தமிழ் மக்கள் வாக்குகள் யாருக்கு?: குலன்

Sivajilingam_M_Kஎதிர்வரும் தை மாதம் இலங்கைக்கான ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் நிற்கதான் வேண்டுமா? இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன? என்னவிதமான எதிர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்? சிவாஜிலிங்கம் நிற்பதனால் அரசியல் உலகிற்கு நாம் காட்டும் கணக்கு என்ன? எதை மக்கள் விரும்புகிறார்கள்? என்பது போன்ற தகவல்களை என் அறிவுக்கு எட்டிய வரையில் தேசம்வாசக வட்டங்களுக்குச் சமர்ப்பிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

தமிழர் தேசிய கூட்டமைப்பு (த.தே.கூ-ரிஎன்ஏ) தனது பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாத பட்சத்தில் தான் சுயேட்சையாகத் தேர்தலில் நிற்பேன் என்று கொடுத்தவாக்கைக் காப்பாற்ற சிவாஜிலிங்கம் (சிவாஜி) தேர்தலில் நிற்கிறார். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவது என்பது ஒரு பெரியவிடயம். சிவாஜியின் கூற்றுப்படி நிச்சயமாக ஒரு தமிழன் தேர்தலில் நிற்கவேண்டுமா? ஏன்? வெற்றி பெறமுடியாத தேர்தலில் நிற்பதால் என்ன பலன்?

தேர்தல் வெறும் வெற்றிக்காகவும் ஜனாதிபதியாவதற்கும் நடத்தப்படும் ஒன்றல்ல. மக்களின் கருத்தையும், நிலைப்பாட்டையும், தேவைகளையும், அபிலாசைகளையும், உரிமைகளையும் வெளிக்கொணரும் உண்மை ஊடகமே தேர்தல். த.தே.கூட்டணியினர் கடைசி நிமிடம்வரை அரசியல் நிலைப்பாடு எதுவுமின்றி சரியான தெளிவான முடிவின்றி நின்ற வேளைதான் சிவாஜி தன்முடிவை எடுத்தார். இதுகூட எமக்கு ஒரு சரியான பதிலைச் சொல்கிறது. த.தே.கூ யிடம் இன்னும் சரியான அரசியல் போக்கும், தெளிவும் இல்லை என்பது தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. இத்தேர்தலில் நிற்பதாலும், மறுப்பதாலும் எற்படும் நன்மை தீமைகளை தமிழ்மக்களுக்கத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை தமிழர்களின் பெருங்கூட்டமைப்பான த.தே.கூட்டமைப்புக்கு உண்டு. இதை இவர்கள் சரியாகச் செய்யவில்லை. மாறாக வன்னியில் எம்மக்களை கொன்று குவித்து இரத்தம் தோய்ந்த கைகளுடன் நிற்கும் மகிந்த, சரத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தையைப் பிழை எனக்கூறவில்லை. இது இராஜதந்திர நடவடிக்கைகளின் முன்னெடுப்பாக இருந்தாலும் மக்கள், மனம், மானம், எதிர்காலம், உணர்வென்றும் பலவிடயங்கள் இருப்பதை மறந்து விட்டார்கள்.

மனுத்தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்ட நிலையிலும், இன்னும் த.தே.கூ தன்முடிவு என்ன? நிலைப்பாடு என்ன? மக்கள் என்ன செய்ய வேண்டும்? தாம் யாரை ஆதரிக்கப் போகிறோம்? தேர்தலை நிராகரிக்கப் போகிறோமா? என்ற எந்த வினாக்களுக்கும் பதில் இல்லாமாலேயே நிற்கிறார்கள். இப்படியான நொண்டிக் குதிரைகளை நம்பி தமிழ்மக்கள் எப்படி அரசியல் ஆற்றைக் கடப்பது?

30 000 தமிழ்மக்களின் ஆண்டுத்திவசம் முடியுமுன்னரே உதிரம் தோய்ந்த முகங்களுடனும், வெட்டி வீழ்திய வாள்களுடனும் வோட்டுக் கேட்டு வந்து நிற்கும் இருபெரும் சிங்களக் கட்சிகளுக்கு எந்த மனத்துடன், எந்த முகத்துடன் வோட்டுப் போடமுடியும்? தமிழ்மக்கள் வேட்டுப் போட்டால் அவர்கள் செய்த கொலைகளை, சர்வதேச போர்குற்றங்களை தமிழர்கள் சேர்ந்து மூடிமறைக்கிறீர்கள் என்று ஆகாதா? தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் தேவையில்லை, சிங்களப் பேரினவாத்திற்கு தலைவணங்கி, தலைகுனிந்து, வெட்டுவாள்களுக்கு இரையாகத் தயார் என்று சொல்லாதா? இப்பெருங் கட்சிகளை விட்டால் வேறு எந்தக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது? விக்கிரமபாகுவின் நவசமாசக்கட்சிக்கு வாக்களிக்கலாம் என்கிறீர்களா? அதுவும் வெற்றி பெறமுடியாத கட்சியல்லவா?

தமிழர்களைத் தீவீரவாதிகளாக, திராவிடராக துவேசிக்கும் தெற்கில் தனித்து நின்று தமிழ்மக்களின் தனியுரிமை, தேசியம், சுயநிர்ணயம், மனிதம் என்பவற்றைப் பற்றிப் பேசியவர் போராடியவர் விக்கிரமபாகு. இவருக்கு தமிழர்களின் வாக்குக்கள் போவதால் எந்த ஒரு பெருமாற்றத்தையோ திடமான செய்தியையோ யாருக்கும் சமர்பிக்காது. சில தமிழ் சிங்கள வாக்குகளால் திடமான ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை தென்படும். இதனால் சிவாஜி நிற்பதால் புலம்பெயர் தமிழர்களுக்கும், அரசியல் அரங்கிற்கும் தமிழர்களின் செய்தியை வெளிக்கொணர உதவும். அங்குள்ள தமிழ்மக்களின் தீர்ப்புத்தான் எம்மரின் தீர்பாக இருக்கவேண்டுமே அன்றி புலம்பெயந்தவர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் ஈழம்வாழ் தமிழ்மக்களின் தீர்வாக இருக்கமுடியாது. இருப்பினும் புலத்துப் பொழுதுபோக்குகள் தேர்தல் விஞ்ஞாபனங்களை உருவாக்கி விளையாடுகிறது. புலி சிதைந்து பூனையாகி பின் பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகும் நிலைதான் இன்று இருக்கிறது.

சிவாஜி தேர்தலில் நிற்பதால் த.தே.கூட்டணியினரும் தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டியவர்களே. இன்நிலையில் த.தே.கூ தன் நடுநிலையைப் பேணி நாளை வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி தமிழ்மக்களின் உரிமைகளை, அபிலாசைகளை வென்றெடுக்க இன்று சிவாஜி தேர்தலில் நின்று களம் ஒன்று திறந்தது சிறந்ததே. இதை ஏன் த.தே.கூ விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை. சிவாஜியின் தேர்தல் நிலைப்பாடு இரண்டு பெரும் சிங்களக் கட்சிகளுக்கும் ஈபிடிபி, கருணா, பிள்ளையான் போன்றோருக்கும் பெரும் பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது. காரணங்கள் பின்வருமாறு:

தமிழர்களின் வாக்குகளுக்காகவே ஈபிடிபி, கருணா, பிள்ளையானை மகிந்த வைத்திருக்கிறார். தமிழரின் வாக்குக்கள் பிரிக்கப்பட்டோ அன்றேல் மொத்தமாக சிவாஜிக்குப் போடப்பட்டாலோ மகிந்தவின் செல்வாக்கை மேற்கூறியவர்கள் இழப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழர்களின் வாக்குகள் சிதறுண்டு போவதால் 50வீதத்தை ஒரு தனிக்கட்சி எதுவும் பெறாமல் போகும். வோட்டுப்போட்டோர் தொகை அதிகரித்திருக்கும் ஆனால் வோட்டுகள் சிதறிப்போயிருக்கும் 50விதத்தை எப்படித் தேடிப்பொறுக்குவது. இன்னுமொரு காரணம் 22 கட்சிகள் தேர்தலில் நிற்பதால் சிங்கள வாக்குகளும் சிதறுண்டு போகும். அங்கேயும் எப்படி 50வீதத்தைத் தேடுவது? சிவாஜியின் எண்ணம் எதுவாக இருந்தாலும் தேர்தலைக் குழப்பி, கலக்கி விட்டிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிவாஜி தான் இன்றை தேர்தல் கீரோ. இவர் ஜனாதிபதியாகப் போவதில்லை என்பது திண்ணம். ஆனால் அரசியல் உலகிற்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும், பிராந்திய வல்லாதிக்கங்களுக்கும், சர்வதேசத்துக்கும் சுட்டிக் காட்டப்போகும் சமிஞ்ஞைகள் பல. சுருங்கக் கூறின் ஒரு தேர்தல் கலகக்காரனும், பலிக்கடாவும் ஜனாதிபதித் தேர்தலில் நின்ற தமிழனும் சிவாஜி ஆகும்.

வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு போனதின் பின்பு தமிழர்களின் தலைகளை உருட்டியே இலங்கையில் தேர்தல் வெற்றிகள் இருந்தன. தமிழ்ஒழிப்பு, சிங்கள சிறீ அமைப்பு, பிராந்தியக் குடியேற்றங்கள், கலகங்கள், கலவரங்கள், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம், சமாதானத்துக்காகப் போர் இப்படியெல்லாம் தமிழர்கள் தலைகளை உருட்டித்தான் சிங்களப்பேரினவாத அரசியல்கட்சிகள் தேர்தலில் தன்தலையை நிமிர்த்தின. இந்தத் தேர்தல் அதைவிட மோசமான ஒன்றே. இம்முறை தாமாகவே தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, மார்புதட்டிப் பெருமைகொண்டு எம்மக்களிடமே வந்த போடு வோட்டு என்று கேட்பதுதான் வேதனைக்குரியது. உன்தாயை, உன்சகோதரனை நான்தான் கொன்றேன் எனக்கு வோட்டுப் போடு என்று கேட்கிறார்கள் போடப்போகிறீர்களா? இவர்களை எப்படி நம்பப் போகிறீர்கள்? எம்மைப் போட்டி போட்டுக் கொன்று பெருமை கொண்டவர்களுக்கு போய் போடுவோமா வோட்டு அல்லது வேட்டு?

வன்னியில் அகற்றப்படாத பிரேதங்கள் இன்றும் மணத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அகதியாய் அடைக்கப்பட்டவர்கள் இன்னும் தம்மனத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரவில்லை. சரத், மகிந்த இருவரின் கைகளில் இருக்கும் உங்கள் உறவுகளின் உதிரங்கள் உலகின் கண்ணில் காட்டப்படமுன் மறைத்து, குற்றவாளிகளை மன்னித்து, எறிவதை எடுத்து நக்கி நீங்களே உங்கள் உறவுகளின் உதிரத்தைக் களுவப்போகிறீர்களா?

இன்று சிவாஜி தேர்தலில் நிற்பதால் எமக்குக் கிடைக்கும் சமிஞ்ஞைகளும், அறிந்து கொள்ளக்கூடிய உண்மைகளும்:
1.த.தே.கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. அரசில் தெளிவும், எதிர்காலத் திட்டமும், தீர்க்க தசிசனமும், முடிவெடுக்கும் திறனும் அவர்களிடம் இன்னும் இல்லை என்பது. எதிர்கால அரசியற்பயணம் அவர்களுக்குப் பயமாகவே இருக்கிறது.
2.சிங்களக் கட்சிகளுக்கு எம்மக்கள் பழக்கப்படாது வைத்திருப்பதற்கும் ஒரு வழிசமைக்கப்பட்டிருக்கிறது.
3.சிவாஜி தானே பலிக்காடா ஆவதனால் த.தே.கூட்டமைப்பு தன்னை தமிழர்களின் பிரதிநிதியாகவும் நடுநிலை வாதியாகவும் காட்டிக்கொள்வதூடு நாளை வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் பகைமை உணர்வின்றி இராஜதந்திர உறவுகளை தமிழர்களுக்காகப் பேணலாம்
4.தமிழர்களின் வோட்டுக்கள் எம்மக்களைக் கொன்ற உதிரம் தோய்ந்த கைகளுக்குப் போகாமல் காக்கலாம்.
5.சிவாஜிக்கு விழும் வோட்டுகளை வைத்து இன்று தமிழ்மக்களின் மனோநிலை, எதிர்கால எண்ணம், வாக்களிக்காத வாக்களிக்க முடியாதவர்கள் நிலை, போர்குற்றவாளிகளை எப்படித் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள் என்ற சமிஞ்சைகளை நாம் பெறலாம்.
6.தமிழீழம் வேண்டுமா? வேண்டாமா என்று சாட்டுக்கு வோட்டுக்கேட்டு திரியும் புலம்பெயர் அரசியல் பொழுது போக்காளர்களுக்கும் பதில்கள் இங்கே கிடைக்கும். அங்கே வாழும் மக்களின் மனங்களைகளை ஊகிப்பதற்காவது இத்தேர்தல் உதவும். (அங்கே உள்ள மக்களின் தேவையை அறியாமல் இங்கே தேர்தல் வைப்பது அங்கே பசிப்பவனுக்கு இங்கே நாம் சாப்பிடுவது போன்றது. இதனால்தானோ என்னவோ புலத்தில் ஆடடித்துக் கூடிக் குடிக்கிறார்கள். இவர்கள்தான் அன்று பிரபாகரனை மேதகுவாக்கிய மேன்மையாளர்கள். அவதாரமாகக் கருதிய அரைகுறைகள். சூரியதேவன் என்று வர்ணித்த வக்கிரகங்கள்.)
7.சிவாஜி, விக்கிரமபாகுவுடன் இணைந்த தேர்தலில் நிற்பது நாம் சிங்கள மக்களுடன், அரசில்வாதிகளுடனும் இணைந்து ஒருஐக்கிய இலங்கைக்குள்ளும் செயற்படமுடியும் என்ற சமிஞ்ஞையை தெளிவாகக்காட்டுகிறது. இது உடனடியான சரியான விளைவுகளைத் தராவிட்டாலும் எதிர்காலத்தில் சிங்கள மக்களையும், அரசியல்வாதிகளையும் சிந்திக்கத் தூண்டும். நாளை தோன்ற இருக்கும் வர்க்கப்போராட்டத்திற்கு தமிழர், சிங்களவர் இருசாராரும் கைகோர்த்து நின்று போராடத் தூண்டும். (இப்படியான இணைவுப்போரைப் புலிகள் நிச்சயமாகச் செய்திருக்கவேண்டும். செய்யவில்லையே!!! செய்திருந்தால் உலகமயமாதில் தமிழீழக் கோரிக்கை உடைக்கப்படாது வர்க்கப் போராட்டமாய் இலங்கை முழுதும் வியாபித்திருந்திருக்கும்.)
8.சிவாஜி, விக்கிரமபாகுவை ஆதரிப்பதால் தமிழர்களின் சிலவாக்குகள் சிதறிப்போனாலாலும் கொடுக்கப்படும் சமிஞ்ஞைகள் தெளிவாத்தானே உறுதியாகவுமல்லவா இருக்கப் போகிறது.
9.வாக்குக்கள் சிதறுவதனூடாக நிச்சய வெற்றி உறுதியற்று விடும். இரண்டாம் தெரிவுச் சுற்றில் சிறுபான்மை இன, மத வாக்குக்களே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகிறது. இங்கே சிவாஜியின் பங்கு மிக மிகப்பெரியதே.
10.மக்களின் பாவங்களைச் சுமந்த யேசுபோல், தான் கறுப்பாடாகி தமிழ்மக்களை நிர்கதியாக விட்டுப்போன புலிகளுக்குத் தோள்கொடுத்து குச்சு விளக்கொன்றைக் கொண்டு வந்திருக்கிறார் சிவாஜி.
11.இருபெரும் சிங்களக்கட்சிகளுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையின்றி, போர்க்குற்றங்களை மன்னித்தோம் என்ற சமிஞ்ஞைகளின்றி, தமிழ்மக்களின் கருத்துக்களைத் தெளிவாக வைப்பதற்கு சிவாஜி களம் தந்திருக்கிறார்.
12.எமது அபிப்பிராயங்களை, அபிலாசைகளை சிங்களஅரசியல் சார்ந்துதான் செய்யவேண்டும் என்று இன்றை நிலையை சிவாஜி உடைத்திருக்கிறார்.
13.தமிழ்மக்கள் சிங்களத்தமிழ் அரசியல்வாதிகளால் மட்டுமல்ல போராட்டம் என்ற போர்வையில் இயக்கங்களாலும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். இனியாவது சிந்தித்து சுயமாக முடிவெடுத்து இந்த அரசியல் களத்தில் ஊடகங்களின் உண்மை நிலை அறிந்து இம்முறையாவது சிவாஜி திறந்து வைத்த களத்தில் களமாடுவார்களா? சிவாஜிக்குத்தான் வோட்டுப் போடுங்கள் என்று கூறவில்லை. அங்குள்ள மக்களின் சரியான களமாடல் புலத்துத் தமிழர்களுக்கும், சர்வதேசத்துக்கும் சிங்களமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சரியான செய்தியைச் செல்லும்.
14.தேர்தலைப் பகிஸ்கரித்திருக்கலாம் என்கிறீர்களா? பகிஸ்கரிப்பதனால் மகிந்த, சரத்துக்கு ஒருபெரும் தலையிடி குறைந்துவிடும். கட்சியில் இன்று தொங்கும் தமிழ்குழுக்களின் மதிப்பும் மங்கிவிடும். ஆனால் தேர்தலைப் பகிஸ்கரிப்பதனால் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் சிங்களக்கட்சிகளுக்கு இருக்காது போய்விடும். சிங்கள மக்களின் வோட்டுக்களில் அவர்கள் தங்கியிருப்பதால் தேர்தலின் முன்னும் பின்னும் தமிழர்களின் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டிய தேவை அற்றுவிடும். தமிழர்கள் பகிஸ்கரிப்பதனால் வோட்டுக்கள் எந்தப்பக்கமும் போய் எதிரியைப் பலப்படுத்தாது என்பதை சிங்கள இருபெருங்கட்சிகளும் உணர்ந்திருக்கும். அதனால் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் தனிச்சிங்களவர்களாகவே இருப்பார்கள். ஆதலால் தமது கவனத்தையும், ஜனாதிபதியான பின் தம் நன்றிக்கடனையும் சிங்கள மக்களுக்கே செய்வார்கள். தமிழர்கள் தேவையற்றவர்களாக எதிரிகளாவே தொடர்ந்து பார்க்கப்படுவார்கள். இன்றைய நிலையில் பேரினவாதக்கட்சிகளின் கவனம் தமிழர்களின் வோட்டுகளில் இருக்கிறது. முக்கியமாக யாழில் மகிந்தவிற்கு டக்லஸ் ஊடாக விழும் வாக்குக்கள் சிவாஜியால் தடுக்கப்படப் போகிறது. இது சிவாஜியின் உயிருக்கு உலைப்பாகவும் இருக்கலாம்.
15.அன்றைய போர், இன்றைய தேர்தல் பலாற்காரம் எல்லாம் மக்களுக்கு என்ன சொல்கிறது வெற்றிக்கு வழி பலாற்காரமே என்று. ஆதனால் மக்கள் தொடர்ந்து பலாற்காரத்தின் பாதையிலேயே பிரச்சனைகளுக்கு முடிவு காண முயல்வர். இது மனோவியல் உண்மை. இதன் தொடர்ச்சியான வளர்ச்சி இன்னுமொரு ஆயுதப் போராட்டமாக உருப்பெறும். 72ல் செகுவேரா, 76ல் நாங்கள். செகுவேராவின் ஆயுதப்போராட்டம் 70தின் கடைசிப்பகுதியில் முற்றாக முறியடிக்கப்பட்ட போதும் அந்த ஆயுதங்களை குறுகிய காலத்தில் நாம் எடுத்தோமல்லவா. இதைத் தவிர்க்க சரியான அரசியல் அடித்தளத்தை நிறுவுவது சிங்களவரசின் கடமையாகும்.
16.சிவாஜியின் கொள்கைகளோ, கோட்பாடுகளோ, கடந்தகால அரசியலோ சரி என்று நான் கருதவில்லை. சுயேட்சையாக ஒரு வேட்பாளர் நிற்பது தவறும் இல்லை என்கிறேன். சிவாஜி நிற்பதனால் வோட்டுப் போடுவர்கள் தொகை கூடப்போகிறது. சிங்களப் பெருங் கட்சிகளுக்கு விழும் வோட்டுக்கள் பிரியப்போகிறது. இதனால் 50வீதம் சாத்தியமற்று விடப்போகிறது. இப்போ இவ்விரு பேரினவாதக்கட்சிகளும் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியுமா?
17.சிவாஜி கடந்தகாலத்தில் என்ன அரசியலைக் கொண்டிருந்தார் என்பதை விட இன்றைய அரசியல் சூழ்நிலைதான் களத்தைத் தீர்மானிக்கிறது, தீர்மானிக்க வேண்டும்.
18.சிவாஜிக்கு விழப்போகும் வோட்டுக்கள் எமக்கு பல விடயங்களைச் சொல்லும்.

•தமிழ்மக்கள் போர் வெறியர்களை மன்னித்தார்களா?
•சிங்களப் பேரினவாத அரசியலுக்குப் பயந்து பணிகிறார்களா? விரும்பித்தான் இணைகிறார்களா?
•இராமன் ஆண்டாலும் சரி இராவணன் ஆண்டாலும் சரி என்று இருக்கப் போகிறார்களா?
•புலிகளின் போக்கை தொடர்ந்தும் ஆதரிக்கிறார்களா?
•தேசியமா? தமிழ்தேசியமா? தமிழர்களின் தெரிவு?
•எதிர்காலத்தில் தமிழர்களின் பாதை எப்படி வகுக்கப்படவேண்டும் என்பதற்கான ஆரம்பம்
•வட்டுக்கோட்டை தமிழ்ஈழமா இல்லையா என்ற புலம்பெயர் தமிழர்களுக்கான பதில்…
•பலபிரதமரைக் கொண்ட சுழற்சிமுறை ஜனாதிபதியாட்சி முறையை மக்கள் அறிவதற்கான வாய்ப்பு

பலகேள்விகளுக்கு விடை இத்தேர்தலில் இருக்கிறது. இதில் சிவாஜி பலிக்கடாவாகி ஒருகளம் திறக்கப்பட்டிருக்கிறதே தவிர தேர்தலின் பதில் என்ன என்பது தான் எமது எதிர்பார்ப்பு. ஈழத்துச் செய்திகளின்படி வன்னிமக்கள் மனங்களில் போரின் கொடுமையும், கடுமையும் இன்னும் விடவில்லை. தேர்தல் அவர்களுக்கு வந்தாலும் சரி, விட்டாலும் சரி என்ற நிலை. தேர்தலுக்கு வோட்டுப்போடப் போவதற்கே நல்ல உடுப்பில்லா நிலை. சில பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் அரசு சில உதவிகளை டக்லஸ் மூலம் செய்வதால் அவர்கள் மகிந்தவுக்கு வோட்டுப் போடுவார்கள் என்று தெரியவருகிறது. யாழ்பாணம் வெளிநாட்டுப்பணங்களின் களியாட்ட கூடமாய் ஆகிவிட்டபடியால் சாப்பிடமட்டும் வாய்திறக்கும் நிலையில் சிலர். கூத்தடிக்கும் நிலையில் பலர். வன்னிமக்கள் அழிவைப்பற்றி யாழ்மக்கள் ஆதங்கப்படுவதாகத் தெரியவில்லை. தமிழ்பகுதிகளில் மகிந்தவுக்கும் பலம் இருப்பது போன்று தெரிகிறது. சரத்தும், சிவாஜிலிங்கமும் அதிகசக்தியை அங்கே பயன்படுத்த வேண்டியிருக்கும். மட்டக்களப்பு துப்பாக்கி அமைச்சர்களால் வாய் பூட்டப்பட்டு இருக்கிறது. அங்கும் அடாவடி வாக்குகள் மகிந்தவின் பக்கமே இருப்பதற்கான சந்தர்பமே அதிகமுண்டு. சரத் தன்பலத்தை தென்பகுதியில் இருந்தே பெறவேண்டியிருப்பதால் சரத் ஜனாதிபதியாக வந்தாலும் தம்மினத்துக்கு மட்டுமே நன்றியுள்ளவராக இருக்கக்கூடிய நிலைதான் தென்படுகிறது. எந்தநேரமும் இன்நிலைகள் மாற்றப்படலாம். அரசியல் ஒரு சதுரங்கமே!.

என்கருத்தைச் சொல்லிவிட்டேன் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

-உங்கள் குலத்திலும் நிலத்திலும் ஒர் குலன்-

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

53 Comments

  • thurai
    thurai

    அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இலங்கைத் தமிழர் வாக்களிக்கும் தேர்தல். தமிழர்களால் நடத்தப்பட்ட அரசியலும், ஆயுதப் போராட்டமும் இலங்கை வாழ் தமிழர்களினால் முழுமையாக ஆதரிக்கப்பட்டதா? அல்லது பார்வையாளர்களாக மட்டும் வாழ்ந்தார்களா?

    அரசியலும், ஆயுதப் போரும் நடத்தியவர்கள் தமிழர்களை எந்தளவிற்கு தாயார்படுத்தி அரசியலும்,ஆயுதப்போரும் நடத்தினார்கள்.

    தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களிடம் தேர்தலிற்கு வாக்குக் கேட்டு சுயநல அரசியலும், ஆயுதமேந்தியவர்கள் பணமும் மக்களின் உயிரையும் பறித்தார்கள்.

    இதனை இலங்கைத் தமிழர் மிகவும் தெளிவாக விளங்கியுள்ளார்கள். போரின் முடிவு இலங்கையை அமைதிக்குள் கொண்டுவந்துள்ளது. இதற்கு தமிழர், சிங்களவர் இருவருமே உயிர்களை கொடுத்துள்ளார்கள். திடமான ஓர் அரசியல் தலைமை தமிழர்களிற்கு வழிகாட்டும் வரை தமிழரின் வாக்குகள் யாருக்குப் போட்டாலும் செல்லாக் காசுகளேயாகும்.

    துரை

    Reply
  • Kulan
    Kulan

    துரை! நல்ல கேள்விகளைக் கேட்டிருந்தீர்கள். ஆயுதப்போராட்டம் என்று முத்திரிக் கொட்டைகளாக முந்திக் கொண்ட புலிகளிடம் என்றும் சரியான தெளிவான அரசியல் இருந்ததில்லை. அரசியல் என்று ஓடித்திரிந்த தமிழ் அரசியல் வாதிகளிடம் ஆயுதப்போராட்டம் பற்றிய அறிவும் இருந்திருக்கவில்லை. இளைஞர்களைத் தூண்டி உசுப்பேற்றி விட்டார்களே அன்றி அந்த இளம் கொதிநிலை இரத்தம் எப்படிப்பாயும் என்பதை ஒரு நிமிடம் கூட அவர்கள் சிந்திக்கவில்லை. அரசியலில்லா புலிகளிடம் மக்கள் அரசியலை எதிர்பாப்பது தவறுதானே. //திடமான ஓர் அரசியல் தலைமை தமிழர்களிற்கு வழிகாட்டும் வரை தமிழரின் வாக்குகள் யாருக்குப் போட்டாலும் செல்லாக் காசுகளேயாகும்.// திடமான அரசியலுக்கு இப்படியான தேர்தல் படிக்கட்டுகள் தேவை. செல்லாக்காசு என்று சொல்லாதீர்கள். இத்தேர்தல் எமக்கு ஒரு தமிழர் மனநிலை பற்றி ஒரு செய்தியை நிச்சயம் தரும். தமிழரின் வாக்குக்கள் என்றும் செல்லும் வாக்குகளாக இருந்தன. 76ல் எதிர்கட்சிநிலை எய்தியும் எம்வாக்குக்களை செல்லப்பண்ணப்பட்டதா?

    Reply
  • Anonymous
    Anonymous

    இது தெற்கு நோக்கிய தீர்வு. இரண்டில் ஒன்று. கொலைஞனா அல்லது கொலை வெறியனா?
    கொலைஞனிடம் இருப்பது ஆட்டம் காணும் கூட்டணி. கொலை வெறியனிடம் ஆதரவு ஆளணி.
    மேற்குலகின் எதிரியை ஆதரிப்பதா? அவனது அடிமையை அனுசரிப்பதா?
    சிவாஜி வசனம் பேசுவார். சிங்களம் சோறு போடும், சரியா.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    குலன் நீங்களும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்ப முயன்றுள்ளீர்கள். எனி உங்கள் கருத்துகள் சம்மந்தமாக எனது கருத்துகளையும் நான் தருகின்றேன்.

    1)கூத்தமைப்பினர் இரு முக்கிய வேட்பாளர்களான மகிந்த மற்றும் சரத் ஆகியோரை அவர்கள் தமிழர்களை கொன்ற கொலைகாரர்கள் என்பதால், ஆதரிப்பது தவறென்று கூறினீர்கள். ஆனால் கூத்தமைப்பினர் இந்த இரு முக்கிய வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தையிலீடுபடுவது தவறில்லை என்கின்றீர்கள். அப்போ அவர்கள் பேச்சுவார்த்தை எதற்காக நடாத்துகின்றார்கள்?? மாதம் மும்மாரி பொழிகின்றதா என அறிவதற்காகவா??

    2) நாளை இந்த இரு வேட்பாளர்களில் ஒருவர் வெற்றி பெற்று வந்த பின், அப்படி வருபவருடன் தானே தமிழர்கள் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும். அப்போது மட்டும் இவர்களை மன்னிப்பதாக கருத முடியுமா??

    3) தமிழர்களின் வாக்குகள் முக்கிய இரு வேட்பாளர்களுக்கும் போவதை தடுப்பதற்காகத் தான் சிவாஜிலிங்கம் தேர்தல் களத்தில் குதிக்கின்றார் என்றால், அவர் விக்கிரமபாகு கருணாரட்ணாவிற்கு தமிழர்களின் வாக்குகளைப் போடுங்கள் எனக் கேட்டிருக்கலாம். அல்லது தேர்தலில் குதித்துள்ள இரு தமிழ் முஸ்லிம் வேட்பாளர்களில் ஒருவருக்காக ஆதரித்து தமிழர்களின் வாக்குகளை கேட்டிருக்கலாம். தேர்தலில் வேட்பாளர்களாக வந்துள்ள இந்த இரு முஸ்லிம் வேட்பாளர்களும், சிவாஜிலிங்கத்திற்கோ அல்லது கட்டுரையாளருக்கோ தமிழராகத் தெரியவில்லையா??

    4) புலிகளால் ஆட்டுமந்தைக் கூட்டமாகவே மாற்றியமைக்கப்பட்ட கூத்தமைப்பினர், தன்னிச்சையாக முடிவெடுப்பதையோ புலிகளைக் கேள்வி கேட்பதையோ புலிகள் விரும்பியதில்லை. இந்த பலவருட பழக்கத்திலிருந்து கூத்தமைப்பினர் மீண்டு வருவதற்கு சிலகாலம் எடுக்கும். இந்த நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி சிவாஜிலிங்கம் இந்த இரு முக்கிய வேட்பாளர்களில் ஒருவருக்கு விலைபோய் ஏன் அவர்களின் செயற்திட்டத்ததின்படி தனது நடவடிக்கையை மேற்கொண்டிருக்க முடியாது??

    5)சில வாரங்களுக்கு முன் கொழும்பு ஊடகமொன்றிற்கு பேட்டியளித்த சிவாஜிலிங்கம் தான் தேர்தலில் நிற்பதன் மூலம் முக்கிய இரு வேட்பாளர்களுக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காமல் போகுமென்றும், அப்போது மறு வாக்கு பதிவு நடாத்த வேண்டி வந்தால், இவர்களுடன் பேரம் பேசலாமென்றும் கூறியிருந்தார். இரு முக்கிய வேட்பாளர்களும் தமிழர்களைக் கொன்ற கொலைகாரர்கள் அதனால் தமிழர்கள் அவர்களை ஆதரிக்ககக் கூடாதென்று கதையளந்த சிவாஜிலிங்கம், பின்பு எதற்காக இவர்களுடன் பேரம் பேசலாமென்கின்றார்?? அப்போது மட்டும் இந்த இருவரும் புனிதர்கள் ஆகி விடுவார்களா??

    6) சமீபத்தில் பிரித்தானிய வானொலியொன்றில் சிவாஜிலிங்கத்திடம் 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை புலிகளும் கூட்டமைப்பும் பகிஸ்கரித்ததால் வந்த விளைவு தானே இன்றைய நிலை என்று ஒரு நேயர் கேட்டார். அதற்கு சிவாஜிலிங்கம் இல்லை அன்று ரணில் வந்திருந்தாலும் இது தான் நடந்திருக்கும் என்றும், காரணம் இந்த யுத்தத்தை சரியாகத் திட்டமிட்டு அந்த திட்டத்தின் மூலமாக இதை செய்து முடித்தது வெளிநாடுகளே என்றும் அது தனக்கு ஏற்கனவே தெரியுமென்றும் பிதற்றினார். அப்படியாயின் இந்த யுத்தத்தில் எப்படி மகிந்தவையும் சரத்தையும் மட்டும் அவரால் கொலைகாரர்கள் என்று சொல்ல முடியும்?? அத்துடன் இந்த திட்டங்கள் ஏற்கனவே தெரியுமென்று கதையளப்பவர் பிரித்தானியாவிலும் இந்தியாவிலும் புலிகள் வெற்றிவாகை சூடுவார்கள் என்று வெறுமனே மக்களை உசுப்பேற்றி, வன்னி மக்களையும் புலிகளையும் புதைகுளிக்குள் அனுப்பும் வேலையை ஏன் செய்தார்.

    7) ஏற்கனவே குமார் பொன்னம்பலம் தேர்தலில் நின்று அவர் பெற்ற வாக்குகள் தமிழர்கள் சார்பாக உலகிற்கு என்ன செய்தியைச் சொன்னது??

    8.)சிவாஜிலிங்கம் தேர்தலில் நிற்பதால் தமிழ் மக்களின் பெருண்பான்மை வாக்குகள் அவருக்குத் தான் செல்லும் என்று எதை வைத்துக் கூறுகின்றீர்கள்??

    9) இந்தத் தேர்தலில் மக்களே சுயமாக முடிவெடுத்து வாக்களிக்கட்டும், என்று ஏன் விடக் கூடாது?? தொடர்ந்தும் மக்களை ஆட்டுமந்தைக் கூட்டமாகவே வைத்திருக்க வேண்டுமென்றா நினைக்கின்றீர்கள்??

    Reply
  • பல்லி
    பல்லி

    சிவாஜியின் நிலையில் யார் நின்றிருந்தாலும் அதை ஏற்று கொள்ளலாம்(சரி பிழைக்கு அப்பால்) ஆனால் பிரபாவின் ஆயுத போராட்டத்தை விட சிவாஜியின் அரசியல் நகர்வுகள் மிக மோசமானவை, மிகுதியாக உள்ள தமிழரை அழிக்க வேண்டும்; ஆனால் சிவாஜி உங்களுக்கு மந்திரி சபையில் ஒரு பதவி உண்டு என மகிந்தாவோ அல்லது சேகராவோ சொன்னால் அதுக்கென்ன செய்தால் போச்சு என சொல்லகூடிய மனனோயாளியை தமிழர் பிரதிநிதியாய் கொண்டு அனைத்து தமிழரும் சிவாஜி போல் கையால் ஆகாதவர்கள் என்னும் நிலைக்கு வந்துவிட கூடாது, இவரது கடந்த காலம் கசப்பானது வரும்காலம் கடுப்பானது, யாரும் யாருக்கும் வோட்டு போடலாம்; ஆனால் எல்லோரும் வோட்டு கேக்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, சிவாஜி வசனம் ஏசுவார் சிங்களம் சோறு போடும் என்பதுதான் பல்லியின் கருத்தும்; குலன் பசிக்கு பாயாசம் வேண்டாம் பாஸாணம் வேண்டாமே,

    Reply
  • sinna16
    sinna16

    சரியான கால நேர சந்தர்ப சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுரை. நிச்சயம் எத்தனையோ மக்கள் இப்போ குழப்பத்தில் இருக்கிண்றனர் அவர்களுக்கு இதன்மூலம் பலன் கிடைக்கும் குலன் நன்றி. தொடந்து எழுதுங்கள் பாராட்டுக்கள். மாற்றங்கள் தமிழருக்கு நிச்சயம் தேவை. எனது கருத்து சிவாஜி சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

    Reply
  • Kulan
    Kulan

    பார்த்திபன்! நான் குழப்பவில்லை.
    //அப்போ அவர்கள் பேச்சுவார்த்தை எதற்காக நடாத்துகின்றார்கள்??// பேச்சுவார்த்தை என்பது எதிரியுடனும் செய்யப்படும். இதைப்புலிகளும் செய்தார்கள். பேச்சுவார்த்தை என்பது ஒத்துப்போவது என்றோ: ஆதரிப்பது என்றோ அர்த்தமாகாது பார்த்தீபன்.

    கேள்வி2: மேலே உள்ள பதிலே இதற்கும். இவர்கள் இருவரில் ஒருவர்தான் தேர்தலில் வெல்லப்போகிறார். களம்திறந்த சிவாஜியின் தோளில்தானே இன்று காவடி .கூத்தமமைப்பு தன் கூத்தைக்காட்ட வேண்டியதுதானே.

    கேள்வி3: அருமையான கேள்வி. நான் பலமுறை சிந்தித்தவிடயமும் இதுதான். விக்கிரமபாகுவை ஆதரிக்காலம் முக்கியமாக ஒவ்வொரு நாளும் எனக்கு தனிப்பட்ட முறையில் விக்கிரமபாகுவுடன் மெயில் தொடர்பு இருக்கிறது. உங்கள் மெயிலைத் தந்தால் நேற்று அனுப்பிய மெயிலைக் கூட அனுப்பிவிடாலாம். இப்படியான நான் ஏன் இப்படி எழுதினேன் என்றால். தமிழ்மக்கள் த.வி.கூ ஆலும் தொடர்ந்து வந்த புலிகளாலும் துவேச விசமேற்றி வளர்க்கப்பட்டவர்கள். இவர்கள் விக்கிரமபாகுவின் கருத்து: கொள்கை; கோட்பாடு எதையும் பார்க்க மாட்டார்கள். அவர்களில் ஒருசிலர் தமிழனா? சிங்களவனா? என்றுபார்ப்பார்கள். சிங்களவரைத் துவேசிக்கும் எம்மவருக்கு சிவாஜி ஒரு மாற்றீடே. குறிப்பு சிங்களமக்களைப் பொறுத்தவரை பல தமிழர்கள் நாம் துவேசிகளே. மற்ற முஸ்லீம் வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால் முஸ்லீம்கள் தம்மை தமிழர்கள் என்று மொழிசார்ந்து அடையாளப்படுத்துவதை விட மதம் சார்ந்தே தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். இதை யாரும் மறுக்க இயலாது. இங்கும் துவேசமே புரையோடிக் கிடக்கிறது. சிவாஜியால் ஒல்டனட்டிவ் (மாற்றீடு) ஒன்று இருப்பதால் வாக்களிப்பவர்கள் கூடப்போகிறார்கள். களம் களைகட்டும். விழும்வாக்குக்கள் அங்குள்ள மக்களின் கருத்துக்களைச் சொல்லும்.

    கேள்வி4: //இந்த நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி சிவாஜிலிங்கம் இந்த இரு முக்கிய வேட்பாளர்களில் ஒருவருக்கு விலைபோய் ஏன் அவர்களின் செயற்திட்டத்ததின்படி தனது நடவடிக்கையை மேற்கொண்டிருக்க முடியாது??-நீங்கள் இருவேட்பாளர்களும் என்று கருதியது மகிந்த:சரத் என்றால் பதில்: நிச்சயமாக இல்லை என்பதே. சிவாஜியின் தேர்தல் நிரல் அப்படி இல்லையே. இருவருக்கும் எதிராக உள்ளதே. விலைபோயிருந்தால் உடைக்கப்படப் போவது இந்த இருவருடைய வாக்குகளும் தானே. இதற்கு இந்த இருவரில் ஒருவர் விலை கொடுப்பாரா? இது தன்னைக் கொல்வதற்குக் காசு கொடுப்பதாகி விடும்

    Reply
  • Kulan
    Kulan

    பார்த்திபன் மீண்டும்:
    கேள்வி5: //வேட்பாளர்களுக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காமல் போகுமென்றும்இ அப்போது மறு வாக்கு பதிவு நடாத்த வேண்டி வந்தால், இவர்களுடன் பேரம் பேசலாமென்றும் கூறியிருந்தார்.// இதற்கான சந்தர்ப்பம் மிகக்குறைவு பேரம்பேசுவதற்கான சந்தர்பமே இல்லை. 50விகிதம் கிடைக்காமல் உடைப்பது சாத்தியமானாலும் பேரம் பொருந்தாத ஒன்றே. காரணம் இரண்டாவது சுற்று பேரத்துக்கு உரியதல்ல. இரண்டாவது தெரிவாக (ஆலடநட்டிவ்) எவருக்கு அதிக வாக்குகள் வருகிறதே அதை ஏற்கனவே கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடும் போது 50க்கு மேல் வரவேண்டும். இங்கே சிவாஜிக்கு வேலையில்லை. ஆனால் முக்கியமாக சிறுபான்மையினரின் இரண்டாவது தெரிவே ஜனாதிபதியைத் தெரியும் காரணியாக அமைவதற்கு சாத்தியங்கள் உண்டு.

    கேள்வி6: இதற்கு சிவாஜிதான் பதில் செல்லவேண்டும். 2005 போன்று இது அமையாது. அது பூவா தலையா இது மூன்று தலைச் சிங்கம். புரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

    கேள்வி 7: தமிழ்மக்களின் இயலாமையைச் சொன்னது. மேலும் அதை நான் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.

    கேள்வி 8:தமிழ்மக்களின் பெரும்பான்மை வாக்குக்கள் சிவாஜிக்குத்தான் என்று நான் எங்கும் சொன்னதில்லை. தமிழ்மக்கள் சிவாஜிக்குத்தான் போடுவார்கள்; போடவேணும் என்பது எனது நோக்கமல்ல. தேர்தலில் சிவாஜிக்கு விழும் தமிழ்மக்களின் வாக்குக்கள் எமக்கு ஒரு சரியான பதில் சொல்லும் அங்குள்ள தமிழர்கள் நிலை என்ன நிலைப்பாடு என்ன என்பதை. எம்மக்களுக்கிருந்த 2 தெரிவு பூவா? தலையா? என்ற நிலையை மாற்றி சிவாஜி 3 ஆக்கியிருக்கிறார். இங்கே புலியின் நிழலும் சிவாஜி ஊடாக வெளிவரும்.

    கேள்வி9: பார்த்தீபன் மக்களை குறைத்து மதிப்பிடுவது தவறு. 72க்கு முன்னிருந்த சமூகமல்ல இன்று இருப்பது. இவர்கள் அடித்து நொருக்கப்பட்டு தம்மைக் காப்பதற்காக மீட்பரை எதிர்பார்த்திருப்பவர்கள். இவர்களை இலகுவாக மாற்றலாம். சுயமாகச் சிந்திக்கும் மனோநிலை வன்னிமக்களுக்கு இல்லை. வடக்குக் கிழக்கில் பலாற்காரமும் பதில் சொல்லப்போகிறது. அமைதி: கல்வியறிவு போன்றவை கிடைத்த மக்களால் மட்டுமே சுயமாகச் சிந்திக்க முடியும். நடுத்தர மக்கள் கூட அடிநிலைக்கத் தள்ளப்பட்ட நிலையில் சுயசிந்தனையை எப்படி எதிர்பார்க்க முடியும்? எம்மக்கள் சுயமாகச் சிந்தித்திருந்தால் புலி தொடர்ச்சியாக மற்ற இயக்கங்களைப் பிடித்துத் தின்னும் போதே சிந்தித்திருப்பார்கள். பார்த்திபன் காலம் எடுக்கும்.

    உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றாய் பதில் எழுதியதற்குக் காரணம் அரசியல் அறிவும் ஆர்வமும் மேலிட்ட ஒருவர் தாங்கள் என்பதால். அதனால் நான் ஏதோ அரசியல் சாணக்கியன் அல்ல. உங்கள் போன்றோரிடம் இருந்துதான் நானும் படிக்க விரும்புகிறேன். நிச்சயமாக என் பதில்கள் சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிவாஜி திறந்த அந்த 3ஆவது களம் எம்மக்கள் நிலையை சொல்லப்போகிறது. சுருக்கமாகச் சொன்னால் புலிகள் சுமந்துவந்த தமிழ்தேசியம் இன்று என்ன நிலையில் உள்ளது என்பதையாவது அறியலாமல்லவா? இல்லை என்று சொல்லப் போகிறீர்களா?

    Reply
  • mathan
    mathan

    தமிழருக்கு அன்றும் இன்றும் சோறு போடுவது சிங்களம்தான் பின்னூட்டக்காரர்களே. கம்பி வேலிக்குள் இருப்பவர்களை கடைசியாய் யார் பார்த்தது.சிங்களம்தான் சோறு போட்டது. நீங்கள்களும் சரி ஆருக்குப் பின்னால் நிக்கிறதென்று தீர்மானிக்க நாடுநாடாய் ஆலாய்ப்பறக்கும் புலிகளும் கூத்தமைப்புகளும் சரி சூரிச் மாநாடு வியன்னா மகாநாட்டுக்காரரும் சரி; அலைவதெல்லாம் இரு சிங்களத்தில் ஒரு சிங்களத்துக்குப் பின்னால் நிக்கவே

    Reply
  • Kulan
    Kulan

    பல்லி உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து எனக்கில்லை. நான் இன்று பார்ப்பது சிவாஜியையோ? மகிந்த சரத்தையோ அல்ல. அங்குள்ள எம்மக்களின் கருத்தை மட்டுமே. சிவாஜி திறந்த இந்த 3ம் களம் எப்படி எம்மக்களால் பார்க்கப்படப் போகிறது என்பது தான் என் ஆர்வம். தேர்தல் களம் எப்படி இருந்தாலும் இந்த 3ம் களம் எமக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லும். அதாவது புலிவாடை தொடர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லும். இதற்கான களத்தைத் திறந்த பலிக்கடாவானவர் சிவாஜி. நான் இவரின் அரசியலை நோக்கவில்லை. அரசியல் களத்தையும் எம்மக்களின் நிலையையுமே பார்க்கிறேன். மக்களின் நிலையைச் சரியாக அறிவது இன்றைய தேவை. இந்த 3ம் களத்துக்கான தேவை இருந்தது அதை கூத்தமைப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிவாஜி நிற்பது அதைவிடச் சிறந்தது. காரணம் சுயேட்சை தேசியம் காவி நிற்கிறது. இதைவிட சிறந்த பலியாடு யார்?

    Reply
  • Kulan
    Kulan

    சின்னா 16! மிக்க நன்றி. நீங்கள் கூறுவதுபோல் குழப்பம் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டமல்ல ஈழத்தமிழர்களுக்கும் தான். இக்குழப்பங்களை தீர்த்து மக்களைத் தெளிவடையச் செய்யவேண்டியவர்கள் அரசியல்வாதிகளே. நட்டாற்றில் புலிகளால் விடப்பட்ட மக்கள் குழப்பத்தில் இருப்பது நியாயமானதே. சிறிது காலம் எடுக்கும் அவர்கள் தெளிவு பெற. நாமும் எமக்குத் தெரிந்த சரியானவற்றை கொடுத்துக் கொண்டு இருப்போம். மீண்டும் நன்றிகள் சின்னா 16.

    //தமிழருக்கு அன்றும் இன்றும் சோறு போடுவது சிங்களம்தான் பின்னூட்டக்காரர்களே. கம்பி வேலிக்குள் இருப்பவர்களை கடைசியாய் யார் பார்த்தது.சிங்களம்தான் சோறு போட்டது// மதன்.
    அது ஒரு அரசின் கடமை அது கூட அழுத்தத்தின் காரணமாகதான் அரைகுறையாக நடக்கிறது என்பது வேதனைக்குரியதே. வடக்குக் கிழக்கில் இருந்து போன அரிசியில்தான் இலங்கையே சோறுண்டது என்ற காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. அன்று அனுராதபுரம் பொலநறுவை தமிழர்கள் வாழும் பூமியாகவே இருந்தது. சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிரி அல்ல பேரினவாத அரசியலே தமிழர்களின் எதிரியாக இருந்தது. இதில் தமிழ் அரசியல்வாதிகள் சளைத்தவர்கள் அல்லர்.

    Reply
  • Suban
    Suban

    ‘சிங்களக் கட்சிகளுக்கு எம்மக்கள் பழக்கப்படாது வைத்திருப்பதற்கும் ஒரு வழிசமைக்கப்பட்டிருக்கிறது.’/ குலனினின் பேனாவிலும் மெல்லியதாய் இனவெறி கசிகிறது. கீரோவாக ஆசைப்பட்டு களத்தில் நிற்கும் சிவாஜிலிங்கம் எப்படி பலிக்கடா ஆகிறார் என்பது புரியவில்லை. சிவாஜலிங்கமும் கூட்டமைப்பும் தஙகள் கடந்தகால செயற்பாடுகளினுடாக அம்பலமாகிநிற்கையில் சிவாஜிலிங்கத்திறகு பன்னீர் தெளித்து நடுவீட்டுக்குள் கொண்டுவந்து வைக்கும் தேவை ஏன் குலனிற்கு ஏற்பட்டது? தமிழ்மக்கள் இந்த்தேர்தலில் விக்கிரமாபாகு அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். அதனூடாக தமிழ்மக்கள் சிவாஜிலிங்கம் சொல்லாத மிகப்பெரிய செய்திகளை உலகுக்கும் குறிப்பாக சிங்கள சகோதரர்களுக்கும் சொல்லலாம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    குலன் மூன்றாவது களம் தேவை அதுவும் அது தமிழராய் இருப்பது மிகநன்று என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை, அதில் உடன்பாடுதான், ஆனால் புலம்பெயர் தேசத்தில் நடந்து கொண்டிருக்கும் தேர்தலின் முடிவு தமிழருக்கு சாதகமாக இல்லை என்பதை தங்களுக்கு பல்லி சொல்ல தேவையில்லை, காரனம் நீங்களே அதை ஆய்வு செய்தவர், அதில் வோட்டு போட்டவர்களை விட அதை தவிர்த்து கொண்டவரே அதிகம்; அப்படியாயின் ஈழத்தை ஆதரிக்கும் தமிழர் மிக குறைவே என்னும் செய்தியைதானே உலகுக்கு அந்த தேர்தல் சொல்லிச்சு, அதுபோல் சிவாஜியை பார்ப்போமேயானால் ஏற்க்கனவே அவரது வாயால் பலரை பகைத்துள்ளார் அவருக்கு சாதகமென பார்த்தால் தமிழர் என்பது மட்டுமே; ஆனால் அவருக்கு தடங்கலாக உள்ளவை;

    (1)வன்னி மக்களை வம்பிலே மாட்டியத்தில் முக்கியமானவர்;
    (2) இதுவரை தேவை(தமிழர்) கருதி எதையும் பேசாதவர்;
    (3) கூட்டமைப்பை விட்டு ஓடியதுக்கு இதுவரை காரனம் இல்லை;
    (4)வணங்கா மண் கப்பலை கடலிலே கவிழ செய்த பெருமையும் இவர்குண்டு;
    (5) எல்லாத்துக்கும் மேலாக ஈழ மக்களிடம் கேக்க வேண்டிய வோட்டை லணடன் மக்களிடம் எதிர்பார்க்கிறார்,
    (6)தேர்தலுக்கு வேட்ப்புமணு தாக்கல் செய்ய முன்பே பேரம் பேசலாம் என சுயமாக சொல்லி பலரை திண்ர வைத்தவரும் இவரே,
    (7)புலிகள் வோட்டு இவருக்கு எதிராகவே போகும் என்பதில் சந்தேகமே இல்லை;
    (8) வடக்கோ கிழக்கோ இவருக்கு கவலை இல்லை; எல்லாமே லொண்டந்தான்;
    (9)இதுவரை இவரை ஒரு புலி கோமாளியாகதான் தமிழர் பார்த்துள்ளனர்;
    (10)பல்லியின் பார்வையில் ஒரு பலசரக்கு கடை நடத்த கூட தகுதியற்றவர்,

    குலன் தமிழர் தகுதி இதுதானா? இவருக்கு விழும் வோட்டை வைத்து தமிழர் நிலையை எப்படி தீர்மானிக்க முடியும், இதுவரை இவர் சுயேட்ச்சையாக நிற்பதுக்கு சொல்லும் காரனம் என்ன? பேரம் பேசலாம் என்பதுதானே, இதுவரை தமிழ் தலமை யாராவது சிவாஜியை ஏற்று கொண்டனரா?? நான் அடிக்கடி சொல்வேன் சிலர் பேசினால் பிரச்சனைகள் தீரும், சிலர் பேசாமல் விட்டாலே போது பிரச்சனைகள் வராது, சிவாஜி இரண்டாவது வகை, குலன் உங்கள் கருத்துபடி இந்த மூன்றாவது களநிலை சிவாஜியால் அதுவும் தமிழர் நிலையை உலகுக்கு தெரிய வருமாயின் அது தமிழர் போராட்டத்துக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் லாக்கற்றவர்கள் என்பதாகவே அமையும் என்பதுதான் பல்லியின் கருத்து, இது தவறாக கூட இருக்கலாம்; ஆனாலும் எனது கருத்து இதுதான்;

    Reply
  • மாயா
    மாயா

    //பேச்சுவார்த்தை என்பது எதிரியுடனும் செய்யப்படும். இதைப்புலிகளும் செய்தார்கள். பேச்சுவார்த்தை என்பது ஒத்துப்போவது என்றோ: ஆதரிப்பது என்றோ அர்த்தமாகாது பார்த்தீபன்.- Kulan on December 27, 2009 12:54 am //

    புலிகள் பேச்சு வார்த்தைகளுக்காக எப்போதும் போனதே இல்லை. அதை இல்லாமல் செய்வதற்காகவே போனார்கள். இதை நீங்களும் ஏற்று எழுதியுள்ளீர்கள். இது தொடர வேண்டுமா? ஒரு முடிவே வராதா? முள்ளிவாய்க் கால்வாய்க்கு பதிலாக , இன்னொரு கால்வாயை திறக்க தங்களது உத்தேசமா?

    //முஸ்லீம் வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால் முஸ்லீம்கள் தம்மை தமிழர்கள் என்று மொழிசார்ந்து அடையாளப்படுத்துவதை விட மதம் சார்ந்தே தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். இதை யாரும் மறுக்க இயலாது. இங்கும் துவேசமே புரையோடிக் கிடக்கிறது. – Kulan on December 27, 2009 12:54 am //

    தமிழரும் , தம்மை இலங்கையர் என தம்மை அடையாளப்படுத்துவதை விட , தம்மை தமிழர் என்றே அடையாளப்படுத்துகிறார்கள். இதை எப்போது திருத்திக் கொள்வீர்கள்?

    Reply
  • Kulan
    Kulan

    சுபன்!//குலனின் பேனாவிலும் மெல்லியதாய் இனவெறி கசிகிறது//
    இனவெறி என்பது மிகக்கடுமையான சொல். ஏன் இதை காலங்காலமாக ஏமாற்றப்பட்டதன் விளைவாகக் கருத மறுக்கிறீர்கள்.//
    /சிவாஜிலிங்கத்திறகு பன்னீர் தெளித்து நடுவீட்டுக்குள் கொண்டுவந்து வைக்கும் தேவை ஏன் குலனிற்கு ஏற்பட்டது?// தமிழ்மக்கள் இந்த்தேர்தலில் விக்கிரமாபாகு அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்//
    நான் சிவாஜி செய்தது 100வீதம் சரிஎன்று வாதாடவில்லை. விக்கிரமபாகுவிற்கு தமிழ் சிங்கள வாக்குக்கள் போகும் போது எமக்குக் கிடைக்கும் செய்தி துல்லிதமாக இருக்காது. தெற்குத் தமிழர்கள் சிலர் இடதுசாரித்துவத்தை நேசிப்பதால் விக்கிரமபாகுவிற்குப் போடுவார்கள். எமது முக்கிய நோக்கு வடக்குக் கிழக்கே. இன்னுமொரு சோசலிசக்கட்சியும் தேர்தலில் நிற்பதனால் தெற்கத்தைய இடதுசாரித் தமிழர்களின் வாக்குகள் அங்கேயும் பிரிபடப்போகிறது.

    Reply
  • Kulan
    Kulan

    என்பின்நோட்ட அன்பர்களுக்கு நான் கொடுக்கும் ஒருசெய்தி: இக்கட்டுரை ஒரு கருத்தக் களத்தைத் திறக்கவேண்டும் என்பதே என் ஆர்வம். பலதும் பத்தும் வரும் போதுதான் மறுபக்கங்களை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. நான் பார்க்காத பக்கங்களை பலர் பார்த்திருப்பார்கள். அவை சமூகத்துக்கு வந்து சேர்வது முக்கியமல்லவா? ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் என்றும் ஒரு நல்ல சமூகத்தைத் தோற்றுவிக்கும். இதனால்தான் கட்டுரையில் இறுதியில் எழுதியிருந்தேன். என்கருத்தை எழுதிவிட்டேன் உங்கள் கருத்தை எதிர்பார்த்து நிற்கிறேன். உங்களையும் என்னையும் உட்கொண்டது தானே ஒரு சமூகம்.

    Reply
  • kamal
    kamal

    தமிழ் மக்கள் சரத்துக்கு அளிக்கப் போகும் வாக்குகள் விடுதலைப் புலிகளுக்கு அளிக்கப் போகும் வாக்குகளாகும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    குலன்
    உங்கள் பொறுப்பான பதில்களுக்கு முதலில் நன்றிகள். ஆனாலும் உங்களின் சில பதில்கள் கழுவிற நீரிலே நழுவுற மீன் போலவே உள்ளன. மகிந்தவும் சரத்தும் கொலைகாரர்கள் என்பதால் அவர்களை கூத்தமைப்பு ஆதரிக்கக் கூடாதென்ற நீங்களே அவர்களுடன் பேச்சுவார்த்தை கூத்தமைப்பு நடாத்துவது தப்பில்லை என்றும் அது எதிரியுடன் நடாத்துவது என்று சமாளிக்கின்றீர்ககள். அப்படியானால் அந்தப் பேச்சுவார்த்தையை கூத்தமைப்பு யாரை ஏமாற்ற நடாத்துகின்றது. பேச்சுவார்த்தையை எதிரியுடன் மாத்திரமல்ல நண்பர்களுடனும் ஒரு தீர்வுக்காகவே நடாத்துகின்றோம். அந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வை எட்டும் போது அந்தத் தீர்வை ஏற்றுக் கொள்பவரை நாம் ஆதரித்தே ஆக வேண்டும். அல்லது அந்தப் பேச்சுவார்த்தையிலீடுபட்டதற்கு எந்தவித பிரயோசமுமில்லை. ஆனால் முன்பு புலிகள் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் நாடகமாடி காலத்தை இழுத்தடிப்பதையே செய்து மக்களை ஏமாற்றி வந்தார்கள். அதையே கூத்தமைப்பினரும் செய்து மக்களை ஏமாற்றலாம் என நீங்கள் சொல்வது முரண்பாடானதாக உங்களுக்குத் தெரியவில்லையா??

    அடுத்ததாக சிவாஜிலிங்கம் முக்கிய இரு வேட்பாளரு்களுக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காதபோது, இரண்டாம் கட்ட வாக்களிப்பு நடாத்த வேண்டிய சந்தர்ப்பம் வந்தால், அவர்களுடன் பேரம் பேசலாமெனக் குறிப்பபிட்டதை நான் சுட்டிக்காட்டினேன். ஆனால் அப்படியொரு நிலைமை வராதென்பது எனக்கும் தெரியும். முதற்கட்டத்தில் 50 சதவிகித வாக்குகள் எவருக்கும் கிடைக்காத பட்சத்தில், விருப்ப வாக்குகளின் எண்ணிக்கையையே முதலில் பார்ப்பார்கள். அனேகமாக அந்த எண்ணிக்கையே முடிவெடுக்க போதுமானதாக அமைந்து விடும். ஆனால் முதலில் கொலைகாரர்களை ஆதரிக்க முடியாதென்று கதையளந்த சிவாஜிலிங்கமே, பின்பு இவர்களுடன் பேரம் பேசலாமென மக்களை முட்டாளாக்கவே முயல்கின்றாரென்பது தங்களுக்குப் புரியவில்லை??

    Reply
  • BC
    BC

    //Suban -தமிழ்மக்கள் இந்த்தேர்தலில் விக்கிரமாபாகு அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.//
    விக்கிரமாபாகுவே சொல்லிவிட்டார் தாங்கள் இருவரும் (சிவாஜிலிங்கம்) இடதுசாரிகள். இருவரினதும் அடிப்படைக் கொள்கைகள் இணையானவை என்றும். அவருக்கு போட்டால் என்ன இவருக்கு போட்டால் என்ன எல்லாம் ஒன்று தானே.

    Reply
  • Kulan
    Kulan

    பல்லியின் பின்நோட்டத்தை எங்குகண்டாலும் விரும்பி வாசிப்பவன் யான். //தமிழருக்கு சாதகமாக இல்லை என்பதை தங்களுக்கு பல்லி சொல்ல தேவையில்லை காரனம் நீங்களே அதை ஆய்வு செய்தவர் அதில் வோட்டு போட்டவர்களை விட // இது உண்மை. ஆனால் புலத்துப் புண்ணாக்குகளின் கருத்து எமக்கு முக்கியமில்லையே. எம்மக்களின் கருத்து இந்தப் புலம்பெயர் புலிகளின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் சிவாஜி அல்ல எந்த ஒரு தமிழன் நின்றாலும் இக்கட்டுரை இப்படித்தான் அமைந்திருக்கும். இதில் சிவாஜி கொண்டுவந்து நிற்பது புலி கொணர்ந்த தமிழ்தேசியம். இவர் ரெலோவின் பெயரைக் காவித்திரியும் ஒரு புலியே. இவருக்கு விழப்போகும் வாக்குகள் வடக்கு கிழக்கின் பொருளாதார வளர்சியையோ: அரசியல் தீர்வையோ வெற்றி பெறும் ஜனாதிபதியுடனான பேரம்பேசலுக்கான வாய்ப்புகளையோ காட்டாது. புலி வளர்த்துவிட்டுச்சென்ற தமிழ்தேசிய விழுமியங்களை மட்டும் தான் காட்டப்போகிறது. புலிமாயையின் படிமமே சிவாஜி ஊடாகத் தெரியவரப் போகிறது. ஒத்துக் கொள்கிறீர்களா பல்லி?

    பல்லி உங்கள் 10ப்புள்ளிகளுடனும் எனக்கு உடன்பாடு உண்டு. ஒருசில புள்ளிகளுக்கான பிரத்தியேக கருத்தை இங்கே எழுதுகிறேன். புள்ளி 5;8)இவர் வன்னிப்போர் காலத்தில் நான்வதியும் நாட்டுக்கும் வந்தார் மேடை மேடையாகப் பணம் கேட்டார். என்னிடம் தனிப்பட்ட முறையில் தாருங்கள் கொண்டு போய் கொடுக்கிறேன் என்று. நான் கேட்டேன் நான் புலிக்குப் பணம் கொடுத்ததில்லை என்றாவது கொடுக்கிறேன் என்று சொன்னேனா? என்று கேட்டதும் வாயடைத்து விட்டார். நாம் எம்மக்கள் மேல்காட்டும் அன்பையும் ஆர்வத்தையும் பணமாகவே மாற்ற முயற்சிக்கிறார்கள் இவர்கள். மேலும் புதுத்தமிழர்களால்தான் ஏதாவது அரசியல் மாற்றம் நடைபெறம் என்ற மாயையும் பணமும்தான் சிவாஜியை லண்டனுக்குக் கொண்டுவந்தது. களம் அங்கிருக்க இவருக்கு இங்கு என்ன வேலை? புள்ளி6) பேரம்பேசலுக்கான சாத்தியம் இங்கில்லை. புள்ளி 9) இதுதான் மக்களை அறிய எமக்குக் கிடைத்த துரும்பு. ஆனால் வேறு ஒருதமிழர் தமிழ்தேசியத்துடன் சுயேட்சையாக நிற்பதோ சாலச்சிறந்தது. இது உங்கள் கருத்தும் கூட. மேலும் பல்லி தேர்தல் நெருங்க நெருங்க களநிலை மாறிக்கொண்டே இருக்கும்.

    புலிகள் வோட்டு இவருக்கு எதிரானது என்றால் அது எங்கே போகும் என்ன கேள்வியும் எழுகின்றது அல்லா? இங்கே புலித்துவம் வெளியாகப் போகிறது. பல்லி! நான் கட்டுரையின் இறுதியில் எழுதியுள்ளேன் களநிலையை எம்மால் தற்சமயம் சரியாக ஊகிக்க இயலாது. களநிலை தேர்தல் நெருங்க நெருங்க மாறிக்கொண்டே போகும்.

    Reply
  • Kulan
    Kulan

    மாயா!//புலிகள் பேச்சு வார்த்தைகளுக்காக எப்போதும் போனதே இல்லை. அதை இல்லாமல் செய்வதற்காகவே போனார்கள். இதை நீங்களும் ஏற்று எழுதியுள்ளீர்கள். இது தொடர வேண்டுமா? ஒரு முடிவே வராதா? முள்ளிவாய்க் கால்வாய்க்கு பதிலாக இன்னொரு கால்வாயை திறக்க தங்களது உத்தேசமா?// நிச்சயமாக பேச்சுவார்த்தைகள் தொடரவேண்டும். பேச்சு வார்த்தைகளின் நோக்கம் எதுவாகவும் இருக்காலாம். குழப்ப என்று போய் குழம்பியது யார். புலிகள் தம்மைத் சுதாகரித்துக் கொள்வதற்கும் வெளிநாட்டு அனுதாபங்களைப் பெறுவதற்கும். சர்வதேச உதவியுடன் தமிழீழம் காண்போம் என்று கற்கனையில்தான் அழியும் வரை இருந்தார்கள். அமெரிக்கா எதற்காக வரவேண்டும். அதனுடை எதிர்பார்ப்பு என்று. பிரதிபலன் என்ன என்பதை இன்றாவது புலிகளால் சொல்ல முடியுமா? இதற்குக்காரணம் அரசியலின்மையே

    //தமிழரும் தம்மை இலங்கையர் என தம்மை அடையாளப்படுத்துவதை விட தம்மை தமிழர் என்றே அடையாளப்படுத்துகிறார்கள். இதை எப்போது திருத்திக் கொள்வீர்கள்// மாயா! இது உண்மையானதும்; நியாயமானதுமே. இன்னிலைக்குத் தமிழர்கள் வந்தது எப்படி? தமிழர்கள் மட்டுமா இப்படி? பேரினவாத அரசியல் இதைமாற்ற என்ன செய்தது? செய்யப்போகிறது? வேலைத்திட்டத்தை முன்வைத்தார்களா? பொம்மைகளைக் குறைசொல்லிப் பிரயோசனம் இல்லை. இவற்றை ஆட்டிவிக்கும் நூல்கள் யார் கைகளில் இருந்தன? என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

    Reply
  • Kulan
    Kulan

    பிசி! நல்ல பதில். இருப்பினும் விக்கிரமபாகுபோல் உண்மையான இடதுசாரியாகச் சிவாஜியைப்பார்க்க இயலாது. விக்கிரமபாகு சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. சிவாஜி தமிழ்தேசியத்தை சிவாஜி தூக்கும் போது இடதுசாரித்துவம் தொலைந்து விட்டது. ஆனால் விக்கிரமபாகுவின் தமிழர் பற்றியபார்வை அவர் கொள்கைப்படி சரியானதே. தமிழ் தேசியத்தை காவும் தமிழர்கள் விக்கிரமபாகுவிற்குப் போடமாட்டார்கள். இங்கே பிரிக்கப்படும் வாக்குகள் சுட்டுவது சரியான தேசியத் தகவலை.

    Reply
  • Anonymous
    Anonymous

    மகிந்தாவை ஆதரிப்பது தமிழரின் தற்காப்பு போரட்டம்.
    சரத்தை ஆதரிப்பது அவர்களின் தாக்குதல் போராட்டம்.
    சிவாஜியை ஆதரிப்பது இணையத்தில் எழுதிக் கொள்ளுகின்ற போரட்டமே.
    நன்றி.

    Reply
  • Kulan
    Kulan

    பார்த்திபன்! பின்நோட்டத்துக்குப் பின்னோட்டம் விடாமல் கட்டுரையை வாசித்து எழுதுவது சிறப்புக்குரியதே.
    //மகிந்தவும் சரத்தும் கொலைகாரர்கள் என்பதால் அவர்களை கூத்தமைப்பு ஆதரிக்கக் கூடாதென்ற நீங்களே அவர்களுடன் பேச்சுவார்த்தை கூத்தமைப்பு நடாத்துவது தப்பில்லை என்றும் அது எதிரியுடன் நடாத்துவது என்று சமாளிக்கின்றீர்ககள்.// மகிந்த சரத் தமிழ்கொலைஞர்கள் சந்தேகமே இல்லை. ஒத்த கருத்துடையவர்களுடன் நடாத்தும் பேச்சுவார்த்தை முதுகுதடவலே தவிர வேறில்லை. எதிரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். பேச்சு வார்த்தைகளை பலவகைப்படும். சமாதானத்துக்குரிய பேச்சுவார்த்தை என்றால் இருசாராரும் எதேனும் ஒன்றை விட்டுக் கொடுக்காமல் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது. இந்த மனோநிலையின்றிதான் எமது நாட்டில் பேச்சுவார்த்தைகள் இருந்தன. மேலும் பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொண்ட முடிவுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை இருசாராரும் செய்யவில்லை.சரி உங்களிடமே வருகிறேன் மகிந்த சரத் புலிகளை மட்டுமல்ல மட்டற்ற மக்களையும் அழித்தவர்கள். இவர்களுக்குத்தான் தமிழ்மக்கள் வாக்கிக்க வேண்டும் என்கிறீர்களா? இந்த இருவரையும் விரும்பாதவர்களுக்கான ஒல்டனட்டிவ் என்ன? நான் நழுவவில்லைப் பார்த்திபன்.

    //சிவாஜிலிங்கமே பின்பு இவர்களுடன் பேரம் பேசலாமென மக்களை முட்டாளாக்கவே முயல்கின்றாரென்பது தங்களுக்குப் புரியவில்லை??// தெரியும். எல்லா அரசியல்வாதிகளும் ஆண்டாண்டு காலமாக இதைத்தானே செய்கிறார்கள். இதில் சிவாஜி என்ன விதிவிலக்கு. ஈழத்துக்காந்தி செல்வாவும் இதைத்தான் செய்தார். சிவாஜியின் அரசியல் கொள்கை சரியென்று நான் சொல்லவில்லையே. அவர் திறந்த களம் சரியானது. எமக்கு சுட்டிக் காட்டப்போகும் மக்கள் மனமே முக்கியமானது. சிவாஜிக்குப் பதிலாக வேறு ஒருவர் தமிழ்தேசியத்துடன் நின்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    Reply
  • Kulan
    Kulan

    கமல்! //தமிழ் மக்கள் சரத்துக்கு அளிக்கப் போகும் வாக்குகள் விடுதலைப் புலிகளுக்கு அளிக்கப் போகும் வாக்குகளாகும்.// கமல் தயவு செய்து சிறிது விரிவாக விளங்கப்படுத்துவீர்களா? எனக்காக மட்டுமல்ல தேசம் வாசகர்களும் அறிய உதவும். நீங்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று கூற முடியுமா?

    Reply
  • santhanam
    santhanam

    குலன்
    அடுத்த பிரபாகரனின் அரசியல் நகர்வாகதான் இவரையும் பார்க்கிறேன் அனைத்து இயக்கங்களின் ஒற்றுமையை உடைத்து வெளியேறி அனைத்து இயக்கங்களின் அழிவுக்கு வழிவகுத்தவர்தான் பிரபாகரன். கூட்டமைப்பை ஒரு சிறு தமிழ்மக்களின் அரசியல் ஒற்றுமைக்குரிய தாபனமாகவுள்ளது அதையும் சிதற வழிவகுக்கும் மனிதராக இவரை நான் பார்க்கிறேன் இவரையும் இந்தியா தனது நலன் சார்ந்து 100 வீதம் இயக்குகிறது.

    Reply
  • Kulan
    Kulan

    அனொனிமஸ்!//மகிந்தாவை ஆதரிப்பது தமிழரின் தற்காப்பு போரட்டம். சரத்தை ஆதரிப்பது அவர்களின் தாக்குதல் போராட்டம். சிவாஜியை ஆதரிப்பது இணையத்தில் எழுதிக் கொள்ளுகின்ற போரட்டமே.// தயவு செய்து எழுத்தமானமாகச் சொல்லாமல். ஏன் எதற்கு தற்கரீதியான தகவல் என்ன? என்பதைச் சொல்லுங்கள். மகிந்தவை ஆதரிப்பது எப்படித் தற்காப்புக் போராட்டமாக அமையும்? காரணம்? தகவல்?
    சரத்தை ஆதரிப்பது எப்படித் தாக்குதல் போராட்டம்? யாரை எப்படி? யாரை யார் தாக்கப்போகிறார்கள்? எப்படி? எப்போ? ஆதராம்?
    இணையத்தில் எழுதுவது போராட்டமல்ல தகவல் அன்றேல் தர்க்கம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //மகிந்த சரத் புலிகளை மட்டுமல்ல மட்டற்ற மக்களையும் அழித்தவர்கள். இவர்களுக்குத்தான் தமிழ்மக்கள் வாக்கிக்க வேண்டும் என்கிறீர்களா? இந்த இருவரையும் விரும்பாதவர்களுக்கான ஒல்டனட்டிவ் என்ன? – குலன் //

    குலன்,
    பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் எழுதுவதே, தங்களிடமிருந்து தெளிவான பதில்களை பெறும் நோக்கிலேயே. சரி இனி உங்கள் கேள்விக்கு வருகின்றேன்.

    நடந்து முடிந்த இந்த யுத்த்தில் பல்லாயிரம் மக்களும் அழிந்து போனதற்கு அரசாங்கம் மட்டுமா காரணம்?? இந்த யுத்தத்தில் புலிகளை அழித்து விடுவதென்று அரசாங்கமே முடிவெடுத்துத் தான் தொடர்ந்தது. அதற்கு பல உலக நாடுகளும் ஆதரவளித்தும் இருந்தன. இந்த நிலையில் மாவிலாறில் யுத்தம் தொடங்கும் நிலை ஏற்பட்ட போது, அதைத் தவிர்க்க புலிகள் நினைக்கவில்லை, மாறாக வீரவசனங்கள் பேசி இன்னும் அரசை உசுப்பேற்றவே செய்தனர். ஒவ்வொரு தளமாக புலிகள் இழந்து வந்தபோதும் தமது பிடிவாதத்தை புலிகள் விடவில்லை. கடைசி கிளிநொச்சி விழுந்த பின்னாவது, புலிகள் அரசிடமில்லாது வேறொரு அந்நிய நாடொன்றிடமாவது சரணடைந்திருந்தால் இவ்வளவு அழிவும் தடுக்கப்பட்டிருக்குமல்லவா?? ஆக புலிகள் மக்களைக் கேடயமாக பாவித்து தமது யுத்தத்தை தொடர்ந்ததும் இந்த அழிவுகளுக்குக் காரணம் என்பது தங்களுக்குப் புரியவில்லையா?? இல்லை அரசு செய்தது தான் தவறு என்று என்னும் நீங்கள் கருதினால் அழிவுகளைத் தவிர்த்து எவ்வாறு புலிகளுடன் (மக்களைப் புலிகள் கேடயமாக வைத்திருந்த நிலையில்) அரசு போரை நடாத்தியிருக்கலாம் என்பதை விளக்குங்கள். அதற்காக அரசு போரை நிறுத்தியிருக்க வேண்டும் என்ற சப்பைக்கட்டு பதிலை வைக்க வேண்டாம். அழிவில்லாமல் எப்படிப் போரை நடாத்தியிருக்க முடியும் என்பதை மட்டும் விளக்குங்கள்.

    அடுத்ததாக இந்தத் தெர்தலில் மகிந்தவோ அல்லது சரத்தோ தான் வென்று வரப் போகின்றார்கள். இதைத் தடுக்க தமிழர்கள் எவராலும் முடியாது. உங்கள் கருத்துப்படி இவர்கள் இருவரும் கொலைகாரர்கள் என்று வைத்துக் கொண்டாலும் தற்போதைய நிலையில் எந்தக் கொலைகாரன் வந்தால் தமிழர்கள் கொஞ்சமாவது நிம்மதியாக இருக்க முடியுமென்பதே எனது எண்ணம். அந்த வகையில் அதிகம் பாதகமான ஒரு கொலைகாரன் ஆட்சிக்கு வருவதை வேண்டுமானால் தமிழர்களின் வாக்குகள் திசை திருப்ப முடியும். அந்த வகையில் மகிந்தவிற்கு தமிழர்கள் ஆதவளித்தால் சரத் வருவதை தடுக்க முடியுமென்பதே எனது கருத்து.

    அப்படி மகிந்தவிற்கு ஆதவளிக்க வேண்டிய அவசியமென்ன என அடுத்த கேள்வியை நீங்கள் வைக்கலாம். ஏற்கனவே தேசம்நெற்றில் இன்னொரு பகுதியில் விளக்கமாக பல்லிக்குப் பதிலாக எழுதியிருந்தாலும், அதுபற்றி மீண்டும் தருகின்றேன்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணி கூட புலிகளை அளித்தவர் என்ற போர் வெற்றியைக் காட்டித் தான் பதவியைப் பிடிக்க முனைகின்றனரே தவிர, நாட்டிற்கு நல்லதொரு ஊழலற்ற ஆட்சியையும் இனங்களிற்கிடையேயான ஒற்றுமைகளைப் பேணி நல்லாட்சி வழங்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அல்ல. இதன் மூலம் மீண்டும் இனத்துவேசம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் குறுக்கு வழியையயே இவர்களும் கையிலெடுக்கின்றார்கள்.

    சரத்தைப் பொறுத்தவரை அரசியல் அறிவென்பது அவருக்கு சுத்தசூனியம். இவரை வைத்து யு.என்.பியும் ஜே.வி.பியும் தமக்குச் சாதகமாக காய் நகர்த்தும் கனவிலேயே இருக்கின்றார்கள். ஆனால் சரத்தின் இதுவரையிலான நடவடிக்கைகளைக் கவனித்தவர்களுக்கு, அவர் எவருக்கும் அடங்கிப் போகும் ரகமில்லையென்பது புரியும். தேர்தல் முடியும் வரை இவர்களுடன் அடக்கி வாசிககும் சரத், தேர்தலில் வென்று வந்தால் தனது நிஜ முகத்தைக் காட்ட துணிவார். அபபோது சரத்திற்கும் யு.என்.பி மற்றும் ஜே.வி.பிக்கும் முரன்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். அப்போது சரத் இவர்களையும் இவர்களது ஆதரவாளர்களையும் அடக்குவதற்கு இராணுவ அடக்குமுறையைத் தான் கையிலெடுப்பார். அதன் மூலம் சிங்கள மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வந்தால், அப்போது தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை ஏவிவிட்டு சிங்கள மக்களை திசை திருப்பவும் சரத் தயங்க மாட்டார். அத்தோடு தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்தை அறிவித்த பின்பு கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துகளையே தொடர்ந்து இவர் கூறி வருகின்றார். உதாரணமாக “வரலாற்றுரீதியாக இலங்கை முழுக்க முழுக்க சிங்களவர்களுக்கு உரியதே தமிழர்கள் எந்தவிதத உரிமைகளையும் கேட்காமல் வேண்டுமானால் சேர்ந்து வாழலாம்” போன்ற கருத்துகளையே தொடர்ந்து கூறி வருகின்றார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படியான கருத்துகளை வைத்து வருபவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வாரென புரிய முடியாமல் இருக்க முடியுமா??

    ஆனால் தன்னை எவராலும் அசைக்க முடியாதென்ற மமதையிலிருந்த மகிந்தவிற்கு சரத் வடிவில்வந்த எதிர்ப்பு கொஞ்சமாவது சிந்திக்க வைத்திருக்கும். இதன் மூலம் இனியாவது தனது தவறுகளை திருத்தி சகல இனமக்களும் இணக்கப்பாட்டோடு வாழ்வதற்கான வழிகளைச் செய்ய மகிந்த முன் வருவாரென்று நம்புகின்றேன். அதனைச் செய்ய அவர் தவறின் எதிர்காலத்தில் இவரால் எப்படி சந்திரிகா அரசியலிலிருந்து ஓரம் கட்டப்பட்டாரோ அதே பாணியில் இவரும் இன்னொருவரால் ஓரம் கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். அந்த ஒருவர் எதிர்காலத்ததில் இவரது சகோதரர்களில் ஒருவராக வந்தாலும் வியப்பில்லை..

    Reply
  • kamal
    kamal

    தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டில் இருந்து புலிகளை ஆதரித்தவர்களும் இயக்கியவர்களும் வெளிநாட்டுச் சனங்களை உசுப்பேத்தி விட்டவர்களும் நிலைதடுமாறி அவர்கள் எதிர்பாராததும் அவர்களால் நம்ப முடியாததுமான உண்மையைக் கண்டு உறைந்து போனார்கள்.

    மே 18ன் பின்னரான இரு மாதங்களாக புலிகளின் சகோதரப் படுகொலை பிழையானது, இன்று அவர்களும் இருந்திருந்தால் பலமாக எதிரியைத் தோற்கடித்திருக்கலாம் எனவும்; அரசியல் நிலைப்பாடு இல்லாது தனிய ஆயுத பலத்தை நம்பி போராட்டத்தை வைத்திருந்தமை தவறு எனவும்; அரசியல் ஆய்வாளர்களையும் அரசியல் தலைவர்களையும் புலி போட்டுத் தள்ளியது தவறு எனவும்; ஊடகவியலாளர்களை தாக்குவதும் தமது தரப்பு செய்திகளை மட்டும் சரியாக்கி பெரிதுபடுத்தி உண்மை நிலைவரங்களை வெளி உலகுக்கு மறைத்தது தப்பு எனவும் இதுபோன்ற பல தவறுகள் நடைபெற்றதுகளை நான் முதற் பந்தியில் குறிப்பிட்டவர்கள் தம்வாயால், தாமே சொல்லி, ஏற்றுக் கொண்டார்கள்.

    அத்துடன் புலிகள் துரோகிப் பட்டம் வழங்கியவர்களுடன் அது பிழை என்றும் நாம் இனிவரும் காலத்தில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் கதைத்தார்கள். மாற்றுக் கருத்தாளர்களின் கூட்டங்களில் அவர்கள் தலைகள் தெரிய ஆரம்பித்தன.தாம் கதையாதிருந்த சக அமைப்பு போராளிகள் ஆதரவாளர்களுடன் நேரிலும் போனிலும் கதைத்தார்கள். எதிர்காலம் பற்றிக் கதைத்தார்கள். எப்போதும் ஒற்றுமை பற்றிக் கதைத்தார்கள். ஓரு குடையின் கீழ் என்றும் கதைக்கத் தவறவில்லை.

    அடுத்த இரு மாதங்களில் பிரபாகரன் இருக்கிறார் அணி; பிரபாகரன் இல்லை அணி எனும் இரு அணிகளினுள் மேற்சொன்னவர்கள் பெரும்பாலோனோர் பிளவுபட்டார்கள். பணங்களை சுருட்டிக் கொண்டு இடையில் சிலர் ஒதுங்கினர். கேபி சரி கேபி பிழை; உருத்திரகுமார் சரி உருத்திரகுமார் பிழை; ராம் புலி ராம் அரசாங்கத்துடன்: இன்னும் என்னென்னவோ எல்லாம் நடக்கிறது அவர்களுள்ளே. அவர்களுக்கிடையேயே ஒருவருக்குள் ஒருவர் சந்தேகம், இவர் இப்ப யாருடன் என்று.

    இப்படியான குதம்பல் நிலைப்பாட்டையும் ‘புலிகள்’ என்பது அழிகின்றது என்பதையும் உணர்ந்த முன்னாள் புலிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது கைகளில் தமிழரின் தலைவிதி என்ற புலி நிலைப்பாட்டை எடுத்தனர்.

    லண்டனில் பழைய புலிகளான வரதகுமார் ஜெயதேவன் போன்றோருடன் கிருஷ்ணண் போன்றவர்கள் இணைந்து தற்போதைய பிரிஎவ்வுடன் கூட்டுச் சேர்ந்தனர். அடுத்த அவர்களின் நடவடிக்கை பிரபாவை தோற்கடித்த அரசைத் தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டுமே. இது பிரபா ரஜீவ் மீது பழி தீர்த்ததற்கு ஒப்பானது. இவர்களின் இந்தத் தணியாத தாகத்தை தனது ஊன்றுகோலாக பாவித்துக் கொண்டது ஜக்கிய தேசியக் கட்சி. இதற்கான பிரச்சாரங்கள் பேட்டிகள் என்று ஜ.தே கட்சிக்காரர் ஒரே அமளியாக இருந்தார்கள். லண்டனில் பல நடைபெற்றது. சரத்தின் பிளவும் அரசியல்ப் பிரவேசத்தையும் தனக்கு சாதகமாக ரணில் பயன்படுத்த மகிந்தாவைப் பழிவாங்க சரத்துக்கு புலிகள் முட்டுக்கொடுக்க முடிவெடுத்தனர். (லண்டனில் நடப்பது போன்று மற்றைய நாடுகளிலும் இதுபோன்ற முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. இதர நாடுகளில் நடைபெற்றவையை அங்குள்ளவர்கள் பதிதல் நன்று.)

    அடுத்து சரத் வெற்றி பெறுவதற்காக தமிழர்களைப் பயன்படுத்த வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களின் வாக்குகளை வைத்து வெளிநாட்டில் வாழும் இவர்கள் சரத்தை பதவியேற்க வைக்க வேண்டும். அதற்கு இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகளின் ஆதரவு தேவை. அதற்காக அவசர அவசரமாக காதும் காதும் வைத்தாற் போல் கூட்டப்பட்ட மகாநாடே சூரிச் மகாநாடு. கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட இலங்கைத் தமிழ்த் தலைமைகளுக்கு தாம் என்னத்துக்காக வாறோம் என்பதே தெரியாது. எல்லோரையும் அழைத்து அவர்கள் சரத்திற்கு ஆதரவு அளிக்கும் நிலையை உருவாக்குவதே சூரிச் மகாநாட்டின் ஒரே நோக்கம். இதை அறிந்து கூட்டத்தை குழப்பியடித்தமைக்காக டக்ளஸ் மீது தீராத கோபம் வரதகுமாருக்கு. இந்தக் கூட்டம் எல்லோரையும் ஒற்றுமைப் படுத்துவதற்காகக் கூட்டப்பட்டது. ஊரில் ஒருத்தரோடு ஒருத்தர் கதைக்காதவர்கள் இந்த மகாநாட்டிற்கு வந்து கதைத்தார்கள் கை குலுக்கிக் கொண்டார்கள். தமிழன் சகதமிழனுக்கு வெளிநாடுவந்து கை குலுக்குவதே வரலாற்று முக்கியத்துவமானது என்கிறார் வரதகுமார். இதெல்லாம் ஒரு கதை.

    புலிகள் என்ற பெயரில் தொடர்ந்தும் அதிகாரத்தைக் கைப்பற்ற, ஒரு பசுத்தோல் போர்த்திய புலிகள் புலிகளுக்குத் தேவை என்பதால் தமிழர் நடுவத்தினைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனந்த சங்கரியின் கடிதம்போல் அவ்வப்போது ஆங்கிலத்தில் அறிக்கை விடுவதே தொழிலாகக் கொண்டிருந்த என்றுமே புலிகளின் தவறை கண்டிக்காத தமிழர் தகவல் நடுவத்தை புலிகள் தமது மறைவிடமாகப் பாவித்ததில் வியப்பான விடயம் எதுவுமில்லை.

    இவர்களை முன்னுக்கு வைத்து தமது சரத் அரசியலை புலிகள் முன்னெடுக்கிறார்கள். ஏற்கனவே யுஎன்பியுடன் உறவுள்ள பழைய புலிகளைக் கொண்ட அமைப்புகள் மனதுள் சந்தோசத்துடன் வெளியில் எதுவும் பேசாது நம்பக்கம் விடயம் கனிந்து வருகின்றதென மெளனமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த சரத் அரசியலுள் புலிகளால் உள்வாங்கப்பட்டவர் சம்பந்தன். வரதரின் தலையாட்டிப் பொம்மை. ஆனந்த சங்கரி இலவு காத்த மாதிரி இவரும் அரசாங்கம் மாறி எண்டாலும் உயர் கதிரைப் பதவி வேணும் என்றலைகிறார். இவர் நான் தமிழரின் தலைவன் என்ற பிரபாவின் இடத்தை எடுக்க ஆசைப்படுகிறார். தனது சொல்லுக்கு ஆமாப் போட்டுக் கொண்டு எல்லா ரிஎன்ஏக்காரரும் இருக்கு வேண்டும் என்பதும் இவர் எதிர்பார்ப்பு. இதற்கு இடைஞ்சலாக வெளிக்கிட்டிருப்பவர் சிவாஜிலிங்கம். இவர்களின் நிகழ்சி நிரலுக்கு இடைஞ்சலான சிவாஜிக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதில் கவனமாகச் செயற்படுவார்கள். அதற்காக புலிகளின் தவறான அணுகு முறைகள் தடம்பிரண்ட வெளிநாட்டுப் போராட்டங்கள் போன்ற நிகழ்வுகள் எல்லாம் இனி இவர் தலையில் புலிகளால் கட்டப்படும் என்பதில் ஜயமில்லை. புலிகள் எப்போதும் பிழையை பிழையாக ஏற்றுக் கொள்ளாது இவனால்தான் எல்லாம் நடந்ததென்று ஒருவரின் தலையைப் பிடித்து உருட்டுவதே வழமை. எனவே எதிர்வரும் நாட்களில் புலிகளின் தவறுகள் பல சிவாஜி தலையில் கட்டப்படும்.

    குலன் நீங்கள் கேட்டதற்கான எனது பதில் இங்குள்ளது

    வழமையாக புலிகளுக்கும் பதவிக்கு வரும் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் மக்கள் நலன்பற்றி அக்கறைப்படாத புலிகள் நலன் சார்ந்த ஒப்பந்தங்கள் நடைபெறுவது வழக்கம். காலப்போக்கில் எல்லாம் வெளிவரும். இப்போதும் சரத்துக்கும் புலிகளுக்கும் இடையில் நிச்சயமாக ஒரு ஒப்பந்தம் போடப் பட்டிருக்கும். காலப்போக்கில் அதுவும் வெளிவரும்.

    Reply
  • Anonymous
    Anonymous

    குலன்!
    எழுந்தமான கருத்துகள் எனக்கானதல்ல. என் வரிகளில் வலிமையைத் தேடுங்கள். எனக்கு திருக்குறளாகத்தான் எழுத முடியும். பரிமேலழகர்களை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்.

    Reply
  • Kulan
    Kulan

    பார்த்திபன்! //பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் எழுதுவதே, தங்களிடமிருந்து தெளிவான பதில்களை பெறும் நோக்கிலேயே // பார்த்திபன் எந்தக் குற்றவுணர்வும் தேவையில்லை. நான் எழுதுகிறேன் நீங்கள் வாசிக்க வேண்டியதுதான் என்னைத் திருப்பிக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் என்றும் எண்ணியதில்லை. என்னால் முடிந்தவரை எனக்கு என்னறிவுக்குத் தெரிந்தவரை பதிலிக்கிறேன். கேள்விகளின் மூலம்தான் மனிதன் தெளிவடைகிறான். ஒரு கட்டுரை எழுதுவற்கு எடுக்கும் நேரத்தை விட பின்னோட்ட நேயர்களுக்குப் பதிலளிப்பதற்குத்தான் நேரம் அதிகம் தேவை. இருந்துபோதிலும்.நாம் எழுதுவது மக்களுக்கே அன்றி வித்துவான்களுக்கே வித்துவத்தன்மையைக் காட்டுவதற்கோ அல்ல. என்னால் இயன்றவரை பதிலளிக்கக் காத்திருக்கிறேன். என்பதில்கள் பிழையாகக் கூட இருக்கலாம். மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டேன். நானும் மனிதன் தானே.

    //புலிகள் மக்களைக் கேடயமாக பாவித்து தமது யுத்தத்தை தொடர்ந்ததும் இந்த அழிவுகளுக்குக் காரணம் என்பது தங்களுக்குப் புரியவில்லையா??// நிச்சயமாகப் புரிகிறது. நான் புலிகளுக்காகப் பரிந்து பேசவில்லை. ஆனால் பார்த்திபன் அரசுக்கு ஒரு தார்மீகக்கடமை உண்டு. புலிகள் போல் பயங்கரவாதிகள் போல் நடந்திருக்கக் கூடாது. மேலும் காப்பற் பொம்பிங் (கம்பளக்குண்டடி): கொத்தணிக் குண்டுகள் நச்சுவாயுக்கள் போன்றவற்றைப் பாவிப்பது மக்களை அழிப்பதற்கே. இதனால்தான் கொத்தணிக்குண்டுகள் தடைசெய்யப்பட்டன.

    ஒன்று:இன்னும் அரசு விரும்பும் 3ம்தரத்திடம் சரணடையவிட்டு பயங்கரவாதத்தடைச் சட்டத்தினூடு மீழப்பேற்றிருக்கலாம். ஏமாற்றுவது ஒன்றும் மகிந்தவுக்குப் புதிதல்லவே. புலிகளால் ஜனாதிபதியான இவர் புலிகளை அழிக்கவில்லையா? சந்திரிகாவுக்கே ஆப்பு வைத்தவராயிற்றே
    இரண்டாவது: முனைதிறந்தடித்தலூடாக கடற்பகுதியைத் திறந்து விட்டு அடித்திருக்கலாம்.
    மூன்றாவது: நவீனவகைக் குண்டுகளான மயக்கவாயு தாக்கு குண்டுகளை சிறு சிறு பகுதிகளைக்குப் போட்டு உடன் மக்களை மீட்டிருக்காலாம். இக்குண்டுகள் மிக மலிவானவை.
    நான்கு: பேரம்பேசியிருக்கலாம்.
    ஐந்து:விமானமார்கமான இரசாயணக்கருவிகள் கொண்ட யுத்திகளைப் பாவித்திருக்காலாம். ஆனால் இவற்றை இங்கு கூறவியலாது.

    நாம் எந்தவிதத்திலும் சிங்களப் பேரினவாத்தையும் புலிகளையும் மக்கள் சார்ந்து நியாயுப்படுத்த முடியாது. //அந்த வகையில் மகிந்தவிற்கு தமிழர்கள் ஆதவளித்தால் சரத் வருவதை தடுக்க முடியுமென்பதே எனது கருத்து// இது எவ்வளவு தூரம் சரி என்று என்னால் கூறமுடியாது. இவர்களில் ஒருவர் அரசியல் சாணக்கியன் மற்றவர் அரசியல் என்பதே அறியாத அரசியல்வாதியாக்கப்பட்டவன். இவர்கள் இருவரும் ஒருவகையில் இனவாதிகள் தான். காரணம் முந்திய நாட்களில் இவர்களின் வாக்கு மூலங்கள் பதிலளிக்கும். ஒருவன் தடவித்தடவி அறுப்பான் மற்றவன் நேடிரியாக அறுப்பான். என்பது எனது எண்ணம்.

    பார்த்திபன்: மகிந்த சரத்துக்கிடையலான முரண்பாடுகள் சரியானவையே. இதில் நீங்கள் கூறிய ஒருவிடயத்தை இன்னும் ஆளப்படுத்த விளைகிறேன். மகிந்தவை விழுத்துவதற்கான எதிர்கட்சிக் கூட்டே என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. இக்கூட்டு அரசியல்; கொள்கை; தத்துவார்த்தம் எனும் அடிப்படைக் காரணிகளில் தங்கியிராத கூட்டு இது என்றும் உடையும். இப்போது முழு இராணுவத்தையும் சரத் தன்கைக்குள் போட இயலாது. நாம் நினைப்பது போல் மகிந்த சகோதரர்கள் தமது செல்வாக்கை இராணுவத்தினுள் வைத்திருக்கிறார்கள். இராணுவப்புரட்சி என்பது சரத் சார்ந்து இலகுவாகாது.

    பார்த்திபன்! புலிகளைப்போல் நாம் மகிந்தவை இலகுவாக எடைபோடக்கூடாது. இவர் ஒரு மகாசாணக்கியன். சரத்தைத் தூக்கி வெளியில் போட்டதே இலங்கையில் ஒரு இராணுவப்புரட்சி ஏற்படக்கூடாது என்பதற்காகவே. இவரைத் தூக்கும் போதே மகிந்தவின் ஆட்கள் இராணுவத்தினுள் மறைமுகமாகத் தயார்படுத்தப் பட்டுவிட்டார்கள். இனிச் சரத் வந்தாலும் அங்கே பெரிதாக எதுவும் நடக்காது. பிராந்திய வல்லரசுகளுக்கும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கும் பதில் சொன்ன மகிந்த இந்தச் சின்னவிடயத்தை சுலபமாக விட்டிருக்க மாட்டார். ஆனைக்கும் அறுகம்புல்லுத் தடக்கும். சரத்தை வெளியில் போட்டதே தடக்கக் கூடாது என்பதற்காகத்தான். மகிந்த பிரபாகரன் இருவருக்கம் பல ஒன்றுமை உண்டு. நம்பவைத்து அறுப்பது என்பது.

    Reply
  • Kulan
    Kulan

    கமல் நன்றி. நீண்டதாக ஒரு கட்டுரையே வரைந்து விட்டீர்கள். ஒவ்வொருவருடைய கருத்துக்களும் களம் இறங்கவேண்டும் என்பதால் உங்களை சிரமத்துக்கு உள்ளாக்கி விட்டேன் போலும்.

    இத்துடன் தமிழர்கள் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் தொடர்ந்தும் நாம் ஒற்றுமை ஒரு குடை என்று கதைத்துக் கொண்ட இருக்கிறோம். ஆனால் நாம் ஒன்றும் ஒற்றுமையானது கிடையாது. அதற்கான காரண காரணிகளை யாரும் தேடியதாக இல்லை. புரிந்தாலும் புரியவைக்க முயற்சிக்கவில்லை. புலிகளும் ஒற்றுமையைப் பற்றிக் கதைத்தார்கள். ஒற்றுமை என்பது தன்னை மாதிரித்தான் மற்றவன் இருக்க வேண்டும் சிந்திக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது தவறு. பிறப்பில் மனிதன் வித்தியாசமானவன். வேற்றுமைகள் முரண்பாடுகள் இருந்தபோதும் குறைந்த பட்ச உடன்பாட்டுடன் வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்படுதலே ஒற்றுமைக்கு வழியாகும். இனியாவது ஒற்றுமை என்ற பதத்தை சரியாக விளங்கிக் கொள்வோமாக. என்னை மாதிரியே மற்றவனும் இருக்கவேண்டும் என்பது அடிமைகளாக்க முயலும் முயற்சியே அன்றி ஒற்றுமைப்படுத்தலாகாது. மற்றவனும் என்னைமாதிரிப் பெறுமதியுடையவன் என்ற எண்ணம் இருக்கும் போதுதான் ஒற்றுமை என்பது சாத்தியமாகும்.

    Reply
  • Kulan
    Kulan

    சந்தானம்!// அடுத்த பிரபாகரனின் அரசியல் நகர்வாக தான் இவரையும் பார்க்கிறேன் //
    இதுவும் சரியாக இருக்கலாம். தேர்தலிலும் அரசியலிலும் எதையும் சரிவரச் சொல்ல இயலாது. கடைசி நிமிடங்களே தீர்மானம் செய்யும் கணங்களாகும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //என் வரிகளில் வலிமையைத் தேடுங்கள். எனக்கு திருக்குறளாகத்தான் எழுத முடியும். பரிமேலழகர்களை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்.//
    இது ஒரு தவறான வாதம்; குலன் மட்டும்தான் உங்கள் கருத்தை கவனிக்க வேண்டுமா?? ஏன் பல்லி போன்ற படிப்பறிவற்றவர்கள் புரிந்து கொள்ள கூடாதா? சிவாஜியின் நிலையில் பல்லிக்கும் உடன்பாடு இல்லை, ஆனால் பின்னோட்டகாரர் எல்லோரையும் அவரது ரசிகர்போல் தாங்கள் பின்னோட்டம் இடுவது வேடிக்கை; குலனின் கருத்தில் பல்லிக்கும் உடன்பாடு கிடையாது, ஆனால் அவரது கருத்து தவறு என சொல்ல எனக்கு என்ன தகுதி உண்டு; நாம் இப்படி நடக்கலாம் அல்லது அப்படி இருக்கலாம் என சுட்டிகாட்ட முடியுமே தவிர அவரது கருத்தை மறுக்க முடியாது, காரனம் அது அவரது கருத்துத்தானே தவிர சட்டம் அல்ல; பல்லி கூட சரத்துக்குதான் வோட்டு என எழுதினேன், அதை பலர் கிண்டல் செய்தனர், எனக்கு அதைபற்றி கவலை இல்லை, ஆனாலும் நான் ஏன் சரத்துக்கு வோட்டு என எனது நிலைபாட்டை எழுதினேன்;

    குலன்போல் மகிந்தாவின் அமோக வெற்றியை பல்லியும் விரும்பவில்லை (அது எனது உரிமை) ஏன் என்பது பல தடவை எழுதியுள்ளேன்; இதில் இன்று பல கசப்பான தகவல்கள் வரும் என தெரிந்தும் குலன் தனது கருத்தை தையிரியமாக எழுதியுள்ளார், மகிந்தா வெற்றி பெறுவார் என்பதுக்காகவோ அல்லது புலியை அழித்தார் என்பதுக்காகவோ அவரை ஆதரிக்க வேண்டும் என்னும் நிலை தவறானது என்பது எனது கருத்து; இவை இரண்டுமே தமிழரின் எதிர்காலத்தை வழம்பெற செய்ய முடியாது, ஓபாமா மீது கூட விமர்சனங்கள் படை எடுக்கும்போது மகிந்தா என்னும் குடும்ப அரசியல்வாதி மீது விமர்சனமே வரபடாது என்பது எப்படி? சிவாஜி தவறானவர் என்பதில் பல்லிக்கு எந்தவிதமான கருத்து முரன்பாடும் இல்லை; ஆனால் அவரது இந்த செயலுக்கு அனுபவம் வாய்ந்த கூட்டமைப்பை சார்ந்தவர்களும் ஒரு காரனம் என்பதையும் நாம் மறந்துவிட கூடாது,

    கருனாவின் காட்டி கொடுப்புக்கு பிரபா எவ்வளவு காரனமோ அதைபோல் சிவாஜியின் இந்த செயலுக்கும் கூட்டமைப்பு காரனமே, திரும்பவும் பல்லியின் கருத்தில் தவறு இருக்கலாம்; ஆனால் குலனின் கருத்தை ஏற்று கொண்டாலும் சிவாஜி அந்த பொறுப்பை ஏர்பதால் பல விளவுகள் வருமோ என்பதில் பல்லி போல் பலருக்கு பயம் உண்டு, இருப்பினும் சரியான நேரத்தில் சரி பிழைக்கு அப்பால் வேண்டிய ஒரு கட்டுரையை குலன் எழுதியதுக்கு பாராட்டுக்கள்;

    முடிந்தவரை விவாதிப்போம் நட்புடன் விமர்சிப்போம் என்னும் பல நல்ல கருத்துக்கள் நண்பர்களால் வந்துசேரும்;
    தொடரும் பல்லி;;;

    Reply
  • பல்லி
    பல்லி

    //பார்த்திபன்! //பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் எழுதுவதே, தங்களிடமிருந்து தெளிவான பதில்களை பெறும் நோக்கிலேயே // பார்த்திபன் எந்தக் குற்றவுணர்வும் தேவையில்லை. நான் எழுதுகிறேன் நீங்கள் வாசிக்க வேண்டியதுதான் என்னைத் திருப்பிக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் என்றும் எண்ணியதில்லை. என்னால் முடிந்தவரை எனக்கு என்னறிவுக்குத் தெரிந்தவரை பதிலிக்கிறேன். கேள்விகளின் மூலம்தான் மனிதன் தெளிவடைகிறான். ஒரு கட்டுரை எழுதுவற்கு எடுக்கும் நேரத்தை விட பின்னோட்ட நேயர்களுக்குப் பதிலளிப்பதற்குத்தான் நேரம் அதிகம் தேவை. இருந்துபோதிலும்.நாம் எழுதுவது மக்களுக்கே அன்றி வித்துவான்களுக்கே வித்துவத்தன்மையைக் காட்டுவதற்கோ அல்ல. என்னால் இயன்றவரை பதிலளிக்கக் காத்திருக்கிறேன். என்பதில்கள் பிழையாகக் கூட இருக்கலாம். மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டேன். நானும் மனிதன் தானே.//

    தேசம் பின்னோட்டங்களை பலர் கேலி செய்வார்கள்; ஆனால் பார்த்திபன்; குலன் இருவருமே அறிவு ஜீவிகள் என சொல்ல விரும்பாவிட்டாலும் அவர்களது பின்னோட்டங்கள் அவர்களது உலக செய்திகளையும் அன்று தொடக்கம் இன்றுவரை அவர்கள் சேகரித்த செய்திகளையும் வெளிகாட்டும்; இருப்பினும் தனது கருத்துதான் சரியென வாதாடாமல் இன்றய நிலையை திருக்குறளாய் இல்லாமல் எதார்த்தமாய் எழுதுவதால் பலருக்கு அது பிரயோசனமாய் இருக்கல்லவா? என்னும் பலர் எழுத்துக்கள் அப்படியே; சரியான ஒரு விமர்சனமே எந்தஒரு விடயத்துக்கும் முற்று புள்ளி; ஆகவே எம்மை கேலி செய்பவர்கள் எமது தவறுகளை சுட்டிகாட்டுவதே சிறந்த விடயமாகும், எமக்கும் பயனளிக்கும்;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நன்றி குலன் மற்றும் பல்லி உங்கள் புரிந்துணர்வான கருத்துகளுக்கு.
    உண்மையில் இப்படியான பின்னூட்டடங்களினூடான விவாதங்கள் நாம் தெரிந்து கொள்ளாத அல்லது மற்றவர்கள் தெரிந்து கொள்ளாத பக்கங்களையும் எமக்குக் காட்ட உதவும். அதுனூடு பல தகவல்களை நாமும் பெறுகின்றோம் எமக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கும் வழங்குகின்றோம். இதற்கு தளம் அமைத்துக் கொடுத்த தேசம் நெற் மூலம் உங்களைப் போன்ற பல தரமான கருத்தாளர்களோடு கருத்தாட முடிகின்றது.

    Reply
  • Suban
    Suban

    இலங்கையில் சிங்களவர் ஒருவரே ஜனாதிபதிஆகும் வாய்ப்புப்பெற்றவர் என்பது வெளிப்படை. பாராளமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மைக் கட்சிகள் தமிழ்சிங்கள முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி வாக்கு வங்கிகளை நிரப்பவேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு. ஏனெனில் அவர்கள் புரட்சியாளர்கள் அல்ல. அரசியல்வாதிகள். தமிழ் சிங்கள தேசிய இனங்களின் முரண்பாடுகள் கூர்மையடைய அடைய அது தமிழ்மக்களுக்குத்தான் அதிகம் பாதிப்பு. இந்த முரண்பாட்டை களையவேண்டிய அவசியம் தமிழ் மக்களுத்தான் அதிகமுண்டு. அதற்காக கிடைக்கும் சந்தர்பங்களையெல்லாம் தமிழ்மக்கள் பயன்படுத்த வேண்டும்

    தமிழ்மக்களுக்கு சிங்கள இனத்தவர்களும் ஏன் தலைவர்களாக உருவாகக்கூடாது. உருவாக்கக்கூடாது. விக்கிரமபாகு எங்களுடைய தமிழ்தலைவர்களை விட எத்தனையோ மடங்கு மேல். சிந்திக்ககூடிய தமிழ்மக்களாவது தங்களுக்தலைமை தாங்க தகுதியுடையவர்; எவரையாயினும் எந்த இனத்தவராயினும் அவரை ஏற்றுக்கொள்ள தயாராகவேண்டும். தமிழனுக்குத்தான் வாக்களிப்போம் தமிழ்க் கட்சிக்கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்ற அடம்பிடிப்பது நல்லதில்லை. கால்மாக்சையும் லெனினையும் இன்னுபல தலைவர்களையும் நாம் போலியாக ஏற்றுக் கொண்டவர்களில்லையே!

    Reply
  • raalahaami
    raalahaami

    இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் சமாதானத்தையும் நிம்மதியையும் விரும்புகின்றார்கள் அதனால் பயங்கரவாதத்தை அழித்த ஜனாதிபதியையே அவர்கள் மீண்டும் தெரிவுசெய்ய விரும்புவார்கள். ஆனால் புலத்தில் வாழும் தமிழர்களோ இலங்கையில் சமாதானத்தை விரும்பமாட்டார்கள்(அனைவருமல்ல). இவர்கள் விரும்புவது சறத் பொன்சேக்காவையே. ஏனெனில் நாட்டில் குழப்பமிருந்தால்தான் புலத்தில் ஏமாற்றிப் பணம் புடுங்கி, மிடுக்காக வாழலாம். இது நமது அநேகமான எமது ஏமாளிகளுக்கு இன்னுமா புரியவில்லை. ஆகவே நாட்டில் வாழும் மக்களின் வாக்குகள் மகிந்தாவுக்கு கிடைப்பது நல்லது..ஆனால் புலத்திலுள்ளவர்களைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? இவர்களுள் பலருக்குத்தான் எங்குமே வாக்குகள் இல்லையே. வாழ்வுரிமைக்கே வழியற்றவர்கள் வாக்குரிமை பேசுவது வெறுமையான வேடிக்கையல்லவா?

    Reply
  • Kulan
    Kulan

    பல்லியின் ஆர்வப்பட்ட பலவிடயங்கள் உங்களிடம் உள்ளன. மறுபக்கத்தையும் சீர்தூக்கிப்பார்க்கும் தன்மையுள்ளவர்கள்தான் சரியான விவர்சத்தை வைக்கமுடியும். இதை தாங்கள் கடைசியில் எழுதிய பின்னோட்டம் தெழிவாகக் கூறுகிறது.//ஆனால் அவரது கருத்து தவறு என சொல்ல எனக்கு என்ன தகுதி உண்டு// இப்படி நினைப்பது தவறு. ஒவ்வொருவருக்கும் தகுதி இருக்கிறது பல்லி. நான் பார்க்காத பக்கங்களை நீங்களோ மற்றவர்களோ பார்க்கலாம் தானே. //அது அவரது கருத்துத்தானே தவிர சட்டம் அல்ல// இதனால்தான் கட்டுரையின் இறுதியில் எழுதினேன் //எந்தநேரமும் இன்நிலைகள் மாற்றப்படலாம். அரசியல் ஒரு சதுரங்கமே!.

    என்கருத்தைச் சொல்லிவிட்டேன் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்று. //சிவாஜியின் இந்த செயலுக்கும் கூட்டமைப்பு காரனமே, திரும்பவும் பல்லியின் கருத்தில் தவறு இருக்கலாம் // இதுதான் உண்மை பல்லி. சிவாஜி ஒரு கூத்தணியில் இருக்கும் ரெலோ முகம் கொண்ட புலியே. இது குழப்பமானது தானே. ஆனால் இவர் தமிழ் தேசியத்தையல்லவா தூக்கி வந்திருக்கிறார். இங்கேதான் ஈழத்தமிழரின் முகங்கள் தெரியப்போகிறது. என்னைப் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள். இது பிரச்சனைக்கும் சர்ச்சகைகும் உரிய விடயம் எனத் தெரிந்தும் தான் எழுதினேன் என்பதைச் புரிந்திருக்கிறீர்கள் ஆனால் யாரோ ஒருவர் போட்டு உடைக்கத்தானே வேண்டும். கூட்டணிபோல் மெளனமாய் இருப்பது மக்களை குழப்பநிலையில் அல்லவா வைத்திருக்கும்.// சிவாஜி அந்த பொறுப்பை ஏற்பதால் பல விளவுகள் வருமோ என்பதில் பல்லிபோல் பலருக்கு பயம் உண்டு// இதில் சந்தேகமே இல்லை. இத்தேர்தல் முழுத்தமிழினததுக்கும் ஒரு குழப்பமானது பயமானதுமான தேர்தலே. இதுவும் புலிகளின் பின்விளைவே. இத்தேர்தல் ஒரு கருத்துக் கணிப்புக்குரிய ஆபத்தான தேர்தல் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் நிலை கலவரத்துக்குரியதே. ஈழத்தமிழர் சமநிலைபெற காலம் எடுக்கும். வன்னி மக்கள் வயிற்றைப் பார்ப்பார்களோ வாழ்வைப் பார்ப்பார்களோ தேர்தலை நினைப்பார்களோ? உண்மை உணர்வுடன் கூடிய விவாதங்கள் என்றும் ஆரோக்கியமானதுதான்.

    Reply
  • Kulan
    Kulan

    சுபன்! //விக்கிரமபாகு எங்களுடைய தமிழ்தலைவர்களை விட எத்தனையோ மடங்கு மேல். சிந்திக்ககூடிய தமிழ்மக்களாவது தங்களுக்தலைமை தாங்க தகுதியுடையவர்// சந்தேகமே இல்லை: ஆனால் த.வி.கூவில் இருந்து புலிகள் வரை வளர்த்து விட்டு தமிழ் தேசியம் இதற்கு இடம் கொடுக்காது. உலகமயமாதலையும் இலங்கைத் தேசியத்தையும் விரும்புபவர்கள் என்றுமே தமிழ்; சிங்கள்; முஸ்லீம் தேசியத்தைப் பற்றிக் கதைக்கவே கூடாது. இவை ஒன்றுக்கொன்று முரணானவை .இன்று உலகமயமாதலை விரும்பும் அரசு இதை நடைமுறைப்படுத்துதல் அவசியமானதே. துவேசத்துக்கு வித்திட்டவர்கள் சிங்கள அரசியல்வாதிகள் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதை தமிழர்பகுதியில் வளர்தெடுத்தவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே.

    Reply
  • Kulan
    Kulan

    இராலகாமி! இக்கட்டுரையின் நோக்கம் புலத்துத்தமிழர்கள் அல்ல. ஈழத்தமிழர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்; அவர்கள் மனநிலை என்ன? எதிர்கால எண்ணம் என்ன? என்ற ஒரு கருத்தெடுப்பேதான். இத்தேர்தல் குழப்பமானதுதான் முடிவெடுப்பது கடினமானது. தேர்தலின் முடிவு எமக்கு ஒரு பதிலைத்தரும். அது தமிழ்மக்களின் மனங்களை எண்ணங்களை அளவிடக்கூடியதாக இருக்கும். இல்லை என்கிறீர்களா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //கருத்து தவறு என சொல்ல எனக்கு என்ன தகுதி உண்டு// இப்படி நினைப்பது தவறு. //
    குலன் எனக்கு அப்படி தோன்றவில்லை, காரனம் எமது கருத்தை சொல்லுவது வேறு ஒருவரது கருத்தை தவறென விமர்சிப்பது வேறு, நான்கூட பலரது கருத்து (வேறு கட்டுரையில்) தவறென எழுதியுள்ளேன், ஆனால் சரியான கருத்து கண்முன்னே தெரியும் போது அதை மறுப்பவர்களுக்காக அப்படி எழுதியிருப்பேன், ஆனால் இது பலரும் கருத்து சொல்ல வேண்டிய விடயம்(தேர்தல்) சிலவேளை தவறான கருத்தை கூட வாக்காளர்கள் ஏற்று கொள்ளலாம், சரியான கருத்துகள்கூட பொருளாதார விளையாட்டில் பொய்த்து போகலாம்; உதாரனத்துக்கு தமிழக படிக்காதமேதை காமராசர் தோல்வியை சொல்லலாம்; எமது கருத்தை எமது கருத்தாய் சொல்லுவோம் எழுதுவோம் சரியோ தவறோ காலமே பதில் சொல்லும்;

    //வாழ்வுரிமைக்கே வழியற்றவர்கள் வாக்குரிமை பேசுவது வெறுமையான வேடிக்கையல்லவா?//
    அப்படி சொல்ல முடியாது; சிங்கள தேசம் எம்மை நாடு கடத்தவில்லை; எமது இனமே புரிந்துனர்வற்ற சதிராட்டத்தால் சகோதரயுத்தத்தை தொடக்கி சிலரை மேல் உலகத்துக்கும், பலரை வெளி உலகத்துக்கும் அனுப்பினார்கள்; ஆக பறிபோகாத வாக்குரிமை இல்லை என்பது ஏற்க்க தக்க கருத்தா??

    // தமிழ் சிங்கள தேசிய இனங்களின் முரண்பாடுகள் கூர்மையடைய அடைய அது தமிழ்மக்களுக்குத்தான் அதிகம் பாதிப்பு//
    உன்மைதான் அதில் சந்தேகமே இல்லை; ஆனால்::::

    //இந்த முரண்பாட்டை களையவேண்டிய அவசியம் தமிழ் மக்களுத்தான் அதிகமுண்டு. அதற்காக கிடைக்கும் சந்தர்பங்களையெல்லாம் தமிழ்மக்கள் பயன்படுத்த வேண்டும்//
    அரசியல் செய்யாத பல ஆயிரம் தமிழர் அதை மிக இலகுவாக செய்த வண்னமே உள்ளனர், ராமனாதன் தொடக்கம் வினோதன் வரை பல தமிழர் ஆடம்பரம் இல்லாமல் பல சிங்கள அரசியல் வாதிகளின் ஆலோசகராகவும் இருந்துள்ளனர்; இதில் புலிகள் தவறவிட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் கூட அடங்கலாம்:

    //கால்மாக்சையும் லெனினையும் இன்னுபல தலைவர்களையும் நாம் போலியாக ஏற்றுக் கொண்டவர்களில்லையே//
    இதில் எனக்கு உடன்பாடு கிடையாது, இதை பலதடவை நான் சொல்லியுள்ளேன்; எமது இனத்தில் இருக்கும் ஒரு தமிழரை தலமை தாங்க இனம் காண முடியாத நாம், எம் கண்முன்னே நடந்த யுத்தம் தோத்துபோனதுக்கு காரனம் தெரியாத எமக்கு; கண்முன்னே நடக்கும் மிருகதனமான போக்கை கூட வேடிக்கை பார்த்து கொண்டு நடப்பதை நாம் எழுதினால் அலட்டுகிறார்கள் என கொட்டாவியும் விட்டு கொண்டு கால்மாக்சையும் லெனினையும் தொட்டுக்க ஊறுகாய்போல் எடுத்ததுக்கெல்லாம் ஏலம் விடுவது போலியில்லாமல் வேறு என்ன?? சின்னையாவின் மனனிலையோ அல்லது பொன்னையாவின் வாழ்வுநிலையோ புரியாத பலர் வெளியுலக தத்துவத்தில் மட்டும் டாகுத்தர் பட்டம் வாங்கி போடுவினம்; மனநிலையும் புரியாது, களநிலையும் தெரியாது, போலி போலி போலி;

    Reply
  • Sampanthan
    Sampanthan

    தமிழரின் சுயநிர்ணய போராட்டம் தொடாந்து கொண்டே இருக்கின்றது ஆயுத போராட்டமே நிறைவு பெற்றுள்ளது‐

    விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்டதனால் தமிழர் சுயநிர்ணய போராட்டத்தின் ஆயுத போராட்டமே நிறைவு பெற்றுள்ளதாகவும் எனினும் தமிழரின் சுயநிர்ணய போராட்டம் தொடாந்து கொண்டே இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிடுகின்றார்.

    தமிழர் பிரச்சினைக்கு அரசாங்கம் ஓற்றையாட்சி முறைமையினை தீர்வாக முன்வைப்பதனை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் மாறாக சுயாட்சி முறையே அவசியமெனவும் அவர் மீண்டுமொறு முறை வலியுறுத்தினார்.

    தமிழர் பிரச்சினைக்கு வெறுமனே தமிழர்காளால் மாத்திரமின்றி முஸ்லிம் மக்கள் சிங்கள மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் கூறினார்.

    கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்துக்களை குறிப்பிட்டார்.

    Reply
  • Kulan
    Kulan

    சம்பந்தன்! நேரத்தைச் செலவிட்டு நல்ல கருத்துக்களை எடுத்து வந்துள்ளீர்கள: இதற்குத் தலைவணங்குகிறேன். சிவாஜி லண்டன் வந்தபோது கொடுத்த பேட்டிகள் தெளிவாக இருந்தன. ஒற்றையாட்சியின் கீழ் சுயாட்சி என்பதை தான் மையப்படுத்துவதாகக் கூறினார். //தமிழர் பிரச்சினைக்கு அரசாங்கம் ஓற்றையாட்சி முறைமையினை தீர்வாக முன்வைப்பதனை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் மாறாக சுயாட்சி முறையே அவசியமெனவும் அவர் மீண்டுமொறு முறை வலியுறுத்தினார்// சுயாட்சி என்பது ஒற்றையாட்சியின் கீழும் இருக்கலாம். இன்றைய ஜனாதிபதிபோல் வலுவுள்ள ஜனாதிபதி அமைப்பின்றி ஒன்றுக்கு மேற்பட்ட பிரதமர்களைக் கொண்ட சுழற்சி முறையிலான அரசியமைப்புச் சட்டத்தை வலியுறுத்துவதாகவும் கூறினார். இது கனடாவிலுள்ள கியூபெக் சுயாட்சியை விட சிறிது உரிமை கூடியது எனலாம். தமிழ்பிரதேசங்கள் தமிழ்பிரதமரின் கீழ் பொலிஸ்; பிராந்தியம்: மொழி; புனரமைப்பு; வேலைவாய்பு என்று பல அடங்கம். மத்திய அரசிடம் இராணுவம்; வெளிவிவகாரம் போன்றவைதான் கையில் இருக்கும். மீண்டும் சுயாட்சி என்பது தனித்தமிழீழம் மட்டும் தான் என்பது தவனானது. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒற்றையாட்சிக்கு எந்தத் தடையும் தேவையில்லை. மனமிருந்தால்.

    Reply
  • Kulan
    Kulan

    தமிழ்மக்கள் இத்தேர்தலை சரியான முறையில் பயன்படுத்தவில்லை பயன்படுத்தமாட்டார்கள் என்பது என் எண்ணம். முக்கியமாக தமிழ்; சிங்களம்; ஆங்கிலம் என 3மொழியும் நன்கு தெரிந்த ஒருவரை தேர்தலில் நிறுத்தி எமது பிரச்சனையை சிங்களப்பகுதிகளிலும் எழுத்துச் சொல்லும் எழுத்துச் செல்லும் ஒரு கருவியாகப் பாவித்திருக்காலாம். எல்லாச் சிங்களவர்களும் சிங்களத் தேசியவாதிகளோ: இனவெறியர்களோ அல்ல. பேரினவாத அரசியலால் மயக்கத்தில் பலர் வாழ்கிறார்கள். இந்த இடத்தில் சிவாஜி தமிழருக்கான ஒரு மாற்று களத்தை அமைத்தாலும் மேற்கூறிய நோக்கில் பலவீனமானவராகவே இருக்கிறார். தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சனை சிங்கள மக்கள் மத்தியில் யாரும் சரியாக் கொண்டு செல்லவில்லை. பல சிங்களமக்களுக்கு தமிழர்களும் புலிகளும் பயங்கரவாதிகளாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள். எமது பிரச்சனையை சிங்களமக்கள் உணரும் போது பேரினவாத்தின் அரசியலின் தேசியவெறி உடைக்கப்படும் என்பதில் ஐயமில்லை. சிங்களமக்கள் சிந்திப்பதற்கு நாம் சந்தர்பம் கொடுத்தோமா? ஏற்படுத்தினோமா? புலிகளாவது இதைச் செய்திருக்க வேண்டும். என்ன செய்தார்கள் குண்டுச்சட்டிக்குள் புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் குதிரை ஓட்டினார்கள். சிவாஜிக்கு மொழிரீதியான பலம் இல்லாவிட்டால் துணைக்கு மொழிவல்லுணர்களின் உதவியுடன் எமது பிரச்சனையை சிங்களமக்கள் மத்தியில் போட்டுடைத்து எம்மக்களுக்கு இழைத்த அநீதியை எடுத்துச் சொல்ல வேண்டும். யாராவது ஒரு சிங்கள மகனின் மனம் மாறினாலும் அது வெற்றிதான். பூனைக்கு யார் மணி கட்டுவது?

    Reply
  • Kandaswamy
    Kandaswamy

    பல்லி, // சின்னையாவின் மனனிலையோ அல்லது பொன்னையாவின் வாழ்வுநிலையோ புரியாத பலர் வெளியுலக தத்துவத்தில் மட்டும் டாகுத்தர் பட்டம் வாங்கி போடுவினம்; மனநிலையும் புரியாது, களநிலையும் தெரியாது, போலி போலி போலி;//

    ஒன்றை மட்டும் சொல்வேன்… எல்லாரினதும் மனநிலை களநிலைகளை நிர்ணயிக்கிறவர்கள் யாராவதுடன் பழகிப்பாருங்கள்… உங்களுக்கு நிறைய உண்மைகள் இன்னும் தெரிய வாய்பிருக்கு..

    Reply
  • Suban
    Suban

    ‘கால்மாக்சையும் லெனினையும் தொட்டுக்க ஊறுகாய்போல் எடுத்ததுக்கெல்லாம் ஏலம் விடுவது போலியில்லாமல் வேறு என்ன?? ‘
    மறுப்பதற்கில்லை. அதற்காக இவர்களெல்லாம் உலகத்தலைவர்கள் இல்லையென்றாகிவிடுமா?/

    ‘ராமனாதன் தொடக்கம் வினோதன் வரை பல தமிழர் ஆடம்பரம் இல்லாமல் பல சிங்கள அரசியல் வாதிகளின் ஆலோசகராகவும் இருந்துள்ளனர்’
    இந்த ஆலோசகர் பதவிகள் எந்த மாற்றத்தையும் தந்துவிடாது. சிங்கள் தமிழ் மக்களிளின் மனங்களில் மாற்றம் நிகழவேண்டும். தொப்புள் கொடி தொப்புள்கொடி தமிழ்நாட்டுக்கு தாவுவதைவிட தென்னிலங்கைக்கு நாங்கள் தாவுவது எவ்வளவோ பயன்தரும்.
    ‘எமது இனத்தில் இருக்கும் ஒரு தமிழரை தலமை தாங்க இனம் காண முடியாத நாம்..’/
    நாம் என்ன வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறோம்

    பல்லி ஒரு சிலரையாவது இனங்காட்டுங்கள் பார்க்கலாம்./
    ஒரு சிலருக்குள் விக்கிரமபாகு போன்றவர்களும் அடக்கம் என்பதே எனது கருத்து.
    வைகோ நெடுமாறன் போன்றவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் எமத சமூகம் விக்கிரமபாகு போன்றவர்களை ஏற்றுக்கொள்ள ஏன் தயக்கம் காட்டுகிறது?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இலங்கையில் சிங்களர் ஒருவரே ஜனாதிபதியாகும் வாய்ப்பு பெற்றவர்-சுபன்
    இதை நான் மறுக்கிறேன். தமிழனும் ஒருவர் ஜாதிபதியாக வரமுடியும். எப்படி? கடந்தகால தமிழ்அரசியல் தலைவர்கள் எவருமே! தமிழர் பெயரில் குரல் கொடுத்தார்களே ஒழிய இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்களா?
    இலங்கையில் ஒருதேசிய கட்சியாவது உருவாக்குவதற்கு பாடுபட்டிருக்கிறார்களா?

    செய்ததெல்லாம் தமிழர்பெயரில் தான். இங்கே தான் பிரிவினையும் பிளவும் ஆரம்பமாகிறது. இருபெரும் கட்சிகளான லங்காசுகந்திரகட்சி ஐக்கியதேசியகட்சி தங்களுக்குள் கொள்கைவேறு பாடுகளை வகுத்துக் கொண்டாலும் தங்கள் இனத்தின் பெயரை முன்னுக்கு இணைத்துக் கொள்ளவில்லை. தாம் வாழும் தேசத்தின் பெயரையே இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்தநிலை மாறும்போது ஒரு கணிசமான பகுதியினர் இருகட்சிகளில் ஒன்றை தேர்ந்ததெடுக்கும் போது தம்மளவில் இனப்பெருமைகளை உள்ளடக்கி நாம் எல்லாம் இலங்கையர் என்ற உண்மையையும் உணர்வையும் அடையும் போது ஒரு தமிழன்மட்டுமல்ல தமிழ்முஸ்லீமும் ஜனாதிபதியாக வருவதிற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு இது ஜீரணிக்க கஷ்ரமாகயிருந்தாலும் இதுவே யதார்தமான உண்மையாகும். தாம்வாழும் தேசத்தை நேசித்தால் மட்டுமே தம்இனத்தையும் பாதுகாக்க முடியும்.

    Reply
  • Kulan
    Kulan

    சந்திரன் ராஜா! உண்மையைச் சொன்னீர்கள். இதுபற்றி எனது நேர்மேலே இருக்கும் என் பின்நோட்டத்தில் எழுதியுள்ளேன். இன்றும் சிவாஜி நினைத்தால் அந்த ஜனாதிபதி தேர்தலிலேயே இதற்கான அடித்தளத்தை நிறுவலாம். ஆனால் அவர் தமிழதேசியத்தையே முன்வைத்து நிற்கிறார். அவருக்கு விழும்தமிழ் வோட்டுக்கள் புலியின் வாடை தொடர்ந்து இருக்கிறதா என்பதை அறிய உதவும். மேலும் இலங்கைத் தேசியச் சிதைவுக்கு தனியத் தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் காரணமாகாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.பிரிவினை பகுப்புவாதம் சிங்கள முஸ்லீம்களுக்கிடையில் தான் ஆரம்பித்தது. எமது தமிழ் தலைவர்கள் தலையை ஓட்டித்தான் அதை எமது பக்கம் திருப்பினார்கள். புலி அழிந்து போன இன்னிலையில் இதுவே சரியான நேரம் இலங்கையர் எனும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு என்று எண்ணுகிறேன்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நட்புடன் குலன் அவர்களுக்கு!
    புலி அழிந்து போன இன்னிலையில் இதுவே சரியான நேரம் என முடிக்கிறீர்கள்.. தமிழன் தமிழன் என்று கூச்சல் போட்டால் தமிழனின் வாழ்வு சிறக்கப் போவதில்லை. தமிழ்மொழி தமிழ்மொழி என பல உலகமாநாடுகளை நடத்தினாலும் தமிழ்மொழி அணுவும் வளரப் போவதில்லை.
    இவர்கள் போடும் இந்த வெற்றுக்கூச்சல் எல்லாம் இனத்தைப்பற்றி மொழியை பற்றியதோ அல்ல. எல்லாம் தமது சுயவாழ்வு பற்றியதே! மக்களை தம்பக்கம் இலகுவாக இழுக்க தேர்தல்காலத்தில் மேடையில் விடுக்கும் வாக்குறுதிகள் போன்றதே! இது செல்வநாயகத்தில்லிருந்து கடைசியாக வந்து நிற்கும் கூத்தமைப்பு- சிவாஜிலிங்கம் வரை இதுவே.

    தமது வாழ்வுக்காகவும் பதவிமோகத்திற்காகவும் புகழுக்காகவும் நாட்டை விட்டோடி சேவகம் செய்யப் புறப்பட்ட போது நாட்டின் இனத்தின் கலாச்சாரம் மொழிகளை அங்கிருந்த அடக்கியெடுக்கப் பட்டமக்கள்தான் பேணிப்பாது காத்தார்கள் என்று இடதுசாரி இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த டானியல் சொல்லுகிறார். இதுவே! உண்மை.

    யாராவது எமது அரசியல் தவைர்களில் வேறுபாடு காணவேண்டு என்றால் ஆயுதம் ஏந்தியலைவர்கள் ஆயுதம் ஏந்தாத தலைவர்கள் என்றே காணமுடியும். விருந்தோமல்-விட்டுக்கொடுத்தல் நன்றியுடையவராகா இருத்தல் போன்ற தமிழ் கலாச்சாரங்கள் அறவே கிடையாது. திரைக்கு முன்னும் திரைக்குப் பின்னும் கழுத்தறுப்பு வேலைகளே நடந்தேறியுள்ளது. வடக்கும் கிழக்கும் சட்டத்தால் மட்டும் பிரிக்கப்பட வில்லையென நாம் கவனத்தில் எடுப்பது அவசியமாகிறது.

    கடைசியாக ஒரு சின்ன உதாரணம் குலன். 71-75 காலப்பகுதிகளில் தொழில்நிமித்தமாக குருநாகலில்லிருந்து பலபத்து மையில் தூரத்தில்லுள்ள ஒரு குக்கராமத்தில் இரண்டு இரவைக் கழிக்கவேண்டிய சந்தர்பம் எனக்கு கிடைத்தது. அந்த அப்பாவி சிங்களமக்கள் ஆசையாகவும் ஆர்வமாகவும் எமக்கு உணவு பரிமாறியானார்கள். உணவு காட்டுப்பண்டி இறச்சியும் அவர்கள் தோட்டத்தில் விழைந்த பூசணிக்காயுமே. சரி எங்கே கூப்பன் அரிசி என்று கேட்டால்… குடும்பத் தலைவன் பொதியாகவைத்து சூதுயடித்து விட்டிருப்பார் என்பதே பதிலாக வரும். இவ்வளவு தூரத்திற்கு நாடு சீர்ரளிவுக்கு போய்யுள்ளது. பொருளாதரத்தின் அடித்தளத்தில் அரசியல் கட்டுமானம் நிர்மாணிக்கப் படுகிறது என்பதை எமது இனம் உணரும்வரை இந்த பொருளாதார சக்திகள் யார் என்பதை தேடிக்கண்டு பிடிக்கும் வரை விக்கிரமபாகு கருணரடத்தினாவும் சிவாஜிலிங்கம் சரத் பொன்சேகரவும் எம்மை வலம் வந்து கொண்டேயிருப்பார்கள்

    Reply
  • Kulan
    Kulan

    அன்பான சந்திரிரன் ராஜா! உண்மையான விடயத்தைச் சொன்னீர்கள். எம்மண்ணையும்: மொழியையும் ஏன் இனத்தையும் காத்து நிற்கும் குலதெய்வங்கள் எம்மால் மிதிக்கப்பட்ட மக்களே. சாதியென்றும் சமயம் என்றும் நாம் மிதித்தவர்களே எம்மைக்காத்து நிற்கிறார்கள். ஏன் புலிகள் கடித்துக் குதறும்போதும் இரும்புமலைகளாய் நின்றவர்கள் எம்அடிமட்டமக்கள் தான். எரிகிறது இதயம். இதே நிலைதான் சிங்கள அடிமட்ட மக்களுக்கும். நான் ஆரம்பத்தில் புரட்சி என்றும் விடுதலை என்றும் ஆயுதம் தூக்கும் போது நமது போர் பேரினவாத முதலாளித்துவப்படுத்துப்பட்ட அரச இயந்திரத்துக்கு எதிரானது என்பதை மனதில் கொண்டோம். எமது ஆயுதங்கள் என்றும் அப்பாவி மக்களை நோக்கி (சிங்களமக்கள் உட்பட) திரும்பக் கூடாது என்று பிரசாரம் செய்தோம். பின் எம்முடன் இணைந்தவர்களே துரோகிகள் அழிப்பு என்று காழ்புணர்வுகளுக்குப் பலியான போது எப்படி தொடர்ந்து எம்மால் அங்கே தொடர்ந்து நிற்க முடியும்? இன்று துவக்கி விட்டு வந்து விட்டோமே என்ற குற்றவுணர்வு கொன்று தின்று கொண்டுதான் இருக்கிறது. இன்று போல்தான் அன்றும் பிழைகளை இடித்துரைத்தோம். எம்தலைவிதியை துப்பாக்கிகள் எழுதத்தொடங்கிய போது….? எனக்கு மட்டுமல்ல எம்மினத்துக்கம் சிங்கள மக்கள் எதிரியோ அல்ல. அரசியல் பன்னாடைகள் தான் இரு இனத்தையும் கூறு போட்டு தமக்குக் கொடிகட்டுகிறார்கள்.

    இன்று எமக்கு ஒரு நல்லவாய்ப்பு இருக்கிறது. எமது பிரச்சனையை சிங்களமக்கள் மத்தியில் கொண்டு செல்வது மிக மிக அத்தியாவதியமானது. அவர்களும் உணர்வும் உயிரும் கொண்ட நன்மக்கள் தான். அரசியல் பன்னாடைகளால் விலகி நாம் தூரக்கிடக்கிறோம். எம்மக்களின் உரிமைப் போராட்டத்தையும் எம்மினத்துக்கு இளைக்கப்பட்ட அநீதியையும் புலிகள் கூட சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்தால் அவர்களே எமக்கு உறுதுயையாக மட்டுமல்ல அரச இயந்திரங்களை எதிர்த்த எமது விடிவுக்கும் ஐக்கிய இலங்கைக்கும் வழிவகுத்திருப்பார்கள். எமது இரண்டு சொட்டுக் கண்ணீரால் கூட அந்த அன்பான சிங்கள மக்களை சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு எதிராகத் திருப்பமுடியும் என்று நம்பிக்கை என்கிருக்கிறது. அந்த எழுத்துகளைப்பார்த்து விட்டு துரோகி என்று அழைக்க முயலும் தமிழர்களும் இருக்கிறார்கள். இலங்கை ஐக்கியம் உலகமயமாதல் என்பவற்றைப்பற்றிக் கதைப்பவர்கள் இனவாதம் சாதி மதம் பற்றுக்கதைக்க முடியாது. தமிழ் தமிழ் தமிழாராட்சி மகாநாடுகள் என்று நடத்தி தமிழையார் வளர்த்தார். மாகாநாடுகளைக் கூட்டி தமிழை அழித்தார்களே தவிர தமிழ் உயர்வுக்கு என்ன செய்தார்கள். மொழியை இலகுவாக்கினார்களா? நவீன காலத்துக்கேற்றால் போல் நெறிமுறைப்படுத்தினார்களா? ஒளவைக்காக “ஒள” இன்றும் இருக்கிறது. தமிழ் எழுத்தில் ஃ எதற்கு? தமிழை இலகுவாக்குவது மிகச்சுலபமானது. தமிழ் எழுத்துக்கு சிஸ்டம் இருக்கிறது எல்லா எழுத்துக்களும் உச்சரிப்புக்குரியது போன்ற பல நல்ல விடயங்கள் வைத்து எம்எதிர்கால சந்ததிக்காவது பயன்படுமாறு மொழியை இலகுபடுத்தத் தமிழாய்வு செய்யலாமல்லவா? எல்லாவற்றையும் சிறிது ஆளமாக யோசித்தலால் மீதியிருப்பது வேதனை மட்டுமே.

    Reply
  • பல்லி
    பல்லி

    :://எம்மினத்துக்கம் சிங்கள மக்கள் எதிரியோ அல்ல. //
    இல்லைதான்; இன்னும் சொல்ல போனால் தமிழர்தானே கொழும்பில் பல கடைகளை வைத்து அதில் சில சிங்களவரை அடிமையாய் வேலை வாங்கினார்கள், (சிலர் சம்பளம் கூட குடுப்பதில்லை) இன பிரச்சனை எப்படி தொடங்கியது ஏன் தொடங்கியது என பலர் ஆராட்ச்சி செய்கின்றனர், பல்லியை பொறுத்த மட்டில் இனபிரச்சனையை வளர்த்த பெருமை கூட்டணியினரையே சாரும்; (எனது வயதுக்கு தெரிந்தவை) வட்டுகோட்டையில் என்ன திட்டத்தை போட்டாங்களோ தெரியாது, அதை வேதவாக்காய் சிலர் கொண்டு திரிகிறர்கள்; 70 ம் ஆண்டு பல பிரபல்யமான தலைகள் தேர்தலில் படுதோல்வி கண்டனர், (ஆண்டு சரியோ தெரியவில்லை தவறாயின் குலன் திருத்தவும்) குறிப்பாக வட்டுகோட்டை, உடுப்பிட்டி, யாழ்பாணம், காங்கேசந்துறை ,மட்டகளப்பு; என்பவற்றை சொல்லலாம்;

    இந்த தோல்வி பலதலைகளின் அரசியல் வாழ்வுக்கு முற்று புள்ளியாய் போய்விடுமோ என்ற பயம் துளிர்க்க, இதுக்கு என்ன செய்யலாம் என தம்க்கான வக்கில் புத்தியை கிண்டிவிட்டனர், பல பகல் இரவு யோசனைக்கு பின் இரு இனத்துக்கும் இடையில் உள்ள இன பிரச்சனை என்னும் புள்ளிக்கு கோலம் போடுவோம் என எடுத்த முடிவே தனிநாட்டுக் கோரிக்கை; (இது பல்லியின் கருத்துதான்)சரி இதில் என்ன லாபம் இவர்களுக்கு?? தமிழர் அனைவரும் கூட்டணி அமைத்து குமாளம் போட்டால் தனிஅரசை நிறுவி விடலாம் என்னும் விளம்பர பலகையுடன் தலமைகள் புறப்பட வேலை வெட்டி இல்லாமல் திரிந்த சிலர் இனம்காக்க வந்த தமிழரது தன்மான தலமைகளே என கையை காலை கிழித்து எச்சில் பொட்டு வைக்க மிகவும் நிதானமாக இனபிரச்சனை புற்றுநோய் போல் வளர்ந்து விட்டே வந்தது; இந்த புற்றுநோய்க்கு பரிகாரமாய் கூட்டணி அமோக வெற்றி கண்டது; அத்துடனாவது விட்டார்களா?? பொட்டு வைத்தவர்களுக்கு ஏதாவது செய்ய நினைத்த கூட்டணி தலமை ஒருசில இரத்த போராட்டத்தை மரைமுகமாக சிலர் மூலம் அறிவித்து அவர்களுக்கு பாதுகாப்பாய் பலரை பலியாக்கிவிட அவர்களும் இருண்டது விடிந்தது தெரியாமல் ஆளாளுக்கு அமைப்பு கட்டி;;; அப்புறம்தான் எல்லாம் தெரியுமே;; ஆக இன பிரச்சனை கூட்டணி வரவிட்டால் அல்லது அடக்கி வாசித்து இருந்தால் இப்படி இரு மிருகம்போல் உயிர்பலி வேண்டியிருக்காது, ஆக பேச வேண்டியதோ அல்லது வாழ வேண்டியதோ சிங்கள தமிழ் மக்களே, சிங்கமும் புலியொமோ அல்லது பண்ணியும் கரடியுமல்ல;

    Reply
  • Kulan
    Kulan

    கருத்துரைக்க முன் பல்லிக்கு என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
    த.வி.கூட்டணிக்கு முன்னரே துவேசமும் பிரிவினை எண்ணமும் தோன்றிற்று. தமிழரசக்கட்சி தமிழ்காங்கிரஸ் இந்தப்பெயரிலேயே தெரியவில்லையா பிரிவினைக்கு நாம் தூபம் போடத்தொடங்கி விட்டோம் என்று. சிங்களப்பகுதியில் இனம்சார் கட்சிகள் அன்று உருவாகி இருக்கவில்லை. இருப்பினும் வாக்கு வங்கிகளை நிரப்புவதற்காக பிரிவினை பேசப்பட்டது. ஜி.ஜி 50க்கு 50 என்று நின்றார். இவரைத்தட்டிக் கொண்ட செல்வா சமஸ்டி என்றார். சிங்களக் குடியேற்றங்களும் தரப்படுத்தலும் தலைதூக்க இளைஞர்களைகளை உருவேத்தி கூட்டணி உருவானது. மாநாகரசபை தேர்தலிலும் தமிழீழக் கோரிக்கை. இது முழுவேடிக்கை. வளர்த்த கடாவே மார்பில் பாய்தாற்போல் புலிகள் கூட்டணி எதிர்ப்பு.

    சிங்களப்பகுதிகளிலும் பண்டாவின் சிங்களத் தனிச்சட்டக் கோரிக்கை சிங்கள மக்களை பிரிவினை வாத எண்ணத்தை ஊக்கிவித்தது. 75சதவீதமான சிங்களமக்கள் 45சதவீத நிலப்பரப்பில் வாழ்தல் என்பது நியாயமற்றதே. இதை தமிழர்பகுதி திரித்து நிலப்பறிபோகிறது நிலம் நிலம் என்று நிலம் தேடி நாம் புலம் தேடி வந்திருக்கிறோம்: இருபகுதியினரும் சரித்திரங்களைக் காட்டி எம்மக்களுக்கு தரித்திரங்களை உருவாக்கியவர்கள் தான். சரித்திரம் என்பது முடிந்து போனவிடயத்துக்காக ஜதார்த்த வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் இலங்கை மக்கள். இன்றும் பேரினவாதம் சரி தமிழினவாதமும் சரி இன்னும் இலங்கையர் என்று சிந்திப்பதாய் தெரியவில்லை. அதற்கான அடிப்படை வேலைத்திட்டத்தைக் காணவில்லை. மகிந்த தமிழ் பேசுவதால் மட்டும் ஒற்றுமை ஏற்பட்ட விடாது. இது தமிழர்களை ஏமாற்றப்பாவிக்கும் ஒரு யுக்தியே.

    பாடப்புத்தகங்களில் இருக்கும் இனவெறிசார் பகுப்புவாதம் ஒழிக்கப்பட வேண்டும். திட்டமிட்ட குடியேற்றங்களைத் தவிர்த்து இயற்கையான குடியேற்றங்கள் அனுமதிக்கப்படவேண்டும். இருமொழிகளும் அரசகரும மொழிகளாகவும் பள்ளிகளில் பாடமொழியாகவும் ஆக்கப்படவேண்டும். பண்டைய எம்சரித்திரங்களில் போர்கள் மட்டுமல்ல ஒற்றுமையாகவும் இணைந்த வம்சாவளிகளாகவும் இருக்கும் சரித்திரம் பாடமாக்கப்படவேண்டும். இப்படி எந்த வேலைத்திட்டத்தையும் சரிவர முன்வைக்காது சும்மா தமிழ்பேசுவதன் மூலம் ஒற்றுமை உருவாகும் என்று மகிந்த நினைத்தால் இது வாக்கு வாங்க நடத்தும் கண்துடைப்பே இதுவாகும். இவ்வளவு காலமும் நடந்த அரசியல் வியாபாரத்தில் விலையாய் விழுந்தது அப்பாவி தமிழ் சிங்கள மக்களின் தலைகள் தான்.

    பல்லி மேலே நீங்களும் நானும் குறிப்பிட்டது போல் இலங்கை எனும் ஐக்கிய நாட்டை நாசமாக்கிறது இருபகுதியிலுள்ள அரசியல்வாதிகளே. வாக்குகள் வாங்குவதற்கு சிங்களப்பகுதியில் கலவரங்கள் உருவாக்கப்பட்டன. ஏன் இன்று கூட நான் கொன்றேன் நான் வென்றேன் என்று யாரை சொல்கிறார்கள். என்னைப் பெறுத்தவரை இன்னும் எந்த அரசியல்வாதிகளும் ஐக்கியத்தைப்பற்றி சரியாகச் சிந்திக்கவில்லை. இது ஒரு இடைக்கால அமைதியே தவிர இது நீறு பூர்த்த நெருப்புத்தான். ஐக்கியம் என்பது அடிமட்டத்தில் முக்கியமாக பாடசாலை மட்டங்களில் கட்டத் தொடங்க வேண்டியது. தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் வேற்றுமைகளை விட ஒற்றுமைகளே அதிகம் உண்டு. இந்த ஒற்றுமைகளை முன்நிறுத்தாதவரை ஐக்கிய இலங்கை சாத்தியமற்றதே. மேல்மட்டத்தில் செய்ய வேண்டியது பிரவினை பேசுபவர்களையும்; தூண்டுபவர்களையும் தண்டிப்பதற்குச் முதலில் சட்டம் கொண்டுவருவது முக்கியம்

    Reply