்வி கேடக வேனுமெண்டா நீங்கள் காலாகாலமாக வாக்குப்போட்டு அனுப்பினிங்களே இப்ப கட்டாகாலியாக திரியினம் ரிஎன்ஏ காறர் அவயட்ட கேளுங்கோவேன் தம்பிமாரே..