மகிழ்ச்சியும் புத்தூக்கமும் நம்பிக்கையும் கொடுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! தேசம்நெற்

New_Year_2010புத்தாண்டை அறிவிக்கும் மணி ஒலிகளும் புத்தாண்டைக் கொண்டாடும் வான வேடிக்கைகளும் புத்தூக்கம் ஒன்றை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அவ்வகையான புத்தூக்கமும் நம்பிக்கையும் ஒவ்வொருவருக்கும் அவசியமானதே. உலகம் முழுவதுமே இன்று புத்தாண்டைக் கொண்டாடுகின்றது. தமிழ் மக்களுக்கு தைப் பொங்கலே புத்தாண்டாக அமைந்தாலும் உலக மக்களுடன் இணைந்து இப்புத்தாண்டையும் தமிழ் மக்களுக்கு தைப் பொங்கலுமாக கொண்டாட்டங்கள் அமைகிறது. இந்நாளில் சகல ஒடுக்கப்பட்ட மக்களைப் பலப்படுத்தவும் அவர்களது சுபீட்சத்திற்கான குரலாக நாம் செயற்படவும் மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்துக் கொள்வோம்.

இலங்கைத் தமிழ் மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் இவ்வாண்டு மிக மோசமான அவலங்களுடாகப் பயணித்து தாங்கொண்ணாத் துயருடன் இப்புத்தாண்டை எதிர்கொள்கின்றனர். இவர்களது துயரத்தை அவ்வளவு இலகுவில் துடைத்திடவோ இவர்களது இழப்பை ஈடு செய்திடவோ புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் முடியாது. ஆயினும் முடிந்த அளவு அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து எதிர்கால நம்பிக்கையை ஊட்டுவது அவசியம். இப்புத்தாண்டு நாளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வன்னியில் உள்ள தம் உறவுகளின் நல்வாழ்விற்கு தங்களால் இயன்ற வழிகளில் உதவ முன்வர வேண்டும். அவர்களுக்கு புத்தூக்கம் அளித்திட வேண்டும்.

தைப் பொங்கலுக்கு தமிழீழம் வருடப்பிறப்பிற்கு தனிநாடு என்ற எண்பதுக்களில் உருவான வெற்றுக் கோசங்கள் இன்று தமிழ் மக்களை வரலாறு காணாத அழிவுக்குள் தள்ளியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள இத்தோல்வியானது அதற்குத் தலைமை கொடுத்த அரசியல் தலைமைக்கான தோல்வியே அல்லாமல் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியல்ல. சகல ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து தமிழ் மக்கள் தம் விடுதலைக்கும் அனைத்து மக்களது விடுதலைக்கும் நிச்சயம் குரல்கொடுப்பார்கள். அதற்கான காலத்தையும் நேரத்தையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்வார்கள். அவர்களுக்காக எப்போதும் எமது குரல்கள் ஒலித்த வண்ணமே இருக்கும். இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியையும் புத்தூக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கின்ற இந்நாளில் தேசம்நெற் கட்டுரையாளர்கள், கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். உங்கள் வாழ்வு ஒளிமயமானதாக அமைவதுடன் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒளிவீசுவதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

கடந்த காலங்களில் எம்முடன் இணைந்து வன்னி மக்களுக்கான உதவிகளைச் செய்ய முன்வந்த சிந்தனை வட்டம், அகிலன் பவுண்டேசன், லிற்றில் எய்ட் அமைப்புகளுக்கும் இவ் உதவியில் பங்கெடுத்துக் கொண்ட நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

1997ல் தேசம் சஞ்சிகையாக வெளிவந்து 2007 ஒக்ரோபர் முதல் தேசம்நெற் ஆக இணைய உலகில் கால்பதித்து 13வது ஆண்டில் தேசம் – தேசம்நெற் ஊடகத்துறையில் தனது பயணத்தைத் தொடர்கின்றது. கட்டுரையாளர்களின், கருத்தாளர்களின், வாசகர்களின் வாழ்த்துக்களுடன் இன்னும் பல பத்தாண்டுகள் எமது பயணம் தொடரும் என்று நம்புகின்றோம். உங்கள் அனைவரது ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் இன்றைய நாளில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தேசம்நெற்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 Comments

  • Kulan
    Kulan

    புதிய வாழ்வு புண்ணியம் சேர்க்க புத்தாண்டே வருக புதுப்பொலிவு தருக!.

    Reply
  • thurai
    thurai

    இன்நள்ளிரவு முதல் தமிழரென்றால் நாம் எல்லோரும் தமிழர்.
    நாங்கள் கட்டியெழுப்ப வேண்டியது நமக்குள் ஒற்றுமையை.
    அழிக்க வேண்டியது பகைமையை.
    வளர்க்க வேண்டியது அன்பை.

    தேசம் ஆசிரியர், வாசகர்களிற்கு எனது 2010ம் ஆண்டு நல்வாழ்த்துக்கள்!.

    துரை

    Reply
  • பல்லி
    பல்லி

    பல்லி குடும்ப புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    தேசத்துக்கும், அதன் வாசகர்களுக்கும்; அனைத்து நண்பர்கள் உறவுகள் அனைவர்க்கும் பல்லி குடும்பம் சார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    Reply
  • santhanam
    santhanam

    இதில் கருத்தெழுதும் நண்பர்களே இதயசுத்தியுடன் 2010ல் தமிழ்மக்களிற்கு அவர்களது அவலத்திலிருந்து மீழ்வதற்கு உங்கள் சுயமரியாதையை சுயநலம் சார்ந்து எந்தவொரு அன்னிய நாட்வனிற்காகவும் எங்கள் மக்களை விலைபேசாதீர்கள் என்று உறுதியெடுக்கவும். போதும் போதும் இந்த மக்களின் 30 வருட அவலம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தேசம்நெற் ஆசியர்குழுவிற்கும் பிரத்தியோகமாக ஜெயபாலனுக்கும் அதன் வாசர்ககுகளும் அதன் முன்வரிசையில் இருந்து தமது கருத்துக்களை முன்வைத்த முண்னணியினருக்கும் எனது மனப்பூர்வமான புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகுக!.

    நாம் யாருக்கும் மிதமிஞ்சிய மனிதராக வல்லமை படைத்தவராக நினைக்கவும் இல்லை. நினைக்கப் போவதும் இல்லை. யாருக்கும் நாம் சவால் விடவும் இல்லை. எமக்கு சவால்களே வாழ்கையாக வந்தபோது இந்த சவால்களை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

    நல்லதையே சிந்திப்போம். வரும் எதையும் நல்லதாக்க மானிடத்தின் பயனான விளைவுகளாக்க எம்மால் முடிந்தவரை முயற்ச்சிப்போம். அந்த வகையில் புதுவருடத்தையும் வரும் காலத்தையும் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவோம்.

    Reply
  • BC
    BC

    தேசம்நெற், சந்திரன், பல்லி, குலன், துரை, அக்கு, மாயா, சந்தானம், பார்த்திபன் மற்றும் தேசம்நெற் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    தேசம்நெற் கருத்தாளர்கள் துரை பல்லி சந்திரன்ராஜா பிசி சந்தானம் அரிச்சந்திரன் மாயா ரகு ரதன் சாம் மற்றும் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இணைய ஊடகம் என்ற தளத்தில் தேசம்நெற்றின் வெற்றியில் அதன் கருத்தாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

    நான் நாட்டின் எல்லைகளைக் கடந்து பயணம் செய்த போதும் இவர் யார் அவர் யார் என்று கருத்தாளர்கள் பற்றிய விசாரணைகள் தொடரவே செய்கின்றது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முகங்கள் உண்டு. அதேபோல் தேசம்நெற் கருத்தாளர்களுக்குள்ள முகம்தெரியா முகம் தேசம்நெற் வாசகர்களிம் அவர்களது கருத்துக்களால் பதியப்பட்டு உள்ளது.

    உங்கள் ஒத்துழைப்பிற்கும் கருத்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    தேசம்நெற் கட்டுரையாளர்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

    ஜெயபாலன் த.

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    உங்கள் அனைவருக்கும் புத்தாண்டுக்கான எனது வாழ்த்து!

    Reply
  • Suban
    Suban

    வாழ்த்துதல் என்பது நல்ல விடயம்தான். ஆனாலும் வெறும் சம்பிரதாயபூர்வமாக ஒரு வாழ்த்தை தெரிவிப்பதற்கு சங்கடமாய் இருக்கிறது. ஆனாலும் வேுற வழிதெரியவில்லை. இந்த வாழத்துதலுக்கு மாற்றீடாய் எனனைப்போல் சங்கடப்படுபவர்கள் ஒரு வழியைக் கண்டுதந்தால் மகிழ்ச்சியடைவேன். வாழ்க்கையில் அவ்வப்போது புத்தெழுச்சியையும் நம்பிகைகளையும் எம்மைச்சுற்றி விதைப்பது அவசியம்.

    Reply
  • புன்னியாமீன்
    புன்னியாமீன்

    எமது ஈழத்திரு நாட்டில் இரத்த வெள்ளம் ஓடாத ஆண்டாக 2010 ஆம் ஆண்டும், இந்த புதிய தசாப்தமும் அமைய நாம் எல்லோரும் அடி மனதால் எமது கடவுள்களைப் பிரார்த்தித்துக் கொள்வோம்.

    சாந்தி, சமாதானம், அமைதி மாத்திரமே இனி இலங்கை மக்களின் குறிக்கோளாக அமையட்டும்.

    இந்தப் புத்தாண்டில் நலங்கள் சேர –
    வளங்கள் நிறைய –
    வல்லமை பெருக –
    வாழ்க்கை சிறக்க….

    வாழ்க… வாழ்க… வாழ்கவென உங்களையும்
    உங்கள் குடும்பத்தினரையும்
    சேர்த்து வாழ்த்தும் ….

    உங்கள்
    அன்பு
    புன்னியாமீன்

    Reply
  • naveenan
    naveenan

    தமிழ்மக்களுக்கு கடந்த ஆண்டு முழுவதும் “சுனாமி” வாழ்வே. இதன் விளைவு> சகலதிலும் அனாதைகள். அரசியலில் வெற்றிடம். இவ்வாண்டை இழந்தவற்றை பெறும் ஆண்டாக்க சபதம் ஏற்போம்! அவர்களை போராடும் சக்திகள் ஆக்குவோம்

    Reply
  • மாயா
    மாயா

    தேசம் நெற்றின் கருத்தாளர்களுகக்கும் , பார்வையாளர்களுக்கும் , அனைத்து உலக மக்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    தனிப்பட வாழ்த்து சொன்ன BC மற்றும் ஜெயபாலன் ஆகியோருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்….

    நமது எழுத்துகள் , நமக்கின்றி , அனைத்து மக்களும் சமாதானமாகவும், மகிழ்வோடும் வாழ தொடர்ந்து விழிப்பு கருத்துகளை முன் வைப்போம். தேசம் நெற் போன்ற ஊடகங்கள் மூலமாகவாவது ஏமாற்றுவோர் முகம் தெரிந்து, அப்பாவி மக்கள் உண்மைகளை உணரட்டும். அரசியல்களுக்கு அப்பால உண்மைகளை எழுதுவோம். முடிவுகள் அவர்களதாகட்டும்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    நண்பர்களே தோழர்களே உங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    புதிய வருடத்தில் எமது மக்களுக்கு நல்வாழ்வு மலர்ந்திட இணைந்து செயற்படுவோம்

    Happy New Year to you & your family and friends.

    த சோதிலிங்கம்

    Reply
  • சண்முகம்
    சண்முகம்

    அனைவருக்கும் தாயகத்திலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள்!

    Reply
  • மாயா
    மாயா

    //சண்முகம் on January 1, 2010 10:58 am அனைவருக்கும் தாயகத்திலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள்!//
    தாயகமா? அப்டியென்றால்…. முள்ளிவாய்காலிலயா நிக்கிறியள்? அரோகரா

    Reply
  • Ajith
    Ajith

    Happy new year for all the tamils. Hope this new year bring those war criminals into justice and tamils unite to achieve the liberation of tamil eelam.

    Reply
  • lamba
    lamba

    அனைத்து உறவுகளுக்கும் புதுவருடம் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

    Reply
  • சாமி
    சாமி

    வாழ்த்துக்கள் ஜெயபாலன்.

    மகிந்தருக்கு வாழ்த்துச்சொல்ல மனம் வரவில்லை.

    உங்கள் பணி தொடரட்டும்.

    Reply
  • london boy
    london boy

    அனைவருக்கும் எனது உளம் கனிந்த புதுவருட வாழ்த்துக்கள்

    Reply
  • nades
    nades

    Happy new year to you all

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புதுவருடத்தில் ஒரு புதுசெய்தி. ஒரு வார காலமாக உலகதிரை படஅரங்குகளில் பிரபல்லியம் வாய்ந்த இயக்குனாரால் இயக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது “அன்வார்” என்ற அமெரிக்க திரைப்படம். திரைப்படங்கள் பொழுதுபோக்கு சாதனம் சமாச்சாராம் மட்டுமல்ல சிலநேரங்களில் மானிடத்திற்கும் மனிதநேயத்திற்கும் இருக்கும் இடைவெளியை யாரும் எதிர்பார்காத விதத்தில் துல்லியமாக எமது கண்முன்னே கொண்டுவருவதும் உண்டு. அந்த விதத்திலேயே இந்த திரைப்படமும் இடம் பெறுகிறது. இப்படத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்கள் குவிந்து கொண்டிருகிறது என்பதற்கு அப்பால் இதன் முக்கியத்துவத்தை எமது இனம் நிச்சியம் கிரகித்துக் கொள்ளவேண்டும். என்னைப் பொறுத்தவரை இது திரைப்படம் அல்ல. அரசியல் விழிப்புணர்ச்சியே. முற்போக்கு சினிமாவுக்கு திரைவிமர்சராக தமிழ்இனத்தின் நஷ்சத்திரமாக திகழ்ந்துவரும் யமுனா ராஜேந்திரன் இது பற்றி தேசம்நெற்றில் தனது விமர்சனைத்தை பதிவாரா? அல்லது எமது வாசகர்கள் அதற்கு ஊக்கம் கொடுப்பார்களா?.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    அகிலத்து ஜீவராசிகள் அனைத்துக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டுப் பிரகடனமாய் மனிதநேயம் வளரப் பாடுபடுவோமா? அஜீத்! எங்கே இருக்கிறீர்கள்? தமிழீழவிடுதலை என்பது (Liberation of tamil eelam) நாடு கடந்தது தெரியாதா? உங்களுக்கும் என் சிறப்புப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நல்ல கருத்தாளர்களை அடையாளம் காண வழிசமைத்த தேசம் நெற் குழுமத்திற்கும், நல்ல கருத்துகளால் என்றும் எமைக் கவர்ந்த கருத்தாளர்களுக்கும், தேசம் நெற்றின் இனிய வாசகர்களுக்கும் இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்துகள். இந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டில் எம் தாயக உறவுகளின் வாழ்வில் மாற்றங்கள் வரவும், புதுப்பொலிவுடன் அவர்கள் வாழ்க்கை தொடங்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட உறுதி கொள்வோம்.

    Reply
  • Puthiyavan Rasiah
    Puthiyavan Rasiah

    அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

    Reply
  • accu
    accu

    தேசம்நெற் குழுமத்தினர்க்கும் தமது பின்னூட்டங்கள் மூலம் வலுவூட்டும் அனைத்து தோழர்களுக்கும் ஆக்கங்களை அனுப்பும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் அக்குவின் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! BC க்கு என் நன்றிகள்!

    Reply