தாம் பதவிக்கு வந்தால் அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பு வழிங்குவதாக ஓய்வுபெற்ற சரத் பொன்சேகா தெரிவித்திருப்பது நகைப்புக்குரிய ஒரு விடயமாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மைத்திர்பால சிறிசேன தெரிவித்ததார். மஹாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி ஆகியவற்றின் தேவைக்காகவல்ல அவருக்குப் பின்னால் இயங்கும் மற்றுமொரு சக்தியின் அழுத்தத்துக்காகவே.
சரத்பொன்சேகா கட்சி பேதம் அற்றவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஜே.வீ.பி கூட்டத்துக்கு வராத அவர் ஐ.தே.க கூட்டத்துக்கு யானைச் சின்னத்துடன் வந்தார். இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி கட்சிகள் மத்தியில் பிளவு ஏற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்