கொழும்பில் இருந்து இத்தாலிக் கான நேரடி விமான சேவை நாளை மறுதினம் (16) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்தது.
இலங்கையில் அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால் இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் அங்குள்ள இலங் கையர்கள் நேரடியாக இலங்கைக்கு வருகை தரும் வகையில் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வாரத்தில் இரு தினங்கள் புதிய விமான சேவைகள் நடைபெற உள்ளன.