பல்க லைக்கழக மாணவர்கள் மத்தியில் அடிக்கடி ஏற்படும் மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தேசிய கொள்கையொன்றை தயாரித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹரிச்சந்திர அபேகுணவர்தன தெரிவித்தார்.
இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டிக் கிளையின் 36 ஆவது பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்தத் தகவலைத் தெரிவித்த அவர் தொடர்ந்து தன துரையில்; நாட்டின் சகல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் மத்தியில் நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதனூடாக மாணவக் குழுக்கள் மத்தியில் தோன்றும் மோதல்களை கட்டுப்படுத்த முடியும். மாணவர்களிடையில் ஏற்படும் முரண்பாடுகளை சட்டங்கள் மற்றும் தண்டனைகள் மூலம் தீர்க்க முடியாது. எனவே பல்கலைக்ககழக மானியங்கள் ஆணைக்குழு தேசிய கொள்கையொன்றை உருவாக்கி வருகின்றது. இதனை சகல பல்கலைக்கழகங்களிலும் அமுல்செய்யும் போது சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்றார்.