இந்தியா வின் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலத்தை உருவாக்குவது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அந்த மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள நிலையில், இதே பிரச்சனையை முன்வைத்து 20 அமைச்சர்கள் பதவி விலக முன்வந்துள்ளனர்.
இவர்கள் ராயல்சீமா மற்றும் ஆந்திரா பகுதியை சேர்ந்தவர்கள். இந்த ராஜினாமாக்கள் இதுவரை ஏற்கப்படவில்லை. மாநிலத்தை பிரிக்கக் கூடாது என்று கூறும் எம் எல் ஏக்கள் மற்றும் அமைச்சர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் மாநில முதல்வர் இறங்கியுள்ளார்.
DEMOCRACY
உண்மையில் இதைப் பற்றி எழுத வேண்டுமென்றால் பல பக்கங்களுக்கு கட்டுரை வரைய வேண்டிவரும். தெலுங்கானா முஸ்லீம் நிஜாமுகள் கோணமும், வரண்ட அப்பகுதியின் நக்ஸல்பாரி வகை இயக்கங்கள் ஏற்ப்படுத்தும் “பாதுகாப்பு பிரச்சனைகளும்”, தற்போது சேர்ந்துக் கொண்ட “மாவோவுக்கு சம்பந்தமில்லாத மாவோயிஸ்டுகளின் பிரச்சனையும்”, இவைகள் ஒட்டு மொத்தமாக ஏற்ப்படுத்தும் உலக பயங்கரவாத “பேரோனோயா பூதமும்”, மத்திய அரசாங்கத்தை இந்த முடிவை நோக்கி தள்ளியிருக்கிறது!. 1970 களில்,மேற்கு வங்கத்தை அடிப்படையாகக் கொண்ட “நக்ஸல்பாரி இயக்கங்கள்” சீன கம்யூனிஸ்டு (மாவோ) சார்பானவை. பீகாரும், பெங்காலும் பல ஆயிரம் வருடங்களாக சீன கலாச்சார தொடர்பு கொண்டவை. அதனால் கம்யூனிசத்தை ஆதரித்தார்கள் என்று அர்த்தம் அல்ல. அவர்களுடையது வங்கத்தை பிரத்தியேகமாகக் கொண்ட இந்திய கம்யூனிசம்தான். அது நக்ஸல்பாரி இயக்கங்களின் உள்முரண்பாடுகளுக்கு காரணமாகி அவைகளின் அழிவுக்கு வழிகோலியது. பி.ஜே.பி.யை (ஜனசங்)ஆதரித்த முக்கிய நக்ஸல்பாரி பிரிவுகளும் உண்டு என்பது பலருக்குத் தெரியாது. தற்போதைய சூழ்நிலையில், தெலுங்கானா பிரிவை ஒரு “உள்ளக சுயநிர்ணய உரிமையாக கொள்ள முடியாது”. ஆந்திரவுக்கு இது ஒரு கவுரவப் பிரச்சனையாகத்தான் இருக்குமேதவிர, பொருளாதாரப் பிரச்சனையல்ல. கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆற்றுப்படுகைகள் தமிழகத்து எல்லைகளிலுள்ள செழிப்பான பகுதியிலேயே உள்ளன. சில கட்டமைப்பு வசதிகள் ஹைதராபாத், அதை அண்டியுள்ள பகுதியிலிருப்பதால், சில ஆதகங்கள் ஏற்ப்படலாம்!. மற்றப்படி, நடப்பதெல்லாம் நண்மைக்கே!.