திரு கோணமலைக்கு அப்பால் சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் காணப்படும் ‘வார்ட்’ தாழ முக்கம் இன்று (14ம் திகதி) அதிகாலையில் அல்லது காலை வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து செல்லும் என்று வானிலை அவதான நிலையத்தின் பொறுப் பாளர் டி. ஏ. ஜயசிங்க ஆராய்ச்சி நேற்று தெரிவித்தார். இதன் விளைவாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் அதிக மழை பெய்யும் எனவும் அவர் கூறினார்.
இந்தத் தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் மன்னார் குடா கடல் பரப்பில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த வெள்ளியன்று இந்த தாழமுக்கம் திருமலையிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உருவானது.
அது நேற்று முன்தினம் முதல் நகர ஆரம்பித்தது. நேற்று நண்பகலாகும் போது திருமலைக்கு 250 கிலோ மீட்டர் தூரத்தில் காணப்பட்டது. இது இன்று அதிகாலையில் அல் லது காலை வேளையில் யாழ். குடா நாட்டை அல்லது யாழ்ப்பாணத்திற்கு அருகில் கடந்து செல்ல முடியும். இதன் காரணத்தினால் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகா ணங்களில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும். சில பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்றார்.
இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி குறிப்பிடுகையில், திருமலைக்கு அப்பால் தாழமுக்கம் காணப்படு வதால் இது குறித்து வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, வட மேல் மாகாண மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தேவை யான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இம் மாகாணங்களில் வாழுகின்ற வர்களுக்கு எஸ். எம். எஸ். மூலமும் இத்தாழமுக்கம் குறித்து அறிவுறுத்தப்பட் டுள்ளது.