புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பயன்படுத்திய ஆயுதம், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எல். கருணாரட்ன தெரிவித்தார்.
மீட்கப்பட்டிருக்கும் எம் 16 – ஏ 2 ரக விசேட கிரனேற் லோஞ்சரும் அதனுடன் காணப்பட்ட உடற்கவசமும் பிரபாகரன் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பயன்படுத்தியவையென்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கருணாரட்ன கூறினார்.
வெள்ள முள்ளிவாய்க்காலில் சுமார் 15 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விசேட குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவினரே இவற்றை கண்டுபிடித்ததாகவும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் வெடிபொருட்களும் மேலதிக சோதனைகளுக்காக வவுனியா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து மேலும் 125 தற்கொலை அங்கிகள், 50 மோட்டார் குண்டுகள், 60 விமான எதிர்ப்பு பீரங்கி, 12 போர் ரக சொட் கன், 250 குதிரைவலு சக்தி கொண்ட படகு இயந்திரம், 40 குதிரை வலு சக்தி கொண்ட படகு இயந்திரம், ‘ஹெரட்’ குண்டு, 2 ஆயிரம் கிலோகிராம் நிறை கொண்ட ஆர். டி. எச். வெடிமருந்து, 02 கிளேமோர் குண்டுகள், 50 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் பொலிஸார் மற்றும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
rohan
அதென்ன அதிரடித் தேடுதல்? 15 அடி ஆழத்தில் பிரபாகரன் புதைத்து வைத்து விட்டு சண்டைக்குப் போனாரா ஐயா? நல்ல வேளை – வட கொரியாவில் இருந்து வந்த ஆயுதக் கப்பல் தாய்லாந்தில் பிடிபட்டிருக்கா விட்டால் இன்னும் கொஞ்சம் பெரிதாகவே அடுக்கியிருக்கலாம்!
nadesh
பிரபா 30 அடி தாழத்தில் வாழ்பவர். 15 அடி தாழத்தில் உள்ள ஆயுதங்களை நிலமட்டத்திற்குப் போகும்போது போறபாதையில் எடுத்துச் செல்ல வசதியாக ‘இராணுவ தந்திரமாக’ வைத்திருப்பவர் என புலிகள் சொல்கிறார்கள்.
Kusumpu
பிரபாகரனால் பாவிக்கப்பட்டது என்று கருதப்படும் எம் பி 6 இயந்திரத்துப்பாக்கியம் அதிசக்திவாய்ந்த வெடிகுண்குகளும் தகவலின் பெயரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது./ ஐரொப்பாவிலேயே பொலிஸ் இராணுவம் பாவிப்பது எம்பி 5 தான். எல்லாமே சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரி இருக்கிறது.
Patriotic Citizen
Why Prabha buried the weapon 15 feet underground before he die? Why government think our mass is so fool? I cannot stop my laugh. If government talk about weapons of LTTE, they should talk about Sarath Fonseka too. Did they check the finger prints on the weapon? Yeah Right! I am sure we will see many more weapons being discovered, within the next 2 weeks! When did Prabhakaran bury his ‘personal’ weapon – ten minutes before he died? Dear All, Why such a political twist to a news like this? Why some people are so agitated in hearing the news of finding some uncommon weapon? Has this happened in so many earlier occasions? Pl remove all your politically tainted glasses, and think as a Sri Lankan first. Your political flavors should only come next.
Was it exactly 15 feet? Was there a note from Praba? Are all Sri Lankans fools? ‘ WAR FOR SALE ” . Sale extended till 26th jan 2010 Prabhakaran’s ‘personal weapon’ found ’15 feet below ground level’??? Foolish voters – will accept any foolish evidence, form those who fool them! The ‘findings’ will become even more sensational, when the election gets closer. By the way, who has all the gold that was found earlier?