செலியூலர் தொலைபேசிகளூடாக ‘365’ என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் ஊடாக ரயில்களில் உங்கள் இருக்கைகளைப் பதிவு செய்யும் புதிய நடைமுறை எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகிறது.
முதற்கட்டமாக கொழும்புக் கோட்டை முதல் கண்டி வரையிலும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையுமான கடுகதி ரயில் சேவையில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு கோட்டை நிலையத்தில் ஆசனப்பதிவு பிரிவு கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதுடன் வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கக் கூடியது. முன் ஆசனப்பதிவு பகுதி இயங்கவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நிகழ்வு நடைபெறவுள்ளது.