கடந்த வாரம் இலங்கை உயர்மட்டக் குழுவின் புதுடில்லி விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை, இந்தியாவிடம் கையளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசின் உயர்மட்டக்குழு கடந்த வாரத்தில் புதன், வியாழக்கிழமைகளில் புதுடில்லிக்கு விஜயத்தை மேற்கொண்ட வேளையிலேயே இந்த இரண்டு பக்க ஆவணம் புதுடில்லி அதிகாரத் தரப்பிடம் கையளிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரடங்கிய உயர்மட்டக்குழுவே இந்த ஆவணத்தைப் புதுடில்லியில் கையத்ததாகவும் தெரியவருகின்றது.
புதுடில்லி விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் “இலங்கையில் அரசியல் தீர்வு நோக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இரு தரப்புகளும் இணங்கிக் கொண்டன” என்று குறிப்பிடப்பட்டமை தெரிந்ததே.