முகாம்களில் உள்ள இடம் பெயர்ந்துள்ள வாக்காளர்களின் விபரங்களை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களுக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் நேற்று சந்தித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் பிரசார கட்அவுட் போஸ்டர் மற்றும் பதாகைகை அகற்றுவதற்கு நாளை வியாழக்கிழமை வரை காலக்கெடு விதிப்பதென்றும் இக்கூட்டத்தில் முடிவாகியது. இதற்கு முன்னர் இவற்றை அகற்றுவதற்கு காலக்கெடு விதித்திருந்தபோதும் பொலிஸாரால் அவற்றை முற்றாக அகற்ற முடியாமற்போனமை குறிப்பிடத்தக்கது.