கிளிநொச் சியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் போக்குவரத்துக்காக கிளிநொச்சி நகரில் இ.போ.ச. டிப்போவொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை நேற்று கூறியது. முதற்கட்டமாக இந்த டிப்போவுக்கு 12 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக இ.போ.ச. பிரதி பொது முகாமையாளர் பி. ஏ. லிவ்னிஸ் தெரிவித்தார்.
முதற்கட்டமாக கிளிநொச்சி நகர பஸ் சேவை, கிளிநொச்சி – முழங்காவில், கிளிநொச்சி – பூனகரி ஊடாக நல்லூர், கிளிநொச்சி – உரித்துபுரம், கிளிநொச்சி – யாழ்ப்பாணம், கிளிநொச்சி – வவுனியா இடையிலான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மல்லாவியில் இ.போ.ச. உப டிப்போவொன்றும் ஆரம்பிக்கப்ப ட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் கூறினார்.