க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி ஆரம்ப மாகும்போது ஏ எச்1என்1 வைரஸ் பீடிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் இருப் பின் அவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
எனினும், இன்றுவரை அவ்வாறு எந்தவொரு மாணவரும் ஏ. எச்1என்1 வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களால் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போகும் அத்து டன் இதனால் ஏனைய பரீட்சார்த்திக்கும் பரவ வாய்ப்புண்டு என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வைரஸால் பீடிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள் பற்றிய எவ்வித அறிவித்தல்களும் பரீட்சைத் திணைக்களத்துக்கோ வலய கல்விப் பணிப்பாளருக்கோ அறியக்கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.