வத்திக் கானில் நத்தார் தினத் தன்று சென் பீற்றர்ஸ் தேவாலய த்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதனையின்போது பாப்பரசரை பெண்ணொருவர் கீழே தள்ளி வீழ்த்திய சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அச்செய்தியில் அவர் கூறியுள்ளதாவது,
வத்திக்கானில் கடந்த 25ஆம் திகதி நத்தார் ஆராதனையின்போது இடம்பெற்ற சம்பவத்தின்போது பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட்டுக்கு எவ்வித காயமும் ஏற்படாதது எமக்கு நிம்மதியை தந்துள்ளது.
சம்பவத்தையடுத்து எவ்வித சஞ்சலத்துக்கும் உள்ளாகாது நள்ளிரவு ஆராதனையை தொடர முடிந்ததையும் பின்னர் அவர் பாரம்பரிய நத்தார் செய்தி மற்றும் ஆசீர்வாதத்தை வழங்கியதையும் உலகளாவிய ரீதியில் தேவைப்படும் சமாதானம் மற்றும் புரிந்துணர்வின் தேவையை வலியுறுத்தியதை இட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். பாப்பரசர் தொடர்ந்தும் நற்சுகத்துடன் இருக்கவும் மத சேவையாற்றவும் வாழ்த்து தெரிவிக்கிறோம் என்று அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.