யாழ். குடா நாட்டில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இதுவரை காலமும் நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்லி
உதய நாணயகார பதவி விலகிவிட்டார் என சில வாரங்களுக்கு முன்பு GTV செய்தி சொல்லியதே; அப்படியாயின் இந்த அறிக்கை எப்படி,? அல்லது
GTV யின் அறிக்கை பொய்யானதா??
பார்த்திபன்
பல்லி,
GTV எப்ப உண்மைச் செய்திகளை சொல்லியுள்ளது??
சாந்தன்
ஆனால் யாழ் செல்லும் ஊடகத்துறை அன்பர்கள் ராணுவ அலுவலகத்திடம் முன்கூட்டி அனுமதி பெற வேண்டும் எனவும் இவர் சொல்லி இருக்கிறார்.அது வரும் ஜனாதிபதித்தேர்தலை செய்திப்படுத்துவதாக இருப்பினும் கூட எனச் சொல்லி இருப்பது அருட்செல்வன் கண்ணில் படவில்லையா?