உயர் கல்வி பிரதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை அபேட்சகராகப் போட்டியிட எம். எம். மயோன் முஸ்தபா தீர்மானித்து ள்ளார்.
சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச மக்களுக்கு தனது முடிவை அறிவிக்கும் கூட்டத்திலேயே மயோன் முஸ்தபா இந்த முடிவை தெரிவித்தார்.