சரணடைய வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: – சரத் பொன்சேகா : பொன்சேகாவின் கூற்று உண்மைக்கு புறம்பானது – அமைச்சர்கள்

sarath1_koththapaja.jpgஇலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வன்னியில் இறுதிகட்ட யுத்தத்தின் கடைசி மூன்று நாட்கள் தமக்கு தொடர்புகள் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நடந்த சமயத்தில் களத்தில் நின்ற இராணுவத் தளபதிகளுடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் மூலம் தனக்கு இந்த விபரங்கள் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள், நோர்வே மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன், சமாதான செயலக பிரதானி புலிதேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் மற்றும் சிரேஸ்ட இராணுவ தளபதி ரமேஸ் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் படையினரிடம் சரணடையப்போவதை அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பசில் ராஜபக்ச பின்னர், கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார்.  இதன்படி கடந்த மேமாதம் 17 ஆம் திகதி, அதிகாலை, இந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் பசில் ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு தரப்பு ஆலோசனையின்படி வெள்ளையாடை அணிந்து சரணடைவதற்காக வந்துள்ளனர். இதன் போதே கோத்தபாய ராஜபக்ச, 58 வது படையணித்தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவுக்கு எந்த ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சரணடைய அனுமதிக்கவேண்டாம் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் கூற்றை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதுடன், வன்மையாகக் கண்டிக்கிறது. சரத் பொன்சேகாவின் இந்த கூற்றானது நாட்டுக்கும், படை வீரர்களுக்கும், மக்களுக்கும் இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என்று இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சரத் பொன்சேகாவின் இந்த கூற்று மிகவும் பாதகமும், பாரதூரமானதுமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, சுற்றாடல் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, பொலிமா அதிபர் மஹிந்த பாலசூரிய, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் உரையாற்றுகையில், ‘தற்பொழுது மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வரும் இதே சரத்பொன்சேகா தனக்கு ஜுலை மாதம் 10ம் திகதி அம்பலாங்கொடையில் வழங்கப்பட்ட கெளரவிப்பு நிகழ்வில் உரையாற்றும்போது கூறியதாவது:-

“நான் படை வீரர் என்ற வகையில் அவ்வப்போது தேவையான உத்தரவுகளை பிறப்பித்து யுத்தத்தை வெற்றிகொண்டேன். படை வீரர்களிடம் சரணடைய வரும் எவரையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. குளிர் அறையிலிருந்து சொல்பவர்களின் உத்தரவை ஏற்கவில்லை என்றார்”. எனவே அன்று அவ்வாறு கூறிய இதே சரத் பொன்சேகா இன்று தனது இராணுவ உடையை களைந்த பின்னர் அரசியல் இலாபத்துக்காக மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளை வெளியிடுவதன் மூலம் இந்த நாட்டையும் படை வீரர்களையும் காட்டிக்கொடுப்பதுடன், அவர்களுக்கு பாரிய துரோகம் இழைக்கின்றார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரபாகரனின் பெற்றோர், ஜோர்ஜ் மாஸ்டர், தயா மாஸ்டர் மற்றும் ஐந்து டாக்டர்கள் தான் வெள்ளைக் கொடிகளை காண்பித்த வண்ணம் படையினரிடம் சரணடைய வந்தவர்கள். அவர்கள் கொல்லப்படவில்லை. இன்னும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுற்றாடல் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க உரையாற்றுகையில், அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டு இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான பல கதைகளை சரத் பொன்சேகா வெளியிடலாம். இது சரத் பொன்சேகாவினதும் அவரது பின்னணியில் உள்ளவர்களினதும் பாரிய சூழ்ச்சியாகும். இதற்கு நாங்கள் ஒருபோதும் சிக்கிக்கொள்ளப் போவதில்லை. நல்ல விடயங்களை நான்தான் செய்தேன் என்று பொறுப்பேற்கும் பொன்சேகா, தவறுகள் இருப்பின் அதனையும் பொறுப்பேற்க வேண்டும். இதுவே சரியான முறையாகும். லைபீரியா ஜனாதிபதி சார்ள்ஸ் டைலருக்கும் அந்த நாட்டு தளபதி இதுபோன்ற ஒரு சூழ்ச்சியையே செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிலேனியம் சிட்டி சம்பவத்தைவிட பாரதூரமான காட்டிக்கொடுத்தல் – பொன்சேகாவின் கூற்று குறித்து விமல் வீரவன்ச கருத்து

மிலேனியம் சிட்டி காட்டிக் கொடுத்தல் சம்பவத்தைவிட மிகவும் பாரதூரமான காட்டிக் கொடுத்தலை ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் படைவீரர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தும் சர்வதேச சதியின் ஒரு அங்கமாகவே சரத் பொன்சேகா தற்பொழுது செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். சர்வதேச சதியின் ஒரு ஒப்பந்தக்காரராக பொன்சேகா இலவசமாக செயற்படுவது தெளிவாகியுள்ளது என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டினார். விமல் வீரவன்ச இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

சர்வதேச சமூகத்திற்கு எமது தலைவர்கள் மீதும், படைவீரர்கள் மீதும் குற்றஞ்சுமத்துவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடனே சரத் பொன்சேகா ஒப்பந்தக்காரராக செயற்படுகின்றார். சரத் பொன்சேகா தற்பொழுது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எந்த ஒரு வேட்பாளரும் தனக்குள்ள வாக்குகளை தக்கவைத்துக் கொண்டு மேலதிக வாக்குகளை பெறும் முயற்சிகளையே மேற்கொள்வார்கள். ஆனால் சரத் பொன்சேகாவின் இந்த கூற்று அவருக்கு எந்த வாக்கு அதிகரிப்பையும் கொடுக்கப்போவதில்லை. இதன் மூலம் வாக்கு வங்கியை பெறுவதைவிட தனது ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்படுவதே முக்கியம் என்று தெளிவாகி தெரிகிறது.

அரச உயர் அதிகாரிகள் ஓய்வு பெறுவது வழக்கம். ஆனால் அவ்வாறு ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஓய்வை பெற்றுக்கொண்டு அடுத்த நாளே அரசியலுக்கு வந்ததில்லை. எமது நாட்டில் அரச உயர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று அடுத்த நாளே ஜனாதிபதி வேட்பாளராக வந்த முதல் நபர் சரத் பொன்சேகாவாகும். சாதாரணமாக அரசியலுக்கு வரவிரும்பும் எவரும் தனது அரசியல் பயணத்தின் ஆரம்பத்தை ஜனாதிபதி வேட்பாளர் என்று ஆரம்பிப்பதில்லை.

மாகாண சபையிலிருந்தே ஆரம்பிப்பர். ஆனால் சரத் பொன்சேகா படிப்படியாக அரசியலில் நுழையாமல் திடீரென ஜனாதிபதி வேட்பாளராக ஏன் வந்தார் என்று கேள்வி எழும்பியது. இவருக்குப் பின்னர் சர்வதேச சதியும் ஒரு குழுவின் அழுத்தமும் இருக்கின்றமை தெளிவாக தெரிகிறது. பொன்சேகாவின் இது போன்ற கூற்றானது, மேலே பார்த்து தனக்குத் தானே எச்சில் துப்புவது போன்ற செயலாகும்.

பொன்சேகாவிடம் கேட்டுக் கொள்கின்றேன். உங்களுக்கு முடியுமான பொய்களை சொல்லி வாக்குகளை கேளுங்கள்.  ஆனால் தாய் நாட்டிற்காக செயற்பட்ட ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், படைவீரர்களுக்கோ அபகீர்த்தி ஏற்படும் வகையில் எந்த பொய்யான தகவல்களையும் வெளியிட வேண்டாம். அதற்கு மாறாக அரசியல்வாதிகளான எங்கள் மீது எந்த பொய்க்குற்றச்சாட்டுக்களையும் முன்வையுங்கள் என்றார்.

நாட்டையும், படைவீரர்களையும் காட்டிக் கொடுக்கும் நோக்குடன் முன்னு க்கு பின்னர் மாறுபட்ட தகவல்களை வெளி யிட்டு வரும் சரத்பொன்சேகாவை நம்பி மக்கள் எவ்வாறு வாக்குகளை வழங்குவது என்றும் இவரை எவ்வாறு ஜனாதிபதி ஆக்குவது என்றும் விமல் வீரவன்ச இங்கு கேள்வி எழுப்பினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    இது தான் அசல் அரசியல்.
    இனி நல்ல நல்ல கதைகள் வெளிவரும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சரத் பொன்சேகா யுத்தம் முடிந்த கையோடு இதைச் சொல்லியிருந்தால், உலகம் ஏற்றுக் கொள்ள வழி கிடைத்திருக்கும். ஆனால் யுத்தம் முடிந்ததும் இவர் விட்ட அறிக்கை என்ன?? 7 மாதம் கழித்து ஞானம் பிறந்து பிதற்றுவதால் என்ன பயன்?? தன்னால் தான் யுத்தம் வென்றது என்று கதையளந்தவர், இன்று தனக்குத் தெரியாமல் பல நடந்தன என்று கதையளப்பதால், யுத்த இறுதி வெற்றி தனக்குத் தெரியாமல் நடந்தது என்று ஒப்புக் கொள்ளுகின்றாரா??

    Reply
  • sinna
    sinna

    கடைசி மூன்று நாட்களில் நடந்ததுகளுக்குதான் நீங்கள் பொறுப்பெடுக்க முடியாதென்றால் அதுவரைக்கம் கொல்லப்பட்ட 30000 சனத்துக்கும் போராளிகளுக்கும் நீங்கள் பொறுப்பெடுக்கிறீங்கள் என்று சொல்கிறீங்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    போரின் இறுதிக் கட்டத்தில், புலித் தலைவர்கள் ஒரு பகுதியில் முடக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிந்ததும், கூடிய அவசர கூட்டத்தில் படைத்தரப்பின் இழப்புகளை குறைப்பதற்கு, விமானத் தாக்குதல் ஒன்றைச் செய்வதே சிறந்ததென கருத்துகளை விமானப்படைத் தலைமையும், ஏனையோரும் முன்வைத்தத போது, “எத்தனை படையினர் இறந்தாலும் பரவாயில்லை, சிறு தூரம் சுடும் துப்பாக்கிகளோடு படையினர் உள்ளே நுழைந்து பிரபாகரனை கொல்ல வேண்டும். பிரபாகரனது உடலை நான் பார்க்க வேண்டும். விமான தாக்குதலால் உடல்கள் சிதறிவிடும். செத்தது பிரபாகரன்தானா என எப்படி உறுதி செய்வது?” என சரத் பொண்சேகா அனைவரையும் மிரட்டி மேசையில் அடித்து பேயாக கத்தியதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் சொன்னார். தவிரவும் போர் முனையில் இருந்த அனைத்து தளபதிகளோடும் , முக்கிய படையதிகாரிகளுடனும் கைத் தொலைபேசி வழி சரத் பொண்சேகா தொடர்பில் இருந்தார். அதனால்தான் கடைசி நேரத்தில் யாரையும் தூங்க விட வேண்டாம் என கடும் உத்தரவொன்றை இட்டிருந்தார்.

    ஆனால் இறுதி தருணத்தில் “சரணடைவோரை எதுவும் செய்ய வேண்டாம்.” என ஜனாதிபதி மகிந்த , படைத்தரப்பின் வன்னி அதிகாரிகளுக்கு சொன்னதற்கமைய சரணடைந்தோரை கொன்றவர்கள் , மற்றொரு படையணியேயாகும். சரணடைந்தவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என அரசு உத்தரவு வந்துள்ளது என சவேந்திர சில்வா தரப்பினர் சொன்ன போது, “உங்கள் வேலை முடிந்து விட்டது. இனி நீங்கள் சரணடைந்தவர்களை ஒப்படைத்து விட்டு போகலாம். இனி எங்கள் வேலை” என அடுத்து வந்த தரப்பு சரணடைந்தோரை பாரமெடுத்து கொன்றது. இது சரத் பொண்சேகாவின் உத்தரவின்படியே நடந்தது என அனைத்து படையினரும் அறிந்த விடயமாகும். அதன் பின்னர் சரத் அனைத்துக்கும் தாமே மார் தட்டிவிட்டு. இப்போது ஒன்றுமே தனக்கு தெரியாது என்பது சரத்தின் சபல புத்தியையே காட்டுகிறது.

    இவராவது ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பதாவது?

    Reply
  • saami
    saami

    இறுதி யுத்த காலத்தில், தான் சீனாவில் நூடில்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால், நடேசன் புலித்தேவன் கொலை பற்றி தனக்கு தெரியாது என்று சரத் மாத்தையா சொல்கிறார். அதுசரி ஐய்யே, ஆட்சிக்கு வந்தால் கோத்தபாயா மீது விசாரணை செய்வீர்களா? . யுத்த தர்மமா? புத்த தர்மமா? ஒண்டுமே புரியலே உலகத்திலே! அதோட யாழ்பாணத்திலும், கிழக்கிலும் நடந்த ஆட்கடத்தல், கொலைகளுக்கும் ஒரு விசாரணை வையுங்கோ.

    Reply
  • சரத் செய்தி
    சரத் செய்தி

    சரணடைந்த புலி உறுப்பினர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை என எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    கோத்தபாயவே சரணடைந்த புலிகளை கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஞாயிறு ஆங்கில இதழ் ஒன்றுக்கு கூறியிருக்கின்றமை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

    உண்மையில் குறித்த செய்தித்தாள் தமது கருத்தை திரிபுபடுத்தி கூறியிருப்பதாக, சரத் பொன்சேகா இதன் போது சுட்டிக்காட்டினார்.

    செய்திதாளுடனான செவ்வியின் போது நோர்வேயின் ஊடாக கோத்தாபய மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவித்து, அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முற்பட்டவர்கள் குறித்து கோத்தாபாயவும் பசிலும் என்ன செய்தார்கள் என தம்மிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு இது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை எனவும் பின்னர் ஊடகங்களில் வெளியான செய்திகளிலேயே தாம் தெரிந்துக் கொண்டதாகவும் செய்திதாளுக்கு பதிலளித்ததாக சரத் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் இந்த ஊடகங்களுக்கு கோத்தாபய மற்றும் பசில் ஆகியோரில் ஒருவர் வழங்கிய செவ்வியிலேயே நோர்வேயின் முனைப்புக் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில் உயர் இராணுவத் தளபதி ஒருவருக்கு வெள்ளைக் கொடியுடனோ அல்லது கொடி இன்றியோ வரும் புலி உறுப்பினர்களை தப்பிக்க விட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியிருப்பதாக ஊடகங்களின் மூலம் தாம் அறிந்துக் கொண்டதாக குறித்த செவ்வியில் பதில் வழங்கியதாக தெரிவித்த அவர் எனினும் இதனை குறித்த அந்த ஊடகம் திரிபுபடுத்தி வெளிப்படுத்தியிருப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    Reply
  • kp
    kp

    நேற்றைய சிங்கள பீபீசியை கேளுங்கள். உண்மை புரியும். சரத், கோட்டபயதான் கொல்லச் சொன்னதாக , தமக்கு சவேந்திர சில்வா சொன்னதாக சொல்கிறார். இந்த பித்துப் பிடித்த பைத்தியகார பொண்சேகா பின்னால் எத்தனை தமிழர்கள் வடம் வருகிறார்கள்.

    நாளைக்கு தான் இராணுவத்திலேயே இருக்கவில்லை என பொண்சேகா சொன்னாலும் சொல்லலாம். கோமாளியாகி விட்ட பொண்சேகா மண் கவ்வுவது உறுதியாகி விட்டது.

    Reply
  • மாயா
    மாயா

    “புலித் தலைவர்கள் எவரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரவில்லை.
    அனைத்து கட்டளைகளையும் நானே பிறப்பித்தேன். யுத்த சமயத்தில் நடந்தவற்றுக்கான அனைத்து பொறுப்புகளையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.” – கோமா(ளி) சரத் பொண்சேகா.

    இன்று கொழும்பில் நடைபெற்ற பொண்சேகாவின் காரியாலயத்தில் நடந்த கூட்டத்தில், பொண்சேகா உளறிய கருத்து இது. சண்டேலீடர் தாம் கூறியதை திரித்து எழுதுயுள்ளது என வேறு………( நம்ம நிலை)

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    // “எத்தனை படையினர் இறந்தாலும் பரவாயில்லை, சிறு தூரம் சுடும் துப்பாக்கிகளோடு படையினர் உள்ளே நுழைந்து பிரபாகரனை கொல்ல வேண்டும். பிரபாகரனது உடலை நான் பார்க்க வேண்டும். விமான தாக்குதலால் உடல்கள் சிதறிவிடும். செத்தது பிரபாகரன்தானா என எப்படி உறுதி செய்வது? என சரத் பொண்சேகா அனைவரையும் மிரட்டி மேசையில் அடித்து பேயாக கத்தியதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் சொன்னார்.– ஆனால் இறுதி தருணத்தில் “சரணடைவோரை எதுவும் செய்ய வேண்டாம்.” என ஜனாதிபதி மகிந்த, படைத்தரப்பின் வன்னி அதிகாரிகளுக்கு சொன்னதற்கமைய சரணடைந்தோரை கொன்றவர்கள், மற்றொரு படையணியேயாகும்.//— இதுதான் உண்மை இதை பிரபாகரன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    // “எத்தனை படையினர் இறந்தாலும் பரவாயில்லை, சிறு தூரம் சுடும் துப்பாக்கிகளோடு படையினர் உள்ளே நுழைந்து பிரபாகரனை கொல்ல வேண்டும். பிரபாகரனது உடலை நான் பார்க்க வேண்டும். விமான தாக்குதலால் உடல்கள் சிதறிவிடும். செத்தது பிரபாகரன்தானா என எப்படி உறுதி செய்வது? என சரத் பொண்சேகா அனைவரையும் மிரட்டி மேசையில் அடித்து பேயாக கத்தியதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் சொன்னார்.– ஆனால் இறுதி தருணத்தில் “சரணடைவோரை எதுவும் செய்ய வேண்டாம்.” என ஜனாதிபதி மகிந்த, படைத்தரப்பின் வன்னி அதிகாரிகளுக்கு சொன்னதற்கமைய சரணடைந்தோரை கொன்றவர்கள், மற்றொரு படையணியேயாகும்.//

    இத்தனை சுலபமாக ராணுவ ரகசியங்களை எடுக்க முடியுமா? அப்படி எடுக்க முடியுமானால் புலியின் உளவுத்துறை என்னதான் செய்தது, ஒரு தலமை தளபதியின் கட்டளைகூட ஏலம் போகும் அளவுக்கு இலங்கை அரசின் நிர்வாகம் பரந்துபட்டு கிடக்கு; எப்படியோ தேர்தல் முடிய மகிந்தா மகிழ்ச்சியடைவாரா? அல்லது சேகரா தனது குடியுரிமை நாடான அமெரிக்காவில் புஸ்சின் வீட்டுக்கு அருகாமையில் வாடகைக்கு வீடு தேடுகிறாரோ தெரியவில்லை,

    Reply
  • Anonymous
    Anonymous

    புலிகளின் சரணடைதலில் மேற்கத்தைய ராஜதந்திரிகள், இலங்கை அரசிடம் உத்தரவாதம் பெற்றிருக்கிறார்கள். அது மீறப் பட்டு விட்டது. சர்தேச சட்டங்களுக்கமைய இலங்கை அரசு குற்றவாளியாக நிற்கிறது. அதனால் அது சீனா, ஈரான், லிபியா, மியான்மார், பாகிஸ்தான், வட கொரியா
    போன்ற நாடுகளுடன் கரம் கோர்த்தபடி தப்பிக்க முனைகிறது.
    ஆப்பிழுத்த குரங்காக காலடியில் கிடக்கும் இலங்கையை, கையில் தூக்கி நிறுத்துகிறது இந்தியா. ஜனாதிபதி தேர்தலின் முலம் பாவங்களை கழுவ முனையும் மகிந்தவும்,பழி வாங்க நினைக்கும் சரத்தும் யாரைக் காட்டிக் கொடுத்து யார் தப்பலாம் என்கிற போராட்டத்தின் சிகரத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறார்கள். இருவருமே தாமழிந்து போவதை அறியாமல் முழு மக்களையும் பலிப் பீடத்தில் ஏற்றியிருக்கிறார்கள். ஒரு பிரளயம் நடக்கப் போகிறது.

    Reply
  • கேதீஸ்வரன்
    கேதீஸ்வரன்

    மரியாதையாக கிளிநொச்சிலேயே பிரபாகரனும், கூட்டாளிகளும், குடும்பமும் வெள்ளைசேட்டுடன், வெள்ளைக்கொடியுடன் சரணடைந்திருந்தால், எத்தனையோ ஆயிரம் உயிர்கள் எத்தனையோ இலச்சம் தமிழர்கள் வன்னியில் பாதுகாப்பாக தப்பியிருப்பார்களே. இவற்றுக்கெல்லாம் காரணகர்தாக்களாக இருந்த பகுத்தறிவு வளர்ச்சியடைந்த புலம்பெயர் புலியாதரவுக் கூட்டங்களும், புலியூடகங்களும் என்ன சொல்லுகிறார்கள்?
    தந்திரோபாயம்? மாபெரும் சாதனை? தலைவர் வருவார்?

    Reply
  • மாயா
    மாயா

    // தந்திரோபாயம்? மாபெரும் சாதனை? தலைவர் வருவார்? – கேதீஸ்வரன் on December 15, 2009 5:12 am //

    மா..பெரும் சாதனை. (மோட்டுச் சாதனை) தமிழ் சமுதாயத்தை அழித்தது மாபெரும் சாதனை. “புலிகளின் தாகம் தமிழரில்லா தாயகம்.”

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // இருவருமே தாமழிந்து போவதை அறியாமல் முழு மக்களையும் பலிப் பீடத்தில் ஏற்றியிருக்கிறார்கள். ஒரு பிரளயம் நடக்கப் போகிறது.- Anonymous //

    ஒரு பிரளயமும் நடக்கப் போவதில்லை. தேர்தல் நெருங்கும் வரை இப்படியான பிரச்சாரங்கள் நடக்கவே செய்யும். சரத்தின் அனுபவமில்லா அலட்டல்களே, மகிந்தவிற்கு வாக்குகளை வாங்கிக் கொடுக்கும். தேர்தல் முடிந்து முடிவு வர முன்னரே, சரத்பொன்சேகா அமெரிக்கா சென்று விடுவார்.

    Reply
  • Kandaswamy
    Kandaswamy

    பிரபாவும் சரி, மகிந்தா, சரத்தும் சரி….. எல்லாரும் ஆட்டுவிக்க படுக்கிறார்கள். நீங்கள் உண்மையாய் கேள்வி கேக்க வேண்டியது அமெரிக்கா + இந்தியா கொள்கை வகுப்பாளர்களை தான். அம்புகள் பாவங்கள்.

    Reply
  • raalahaami
    raalahaami

    போகிற போக்கைப்பார்த்தால் ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்பு சறத் பொன்சேக்கா நீதிமன்றத்தால் போர் குற்றவாளிக்குரிய தண்டனையை ஏற்றுத்தான் ஆகவேண்டும் போலத்தெரிகின்றது. பாவம் சறத், தவளை தன்வாயால் கெட்ட கதையாகிவிட்டதே.

    Reply
  • pakthan
    pakthan

    Sarath Pawnseka destroyed what he achieved. and he distanced from what he achieved by becoming the worse traitor Sri Lanka has ever seen.

    He should NEVER have said the things he said to Sunday Leader.

    Gotabhaya could have achieved the same victory without Sarath Pawnseka

    The war was fought by commanders on the ground under DIRECT instructions from Gotabhaya. I’m not saying this, Sarath Pawnseka said this!!!

    At the MOST crucial times of the war, when we started it and ended it, Sarath Pawnseka was not even there!!! he joined the mavil aru offensive after it was planned. he went to china on may 11 and returned on the 18th. Sri Lanka won the battle during this time.

    Gotabhaya was there at all these times.

    If Sarath Pawnseka had not blundered in muhamalai ten times and had not sacked General Parakrama Pannipitiya & General Prasanna Silva, we would have won the war a few months before with much less casualty numbers.

    Also note that Generals Pannipitiya & Prasanna Silva had a remarkably low own casualties in war while achieving success.

    Sarath Pawnseka was appointed as the army commander mainly because he used to agree with everything Gotabhaya says.

    Sarath Pawnseka did a great deal of work for which he was rewarded handsomely. he has no qualms or claims in politics.

    Reply