தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் இனியும் இடமளிக்கக் கூடாது. அனைவரும் ஓரணி திரண்டு பதிலடி கொடுப்பது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வைராக்கிய அரசியலுடன் நாட்டைக் காட்டிக்கொடுத்தாலும் கேவலமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்தலும் தொடர்கின்றன. இதனைத் தொடரவிடாமல் நிறுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தாய் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் நாம் வெற்றி கொண்டுள் ளோம். நாட்டிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று ருவன்வெல்ல பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அமைச்சர்கள் அதாவுத செனவிரத்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, விமல் வீரவன்ச எம்.பி. உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இம்மக்கள் பேரணிக் கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உரை யாற்றுகையில், இந்த நாட்டை ஐக்கியப்படுத்தி ஒன்றிணைத் துத் தருமாறு மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். அதனை முழுமையாக நிறை வேற்றி விட்டே நான் உங்கள் முன் வந்துள்ளேன். நாட்டை மீட்டது மட்டுமன்றி மேல் மாகாணத்திற்கு மட்டும் மட்டுப்படு த்தப்பட்டிருந்த அபிவிருத்தியை நாட்டின் சகல கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றோம்.
அபிவிருத்திக்கும் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் என நாம் பெரும் திட்டங்களை வகுத்து செயற்படுத்தினோம். பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பல நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், விமான நிலையம், மின் உற்பத்தித் திட்டங்கள் என பாரிய திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றோம். அத்தனை செயற்திட்டங்களையும் நாம் எதிர்கால சந்ததிக்காகவே மேற்கொண்டு வருகிறோம் என்றார்.