மனிக்பாம், புதுக்குடியிருப்புப் பகுதிகளுக்கு ஜனாதிபதி நேற்று திடீர் விஜயம்

manik.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கும் வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டார். இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர் நிலைமைகளைப் பார்வையிட்டார்.

மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களோடு தமிழில் உரையாடி குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர், “ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு விடுவீர்கள்” என்று கூறினார்.

புதுக்குடியிருப்பில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையி னரைச் சந்தித்த ஜனாதிபதி, யுத்தம் முடிவுற்றதை நினைவு கூரும் வகை யில் நினைவுத் தூபியொன்றையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இத் திடீர் விஜயம் நேற்றுக் காலை இடம்பெற்றதுடன் ஜனாதிபதியுடன் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைத்தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறையின் முக்கிய உயரதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினரைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மீட்கப்பட்டுள்ள தாய் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற் பாடுகளில் படையினரின் முழுமையான ஒத்துழைப்புத் தமக்குக் கிட்டுமென நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக படையினரினதும் நாட்டு மக்களினதும் மன உறுதியைக் கட்டியெழுப்புவதே எமது பணியாகியது.

இதற்கிணங்க படையினர் சுதந்திர மனப்பாங்குடனும் துணிவுடனும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தால் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

படையினரின் பிள்ளைகளுக்காக பாடசாலைகளை நிர்மாணிப்பது படையினருக்கான வீடமைப்புத் திட்டம் உட்பட படையினரின் எதிர்காலம், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து முழு நாட்டையும் வெற்றியின் பாதையில் இட்டுச் செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டது என்றார்.

பயங்கரவாத நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் வசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன் அவ்வாறு மீள் குடியமர்த்தப்படுவோருக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா நிதியுதவி 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மனிக்பாமிற்கு விஜயம் செய்த அவர் தமிழில் உரையாற்றினார். ஜனாதிபதி அங்கு பேசியபோது மேலும் கூறியதாவது :-

இந்த நாட்டில் வாழும் அனைவரையும் பாதுகாப்பது எனது பொறுப்பு. அது எனது கடமையுமாகும். அதை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். இந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பயமின்றி, சந்தேகமின்றி சுதந்திரமாக வசிக்கமுடியும். அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலை தூக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல வருடங்களாக மேற் கொள்ளப்படாதிருந்த அபிவிருத்தி செயற் பாடுகள் வடக்கு வசந்தத்தின் மூலம் இப் போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உங்கள் அனைவருக்கும் வீட்டு வசதி உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளே உங்கள் சொத்து. அவர்கள் நன்றாக படிக்க வேண்டும். எதிர் காலத்தில் இந்த நாட்டில் அவர்கள் முக்கிய பதவிகளை வகிக்க வேண்டும் என்றார்.

நிவாரண கிராமத்தில் உள்ள மாண வர்களுக்காக 23 ஆயிரம் தொகுதி பாடசாலை உபகரணங்களை ஜனாதிபதி பகிர்ந்தளித்ததுடன் நிவாரண கிராமத்தில் இருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • chandran.raja
    chandran.raja

    ஆலாத்தி எடுப்பவர்கள் பாக்கியவதிகள். இவர்களுக்கு பொட்டு வைப்பதற்கு பொட்டரும் இல்லை. பிரபாகரனும் இல்லை. இந்த விதத்திலையாவது நாடு அமைதியை நோக்கிப்போகிறதே! அதுவரை மகிழ்சிதான். இனிமேலாவது துப்பாக்கி கலாச்சாரத்தை தொலைத்து விட்டு ஆரோக்கியமான கலாச்சாரத்தில்…. தொழில்சங்க கலாச்சாரத்தில் இறங்குவோமாக….? இதுவே உறுதியானதும் நிரந்தரமானதும் மக்களுக்கு பயன்யுள்ளதாகவும் நாட்டை முற்போக்கு பாதையில் இழுத்துக்கொண்டு போகக்கூடியதுமாகும். இங்கு மத்தாப்பூ வியையாட்டுகளோ வாணவேடிக்கைளோ கிடையாது. அவரவர் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை அடைவதுமல்லாமல் மானிடத்தின் நீதிமன்றங்களாக இருக்கக்கூடியதுமல்லாமல் நாட்டின் வரலாற்றை மாற்றி அமைக்கும் சக்தியாகவும் மாறக்கூடியது. அந்த வகையில் ஜனாதிபதி மகிந்தா ராஜயபச்சாவுக்கு ஒரு மனதாக வாழ்த்து கூறுவோம். சம்மதம் இல்லாதவர்கள்?…….அதுதான் தெரியவில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    :://ஆலாத்தி எடுப்பவர்கள் பாக்கியவதிகள்//
    இதை மகிந்தா அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என. எல்லாம் வல்ல இயற்க்கையை வேண்டுகிறேன்;

    Reply
  • nathan
    nathan

    Yal Devi commuters complain of body checks

    Northern bound railway commuters have protested of the body checks carried out by the security forces at the Medawachchiya Railway Station on all Yal Devi passengers.

    They said majority of the North bound passengers use the Vavuniya night mail train but they are not subject to checks while all Yal Devi commuters have to disembark at Medawachchiya and are subjected to body checks. They said the Yal Devi runs during day time.

    However, at Medawachchiya they were compelled to disembark with their bags and baggage, made to walk to a check point and return to their carriages. This they complained is a cumbersome procedure and results in long delays before the train reaches Vavuniya.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழ் இனம் முதல் நன்றி செலுத்துக் கற்றுக்கொள்ள வேண்டும். எமது இனத்திற்கு வந்த கொடியநோய்யை முப்பது ஆண்டுகள் சென்றும் எம்மால் அழித்தொழிக்க முடியாத போது இருபத்தையாயிரம் இராணுவ வீரர்களை பலி கொடுத்து அந்த நோயை நீக்கிய பெருமை ஜனாதிபதி மகிந்தா ராஜயபக்சாவே சாரும். வெள்ளிடமலையாக தெரிகிற இந்த உண்மைக்கு நாக்கில் வாக்கில் ஒரு நன்றி வார்த்தை கூட வரக்கூடாதா?.

    Reply
  • Anonymous
    Anonymous

    //தமிழ் இனம் முதல் நன்றி செலுத்துக் கற்றுக்கொள்ள வேண்டும்//நீங்கள் சொல்லவேண்டியதை நேரடியாக சொல்லலாமே?

    Reply
  • பல்லி
    பல்லி

    :://தமிழ் இனம் முதல் நன்றி செலுத்துக் கற்றுக்கொள்ள வேண்டும். //
    சந்திரா கவலைபட வேண்டாம்; அதுக்காகதானே வருகுது தேர்தல் அதில் சொன்னால் போச்சு, இதில் யாருக்கு நன்றி சொல்லுவது மகிந்தா சொன்னார் அடிக்கும்படி; சேகரா செய்தார் கொலைகளையும் கொடூரங்களையும்; ஆக அம்புக்கு நன்றி (சேகரா) சொல்லவா? அல்லது வில்லுக்கு (மகிந்தா)நன்றி சொல்லவா? அல்லது மகிந்தா குடும்பத்துக்கு நன்றிகள் என பாயாசம் காச்சலாமா? அல்லது சிங்கள மக்களுக்கு ஒரு கூழ்கரைக்கும் நிகழ்வை வைத்து அதில் செல்லப்பாவை கரும்புலி அது கடும் புலியென பாட வைக்கலாமா? சொல்லுங்க சந்திரா சொல்லுங்க;

    Reply
  • Jeya
    Jeya

    முள்ளிவாய்க்காலில் 25 000 பேர் தமிழர்கள் கொல்லப்பட்திற்கு யாரும் நன்றி சொல்ல முடியாது ஆனால் இன்னும் ஒரு 25000 உயிர்களை காப்பாற்றப்பட்டதிற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

    Reply
  • Anonymous
    Anonymous

    //25000 உயிர்களை காப்பாற்றப்பட்டதிற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.//சொன்னாபோச்சு எங்கள் காத்தல் அழித்தல் கடவுள் ஜனாதிபதி அவர்களுக்கு நானும் எனது குடும்பமும் மற்றும் உற்றார் உறவீனர் கொல்லப்பட்டோர் 25000+? கொல்லபடபோவோர் 25000+? மற்றும் அங்கங்களை இழக்கசெய்த10000+? இழக்கபோகும்10000+? மற்றும் மனநோயளி ஆக்கப்பட்டோர்10000+? ஆக்கப்படபோவொர்10000+? விதவையாக்கப்பட்டோர் 20000+?ஆகபோவோர்20000+? கனவனையிழந்தோர் மனைவியிழந்தோர் பிள்ளை இழந்தோர் தாய் தகப்பனையிழந்தோர்,,,,,,,மற்றும் எல்லோர் சார்பாகவும் நன்றி நன்றி நன்றி

    Reply
  • kavin
    kavin

    இங்க நன்றி என்கிற வார்த்தை எல்லாம் அதிகம்.
    ஆனாலும் மே 18ற்குப்பின்னான போக்குகளை அவதானித்து> அது இன்னம் சிலகாலம் காலமாவது நீடிக்க வேண்டுமென்ற விருப்பிலிந்து ராஜபக்சவுக்கு வாக்களிககலாம். விக்கிரமபாகுவிற்கு வாக்களித்து இரண்டாவது சுற்றில் ராஜக்கசவுக்கு வாக்களிப்பதே சரியானது. ஆனால் இலங்கையில் இத்தகைய சூழ்நிலை இல்லை. இது சிங்களதேசம் உந்த தேர்தலைபற்றி அக்கறையில்லை என்று அலட்டுவது உருப்படாத கதை. தேசம் நெற் பின்னூட்டகாரர் எல்லோரும் சந்திரன் ராஜா போல் வெளிப்படையாக கருத்துவைப்பது நல்லமென விரும்புகிறேன். கட்டாயம் ஒவ்வருவரிடமும் ஒவ்வரு கருத்து இருக்கும். இருப்பதால்தானே எழுதுகிறார்கள். பிறகேன் இந்தவிடயங்களில் கள்ளன் பொலிசு விளாட்டு.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Anonymous,
    உங்கடை உந்தவிதமான நன்றியை கொத்தப்பட்டு கொல்லப்பட்ட, உங்க தலைக்குத் தான் சொல்ல வேண்டும். காரணம் உவ்வளவு சனத்தையும் தன்ரை உயிரைக் காப்பாற்ற கொத்தாகக் கொண்டு போய், போட்டுத் தள்ள உதவியது அவர் தானே……

    Reply
  • BC
    BC

    தொடர்ந்த மக்கள் அழிவிற்க்கும்,அவர்கள் வாழ்வின் சிதைவுக்கும், அங்கவீனர்களாக்கப்பட்டுவதற்க்கும் முற்றுப் புள்ளி வைத்ததிற்க்கும், புதிய (யுத்த)விதவைகள் உருவாவதை தடுத்ததிற்க்கும், பள்ளிகூடத்தில் படிக்கலாம் என்ற நிலமையை ஏற்படுத்தியதிற்க்கும், பலவந்தமாக யுத்தத்திற்க்கு ஆள் சேர்ப்பினால் தாய்கள் மன நிலை நோயாளிகள் ஆவதை முடிவுக்கு கொண்டுவந்ததிற்க்கும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு எனது நன்றி.

    Reply
  • Anonymous
    Anonymous

    //காரணம் உவ்வளவு சனத்தையும் தன்ரை உயிரைக் காப்பாற்ற கொத்தாகக் கொண்டு போய், போட்டுத் தள்ள உதவியது அவர் தானே…/இதில் இருந்தே உங்கள் புரிதல் தெரிகிறது ஒரு குற்றவாளியை அழிக்க 30 000அப்பாவியை அழிக்க வேண்டியிருக்கு அதுவும் 2009இல் புலி நடமாட்டத்தை அவதானித்த செய்மதிகளாலை அப்பாவிகளின்ரை நடமாட்டத்தை அவதனிக்க முடியாதா.

    Reply