வெள்ள அனர்த்தம் – கிழக்கில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

front.jpgகிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 363 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டதாக தேசிய அனர்த்த நிவாரண நிலையப் பணிப்பாளர் சரத் பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.

இந்த வெள்ள நிலைமையினால் 136 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளதுடன் 1336 வீடுகள் பகுதியாக சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த வார இறுதியில் பெய்த அடை மழையினால் இவ்வாரத்தின் முற்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்:- கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்புக்களின் விபரங்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.

அம்பாறை மாவட்ட செயலாளரின் தகவலின் படி, அங்குள்ள 15 பிரதேச வாழும் 54 ஆயிரத்து 308 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இரு மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு 45 வீடுகள் முழுமையாகவும், 316 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Appu hammy
    Appu hammy

    பார்த்தீர்களா இவரை நல்லிணக்க அமைச்சர் என்று சொல்லிக்கொண்டே முன்னாலே ஆயுதக்குளுவைக் கொண்டு சனத்தை அடக்கின்ற வடிவத்தை, இவரைப் பாதுகாப்பது ஒன்றும் அரச படை வீரர்கள் இல்லை முழுக்க முழுக்க இவரால் கடைந்தெடுக்கப்பட்ட இவரது…….. இவரது இலட்சணத்தில் இவருக்கு வேறு பிளாஸ்டிக் மலர் மாலை இவரிடம் வெள்ள நிவாரணம் வாங்கினால் அந்தச் சனங்களின் குடும்பத்திற்கே நாசம்

    Reply
  • Appu hammy
    Appu hammy

    Thirukovil clash instigated by Pillayan supporters- Karuna

    Minister Vinayagamurthi Muralitharan (Karuna), claimed that the clash which took place between his supporters and those of the Tamil Makkal Viduthalai Pulikal (TMVP) leader Sivanesathurai Chandrakanthan (Pillayan) in Thirukovil, Ampara yesterday was instigated by supporters of Pillayan.

    Speaking to Daily Mirror online, Minister Muralitharan claimed that supporters of Pillayan had attacked and damaged an SLFP office, despite the TMVP reportedly extending support to President Mahinda Rajapaksa at the Presidential polls.

    TMVP Spokesperson Azath Moulana told Daily Mirror Online yesterday that the clash which erupted between supporters of the TMVP and Karuna left 3 people injured and a vehicle set ablaze.

    Mr. Moulana had claimed that supporters of Minister Mulitharan led by Inniya Bharathi had attacked Pillayan.

    Tensions have been running high in the East between Minister Mulitharan and Pillayan from early 2007. The two parties have had various disputes including the alleged misuse of TMVP funds and harassment of TMVP supporters by Minister Mulitharan.

    Thanks
    Daily Mirror

    Reply