தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் அக்கறையுடன் கூடிய செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான இரகசிய தகவல்களை ஓய்வுபெற்ற அல்லது சேவையிலிருக்கும் இராணுவ வீரர் ஒருவர் வெளியிடுவது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகுமென சிரேஷ்ட வழக்கறிஞர் காலிங்க இந்ததிஸ்ஸ கூறினார்.
தகவல் ஊடகத்துறையமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று சிரேஷ்ட வழக்கறிஞர்கள் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அந்தவகையில் சரத் பொன்சேக்கா நாட்டு மக்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வி சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகுமெனவும் சிரேஷ்ட வழக்கறிஞர் காலிங்க இந்ததிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின்படி சரத்து 6, 1 (இ) மற்றும் சரத்து 7 ஆகியவற்றின் படி சரத்பொன்சேக்கா ஊடகத்துக்கு வழங்கியிருக்கும் தகவல் சட்டப்படி குற்றமாகுமென கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த வழக்கறிஞர் காலிங்க, குற்றச் செயல் சட்டத்தின்படி நிரூபிக்கப்படும் பட்சத்தில் சரத்து 6, 1 (இ) யின்படி 14 வருட சிறைத் தண்டனையும் சரத்து 7 இன்படி இரண்டு வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட முடியுமெனவும் தெரிவித்தார். இருப்பினும் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் கைக ளிலேயே தங்கியுள்ளதெனவும் அவர் கூறினார். பத்திரிகையில் பிரசுரமாகியிரு க்கும் அவரது செவ்வி நாட்டுக்கும் அதன் பாதுகாப்புக்கும் அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அவ்வாறாயின் பொன்சேக்கா அதே பத்திரிகையில் தனது மறுப்பு அறிக்கையை வெளியிட முடியும் அல்லது செய்தியாளர் மாநாடொ ன்றின் மூலம் தனது செவ்வி எந்த இடத்தில் திரிவடைந்திருக்கிறது என் பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
அதற்கேற்பவே சட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
வழக்கறிஞர் அலி சப்றி இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில், கடந்த சில காலமாகவே குறித்த ஆங்கிலப் பத்திரிகையில் அரசாங்க த்துக்கு எதிரான கருத்துக்களே வெளிவருகின்றன. அந்த வகையில் பத்திரிகை பிரசாரத்தில் ஏதாவது தவறு நடந்தி ருக்கும் என்ற கருத்தை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
சிரேஷ்ட வழக்கறிஞர் கோமின் தயாசிறி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் நாட்டு க்கும் முப்படையின ருக்கும் அப கீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடாது நாட் டின் வெற்றியை மாத்திரமே கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.