சரத் பொன்சேகாவின் வெளிநாட்டு பயணம் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல்

rohitha-bogollagama_s.jpgமுன்னாள் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகாவின் வெளிநாட்டுப் பயணங்களினால் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது அங்கு விசா ரணைக்கு உட்படுத்தப்பட் டுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, எந்த இராணுவத் தளபதிக்கும் தனிப்பட்ட ரீதியிலோ உத்தியோகபூர்வ மாகவோ வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு வைக்கமுடியாது. ஆனால் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியான பொன்சேகா வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு வைத்துள்ளார்.

இதன் மூலம் இலங்கை தொடர்பான தகவல்கள் வெளியாருக்குச் செல்லலாம். இதனால் நாட்டின் ஆள்புல ஒருமைப் பாட்டிற்கும் இறைமைக்கும் அச் சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொன்சேகா அமெரிக்கா சென்றபோது அங்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இவரின் வெளிநாட்டு பயணங்கள் காரணமாக நாட்டின் இறைமைக்கும் ஆள் புல ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இது தொடர்பில் சர்வதேச நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி. எஸ். பி. சலுகை தொடர்பில் முன்பு காணப்பட்ட நெருக்கடி நிலை தற்பொழுது கிடையாது.  ஜி.எஸ்.பி. சலுகை மீண்டும் இலங்கைக்கும் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிரினிடேட் என்ட் டுபாக்கோவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் 2013ல் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பான பிரேரணையை முன் வைத்தது குறித்து பிரித்தானிய பிரத மருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

2013ல் பொதுநலவாய மாநாட்டை இலங்கை யில் நடத்து வதற்கு சகல நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கின. இது தொடர்பில் சகல நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எமக்கு மொரிஸ் நாடு போட்டியாக வந்த போதும் இறுதியில் 2013ல் இலங்கையில் மாநாட்டை நடத்தவும் 2011ல் அவுஸ்திரேலியாவிலும் 2015ல் மொரிஸிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது என்றார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளினால் நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது. நாட்டில் அமைதியான சூழல் காணப் படுகிறது. இந்த ஜனாதிபதித் தேர்தல் சகல இன மத மக்களுக்கும் மிக முக்கியமானதாகும். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக சுதந்திரமாக தேர்தல் நடைபெற உள்ளது.

வரலாற்றில் முதற் தடவையாக ஐ. தே. க வேட்பாளர் ஒருவரின்றி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மாகாண சபைத் தேர்தல்களில் மக்கள் ஜே.வி.பியை நிராகரித்துவிட்டனர். இன்று ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் கூட்டு வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளனர். அவர் பொது வேட்பாளரல்ல. அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி எதுவும் கிடையாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    அவர் போய் போட்டு கொடுத்துவிட்டு வந்த நாடுகளுக்கு தாங்கள் போய் மாட்டிக்க வேண்டும் என்பதை நாகரிகமாக சொல்லுறியள்; இது மகிந்தா
    குடும்பத்துக்கு தெரியாதா என்ன,?

    Reply