‘நடைபெற இருக்கும் சிறிலங்காவின் ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது’ என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் நாட்டின் பொறுப்பாளராக அறியப்பட்ட நடராஜா முரளீதரன் நீண்டகாலமாக கனடாவில் வாழந்து வருகின்றார். கலை இலக்கியச் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வரும் இவர் தற்போது வெளிப்படையான அரசியல் நடவடிக்கையிலும் தன்னை வெளிப்படுத்தி வருகின்றார்.மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் மறைமுகமாக எதிர்க் கட்சி கூட்டின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்தா நடராஜா முரளீதரன் இதுவொரு தந்திரோபாய அரசியல் நகர்வே அல்லாமல் சரத்பொன்சோகாவின் கொள்கைகளுடன் உடன்படுவதல்ல எனத் தெரிவித்தார்.
ஜனவரி மூன்றில் இப்பொதுக்கூட்டம் ரொறன்ரோவில் நடாத்த ஏற்பாடாகி உள்ளது.
பின்வரும் நான்கு காரணங்களுக்காக மகிந்த ராஜபக்சவை நிராகரிக்கின்ற முடிவைத் தாங்கள் எடுத்துள்ளதாக நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
1. மகிந்த ராஜபக்சவின் இனவாதத் தலைமையைப் பலவீனப்படுத்துவது. பொன் சேகாவிற்று வாக்களிப்பதன் மூலம் சிங்கள இனவாதத் தலைமைகளைப் பிரித்தாள முடியும்.
2. சர்வதேச அமைப்புகளால் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பது அக்குற்றச்சாட்டுக்களை பலவீனப்படுத்தும்.
3. நடந்து முடிந்த யுத்தத்தை நடாத்தியது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் தலைமையே. இராணுவம் ஒரு கருவி மட்டுமே. அதனால் சரத் பொன்சேகா முதல் குற்றவாளியல்ல.
4. தமிழ் பிழைப்புவாதக் குழுக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் போது அதே அரசியல் தலைமையை ஆதரிக்க முடியாது.
போன்ற காரணங்களுக்காக இந்த அரசியல் சதுரங்கத்தில் தந்திரோபாய அடிப்படையில் தாங்கள் சரத் பொன்சேகாவுக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவதாக நடராஜா முரளீதரன் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட நான்கு காரணங்களுடன் கடந்த காலத்தில் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலோடு இணங்கிச் செயற்பட்ட, அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட, தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையைக் கோரிநிற்கின்ற வேட்பாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கம், விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை ஏன் ஆதரிக்கவில்லை எனக் கேட்ட போது, அவர்களைத் தங்களது ‘நட்பு சக்திகள்’ எனக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத்பொன்சேகாவே ஜனதிபதியாக வரப் போகின்றார் என்றும் இதில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக வந்துவிட அனுமதிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.
2005 தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த முடிவை தான் அப்போதே விமர்சித்து எழுதியதாகக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் அந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.
நடராஜா முரளீதரன் இக்கருத்தை வெளியிடுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் ‘இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும் இன்றைய அழிவுகளுக்கும் காரணம்” எனக் குற்றம்சாட்டி இருந்தார்.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைகளை வழங்கியவர்கள் அரசியல் ராஜதந்திரம் தந்திரோபாயம் என்ற பதங்களுக்குள் ஒழிந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின் அணிவகுத்து நின்றதே வரலாறு. தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பியவர்களைப் பலப்படுத்தவோ அணிசேரவோ தமிழ் அரசியல் தலைமைகள் அன்றும் முன்வரவில்லை. இன்றும் முன்வரவில்லை. எறிந்தவரை நோக்கியே திரும்பி வருகின்ற பூமராங் போலவே தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகள் கடந்த 60 வருடங்களாக உள்ளது. இப்பொழுது இந்த பூமராங் விளையாட்டில் இரா சம்பந்தனும் நடராஜா முரளீதரனும் களம் இறங்கி உள்ளனர்.
chandran.raja
புலிகள் அழித்தொழிக்க பட்டிருக்க வேண்டுமா? வேண்டாமா?? என்பதில் துணிகரமாகா முடிவெடுப்பதின் மூலமே இந்த ஜனாதிபதி தேர்தலில் யாரும் ஒரு முடிவுக்கு வரமுடியும். புலிகளை அழித்தொழித்தலில் மேற்குலகத்தின் மறைமுக சதிநடவடிக்கைகள் ஏற்படுத்திய நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றை உடைத்தெறிந்தது மகிந்தா ராஜபக்சாவின் துணிவு நிதானம் காரணமாகவே நடந்தேறியது.
சரத் பொன்சேகரா ஒரு இராணுவத் தளபதியாக இருந்தவர். இவர் கூறிய அரசியல் கருத்துக்கள் மேற்குலகத்திற்கு கீழைத்தேசத்து அரசியலுக்கு ஒத்துபோவது மட்டுமல்லாமல் தொடர்சியாக இலங்கையில் ரத்தயாறு ஓடிக்கொண்டிருப்பதை நினைவுக்கு கொண்டுவருவது மல்லாமல் தமிழ்மக்களின் அழிவுக்கு சுயாதீன அரசியல் தலைமை ஏற்படுத்தாமல் தடுத்துநிறுத்திய புலி-கூட்டமைப்பு தமிழ்மக்களின் பழைமை வாதசிந்னையின் பெரும்பகுதியினரான புலம் பெயர்தமிழரின் சிந்தனையே நடராஜா முரளீதரன் பேச்சும் நடவடிக்கையும் செயல்பாடுகளும் எடுத்துக் காட்டுகின்றன.
Mohan
கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணிலா? மகிந்தாவா? என்றால் புலிகளின் தெரிவு மகிந்தா என்றானது. காரணம், ரணில் ஆட்சிக்கு வந்தால் ஏதாவது தீர்வை முன்வைத்துவிட்டால் என்ன செய்வது? மகிந்தா என்றால் நிச்சயம் யுத்தம் தான். அதுதான் புலிகளின் தெரிவாக இருந்தது. எப்போதும் யுத்தத்தில் வெற்றியையே கண்டுவந்த புலிகளின் தெரிவு யுத்தமாக இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இப்போது மகிந்தாவா? சரத் பொன்சேகாவா என்றால் தெரிவு எது?
சரத் என்றால் மீண்டும் நாடு ராணுவ மயப்படும், நாடு சின்னாபின்னப்படும், அப்போதுதான் வெளிநாட்டிலுள்ள புலிகளுக்கு கடைவிரிக்க சுலபமாக இருக்கும். அதுதான் அவர்கள் தெரிவு சரத். மகிந்தா வந்தால், ஏதாவது திர்வைக் கொண்டுவந்துவிட்டால் என்ற பயம் புலிகளுக்கு இருப்பது நியாயமானதுதான்.
DEMOCRACY
/சரத் என்றால் மீண்டும் நாடு ராணுவ மயப்படும், நாடு சின்னாபின்னப்படும், அப்போதுதான் வெளிநாட்டிலுள்ள புலிகளுக்கு கடைவிரிக்க சுலபமாக இருக்கும். அதுதான் அவர்கள் தெரிவு சரத்./– இது சரியானதுதான்!. இதைத்தான் தற்போதைய இந்திய “நிர்வாகமும்” விரும்பும்!. இதை தவிர்க்கத்தான் பாடுபடுகிறோம். “உலக ஒழுங்கியல் மாற்றத்தை” இலங்கைத் தமிழர் போலல்லாமல், இந்திய நிர்வாகம் உணர்ந்திருக்கிறது. ஆனால், அழிவுப் பாதை என்பதால், “தானும் தன்ட பாடும்” என்றிருக்கிறது!, “தமிழ்நாடு பதைபதைக்கிறது? காரணம்”…”பதிவு.காம்”- ஞாயிறு, டிசம்பர் 27, 2009 17:31 |
முள்ளிவாய்க்காலில் வைத்து வேலுப்பிள்ளை பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த இறுதியும் அறுதியுமான செக் என்ன?.- இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தமிழன் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவி எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் கனவை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு “மறைந்திருக்கிறார்”. இதன் பின்னணியில் இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது. டக்ளஸ், கருணா போன்றவர்களும் சரத் பொன்சேகாவின் இலக்குகளாக மாறியிருக்கிறார்கள். இவாகள் இருவரில் குறிப்பாக கருணா நாட்டை விட்டு தப்பியோடலாம் அல்லது சரத் பொன்சேகாவால் கைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம். எனவே சரத் பொன்சேகா என்ற எமது ஒற்றை எதிரியை வெல்லச் செய்வதன் மூலம் எமது பல எதிரிகளை நாம் வெளியேற்றுகிறோம். ஒரு வகையில் எமது அடுத்த கட்ட அரசியலுக்குள் கால் எடுத்து வைக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். உலகத்தைப் பொருத்தவரையில் ஒரு இராணுவ ஜெனரலின் ஆட்சி நடைபெறும் தேசமாகவே சிறீலங்கா பார்க்கப்படும். அதிபர் தேர்தல் எமக்கு கற்றுத்தருகிற தெளிவான அரசியல் இது.கேள்வி: இதை தலைவர் பிரபாகரனின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிங்களம் வந்து சேர்ந்து விட்டது என்ற வரையறுக்கலாமா…..?
பதில்: அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம். உலக அளவில் ஆரோக்கியமான முறையில் புலிகளின் பின்னடைவு விரிவாக ஆராயப்படுகிறது. மாறுதல் கால பயங்கரங்கள் (Horror of transition), துயர் சார் அரசியல் ( Politics of agony) தாள முடியாத நிகழ்வியல் (Unbearable reality) என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்களினூடாக முள்ளிவாய்க்காலில் வைத்து புலிகள் அழிக்கப்பட்டதை ஒரு கருத்தியல் அடையாளமாகக் கொண்டு வருகிறார்கள்.//– இதை எழுதியவர் போராட்ட சூழலிலிருந்து “புலன் பெயர் சூழலுக்கு” புதிதாகவும்,புலன் பெயர் சொந்தக் கரர்கள் அதிகமாக உள்ளவராகவும் இருக்கலாம். “துயர் சார் அரசியல்” ஏற்கனவே “துலாபாரம் திரைப்படத்தில் உள்ளது”!.”அகதி அந்தஸ்த்து கோருகிறவர்களை” ஆற்றுப் படுத்த,”சட்ட ரீதியான சிஸ்டமாக இயங்கும் தங்கள் சமூக உளவியலை பாதுகாக்க”, மேற்குலகம் தயக்கத்துடன் வைக்கும் விளக்கம் இது!. நமக்கு “சிஸ்ட்டம்” எதுவும் கிடையாது என்று அவர்கள் உணர காலம் பிடிக்கும். “பிரபாகரனை” துதிப் பாடிய வாய்கள்தானே இன்று “சரத்தை” துதிப்பாடுகின்றன!. நாளை “மகிந்தா” வெற்றிப் பெற்றால், மகேசனே என்று ஜால்ராவை தூக்கிக் கொண்டு ஓடுவார்கள்!.
ஒரு நியாயத்தை முன் வைக்கிறேன், 1985 – 90 களில் வெளிநாடுகளுக்கு வந்த இலங்கைத் தமிழர்கள்,பெண்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, “இந்தியா காரங்களோடு பழகிவிடாதே!”, இந்தியா தமிழ் பேசிவிடாதே, என்றுதான் அறிவுருத்தினார்கள். அப்படி வளர்ந்த பிள்ளைகள் இப்போதும் இந்த எதிர்ப்புணர்வுடனேயே இருக்கின்றன (சில விதிவிலக்குகள் இருக்கலாம்)- இதுதான் உண்மையான முகம். ஆனால் தற்போது, இந்தியா, சீனா பொருளாதாரத்தில் முன்னேறுகிறது என்று கேள்விப் பட்டவுடன்?, “நாங்கள் இந்தியர்கள் என்கிறார்கள்”- இது போலி முகம். இடையில் “தொப்புள் கொடி உறவு” என்று “கலைஞர் வசனம்” பேசியது என்னவாயிற்று தெரியவில்லை. “இந்த தளத்திலிருந்தே” நாம் உறவு கொள்வோம்!. “முள்ளிய வாய்க்கால் முடிவு” ஒரு “சிங்கள பேரினவாத வெற்றி”. அதன் தளம்,”தென்னிலங்கை(சரத் பொன்சேகா,ஜே.வி.பி.,மகிந்த ராஜபக்ஷே)”.தமிழர்களில் “இலங்கைத் தமிழர்கள்” ஐந்து சதவிகிதம்தான்!. “உலகத் தமிழ் அமைப்புகள்” இந்த தோல்வியை, தமிழரின் தோல்வி என்கிறீர்களா?. “ஜூஜுபி” சிங்களவர்களை (எல்லோரையும் அல்ல), “உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் டாக்டர் பொன்சேகா” என்கிறீர்களா?. நீங்கள் “தமிழை கைவிடுகிறீர்களா!”, அல்லது தமிழ்நாட்டு மக்கள் “தமிழை கைவிடட்டுமா?”. கருணாவும்,டக்ளஸும் தான் “சரத்தைவிட” உங்களுக்கு பேரெதிரியாக தெரிந்தால், மருத்துவர் ராமதாஸ் கூறிய மாதிரி, பத்தாயிரம் பேர் கூட இல்லாத சமூகத்தை சேர்ந்த கலைஞர். மு.கருணாநிதியை தலைவராகவும், ரஜினிகாந்தை ஹீரோவாகவும் மதித்த பெருந்தன்மைகளை எல்லாம் விட்டுவிட்டு, உங்கள் மாதிரி சுயநலவாதிகளாக மாறினால்தான் “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக் கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்” என்று கூறத் தேவையில்லை.
thurai
தமிழரைக் கொன்று குவித்தவர்கள் கொலைகாரர்கள் என்று புலியின் ஒருசாரர் சரத்தையும், ராஜபக்சவையும் குற்ரம் சாட்டியுள்ளனர். ஒருவேளை அமெரிக்க, கனடா புலிகள் போரின் இறுதிக்கட்டத்தில் சரத்தின் கால்களில் வீழ்ந்தார்களோ தெரியவில்லை.
இதுதான் சரணடைய வந்தவர்களை கொன்றவர்களெனெ இராஜபக்ச குடும்பம் மீது சரத் குற்ரம் சுமத்துகின்றாரோ? சரத் அரச தலைவரானால் ஒழித்திருக்கும் புலிகள் மீண்டும் குரல் கொடுப்பார்களா?
துரை
Kumaran
எனற்கு தேர்தலில் வாக்கு போட சந்தர்ப்பம் கிடைத்தால் தமிழன் என்ற முறையில் ரண்டு காரணங்களுக்காக ராஜபக்சவோகே வாக்குப் போடுவேன்.
ஒன்று புலிகளை அளித்ததிட்கு
மற்றது தற்போதைய நிலையில் ராஜபக்சவினால் மட்டுமே தமிழர்களுக்கு இந்தியாவின் உதவியுடன் எதாவது ஒரு தீர்வை முன்வைக்க முடியும்.
ERAVUR MANITHAN
“இதுவொரு தந்திரோபாய அரசியல் நகர்வே அல்லாமல் சரத்பொன்சோகாவின் கொள்கைகளுடன் உடன்படுவதல்ல” உங்களின் காலாவதியாகிப் போன தந்திரோபாயங்கள்தான் தலைக்கும் தமிழ் மக்களுக்கும் ஆப்பு வைத்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தன்தன் மூலம் மஹிந்தவை ஜனாதிபதியாக்கி வாங்கிக் கட்டினீர்கள்.தற்போது மீண்டும் அதே பாதைக்கு.எதற்காக…..? தயவு செய்து சகோதரர் மோகனின் பின்னோட்டத்தைப் பார்க்க.
குமரனின் பின்னோட்டமும் புறக்கணிக்கப்படக் கூடியதல்ல.
மாயா
நடராஜா முரளிதரன் போன்றோர் சரத் சார்பாக கூட்டம் கூட்டுவது பாராட்டத் தக்கது. காரணம் , பிரபாகரனது உடலை பார்த்தே ஆகவேண்டும் என்ற அவாவில் படையை வழி நடத்தியவர் சரத் அல்லவா? அந்த நன்றிக் கடனுக்காவது அவருக்காக கூட்டம் போட்டே ஆக வேண்டும். பிரபாகரன் சாகும் வரை , முரளியால் புலி வாலாகக் கூட முடியவில்லை.
புலத்து புண்ணாக்குகள் கொடுத்த இத்துப் போன கயித்தை பிடித்ததால் பிரபாகரன் வீழ்ந்து மடிந்தார். எத்தனை போராட்டங்கள். எத்தனை கொடிகள். எத்தனை உண்ணவிரதங்கள்? அப்பப்பா….. மண்டை கிணுகிணுக்குது? எல்லாம் நடந்தும் தலை விழுந்து போனது.
சுவிஸில் இந்த முரளி , கைதாகி சிறையிலிருந்த போது , தமது நண்பர்களுக்கு சொல்லி தன்னை (முரளியை) விடுதலை செய்ய டீசேட் போராட்டமொன்றை நடத்த , சிறைக்குள்ளிருந்தவாறே ஐடியா கொடுத்தார். அந்த டீசேட் போராட்டத்தில் முரளியின் படத்துடன் சுவிஸ் புலிகள் ஊர்வலமாக முரளியை விடுதலை செய்ய வீதியில் போராடுவதே திட்டம். அதுதான் முரளிக்கு சங்காகியது. பிரபாகரனை தவிர வேறு எவரையும் முதன்மைப்படுத்த விரும்பாத பிரபாகரனுக்கு இந்த செய்தி பறந்தது. உடனே முரளிக்கு குறி வைக்கப்பட்டது. முரளி விடுதலையாகி வெளியே வந்ததும் ‘மது, மாது, பணம்’ கையாடலென புலியமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு , நாடு கடத்தப்பட்டு , கனடா வரை துரத்தியது. அங்கும் புலிகளே , முரளியை, சிறீலங்காவுக்கு நாடு கடத்த தகவல்களை வழங்கினார்கள். முரளி எப்படியோ மரண சாசனத்தில் இருந்து ஓடித் தப்பியது சாணக்கியம்தான். அதே முரளி , இன்று அதே மக்களை வைத்து , இன்னொரு நாடகம் ஆடத் தொடங்கியுள்ளார். எல்லாம் தேசியத் தலைவர் இல்லாத துணிவுதான். சரத் , கருவி என்றால், நீங்களெல்லாம் உதிரிகள்தானே? ஏன், இன்னும் மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறீர்கள்?
இனியாவது மிஞ்சியிருக்கும் மக்களை வாழ விடுங்கள். அவர்கள் கஞ்சியோடாவது வாழ்ந்து விட்டு போகட்டும். அவர்களுக்கு , நீங்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திரம் , எந்தளவு என்பதை பாருங்கள்? இனியும் அவர்களை வைத்து விளையாடாதீர்கள். உங்கள் இருப்புக்காக , அவர்களது உயிர்கள் இழக்க வேண்டாமே?
Yoga
அவசியம் கருதி ஒரு நீண்ட கட்டுரையின் பகுதியை இங்கு பதிவு செய்கிறேன்.
காலத்துக்கு முந்திய ஜனாதிபதித் தேர்தலின் நோக்கமே புலிகள் மீதான ராணுவ வெற்றியைப் பகிர்வதுதான் என்பது வெள்ளிடை மலை. மகிந்த! இவர் ஏற்கனவே ஓர் அரசியல் பின்னணியைக் கொண்டவர். இவரது அரசியல் இருப்பு ஆச்சரியத்துக்கு உரியதல்ல. சரத் பொன்சேகா! ஓர் இராணுத் தளபதி! ஏற்கனவே வெளிப்படையான அரசியல் பின்னணியைக் கொண்டிருந்தவர் அல்ல. ரணில் விக்கிரமசிங்க! புலிகளின் போரிடும் திறனை மழுங்கடித்தவர். ராணுவ வெற்றியின் சூத்திரதாரி! ஆனால் நீண்டகால அரசியல் பின்னணியைக் கொண்டவர். புலிகளின் தோல்விக்கான இவரது அடிக்கல் வெளியில் தெரியாதது. வெகுஜனரீதியில் இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதும் அல்ல. இந் நிலையில் எவ்விதத்தில் சரத் பொன்சேகா யுஎன்பியின் ஆதரவுடன் வேடபாளராக்கப்பட்டார்.? இங்குதான் புலிகளின் அழிவுக்கு மட்டுமன்றி லட்சக்கணகான எமது மக்களின் அவலத்திற்கும் ராஜபக்சவுக்குச் சமனான இவரது பங்கும் வெளிப்படுகிறது. அரசியல் பின்னணி எதுவுமற்ற இவருக்கு சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையின் ஊற்றுமூலம் எது? இங்குதான் இவர்கள் இருவரதும் (ராஜபக்ச> சரத் பொன்சேகா)ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கான தகுதி ஓரிடத்தில் சங்கமிக்கிறது!
அடுத்து… பிழைப்புவாதிகள் (டக்கிளஸ்> பிள்ளையான்)என்று கூறுகின்ற போது தமிழர்களை முற்றுமுழுதாக இரையாக்கியவாகள் புலிகள் என்ற விவாதமும் வந்து சேர்கிறது. இன்று மக்களின் அவலச் சூழலைப் பொறுத்து பல்வகை அரசியல் போககுகளையும் அங்கீகரித்தே ஆகவேண்டும். புலம் பெயர் சொகுசு வாழ்வில் இருந்துகொண்டு நாம் எதையும் பேசலாம் கதைக்கலாம். மக்களின் அவலதவாழ்வில் இருந்து நாம் பேசக்கற்றுக்கொள்வதே இன்றைய நிலைமையில் ஆரோக்கியமானது.
ஆகவே தேர்தலுக்கு வாக்களிக்கின்ற பொறுப்பை அவலச்சூழலில் வாழும் அம் மக்களிடமே விட்டுவிடவேண்டும்! இங்கிருந்துகொண்டு கருத்துரைப்பதற்கு எமக்கு எவ்வித தார்மீக பலமும் கிடையாது. கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் சக்திகளுக்கும் கூட அது கிடையாது. சிலவேளை மக்களுக்கு தேர்தலில் பங்கெடுப்பதில் ஆர்வமில்லாமல் இருக்கலாம். அதையும் அங்கீகாரித்துத்தான் ஆகவேண்டும்! பொன்சேகாவால் மேற்றகுலகு வந்துவிடும் ராஜபக்சாவால் சீனா வந்துவிடும் என்பதெல்லாமே மக்களின் மனநிலையில் இருந்து சிந்திக்கப்படவேண்டியவையே!