ஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தியாளர்களான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோ அமைச்சரவை அந்தஸ்து உள்ள காணி, காணி அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் படைவீரர்களின் நலன் காக்கும் அமைச்சராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை, இயற்கை வளத்துறை அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக இந்திக பண்டாரநாயக்காவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தாம் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.