இடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்களும், சொந்தக் கிராமங்களில் மீளக் குடியேறியவர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மீளக் குடியேறிய மக்களும் நிவாரணக் கிராம மக்களும் ஒரே இடத்தில் வாக்களிப்பதற்கு வசதியாக 95 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும். இதில் கொத்தணி வாக்குச் சாவடிகளும் உள்ளடங்குகின்றன. நிவாரணக் கிராமங்களுக்கென 70 கொத்தணி வாக்களிப்புச் சாவடிகள் அமைக்கப்படும். பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, கரைச்சி ஆகிய இடங்களிலேயே வாக்குச்சாவடிகள் நிறுவப்படுகின்றன.