பொன்சேகாவின் ஆயுத ஊழல் ஆவணங்கள் சபையில் சமர்ப்பிப்பு – அவுஸ்திரேலிய நிறுவனமொன்றின் பெயரில் பதிவு செய்திருப்பது அம்பலம்

parliament.jpgசரத் பொன்சேகாவின் ஆயுதக் கொள்வனவு ஊழல் தொடர்பான ஆவணங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று இவற்றை சமர்ப்பித்தார். இது தொடர்பாக அமைச்சர்கள் ராஜித சேனாரட்ன, மஹிந்தானந்த அளுத்கமகே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. ஆகியோர் உரையாற்றினர்.

அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட “பிரிட்டிஷ் போனியோ டிபென்ஸ்” என்ற நிறுவனம் என காண்பித்து டெக்சாசில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக சரத் பொன்சேகா போலி நிறுவனம் ஒன்றை நடத்திவந்துள்ளமை தெரிய வந்துள்ளது. அமைச்சர்கள் தங்களது உரையின் போது இதனை சுட்டிக்காட்டினர்.

சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த “ஹைக்கோப் இன்டர் நெஷனல்” நிறுவனமும் டெக்சாசில் பதிவு செய்யப்பட்டிருக்கும் “போனியோ டிபென்ஸ்” நிறுவனமும் ஒரே நிறுவனம் என இவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் உரையாற்றும் போது கூறியதாவது:-

ஆயுதக் கொள்வனவு தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப நிறுவனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு குறைந்தது மூன்று வருடங்களாவது சென்ற பின்னரே ஆயுதக் கொள்வனவில் ஈடுபட முடியும்.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ‘ஹைக்கோப் நிறுவனத்திற்கு இவ்வாறான கால வரையறை இருந்திருக்கவில்லை என்பதால் அவுஸ்தி ரேலியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமான “பிரிட்டிஷ் போனியோ டிபென்ஸ்” நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி இருப்பதை அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலக்கரத்னவினால் இந்த அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பெயர் போலியாக பயன்படுத்தப்பட்டு டெக்ஸாசில் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. சரத் பொன்சேகாவின் “கிரீன் கார்ட்” விண்ணப்பப்பத்திரத்தின் முகவரியும், ஹைக்கோப் நிறுவனம் பதிவு செய்துள்ள முகவரியும் ஒரே முகவரியாக இருந்தமை தெரியவந்துள்ளது.

எனினும் அவுஸ்திரேலியாவின் போனியோ டிபென்ஸ் நிறுவனம் தொடர்பான பெயர் போலியாக பயன்படு த்தப்பட்டிருந்தது. சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலக்கரத்னவினால் பதிவு செய்யப்பட்டிருந்த போலி நிறுவனம் சரத் பொன்சேகாவின் மகளான கப்சராவின் தோழி ஒருவரின் முகவரியை பயன்படுத்தி இருந்தமை தொடர்பான ஆவணங்கள் சபையில் முன் வைக்கப்பட்டன.

பற்றுச் சீட்டுக்கள், ஆவணங்கள் ஆயுதக் கொள்வனவுக்கான இலக்கங்கள், வங்கிக் கணக்குகளின் விபரங்கள் என்பனவற்றையும் சபையில் காண்பித்து அமைச்சர்கள் உரை நிகழ்த்தினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rohan
    rohan

    தேசமும் மகிந்தவுக்கான பிரசாரத்தில் இறங்கி விட்டாதா? சரத்தின் மருமகன் நடாத்திய ஆயுத நிறுவனம் பற்றிய செய்தியை நான் நம்புகிறேன். ஆனால், சரத் அந்த முகவரியை பாவித்ததன் காரணம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது தான்.

    ராஜபக்ச சகோதரர்கள் செய்த அளவுக்கு ஊழல் சரத் பொன்சேக செய்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவு.

    பாட்னேஸ் இன் கிறைம் என்ற ஆங்கிலப் பதம் பலருக்குத் தெரிந்திருக்கும். இப்போது அவர்கள் பிய்த்துக் கொள்கிறார்கள். ராஜபக்ச பட்கவியில் உள்ளதால் அவர் வண்டவாளங்கள் இன்னமும் வெளிவரவில்லை.

    Reply