சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கி இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.
இந்தப் பேரலைகள் இலங்கையின் 11 கரையோர மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 39 ஆயிரம் பேர்களின் உயிர்களைக் காவு கொண்டதுடன், கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் அழித்தன.
இந்தப் பேரழிவை வருடா வருடம் நினைவு கூரும் வகையில் இத்தினத்தை தேசியப் பாதுகாப்பு தினமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.
அந்த வகையில் இவ்வருட தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் குருநாகல் நகரில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் நடைபெறுகின்றது. இதேவேளை சுனாமி அனர்த்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் உட்பட சுனாமி பேரலை அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த சகல மாவட்டங்களிலும் இன்று மத வழிபாடுகளும், ஆராதனைகளும் விசேட பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. அன்னதானங்களும் வழங்கப்பட ஏற்பாடாகியுள்ளன.
இதேநேரம் சுனாமி பேரலை அனர்த்தம் உட்பட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் காலை 9.27 வரையும் மெளனமாக இருக்குமாறு அரசாங்கம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது.
பல்லி
மறக்கதான் முடியுமா அந்த இயற்க்கையின் கொடூரத்தை; அதையும் தாண்டி அதைகூட வியாபாரமாக்கிய மிருககொடூரமும் நம்மவர்தான்
அரங்கேற்றினர்;
thurai
இன்னுமொரு சுனாமி வராதா தமிழாலய பிள்ளைகளை தெருவில் இறக்கி தங்கள் பணப் பெட்டியை நிரப்ப என ஏங்கிக் கிடக்கும் கொடியவர்கள்.
துரை
அஜீவன்
அந்த கணங்களை மறக்கவே முடியாது பல்லி.
இதோ அந்த காட்சிகளில் சில:
http://www.youtube.com/user/ajeevan#p/u/16/r5NEOzVhBuU
சுனாமியை வைத்து சுருட்டியவர்கள் பலர்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அலைகிறார்கள் உதவி கிடைக்காமல்…..
chandran.raja
இயற்கைக்கு எதிர்த்துப் போராடித்தான் அழிவுகளையும் கொடுத்து மிகுதியாக இருப்பவர்களே இன்றிருப்பவர்கள். அடிக்கடி சுனாமி ஏற்படும் இடங்களான யப்பான் முடிந்தளவு தமது பாதுகாப்பை ஓர்ரளவுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். விஞ்யாணம் வளர்ந்த நாடுகளில் தமது வசதிக்கேற்ற சில வசதிகளை பாதுகாப்புக்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் அதுவும் முழுமையான தல்ல.
ஐந்து வருட இயற்கையழிவை நினைவு கூரும் இந்த நேரத்திரத்தில் இதன் படிப்பனைகயைும் நாம் கற்றுக் கொண்டாக வேண்டும்.
1. விஞ்யாணம் கூடிய இந்தகாலத்தில் இரண்டு மணத்தியாலங்கள் முன்கூட்டியே அறியக்கூடிய வாய்பிருந்தால் கரையோரப்பகுதியில் இருந்து உள்நகரத்திற்குள் நகரப்பண்ணி உயிரளிவுகளை முற்றுமுழுதாக தவிர்திருக்க முடியும்.கடலில் தொழில் ரீதியாக இருந்தவர்களைத் தவிர.
2. அமெரிக்காவில் இருந்து இதன் ஆபத்தைப்பற்றி மலேசியா சிங்கப்பூருக்கு அறிவுறித்தியாதகவும் இந்தியாவில்லுள்ள தகவல் தொடர்பாளர்கள் அனுபவக் குறைவாக அதை உதாசீனம் செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
3.இந்தோசீனா கடற்பரப்பில் ஏற்பட்ட இந்த பூகம்பம் சுனாமியாக மாறி 6-8 மணத்தியாலங்களுக்கு பிறகே இந்தியா இலங்கை கடற்கரையோரப் பகுதியை தாக்கியது.இதிலிருந்து எவ்வளவு தூரம் நாம் பின்தங்கியுள்ளோம் என்பதை நாம் மறவாமல் இருக்கவேண்டும்.
4.இலங்கையின் அதுவும் தமிழ்மக்களுக்கு உள்ள உறவுகள் உலகம் பூராவும் பரவியிருந்தார்கள்.இலங்கையில் பிறவாத வம்சாவளிகள் பள்ளி மாணவ மாணவிகள் நடுங்கும் குளிரிலும் தெருத்தெருவாகா உண்டியல் கொண்டு அலைந்து திரிந்து பணம்சேகரித்து ரி.ஆர்.ஓ விற்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப்பணம் உரியவர்களுக்கு சென்றயடையவில்லை. இதுவே! சுனாமியை விடக் கொடுமையானது. ரெஜியோ புணர்வாழ்வுக் கழகமோ பதில் சொல்ல வைப்பதின் மூலமே இனிவரப்போகிற சுனாமிக்கும் முன் ஏற்பாடுகளைச் செய்யமுடியும்!?.
பல்லி
//4.இலங்கையின் அதுவும் தமிழ்மக்களுக்கு உள்ள உறவுகள் உலகம் பூராவும் பரவியிருந்தார்கள்.இலங்கையில் பிறவாத வம்சாவளிகள் பள்ளி மாணவ மாணவிகள் நடுங்கும் குளிரிலும் தெருத்தெருவாகா உண்டியல் கொண்டு அலைந்து திரிந்து பணம்சேகரித்து ரி.ஆர்.ஓ விற்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப்பணம் உரியவர்களுக்கு சென்றயடையவில்லை. இதுவே! சுனாமியை விடக் கொடுமையானது. ரெஜியோ புணர்வாழ்வுக் கழகமோ பதில் சொல்ல வைப்பதின் மூலமே இனிவரப்போகிற சுனாமிக்கும் முன் ஏற்பாடுகளைச் செய்யமுடியும்!?.//இதுவும் மறந்துவிட கூடாத செய்தியே;
பார்த்திபன்
சுனாமி வந்ததால் பாதிப்படைந்த தமிழ் மக்கள், இன்றும் அதே நிலையில் தான் இருக்கின்றார்கள். ஆனால் சுனாமி மக்களுக்கு உதவவென்று நிதி திரட்டியோர், அதைச் சுருட்டியே தம் வாழ்வை மேம்படுத்தியுள்ளார்கள். சமீபத்தில் கூட சுவிசில் சுனாமி நிதிக்காக நிகழ்ச்சியொன்று நடந்தது. இவர்கள் தொடர்ந்தும் வருடா வருடம் நிதி திரட்டவென நிகழ்ச்சிகள் நடாத்தி வருகின்றார்கள்.
சாந்தன்
பார்த்திபன் சொன்னது போல தமிழ்மக்கள் அதே நிலையில்தான் இருக்கின்றனர். இது ஒன்றும் புதிதல்ல. வழமையாக அரசு அறிக்கை விட்டு (நத்தார், புதுவருடம், பொங்கல் நல்வாழ்த்துக்கள்…தற்போது சிறுபான்மை என்றொன்றில்லை எனப்புதுக்கதை!) நம்மவர்களும் அதற்கு வக்காலத்து வாங்குவது தான்!
இன்று ஜேர்மனியை தலைமையகமாகக் கொண்டியங்கும் ரான்ஸ்பரன்சி இன்ரநசனல் என்கின்ற ஊழலுக்கு எதிரான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் ஸ்ரீலங்காவுக்கு சுனாமி நிதியாக கொடுக்கப்பட்டதில் $500 மில்லியன்களுக்கு கணக்கில்லை எனவும் மேலும் $600 மில்லியன்கள் சுனாமிக்கு சம்பந்தமே இல்லாத இடங்களில் செலவிடப்பட்டதாகவும் சொல்லி இருக்கிறது. ஆனால் வழமைபோல ஸ்ரீலங்காவோ குற்றச்சாட்டை நிராகரித்திருக்கிறது!
http://news.yahoo.com/s/afp/20091226/wl_sthasia_afp/srilankatsunamieconomygraft5years
kp
//பார்த்திபன் on December 27, 2009 12:34 am சுனாமி வந்ததால் பாதிப்படைந்த தமிழ் மக்கள், இன்றும் அதே நிலையில் தான் இருக்கின்றார்கள். ஆனால் சுனாமி மக்களுக்கு உதவவென்று நிதி திரட்டியோர், அதைச் சுருட்டியே தம் வாழ்வை மேம்படுத்தியுள்ளார்கள். சமீபத்தில் கூட சுவிசில் சுனாமி நிதிக்காக நிகழ்ச்சியொன்று நடந்தது. இவர்கள் தொடர்ந்தும் வருடா வருடம் நிதி திரட்டவென நிகழ்ச்சிகள் நடாத்தி வருகின்றார்கள்.//
இங்கே முக்கியமான இருவரே இதன் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். அதை அந்த அமைப்புக்கள் உள்ளவர்களுக்கே தெரியாது. காசு கொடுப்பதோடு இவர்களது வேலை முடிந்துவிடுகிறது. அதற்கு என்ன நடக்கிறது என யாருக்கும் தெரியாது. இலங்கையில் இவர்கள் இருவருமே தாம் நேரடியாக உதவுவதாக சொல்லிக் கொள்கிறார்கள். இங்கு பணம் கொடுக்கும் மக்களை , இவர்கள் இருவரும் மந்தைகளாக்கியுள்ளனர். அதை அனிஸ் கிறடிட் எனும் நிறுவனத்தின் சுயநலத்துக்காக பாவிக்கிறார்கள். அடுத்தவர் பேர்ன் மாநில அனிஸ் கடை உரிமையாளர் என சொல்லிக் கொள்பவர். இவர்களது நிகழ்வே இப்போது சுனாமி நிகழ்வாகி மேடையேறுகிறது. பாவம் மக்கள்?