2009ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் இன்று 11 ஆம் திகதி ஆரம்பமாகிறது. வவுனியா நிவாரணக் கிராமங்களில் இம்முறை 4944 பேர் தோற்றவுள்ளனர். இவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பரீட்சை மண்டப மேற்பார்வைக்கென 726 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட ஆளடையாளத்தை பயன்படுத்த முடியும்.
இடம்பெயர்ந்தவர்களுக்கெனவும் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பலாத்காரமாக புலிகள் இயக்கத்துக்கு இணைக்கப்பட்டு சரணடைந்தவர்களுள் 432 பேரும் இன்று பரீட்சைக்கு தோற்றுகின்றனர். பம்பைமடு புனர்வாழ்வு முகாம், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம், காமினி வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒவ்வொரு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புனர்வாழ்வு முகாமிலிருந்து கற்றல் நடவடிக்கைகளுக்காக இரத்மலானை இந்து கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டவர்களுள் பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கென விசேட பரீட்சை நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளன.
மகசின் சிறைச்சாலையில் கைதிகளாக இருக்கும் பரீட்சார்த்திகளுக்கென ஒரு விசேட பரீட்சை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
மீளக்குடியமர்த்தப்பட்ட முல்லைத்தீவு துணுக்காய் பகுதி மற்றும் முழங்காவில் பகுதிக்கென ஒரு விசேட பரீட்சை நிலையமும், புளியங்குளம் மீளக்குடியமர்த் தப்பட்ட பகுதியில் ஒரு பரீட்சை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
நிவாரணக் கிராமம் – 51 நிலையங்கள் / 4944 பரீட்சார்த்திகள் / 726 பணியாளர்கள்
சரணடைந்தவர்கள் – 3 விசேட நிலையங்கள் / 432 பரீட்சார்த்திகள்
நாடு முழுவதும் – 4098 நிலையங்கள்
மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு 3 விசேட நிலையங்கள்