ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு செவ்வாய் தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக அக்கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை.அதேசமயம், தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்தும் முடிவெடுக்கப் படவில்லையென அக்கட்சியின் திருமலைமாவட்ட எம்.பி. பி.துரைரெட்ணசிங்கம் சனிக்கிழமை கூறியுள்ளார்.ஆயினும் நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறினால் சுயேச்சை வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக யாழ்.மாவட்ட எம்.பி. எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவில் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியான நிலையிலேயே துரைரெட்ணசிங்கம் இந்தக் கருத்துகளை கூறியுள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலர் வெவ்வேறான கருத்துக்களை வெளியிட்டாலும் இத்தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு விரைவில் உறுதியான முடிவொன்றை எடுக்குமென கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த முடிவுக்கு அனைத்து எம்.பி.க்களும் கட்டுப்படுவரெனவும் அதனால் தற்போது கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லையென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • nathan
    nathan

    ஏமாத்துப்படுபவர்கள் இருக்கும்வரைக்கும் கூத்தனிக்குக் கொண்டாட்டம்தான் சபாஸ் எப்படியாவது பதவியை பிடியுங்கள் மக்கள் தான் பாவம்

    Reply
  • nathan
    nathan

    இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் நிலையில் பெரும் மாற்றம்: ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி
    ஜ செவ்வாய்க்கிழமைஇ 08 டிசெம்பர் 2009இ 08:58.37 யுஆ புஆவு +05:30
    இலங்கை இழைத்த போர்க்குற்றம் குறித்து சூடு பறக்கப் பேசி வந்த அமெரிக்கா தற்போது தனது நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இலங்கை நமக்கு தேவை என்ற புதிய மந்திரத்தை வெளியுறவுக்கான செனட் கமிட்டியின் அறிக்கை உச்சரிப்பதால்இ இலங்கை குறித்த தனது நிலையை மாற்றிக் கொள்ள முடிவெடுத்து விட்டது அமெரிக்கா. அப்போ இவர்களுக்கு என்ன சொல்லப் கேபாகிறீர்கள்எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக அரசுத் தரப்புடனும் எதிர்க்கட்சி தரப்புடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவது என்று த. தே.கூட்டமைப்பின் தலைமை தீர்மானித்திருக்கின்றது. இதன் ஓர் அம்சமாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் நேற்று மாலை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சு நடத்தினார். குருக்கள் செய்தால் ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி கொள்ளமாட்டினம்

    Reply