சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டும்! – தமிழ் மக்களின் வோட்டும் ! : த ஜெயபாலன்

Sampanthan_RMavai_SenathirajahSuresh_Piremachandranதமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னால் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் என்பது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் தெரிந்த விடயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவுக்கே வரும் என்பது நவம்பர் 19 – 22ல் சூரிசில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் மாநாட்டிற்கு வரும் பொழுதே ஓரளவு தீர்மானிக்கப்பட்டு இருந்தது. டிசம்பர் 20ல் ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதே நிலைப்பாட்டையே அங்கு விலியுறுத்தி இருந்தது. ஆயினும் அவர்கள் அதனை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனவரி 6ல் உதிதியோகபூர்வமாக அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரேயே ஜேவிபியும் யுஎன்பியும் தமது மேடைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தோன்றி பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து வந்தனர்.

ஜனவரி 4ல் எதிர்க்கட்சிக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற உறுதிமொழியையும் இரா சம்பந்தன் எதிர்தரப்பு கூட்டமைப்பிற்கு வழங்கி இருந்தார். TNA promises support to Gen. Fonseka http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3682&Itemid=1 அதற்கு முன்னரேயே தங்கள் முடிவுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் ஒரு நடவடிக்கையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்திருந்தனர். Gen. Fonseka visits Jaffna at invitation of TNA  http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3672&Itemid=1

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி விவாதித்து முடிவெடுத்தது என்பது அப்பட்டமான நாடகம். ஜனவரி 4ம் 5ம் திகதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி இம்முடிவை எடுக்கவில்லை. அவ்விரு நாட்களும் இடம்பெற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகக் கேலிக் கூத்து மட்டுமே.

ஈராக்கில் ரெஜீம்சேன்ஞ்சை கொண்டு வருவதற்காக ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டு சர்வதேசக் கூட்டமைப்பை துணைக்கு அழைத்துக் கொண்டு ஈராக் மீது படையெடுத்து ரெஜீம்சேன்ஞ்சை ஏற்படுத்தியது. தனது நோக்கத்திற்கு ஏற்ப ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் உண்டு, 45 நிமிடங்களில் அவ்வாயுதங்கள் லண்டனைத் தாக்கலாம் என்ற கதைகள் சோடிக்கப்பட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டால் இவை பரப்பப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று இதற்கு ஒரு ஜனாநாயக முலாமும் பூசப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் தீர்மானமே. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் அளவுக்கு இல்லாமல் விரலுக்கு ஏற்ற வீக்கமாக உருவாக்கிய திட்டமே இலங்கையில் ரெஜீம்சேன்ஞ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது. அதற்காக சோடிக்கப்பட்ட விடயங்களில் ஒன்று வடக்கு – கிழக்கு இணைப்பு. ஒரே மாதத்தில் சந்தேக நபர்களை விடுதலை செய்வது மற்றும் இன்னொரன்ன விடயங்கள். (அவற்றைத் தனிக் கட்டுரையில் ஆராய்வதே பொருத்தமானது.)

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மே 18ல் கொல்லப்படும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்திறன் மிக்க உறுப்பினர்களாக எம் கெ சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் செயற்பட்டனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆதரவு அலைக்கு முதுகெலும்பாக நின்றனர்.

அப்போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்களுடன் எவ்விதத்திலும் முரண்படாமல் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அல்லது முரண்படக் கூடிய கருத்துக்களை வெளியிடாமலே மௌனம் காத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடையத் தொடங்க இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் ஆளுமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தலை தூக்கியது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதாகக் குறுகிக்கொண்டது.

இதனை எம் கெ சிவாஜிலிங்கம் கடந்த பெப்ரவரியிலேயே தேசம்நெற்க்கு வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் பற்றி தங்களுடன் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதனை அண்மையில் லண்டனில் நடைபெற்ற சந்திப்பிலும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்து இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தரையாடி எடுக்கப்படுவதில்லை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாகவே இருந்து வந்தது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நாடுகளிலும் தங்கி இருந்ததும் அம்மும்மூர்த்திகளுக்கு வசதியாக அமைந்தது.

ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை திரும்பிவிட்டனர். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற போது ஒப்புக்காகவாவுதல் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்தைப் பெற வேண்டி இருந்தது. அதனாலேயே ஜனவரி 4 மற்றும் 5ம் திகதிகளில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக நாடகத்தை அரங்கேற்றியது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதனை நேரடியாக வாக்கெடுப்பிற்கு விட்டால் மும்மூர்திகளின் நோக்கம் அடிபட்டுப் போய்விடும் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. அதனால் வாக்கெடுப்பிற்கு விடப்படும் கேள்வி தொடர்பாகவும் கடுமையான முரண்பாடுகள் விவாதங்கள் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர் நேரடியாகக் கலந்துகொண்டனர். ஒருவர் தொலைபேசியூடாகக் கலந்துகொண்டார். இரண்டு பிரதான வேட்பாளர்களில் யாரையாவது ஆதரிப்பதா? இல்லையா? என்ற அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற குரல்கள் பலமானதாக இருந்தது. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ரெஜீம்சேன்ஞ் வேண்டுமா இல்லையா என்ற அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது. இறுதியில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டின் முடிவின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதன்போது சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைத்தது. ஆனால் தொலைபெசியில் கலந்துகொண்டவரின் வாக்கை கணக்கெடுக்க முடியாது என்பதில் இரா சம்பந்தன் உறுதியாக நின்றார். அதனால் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவாகியது. பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில்லை என்றதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஊடகங்களுக்கு வெளியிட்ட இரா சம்பந்தன் ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தெரிவித்திருந்தார். தங்களுக்கு இசைவான பேரினவாதத் தலைமைகளுடன் இணைந்து தமிழ் மக்களை படுமோசமான நிலைக்குத் தள்ளிய தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது மீண்டும் ஒருமுறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை வார்த்தை ஜாலங்களால் மயக்குகின்றது. ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்க்கின்றது” என்பது முற்றிலும் உண்மை. அதற்காக ”பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை. ஏகோபித்துத் தெரிவிக்கவேயில்லை. இவ்வளவு அழிவுக்குப் பின்னும் தமிழனைத் தமிழனே தமிழிலேயே ஏமாற்றக் கற்றுக்கொண்ட சாணக்கியத்தைத்தான் சம்பந்தர் இவ்வளவுகால அரசியலில் தெரிந்து வைத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும்:

தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி  (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்) , நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) 
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)

இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள். அவர்கள் வருமாறு : சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவில்

பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: இரா சம்பந்தன் (திருகோணமலை), மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்), சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி  (வன்னி), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்).

எதிராக வாக்களித்தவர்கள்: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சிவநாதன் கிசோர் (வன்னி), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்)

வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்) மற்றும் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு). இருவரும் லண்டனில் தங்கியுள்ளனர். சந்திரகாந்தன் சந்திரநேரு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாது என்ற முடிவைக் கொண்டிருப்பதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதே முடிவை ஜெயானந்தமூரத்தி தொலைபேசியூடாகக் கலந்துகொண்டு தனது கருத்தை வெளியிட்டார். ரி கனகசபை (மட்டக்களப்பு) இவர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாக இரா சம்பந்தன் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ரி கனகசபை இந்தியாவில் சுகவீனம் காரணமாகத் தங்கியுள்ளார். சதாசிவம் கனகரத்தினம் (வன்னி) இலங்கை அரச படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், கூட்டணி என்பவற்றை ஒட்டுக்குழு அரசியல் என்று விமர்சித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னையவர்கள் மகிந்த ராஜபக்சவுடன் ஒட்டியதற்குப் பதிலாக இவர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் ஒட்டியுள்ளனர். இடம் மட்டும் தான் மாறியுள்ளதே அல்லாமல் இதுவும் ஒட்டுக்குழு அரசியல் தான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வே பிரபாகரனுக்குப் பதிலாக சரத் பொன்சேகாவை தேர்ந்தெடுத்த ஒட்டுக்குழு.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை அறிவித்து இருந்தாலும் அதன் கீழ் மூன்று அணிகளுக்கான அரசியல் ஓட்டங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ச சிவாஜிலிங்கம் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கின்ற நிலைகளே காணப்படுகின்றது. சிவாஜிலிங்கம் எனும் போது விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பவர்களும் சிவாஜிலிங்கத்தின் அணியிலேயே அடங்குகின்றனர்.

சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிரான உணர்வலைகள் ஏற்கனவே மேலெழ ஆரம்பித்துள்ளது. இது புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் மத்தியிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. புலி ஆதரவாளர்களிடையே இவ்வாண்டு நடுப்பகுதியில் தமக்கு ஏற்படுத்தப்பட்ட தோல்விக்குப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற போக்கு காணப்பட்ட போதும் இரு பிரதான வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதன் நியாயத்தன்மை தற்போது பலம்பெற்றுள்ளது.

டிசம்பர் 20ல் வியன்னாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய சக்திகளின் சந்திப்பிலும் இந்த முரண்பட்ட நிலை வெளிப்பட்டு உள்ளது. வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை அரசுக்கு எதிரான தமிழ் தேசிய சக்திகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு, வி ஆனந்தசங்கரி மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் அபிவிருத்தி என்பதன் அடிப்படையில் இம்மாநாடு கூட்டப்பட்டதால் அதனுடன் தொடர்புடைய இன்னும் சிலரும் அழைக்கப்பட்டு இருந்தனர். நான்கு தினங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டனர். கனடா: சேரன், இளங்கோ (தமிழீழ மக்கள் கட்சி), ரஞ்சன் (கனடிய தமிழ் கொங்கிரஸ்) நோர்வே: செல்வின், லண்டன்: ரூட் ரவி (பிரித்தானிய தமிழர் பேரவை), எதிர்வீரசிங்கம், சிற்றம்பலம் இவர்களுடன் இலங்கையில் இருந்து தேவநேசன் நேசையா, நோர்வேயில் இருந்து என் சண்முகரட்னம் ஆகியோரும் இன்னும் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திபில் தேர்தல் பற்றி குறிப்பாகக் கதைக்கப்படாத போதும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இலங்கையில் ஒரு கட்சியின் அவசியம் பற்றிப் பேசப்பட்டு உள்ளது. வருகின்ற தேர்தலில் ரெஜீம்சேஞ் ஒன்றைக் கொண்டு வருவதன் அவசியம் பற்றியும் சிலர் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அதே சமயம் பிரதான வேட்பாளர்கள் இருவருமே யுத்தக் குற்றவாளிகள் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகடந்த தமிழீழ அரசு சார்பானவர்களிடையேயே ஒருமித்த கருத்து நிலவவில்லை எனவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாடு மற்றும் இன்றைய தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசின் நிலை தொடர்பாக அறிந்துகொள்வதற்கு அதன் முக்கியஸ்தர்களில் ஒருவராக அறியப்படுபவரும் வியன்னா மாநாட்டில் கலந்துகொண்டவருமான சேரன் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வியன்னா மாநாட்டில் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவர் தனக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனத் தெரிவித்தார். (அவர் தேசம்நெற் இணையம் தன்னைப் பற்றிய அவதூறை ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் மேற்கொண்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்காதவரை தான் தேசம்நெற்றுடன் எதனையும் பகிர்ந்துகொள்ள முடியாது எனவும் மறுத்துவிட்டார்.)

ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்ற உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவைக் கண்டித்து உள்ளது. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவை எடுப்பதற்கு முன்னதாகவே தாங்கள் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி இருந்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டு உள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30947

நாடுகடந்த தமிழீழ அரசு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு இயங்குவதால் சர்வதேச அளவில் பிளவுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் வெளி அழுத்தங்கள் காரணமாக மீண்டும் ஒரு குழுவாகச் செயற்பட முன்வந்துள்ளனர். இந்த இணைவில் ரூட் ரவியின் ஆளுமைக்கு உட்பட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவையும் (British Tamil Forum) விரைவில் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசம்பர் பிற்பகுதியில் தனக்கு ஆதரவு தேடி லண்டன் வந்திருந்த எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுத்த பிரித்தானிய தமிழர் பேரவை தனது முடிவை விரைவில் மாற்றிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னால் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் பிரித்தானிய தேசிய நாளிதலான இன்டிபென்டனில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இரு பிரதான வேட்பாளர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இவர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்குவது உணர்வின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் முடியாத விடயம் எனவும் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார். They (General Sarath Fonseka and President Mahinda Rajapaksa) should be brought to court to answer for their crimes and, given that, I believe it is morally and ethically impossible to throw one’s support behind either of these candidates – http://www.independent.co.uk/opinion/commentators/suren-surendiran-these-candidates-are-largely-to-blame-for-destroying-our-people-1859873.html

கனடாவில் நடராஜா முரளீதரன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உதிரிகள் மற்றும் தமிழ் படைப்பாளிகள் போன்ற மேலோட்டமான புலி ஆதரவு அமைப்புகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் புலத்தில் இவர்களால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மும்மூர்த்திகளின் முடிவை புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் நிராகரித்த போதும் அவர்கள் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான எந்த அமைப்பும் தமிழ் மக்கள் இத்தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரியவருகின்றது. தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்து விலகி இருப்பதை மேற்கு நாடுகளும் அதன் அரசசார்பற்ற நிறுவனங்களும் அங்கீகரிக்காது என்பதனாலேயே அவர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. இவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசுக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக்குழு, பிரித்தானிய – உலக தமிழர் பேரவைகள் அனைத்தும் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிராகச் செயற்படுவதுடன் பெரும்பாலும் விக்கிரமபாகு கருணாரட்னா , எம் கெ சிவாஜிலிங்கம் அணிக்கு – தமிழ் தேசிய அணிக்கே- வாக்களிக்கக் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    /இவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசுக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக்குழு, பிரித்தானிய – உலக தமிழர் பேரவைகள் அனைத்தும் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிராகச் செயற்படுவதுடன் பெரும்பாலும் விக்கிரமபாகு கருணாரட்னா , எம் கெ சிவாஜிலிங்கம் அணிக்கு – தமிழ் தேசிய அணிக்கே- வாக்களிக்கக் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது./— என்னைப் பொருத்தவரை இந்த முடிவு ஒரு நல்ல முடிவு!.

    இது என்பதுகளில், பிரபாகரன் – பத்மநாபா – சபாரத்தினம் – ஆகியோர் கைகோர்த்த மாதிரி உள்ளது. அப் புகைப்படம் எடுக்கும் போது நான் அருகில் இருந்தேன். ரூட் ரவி அவர்களே, “இவனுக்கு ஏதோ பாதிப்பு உள்ளது அதனால்தான் வரிந்துக் கட்டிக்கொண்டு எழுதுகிறான்” என்று எண்ண வேண்டாம்!. கடந்த முப்பது ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?. இனத்தை இனம் அழிக்கும் ஒருவித “கனிபாலிசத்திற்கு” நீங்களும், உங்களை தனிநாடு கயிற்றை விழுங்கிய தமிழக அரசியல்வாதிகளும்தானே பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்!. இந்தப் பிரச்சனையின் பக்க விளைவான “புலம்பெயர் பொருளாதார? முன்னேற்றத்தின்” “வேரை” உங்களுக்கு தெரியும். அது கோயில் நிர்வாகம் – காலனித்துவ நிர்வாகம் – ஆங்கிலகல்வி – பல்கலைக் கழகம் – ஈராஸ் – ரூட் – புலம்பெயர் அரசுசார்பற்ற நிறுவனங்கள்,- அதற்கு காணிக்கை? செலுத்தும் புலன்பெயர் தமிழ்த் தொழிலாளர்கள்!.

    1980 களில்,அரசுசார்பற்ற நிறுவனம் போன்று, ஈராஸின் ஆராய்ச்சி நிறுவனமாக, “ரிசர்ச் ஆர்கனைஷேஷன் ஆஃப் டமில்ஸ்(ரூட்)” செயல்பட்டது. விடுதலைப் புலிகள் கூட அதை முன்மாதிரியாகக் கொண்டு (ஆஸ்திரேலியா கிருஸ்டி), தங்கள் மாணவர் அமைப்புகளை நவீன பயிர் செய்கைக்கு?, கோயம்புத்தூர் விவசாய பல்கலைக் கழகத்துக்கு “விற்பனை முகவர் பாணியில்” அனுப்பினார்கள். பிறகு தற்போது போல், “கா.வே.பாலகுமார் அவர்கள்” புலிகளுடன் இணைந்து, தற்போதுள்ள நிலைமை வந்துள்ளது!. இவைகள் என்னுடைய மூளைக்கு மிகப் பெரிது, ஆனால் அதன் ஒரு துளி என்னை தேடிவந்து தாக்கும் போதுதான் நான் அதிருகிறேன். இந்த “கெனிபாலிஸம்” என்ற “விஷக் கிருமி” இதற்குள் எங்கோ புகுந்துள்ளது, அல்லது என்னுடைய விளக்கம் “டூ சிம்பிளிஃபைட்?”. அவரை ஆதரிக்கிறோம், இவரை ஆதரிக்கிறோம் என்பதைவிட, “எதற்கு ஆதரிக்கிறோம்” என்ற விளக்கம் என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு கிடைப்பதேயில்லை.

    தமிழ்த் தலைமைகள் “ஐடியல் அரசியலைவிட”, நிர்வாக மற்றும் சட்டத்தரணிகளின் “இயந்திரகதியான” முறைமையக் கொண்டது!, நடைமுரையில் ஒரு “சிஸ்டமாக” இயங்குவது!, ஆகையால்,- கடந்த முப்பது ஆண்டுகளின் சுழற்சியில், வந்து நிற்பது ஒரு முள்ளிய வாய்க்காலில் – நிலைமைகளில் பெரிய மாற்றம் கொண்டுவராது, மீண்டும் அதே “தண்டவாளத்தில்” பயணம் செய்ய எத்தனிப்பது, மீண்டும் ஒரு ….. க்கு இட்டுச்செல்லுமா??.

    Reply
  • Naane
    Naane

    முதலும் ஒரு தடவை கேட்டிருந்தேன். யாரிந்த ரூட் ரவி. இந்துக்கல்லூரி பழைய மாணவரா?

    Reply
  • Anonymous
    Anonymous

    வெளிநாட்டுத் தலைமைகளின் பணபலம், உள்நாட்டுத் தலைமையின் ஒற்றுமையை வலுப்படுத்தாமல், தங்கள் கைப்பொம்மையைத் தேடி தமிழ் மக்கள் மனபலத்தை சிதைப்பது, வெளிநாட்டுத் தலைமைகளின் வியாபாரத்திற்கு, உள்நாட்டுத் தலைமையின் முடிவு உகந்ததாக இல்லை என்பதேயாகும். இந்த முரண்பாடு தமிழ் மக்களை மீண்டும் மற்றொரு பேரழிவிக்கே கொண்டு செல்லும். முதலில் உள்நாட்டில் வாழும் தலைமைகளின் ஆலோசனைப்படியே வெளிநாட்டவர்கள் செயற்பட வேண்டும், அதற்கு மறுதலையாக அல்ல. ரிமோட்ச் புரட்சி எமக்குத் தேவையில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    2005 இல் செய்த அதே தவறைத் தான் இன்று கூத்தமைப்பின் இந்த மூவர் கூட்டணி செய்ய நினைத்துள்ளது. ஆனால் நிச்சயம் இவர்கள் எண்ணம் நிறைவேறப் போவதில்லை. தேர்தலின் பின் இவர்களின் இன்னொரு கூத்தையும் கண்கொள்ளாக் காட்சியாக பார்த்து மகிழலாம். மொத்தத்தில் மக்களுக்கு நாமம் போடுவதே இவர்களின் தலையாய கடமையாக இன்று மாறிவிட்டது.

    Reply
  • Ajith
    Ajith

    Why you all are worried about TNF decision. You all have amde a decision to support Rajapakse. Don’t you know Sri Lanka is a democratic country. Let people decide. Did you ever asked Dogulas when he announced to contest under SLFP?
    Whether it is a right or wrong decision, it is up to them. If the people belive that LTTE is the right choice instead of Rajapakse that is their choice. Don’t shed tears for tamils. Don’t cry for blood thirsty Rajapakse family.

    Reply
  • london boy
    london boy

    சரத் பொன்சேகாவின் அரசியல் மனிபெஸ்டோவில் தமிழர்க்கு அரசியல் உரிமைகள் என்ற பேச்சே இல்லையே அப்போ ஏன் தேசியக் கூட்டணி சரத்தை ஆதரிக்கிறது
    தேசியக் கூட்டணி என்ன காரணங்களுக்காக சரத்தை ஆதரிக்கின்றது என்ற முழுவிளக்கம் தராமல் இருப்பது ஜனநாயக விரோதமே.

    Reply
  • rohan
    rohan

    //சரத் பொன்சேகாவின் அரசியல் மனிபெஸ்டோவில் தமிழர்க்கு அரசியல் உரிமைகள் என்ற பேச்சே இல்லையே அப்போ ஏன் தேசியக் கூட்டணி சரத்தை ஆதரிக்கிறது.//
    தலைமை மாற்றம் தான் இதற்கான பின்னணி என்று தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது, இல்லையா? Alternatives are not attractive!

    //தேசியக் கூட்டணி என்ன காரணங்களுக்காக சரத்தை ஆதரிக்கின்றது என்ற முழுவிளக்கம் தராமல் இருப்பது ஜனநாயக விரோதமே.//
    அது எப்படி ‘ஜனநாயக விரோதம்’ ஆகும்?

    Reply
  • rohan
    rohan

    //2005 இல் செய்த அதே தவறைத் தான் இன்று கூத்தமைப்பின் இந்த மூவர் கூட்டணி செய்ய நினைத்துள்ளது. ஆனால் நிச்சயம் இவர்கள் எண்ணம் நிறைவேறப் போவதில்லை. மொத்தத்தில் மக்களுக்கு நாமம் போடுவதே இவர்களின் தலையாய கடமையாக இன்று மாறிவிட்டது.// என்கிறார் பார்த்திபன்.

    அறிவாளிகளின் சொல் கேட்டு கூட்டணியைப் புறக்கணிப்பதை விட்டு இந்த மக்கள் ஏன் கூட்டணி சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறது? நாமம் போட ஏன் நெற்றியைத் திறந்து வைத்து கொண்டிருக்கிறது?

    அண்மையில் ஊர் சென்று திரும்பிய ஒருவர், ஒரு புலி எதிர்ப்பாளர், மக்கள் மகிந்த மீதே கோபமாக இருப்பதாகச் சொன்னார். அக் கோபம் சரத் ஆதரவாக மாறும் என்றும் அவர் எதிர்வு கூறுகிறார். சரத்துக்கு எதிரான வாக்குகளை தமக்கு எதிரானதாகக் கொள்ள கூட்டமைப்பு தயார். கூட்டணிக்காக கள்ள வாக்கு போட ஊரில் யாரும் இல்லை. ஒரு நேர்மையான தேர்தல் நடந்தால் மகிந்தவுக்கு எதிராகவே தமிழ் வாக்குகள் திரளும் என்று நானும் நம்புகிறேன்.

    கூட்டமைப்பு அந்த வாக்குகள் தமக்காக விழுந்தவை என்று பீற்றிக் கொள்ளக் கூடும். ஆனால், மகிந்த தமிழ் பிரதேசத்தில் மண் கவ்வினால், என்ன சமாதான்ம் சொல்வர்?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சம்பந்தரின் புத்திசுவாதீனமான விளையாட்டுப் போக்கால் சரத்பொன் சேகராவிடம் ஏமாந்துபோனதாக ( அறிக்கையில் அதுபற்றி எதுவும் இல்லாதது பற்றி ) இப்பவே செய்தி வந்து கொண்டிருக்கிறதே!.

    Reply
  • Sivam
    Sivam

    இந்த கட்டுரையில் பாவிக்கப்பட்டிருக்கும் தகவல் மூலதிலுருந்து செய்யப்பட்ட ஆய்வு வரை இருக்கும் முரண்பாடுகளை பற்றி நிறைய எழுதலாம்.

    இந்த கட்டுரை தமிழ் முதலாளித்துவ கன்னைகள் மத்தியில் சிவாஜிலிங்கம் பக்கம் சாடையாக சரிகையில், சம்பந்தன் கொம்பனி பக்கம் ஜனநாயக விரோத பெரும் குற்றசாட்டுகளை வைக்கின்றது. தமிழ் முதலாளித்துவத்தின் அனைத்துக் கன்னைகளும் ஜனநாயகத்தினை தங்களது நலன்களுக்குள் வரையறை செய்வது வரலாறு.

    வாதங்களிலும் பார்க்க விளைவுகளை அனுமானிக்க முற்படுவது பொருந்தும் என கருதுகின்றேன். வழமை போல் இந்த தேர்தல் தமிழ் முதலாளிகளின் ஒரு பிரிவினருக்கு மட்டுமே சாதகமாக அமைய முடியும். ஆனாலும் சிவாஜி ஒரு விசேடமான நிலைமையில் இருக்கின்றார்.

    சிவாஜி இயக்கப்படுவது மகிந்தவினை வெற்றி அடைய விரும்பும் சக்திகளால் மட்டுமே. ஆனால் சிவாஜியின் முட்டைகள் எல்லாம் ஒரு கூடைக்குள் இல்லை. சம்பந்தன் கொம்பனியின் முட்டைகள் பொன்சேகாவின் கோழி கூட்டுக்குள் தான் இடப்படுகின்றது.

    சுருக்கமாக சொல்லுவதானால் மகிந்த ராஜபக்சே மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் கூட திரு சிவாஜிலிங்கம் ஒரு மந்திரி பதவியினை பெறுவதற்கு நிறைய சந்தர்ப்பம் இருக்கின்றது. பொன்சேகா வந்தாலும் ஒரு சிறிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

    இது கூத்தமைபுக்குள் குத்து வெட்டை உருவாக்கினாலும் ஒரு சிறு நம்பிக்கையினை விட்டுவைத்திருக்கின்றது. கருணாவினதும், டக்கிளசினதும் மந்திரிப் பதவிகளுக்கு சண்டை பிடிப்பதற்கு கூத்தமைப்பு சிவாஜி, சிவகீதா என்றவர்களை தவிர வேறு ஒருவரும் இல்லை. இது சிவாஜிக்கு ஒரு சிறிய சந்தர்பத்தை விட்டு வைத்திருக்கின்றது.

    சிவாஜி தமிழ் முதலாளித்துவ கன்னைகளில் சாணக்கியன்

    Reply
  • Suban
    Suban

    பழிவாங்கும் அரசியலே தமிழர் அரசியலாகிவிட்டது. இதிலிருந்து மீட்சிபெறாதவரை கஸ்டம்தான். தென்னிலங்கையில் ஒரு நிலையான அரசால் மட்டுமே தமிழர் பிரச்சினைபற்றி கரிசனையாவது கொள்ளமுடியும். பொதுவாகவே யுஎன்பியைவிட சுதந்திரக்கட்சியே ஒப்பீட்டளவில் ஸ்திரமான ஆட்சியைத்தரக்கூடியது. கடந்தகால வரலாறு இப்படித்தான் இருக்கிறது. ஆனால் காலகாலமாய் தமிழர்தரப்பு யுஎன்பியுடனேயே கைகோர்த்து ஏமாந்து வருகிறது. கடந்த ஜனாதிபதிதேர்தலிலகூட புலிகளின் கணிப்பு தவற்ல்ல. ஆனால் மகிந்தவின் வெற்றியின் பின் புலிகள் தங்களுடைய பலமறிந்து செயற்படத் தவறிவிட்டிருக்கிறார்கள். இப்போதும் கூட அறிந்தோ அறியாமலோ கூட்டமைப்பு எடுத்த முடிவு மகிந்தாவுக்கு சாதகமாய்தான் அமைகிறது. தமிழ்பகுதிகளில் மட்டும் சரத் வெற்றிபெறலாம்!

    Reply
  • Poddu
    Poddu

    உவர் ரூட் ரவியைப் பற்றி ஒருத்தருக்கும் தெரியாதோ? புலிகளின்ர பொருண்மிய மேம்பாட்டு கழகத்துக்கு பொறுப்பாய் இருந்தவர். இப்ப லண்டனில பிரித்தானிய தமிழர் பேரவையை கைக்க வைச்சிருக்கிறார். இடையில சில சில்லெடுப்புகள் ஊரில நடந்ததாகக் கேள்வி.

    Reply
  • Ajith
    Ajith

    The purpose for this article and the web is very clear. Although they try to identify themelves as left wing, but they are always anti tamils and create divisions among tamil people.By supporting Sivaji, they try to creat an image as they are supporters of liberation of tamils from sinhala oppression. If we analyse the article and its usual commentators, it is clear they never critise Rajapakse or Douglas. They always raise question of Sarath Foneseka. Every body understands that Sarath Fonseka cannot give freedom for tamils because the sinhala fundamentalism never allow that to happen. The TNAs decision to support Sarath is very clear that the immediate need fortamils and sinhalese are to remove the corrupted war mongering Rajapakse familiy and its collaborates. I understand why these people are talking. They are afraid to face the reality if Sarath Foneseka takes power. These are the groups who went to campagin for Rajapakse and going for this election. Tamils will understand why Sivaji is standing for this election.Poor Sivagi fallen into the trap of RAW believing he will get a ministerial post as Karuna.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    வணக்கம் நண்பர்களே
    //முதலில் உள்நாட்டில் வாழும் தலைமைகளின் ஆலோசனைப்படியே வெளிநாட்டவர்கள் செயற்பட வேண்டும் அதற்கு மறுதலையாக அல்ல. ரிமோட்ச் புரட்சி எமக்குத் தேவையில்லை.// அனானிமஸ்
    முதலில் தலைமைகளின் ஆலோசனைப்படி செயற்படுகின்றது என்ற சிந்தனையை உதறித்தள்ளுங்கள். அனைத்து கருத்தக்களையும் உள்வாங்கி சீர்துக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரப் பழகிக் கொள்ள வேண்டும். தலைமை மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டுமே ஒழிய மக்கள் தலைமையை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.

    இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் தலைமைகள் என்னத்தை வழிகாட்டின? மதிவாதத் தலைமைகள் பிழையென்று அவர்களைச் சுட்டுக்கொன்ற ஆயுதத் தலைமைகள் என்னத்தை வழிகாட்டின. முள்ளிவாய்க்காலுக்குத் தான் வழிகாட்டின.

    தமிழ் தலைமகள் யார்? ஈபிடிபி ரிஎன்ஏ ரிஎம்விபி யுஎன்பி எஸ்எல்எப்பி?
    ஜெயபாலன் த.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    வணக்கம் அஜித்
    1. ஏன் ரிஎன்ஏ இன் முடிவு பற்றி அலட்டிக் கொள்கிறோம் என்றால் ஆனால் உண்மையில் ரிஎன்ஏ தனது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவைக் கூடப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டிக் முடிவையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. முடிந்தால் ஜெனரல் சரத்பொன் சேகாவை அதரிக்க எத்தனை ரிஎன்ஏ எம்பி க்கள் முன்வருகிறார்கள் என்று இருந்து பாருங்கள்.

    2. நாங்கள் எல்லோரும் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடிவெடுத்துவிட்டோம் என்ற முடிவுக்கு வருவது உங்களுடைய அரசியல் கணிப்பு. சோறு சாப்பிடப் பிடிக்காதவர்கள் எல்லாம் சப்பாத்தி தான் சாப்பிடுவார்கள் என்று நீங்கள் முடிவெடுத்தால் அதற்கு நான் விளக்கம் தருவது அர்த்தமற்றது. பொருளாதாரத்தில் லொஜிக் என்று ஒரு பாடம் அதனைப் படிப்பிக்கும் போது மதிலுக்கு வெளியே நின்று கேட்டிருந்தேன். மழை பெய்தால் நிலம் நனையும். நிலம் நனைந்துள்ளபடியால் மழை பெய்திருக்கலாம். உங்களின் இந்த அனுமானத்திற்கு நான் என்ன சொல்ல.

    3. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று எங்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றீர்கள். உண்மையாகத் தெரியாது. இலங்கையில் ஜனநாயகம் இருப்பதாக யாரும் எங்களுக்கு சுட்டிக்காட்டவில்லை. ஆனால் இலங்கை ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று அதன் அரசியல் அமைப்பு குறிப்பிடுகின்றது. இலங்கையில் சோசலிசம் இருக்கின்றதா என்பதை சோசலிசத்தின் தாயும் தந்தையுமாக அண்ணன் இரயாகரன் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

    4. மக்களை திர்மானிக்க விடுங்கள் என்று சொல்லி இருக்கின்றீர்கள். உண்மையான சொல். மக்களின் திர்மானத்திற்கு வருவதற்கான பல பக்கத்து வாதங்களையும் அவர்கள் முன் வைக்கின்றோம். புலிகளின் குரல் எரிமலை நிதர்சனம் ஈழமுரசு இவற்றை மட்டும் பார்த்துவிட்டு மக்கள் முடிவுக்கு வரமுடியுமா? அதனால் வெவ்வேறு கோணங்களை முன் வைப்பது தவிர்க்க முடியாதது.

    5. டக்ளஸ் தேவானந்த எஸ்எல்எப்பி யில் இணைந்த போட்டியிடப் போவதாக கூறிய போது அதனைக் கேட்டீர்களா என்று கேட்டிருக்கிறீர்கள். டக்ளஸ் தேவானந்தா பல ஆண்டுகளுக்கு முன்னரேயே அரசாங்கத்துடன் இணைந்துவிட்டார். அவரை அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே நாங்கள் பார்க்கின்றோம். அவர் அரசாங்கத்துடன் இணைந்து போட்டி போடுவதல் ஆச்சரியப்படுவதற்கோ கேட்பதற்கோ என்ன இருக்கின்றது. இருந்தாலும் அவர் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்வதால் அவரை கேட்க வேண்டிய காலகட்டங்கள் அனைத்திலும் கேட்டும் விமர்சித்தும் வருகின்றோம். அவரது மனித உரிமை மீறல்கள் முதல் சீனி வியாபாரம் வரை தேசம் தேசம்நெற்றில் கட்டுரைகள் உள்ளது.

    6. சரியோ பிழையோ அது அவர்களது முடிவு என்றோ ராஜபக்சவிலும் பார்க்க புலிகள் சரியானவர்கள் என்று மக்கள் நம்பினால் அது அவர்களுடைய தெரிவு என்றுவிட்டு ஊடகம் இருக்க முடியாது. அவர்களுக்கு பல்வேறுபட்ட தகவல்களையும் கிடைக்கச் செய்து அவர்கள் சரியான தெரிவை மேற்கொள்வதற்கு உதவுவதே ஊடகத்தின் பணி. அதனையே நாம் செய்கிறோம்.

    உங்கள் பதிவுக்கு நன்றி அஜித்

    ஜெயபாலன் த

    Reply
  • Poddu
    Poddu

    //மகிந்த தமிழ் பிரதேசத்தில் மண் கவ்வினால் என்ன சமாதான்ம் சொல்வர்?// றோகன்
    டக்ளஸ் பிள்ளையான் கருணா சித்தர் சுகு ராஜேஸ் அக்கா சேது நடேசன் மனோரஞ்சன் சின்ன மாஸ்ரர் எல்லாம் சுத்த வேஸ்ற் என்ற முடிவுக்கு வருவார்.

    Reply
  • thurai
    thurai

    ஈழத் தமிழர்களிற்கு தீர்க்கதரிசனமும், இராஜ தந்திரமுமிக்க அரசியல் தலைவர்களே தேவை. இவர்களை வளர்த்தெடுக்க வேண்டியது முதிய தலைவர்களின் கடமை. இதனை யாரும் செய்வதாகத் தெரியவில்லை. பதிலாக இறக்கும்வரை கதிரையில் யாருக்கும் இடம் கொடுக்கமாட்டோம் என்றபோக்குத்தான் காலம் காலமாக உள்ளது.

    இலங்கையில் அங்குள்ள நிலைமைக்கேற்ப தமிழர்களை வழிநடத்தும் தலைவர்களை புலத்தில் உள்ளவர்கள் பின்பற்றுவதே உலகமேற்கக் கூடியதொன்று.

    வீட்டுக்கொரு பேச்சும் நாட்டிற்கொரு கூட்டமும் கூடுவது ஈழ்த்தமிழரை மேன் மேலும் கூறு போட்டு பலவீனப்படுத்தும் செயலாகும்.

    துரை

    Reply
  • BC
    BC

    //அவர்களுக்கு (மக்களுக்கு)பல்வேறுபட்ட தகவல்களையும் கிடைக்கச் செய்து அவர்கள் சரியான தெரிவை மேற்கொள்வதற்கு உதவுவதே ஊடகத்தின் பணி. அதனையே நாம் செய்கிறோம்.//

    தொடரவும்.பாராட்டுக்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இலங்கையரசுடன் தொடர்பு இல்லாமல் ஒரு உறவை வைக்காமல் ஈழத்தமிழ் மக்களுக்கு யாராவது ஏதாவது சிறு சேவைத்தானும் ஆற்றமுடியுமா? முடியாது என்பதே அதன் பதில். இதில் யாரும் எள்ளளவும் சந்தேகம் கொள்ள முடியாது. அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சிசெய்கிறார்கள் என்றால் அவர்கள் முழுமையாக அரசாங்கத்தின் கொள்கைகளை பிரதிநிதி படுத்துகிறார்கள் என்று அர்த்தம் இல்லை.
    தமிழ்ஈழம் தனிநாடு இனத்திற்கு ஒரு அரசு என்ற நினைவுகளும் கனவுகளும் தவுடு பொடியாகியது மட்டுமல்ல முற்றாக நீறாகி விட்டதென்றே சொல்ல வேண்டும். இன்று விளங்கிக்கொள்ள வேண்டியது இலங்கையிலுள்ள உழைப்பாளி மக்களின் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பதே. இது சரியான பாதையாக அமைவது மட்டுமல்லாமல் நியாயமானதும் எமது இனத்தை பாதுகாத்துக் கொள்ளுவதும் ஆகும். ஆயுதம் ஏந்தாமல் கடந்தகாலத்தில் இனப்பிரச்சனைக்கு தீர்வைத் தேடுனார்கள் என்பதை அறியப் புறப்பட்டால் த.ஜெயபாலனும் அதிலிருந்து தப்புவாரோ? என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. பிழை பிடிக்கப் புறப்பட்டால் அதை யாரிரும் கண்டுகொள்ள முடியும்.

    கடந்தகாலத்தில் ஒரு பயங்கரவாத இயக்கத்தில் பங்காளியாக இருந்திருக்கிறார் அவர் நுhற்றுக்கணக்காண கொலைகளை செய்திருக்கிறார் இனியும் அப்படித்தான் செய்வார்ககள் என ஒருவர் கருதுவார்களேயானால் அதுவும் ஒரு வகை முட்டாள்தனமே!. அன்று எப்படி இருந்தார். இன்று எப்படியிருக்கிறார் என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவதின் மூலமே முடிவுக்கு வரமுடியும். இந்தவகையில் இன்று டக்கிளஸ் பிள்ளையான் கருனா போன்றவர்கள் தமிழ்மக்களின் உண்மையான பிரதிநிதிகளே. நாளை மாறக்கூடும். இல்லையோல் இயங்கியல் போக்கே பிழையானதாக அர்த்தப்படும். ஒன்றை மட்டும் உறுதியாக என்னால் சொல்லமுடியும். புலம்பெயர் நாட்டில்லிருந்து இலங்கைக்கு யாரும் பொருளாதார ரீதியில் உதவிசெய்யலாமே தவிர அரசியல் ரீதியில் யாரும் தலையிட முடியாது. அப்படி தலையிடுவதற்கு உரிமையிருந்தால். ….அது உலகத்தொழிலாள வர்க்கத்தின் கட்சியாக அதில் அங்கத்துவம் வகிக்கும் பிரிவாக புலம்பெயர் தமிழ்மக்கள் பிரதிநித்துவப் படுத்தினால் மட்டுமே!.

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    Sambanthan company decision to support SF is nothing but the traditional tamil leaders sworn alignment with the UNP.If you back to history the role of tamil leders can be understood.They always were part of the UNP govt.They wanted to do the same thing when UNP came to power in 1977.The reason for not aligning with UNP was the youths (Tamil ilagnar peravai)was indoctrinated that aligning with Sinhalese parties were detrimental to Tamil people aspirations.Tamil leaders could not join the UNP govt.But they have joined forces with them to denounce and burn the political solution draft copies tabled by Chandrika govt.Tamil leaders agitation was very active when the SLFP came to power.Tamil leaders and the tamil radical movements were very efficient in telling lies to Tamil people and misguide them.Ethnic problem is a creation by them.In real terms Sri lanka is still a paradise for minorities.We must stop unnecessary demands and shouts.
    Pl go back to the days of the last presidential elections run up.Virakesari,Thinakural,Uthayan critizised the JVP as a communal party.Pl see if you can the cartoos published by them.Now TNA and JVP in one group.
    I am sure Tamils,particularly Jaffna tamil will give a good lesson to TNA,sambanthan group.

    Reply
  • thaya
    thaya

    வணக்கம் ஜெயபாலன்,
    அது என்ன டக்ளஸின் மனித உரிமை மீறல் சீனி வியாபாரம்?…

    Reply
  • Ajith
    Ajith

    Mr. Jeyapalan,
    Thank you for your response. In your first point, you said that only 3 TNF made decision without considering others view. If the other group had a majority and did not agree with the decision,Why did not they publicly announce that and leave the TNF? It is true that TNF decison to support Sarath is purely to remove the Rajapakse(regime change) from the power and punish him for his crimes.
    On your second point, I agree that Sri Lanka is not a true democratic country but this election is about electing a president by a vote (democratic way) and the options for tamils. The available options are:
    1. Vote for Rajapakse
    2. Vote for Sarath
    3. Vote for any other candidate
    4. Boycott the elections

    If you decide to vote in this election, your vote should give some impact or message to the world.

    I agree that voting Rajapakse or Sarath is not going to change the view of the sinhala to accept a political solution. Rajapakse has already rejected any form of devolution. Sarath is new to politics we have to wait and see how he is going to rule but he agreed to get rid of the presidential system.
    Now goto the 3rd option, only tamil candidate is Sivagi. Why he is contesting in this election? Can he elected to be a President? Can he got the leadership characteristics to lead the tamils to get the aspirations of tamils (self-determination)? Will he able to get at least over 50% of the tamil vote in this election to send the message to the world that tamils are for seperation and reject sinhala leadership? If he can’t win at least 50% of the votes, then what will be the message to the world – Is it that tamils are no longer interested in devolution and happy to live under sinhala rule?
    Then the 4th option: It would have been a useful option to send the worls a clear message tamils will never surrender their rights for anything. Is there any guarantee that tamils vote will be rigged off by Douglas and Karuna in support of Rajapakse?
    So, it is not advisable to boygott under the current circumstances.

    But there is enough justification that Rajapakse should be removed from the power.
    1. Rajapakse regime killed over 50,000 tamils and put over 300,000 tamils under concentrationstyle camp.
    2. Unlawful abduction and murders of both Sinhala and tamil people, journalists and NGOs.
    3. Corruption in every level. over 125 ministerial posts is utter waste of tax payers money.
    4. Sri Lanka’s economy has become the worst ever and whole Sri Lankan’s are in debt.
    5. Family rule.
    6. Law and justice system is fully politicised.
    There are anough reasons to join the sinhala progressive elements to remove this corrupted regime.

    Reply
  • த ஜெயபாலன்.
    த ஜெயபாலன்.

    தயா//அது என்ன டக்ளஸின் மனித உரிமை மீறல் சீனி வியாபாரம்?…
    பார்க்க.//

    கதை சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ். (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் லண்டன் விஜயம்). ரீ.கொன்ஸ்ரன்ரைன். இதழ் 31இ மார்ச் 2007- மே 2007: ப.24-25

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேர்காணல்: “பிரபாகரனும் நானும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரவேண்டும் என்றுதான் விரும்பினோம்”. இதழ் 28 ஓகஸ்ட் 2006-ஒக்டோபர் 2006: ப.2-8

    சொறிப் புள்ளைக்கொரு பொம்பிளை தேவையோ? : ஈழமாறன்
    ஏப்ரல் 21 2009
    புலிகள் அராஜகவாதிகள் என்று வாய் கிழிய பேசிக் கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பானத்திலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டபின் செய்து முடித்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை உதிரம் உறைந்து போகும் செய்தி. புலியைக் கண்டவனை, கண்டவனைப் பற்றிச் சொன்னதை, கேட்டவனை, கேட்டுக்கொண்டு நின்றததைக் கண்டவனை, பக்கத்தில் நிண்டவனை என்று சுட்டுத் தள்ளப்படும் அப்பாவி மக்களின் பிணங்களை சிலவேளை நாம் எண்ண மறந்திருக்கலாம்.

    Reply
  • த ஜெயபாலன்.
    த ஜெயபாலன்.

    அஜித் உங்கள் கருத்துப் பதிவுக்கும் உரையாடலுக்கும் நன்றி.

    //In your first point, you said that only 3 TNF made decision without considering others view. If the other group had a majority and did not agree with the decision,Why did not they publicly announce that and leave the TNF? It is true that TNF decison to support Sarath is purely to remove the Rajapakse(regime change) from the power and punish him for his crimes.//

    சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தரையாடி எடுக்கவில்லை. மும்மூர்த்திகள் தாங்கள் எடுத்த முடிவை ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையில் கட்டியுள்ளனர். சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்று முடிவுக்கு மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் இரு வாக்குகளே கூடுதலாகக் கிடைத்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்கள் சரத் பொன்சேகாவுக்கு முழுமையான ஆதரவு அளித்துள்ளனர் என்ற வகையில் சம்பந்தரின் ஊடக அறிக்கை உள்ளது. சரத்துக்கு ஆதரவளிக்காவிட்டால் தான் ரிஎன்ஏயை விட்டு வெளியேறுவேன் என்றும் சம்பந்தர் தெரிவித்து இருந்தார். சரத்தை ஆதரிப்பது என்ற முடிவுக்கு சிலர் ஆதரவளிக்கக் காரணம் ரிஎன்ஏ உடைந்துவிடக்கூடாது என்பதனால் இவற்றை வெளிப்படையாகத் தெரிவிப்பது ரிஎன்ஏ யை உடைப்பதற்கு காரணமாகிவிடும்.

    //Sarath is new to politics we have to wait and see how he is going to rule but he agreed to get rid of the presidential system.//

    சரத் அரசியலுக்கு புதியவர் என்றாலும் அவர் அரசியலுக்கு வருமுன் பேசிய அரசியல் மிக மோசமானது. இனவாதமானது. அவர் இப்போது பேசும் அரசியல் சந்தர்ப்பவாத அரசியல். இவர் ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வார் என்பது நம்புவதற்கு மிகக் கடியமான ஒரு விடயம்.

    //3rd option, only tamil candidate is Sivagi. Why he is contesting in this election? Can he elected to be a President? Can he got the leadership characteristics to lead the tamils to get the aspirations of tamils (self-determination)? Will he able to get at least over 50% of the tamil vote in this election to send the message to the world that tamils are for seperation and reject sinhala leadership? If he can’t win at least 50% of the votes, then what will be the message to the world – Is it that tamils are no longer interested in devolution and happy to live under sinhala rule?//

    ரிஎன்ஏ சரத் பொன்சேகாவுக்காக வாக்கு கேட்பது போல் சிவாஜிலிங்கம் தனக்கு வாக்கு கேட்கிறார் என எடுத்துக் கொள்ள முடியதாது. இரு பிரதான வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றே கோருகின்றார். இதன் மூலம் நடந்து முடிந்த யுத்தத்திற்கு பொறுப்பான இரு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் நிராகரித்து உள்ளனர் என்ற தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான முடிவை அவர் கோருகின்றார். இங்கு சரத் வந்தாலென்ன மகிந்த வந்தாலென்ன சாதாரண தமிழ் மக்களுக்கோ ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கோ பெரும் மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை. தமிழ் மக்களில் உள்ள ஒரு சிறய ஆளும் குழுமத்திற்கே வெற்றியும் தோல்வியும். தமிழ் மக்களுக்கு அல்ல.

    //But there is enough justification that Rajapakse should be removed from the power.//

    சரத் பொன்சேகாவிடம் அதிகாரத்தை கையளிக்கக் கூடாது என்பதற்கும் அதேயளவு காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்களை மும்மூர்த்திகள் கணக்கில் எடுக்க விரும்பவில்லை.

    புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தவரை அத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூச்சுக்கூடவில்லை. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கும் போதே சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதத்தை ஒப்படைத்துவிட்டு சமாதான வழிக்குத் திரும்ப வேண்டும் இல்லையேல் பேரழிவு ஏற்படும் என்ற அறிக்கையை விட்டார். சிவாஜிலிங்கம் மீது பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் எடுத்த அந்த முடிவு மதிக்கப்பட வேண்டும். அந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

    ஆனால் மும்மூர்த்திகளின் அரசியல் என்பது முழுமையான சந்தர்ப்பவாத அரசியல். பிரபாகரன் நமக! பிரபாகரன் போனால் பொன்சேகா நமக நாளை மகிந்த ஜனாதிபதியாக வந்தால் மகிந்தவும் நமக!

    த ஜெயபாலன்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பிரபாகரனும் அவனுடன் சேர்ந்த ஒரு சிலரை தவிர இந்த முப்பது வருட போராட்டத்தில் இணைந்து இறந்து போன ஆயிரக்கணக்காண போராளிகளும் அப்பாவிகள் தான் ஜெயபாலன். இந்த அப்பாவிகளால் பொதுமக்களுக்கு நன்மை ஏற்படுகிறதா? தீமையேற்படுகிறா?? என்பதே கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.
    ரீ.கொன்ஸ்ரான்ரைன். ஈழமாறன் கருத்துகளை விட உங்கள் சொந்தக் கருத்துக்களை வைத்திருக்கலாம். பெரும்பாலும் அவை வலுவான கருத்துக்களை கொண்டே இருந்திருக்கின்றன. இனியொரு தடவை இதை கவனத்தில் எடுப்பீர்கள் என நினைக்கிறேன். மற்றும் சீனி வியாபாரத்தைப் பற்றி நானும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

    Reply
  • rohan
    rohan

    //ஜெயபாலன்: ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கும் போதே சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதத்தை ஒப்படைத்துவிட்டு சமாதான வழிக்குத் திரும்ப வேண்டும் இல்லையேல் பேரழிவு ஏற்படும் என்ற அறிக்கையை விட்டார். //

    முழுப் பூச்சுத்தல் இது! இப்படி ஒரு பேச்சுவார்த்தை பின்னணியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது சிவாஜிலிங்கத்துக்குத் தெரியும். அதைப் புலி கருத்தில் கொள்ள ஆரம்பித்திருந்ததும் தெரியும். தன் கருத்தை அவர் சொன்னதாகவும் எடுக்கலாம். மக்கள் – தலைவர்கள் சொன்னதை கேட்டு நடந்தோம் என்று சொல்ல புலிக்கு வாய்ப்புத் தந்ததாகவும் எடுக்கலாம். இதுவே சந்தர்ப்பவாத அரசியல்.

    //சிவாஜிலிங்கம் மீது பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் எடுத்த அந்த முடிவு மதிக்கப்பட வேண்டும். அந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். //

    புலி இதைக் கருத்தில் கொண்டது. ஆனால், பல்லாயிரம் உயிர் பறித்து ஒரு புலி வேட்டை நடக்கும் என்று பின்னணியில் இருந்தவர்கள் நினைக்கவில்லை.

    //ஆனால் மும்மூர்த்திகளின் அரசியல் என்பது முழுமையான சந்தர்ப்பவாத அரசியல். பிரபாகரன் நமக! பிரபாகரன் போனால் பொன்சேகா நமக நாளை மகிந்த ஜனாதிபதியாக வந்தால் மகிந்தவும் நமக!//

    மும்மூர்த்திகள் என்பதும் கே.ரி.ஆர். போல் எஸ்.எம்.எஸ். என்பதும் நையாண்டி. என்ன காரணமாக இருந்தாலும் அடைக்கலநாதன் கூடவே நிற்கிறார்.

    சிவாஜியின் நிழல் நிஜமானது என்றால், அவர் மகிந்த ராஜபக்ச தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட கொலைவெறித் தாக்குதல் பற்றி நாலு வார்த்தை பேசட்டும் பார்ப்போம். இந்த இலட்சணத்தில், ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ என்ற கோஷம் வேறு! தமிழக அரசியல் தோற்றது!!

    Reply
  • Danu
    Danu

    சரத்துக்கு ஆதரவளிக்காவிட்டால் தான் ரிஎன்ஏயை விட்டு வெளியேறுவேன் என்றும் சம்பந்தர் தெரிவித்து இருந்தார். சரத்தை ஆதரிப்பது என்ற முடிவுக்கு சிலர் ஆதரவளிக்கக் காரணம் ரிஎன்ஏ உடைந்துவிடக்கூடாது என்பதனால் இவற்றை வெளிப்படையாகத் தெரிவிப்பது ரிஎன்ஏ யை உடைப்பதற்கு காரணமாகிவிடும்.//

    ஆக மொத்தத்தில் கூட்டத்தில் சண்டித்தனங்கள் நடத்தித்தான் ஒரு அறிக்கை சம்பந்தர் விட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள்.

    Reply
  • Ajith
    Ajith

    Mr Jeyapalan, Thanks for your response again.
    சரத்துக்கு ஆதரவளிக்காவிட்டால் தான் ரிஎன்ஏயை விட்டு வெளியேறுவேன் என்றும் சம்பந்தர் தெரிவித்து இருந்தார். சரத்தை ஆதரிப்பது என்ற முடிவுக்கு சிலர் ஆதரவளிக்கக் காரணம் ரிஎன்ஏ உடைந்துவிடக்கூடாது என்பதனால் இவற்றை வெளிப்படையாகத் தெரிவிப்பது ரிஎன்ஏ யை உடைப்பதற்கு காரணமாகிவிடும்.
    This is funny and your explanation is illogical. I never read that Sampathan said that he will leave TNA if others don’t support Sarath. Sivaji didn’t that way before submitting the nomination. He announced his decision in India without discussing TNA. According to eight MPs voted againt his motion and Nine supported his motion. Now you are telling except 3, all were against Sampathan’s motion.So, if 19 of out of TNA members decide to boycott or support Sivagi, definitely they all would have united to reject both major candidates as you wish. I don’t think all the MPs gave support for Sampathan’s motion because to keep Sampanthan as the leader of TNA and Safe TNA.

    சரத் அரசியலுக்கு புதியவர் என்றாலும் அவர் அரசியலுக்கு வருமுன் பேசிய அரசியல் மிக மோசமானது. இனவாதமானது. அவர் இப்போது பேசும் அரசியல் சந்தர்ப்பவாத அரசியல். இவர் ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வார் என்பது நம்புவதற்கு மிகக் கடியமான ஒரு விடயம்.

    When Sarath spoke about minorities, he was an employee of Rajapakse. Rajapakse never disputed that statement or took any action against him. so, you don’t see any difference between Rajapake and Fonseka.The man who had the power should take responsiblity for a whatever his ministers or commanders say. So, Rajapakse is worse than Fonseka. Do you any politician who is not opportunistic including Sivagi? He promised to remove the presidential system. We will come to know whether he is doing or not only after electing him. It may be difficult to believe him, but there is 100% definte that Rajapakse will not do it. He promised to JVP and didn’t do it in his four year of rule. I think it is better to make a choice among these two and to avoid the one who we are sure that he will never do.

    ரிஎன்ஏ சரத் பொன்சேகாவுக்காக வாக்கு கேட்பது போல் சிவாஜிலிங்கம் தனக்கு வாக்கு கேட்கிறார் என எடுத்துக் கொள்ள முடியதாது. இரு பிரதான வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றே கோருகின்றார். இதன் மூலம் நடந்து முடிந்த யுத்தத்திற்கு பொறுப்பான இரு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் நிராகரித்து உள்ளனர் என்ற தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான முடிவை அவர் கோருகின்றார். இங்கு சரத் வந்தாலென்ன மகிந்த வந்தாலென்ன சாதாரண தமிழ் மக்களுக்கோ ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கோ பெரும் மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை. தமிழ் மக்களில் உள்ள ஒரு சிறய ஆளும் குழுமத்திற்கே வெற்றியும் தோல்வியும். தமிழ் மக்களுக்கு அல்ல.

    I agree that Sivaji is not asking vote for him. The allegation is that he is standing in the election to divert the votes that may go for Fonseka and ensure victory of Rajapakse. I would have welcome if he decided to boycott the election to prove that tamils are no longer interested in participating in an election that is to elect both who ordered kill the people and who killed the people. His decision was made in India after a crucial meeting with RAW and he returned to Sri Lanka. The man who accused Rajapakse for war crimes was allowed to freely enter to Sri Lanka while journalist Tissanayagam who is a friend of Rajapakse for wrting against him was sentenced for 20 years and a colleague of him arrested and kept secretly in the dock. The interview he gave to Thesamnet (which I am 100% sure that is backing Rajapakse regime and reliably I know one of them already in Sri Lanka to Campagin for Rajapakpse – you didn’t deny) is clearly indicate that he is contesting in support of Rajapakse. The election held for municipality showed that Douglas will make sure (forcibly) to get Rajapakse gets a reasonable votes. Sivagi will block the votes that may go to Fonseka.In the Esat Karuna and Pilliyan will make sure that Rajapakse will get a sunk of votes by forcibly. Another muslim candiadate also contesting in the East to block the votes that is supposed to go to muslim congress.So, if Sivagi is genuine about to reject both candidates it is logical to withdraw from election and to ask tamils to reject the election, Can he do that?

    சரத் பொன்சேகாவிடம் அதிகாரத்தை கையளிக்கக் கூடாது என்பதற்கும் அதேயளவு காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்களை மும்மூர்த்திகள் கணக்கில் எடுக்க விரும்பவில்லை.

    புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தவரை அத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூச்சுக்கூடவில்லை. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கும் போதே சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதத்தை ஒப்படைத்துவிட்டு சமாதான வழிக்குத் திரும்ப வேண்டும் இல்லையேல் பேரழிவு ஏற்படும் என்ற அறிக்கையை விட்டார். சிவாஜிலிங்கம் மீது பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் எடுத்த அந்த முடிவு மதிக்கப்பட வேண்டும். அந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

    ஆனால் மும்மூர்த்திகளின் அரசியல் என்பது முழுமையான சந்தர்ப்பவாத அரசியல். பிரபாகரன் நமக! பிரபாகரன் போனால் பொன்சேகா நமக நாளை மகிந்த ஜனாதிபதியாக வந்தால் மகிந்தவும் நமக!

    This is where you are contradicting yourself from you logic and identifies yourself aswho you are and what was your intention behind supporting Sivaji (Rajapakse). Sivaji was part of TNA who accepted the LTTE as a sole representative of tamils and Tamil Eelam is the solution for resolving the tamil problem. No one will agree that you give your support to Sivaji because he asked for surrender of weapons is the reason you support for Sivaji. I know very well that your group fully against to LTTE and TULF even before the formation of LTTE. The Last sentence itself tell us that your enemy is Prabakaran and not Rajapakse. You have the right to tell your view. However, did you ever ask yourself why you or the organisation or the philosophy you believe never get the support of either sinhalese or tamils in Sri Lanka.

    This is the political mantra for
    Bandaranayaka நமக! Srimavo நமக! Chandrika நமக! மகிந்தவும் Namaga!

    Whatever tactics played by enemies of Pirabakaran,the truth of the matter is that Pirabakaran is the only leader who stood for what he believed is right and never be an opportunistic as like others. He is a man of principle and tamils will love him forever.

    Reply
  • த ஜெயபாலன்.
    த ஜெயபாலன்.

    றோகனுக்காக

    தேசம்நெற்: மீண்டும் பழைய விடயத்திற்கே வருகிறேன். இந்த யுத்த்தில் சிக்குண்ட மக்கள் லட்சக்கணக்கான மக்களை எப்படி இந்த அவலத்தில் இருந்து மீட்க முடியும்?

    சிவாஜிலிங்கம்: சர்வதேச கண்காணிப்பில் ஆயுதங்களை வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்குப் பொவது தான் மக்களுக்கும் நல்லது எல்லவற்றுக்கும் நல்லது. அப்படி பேச்சுவார்த்தையை நடாத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் புலிகள் சரணடைவதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    ”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம், த ஜெயபாலன்

    http://thesamnet.co.uk/?p=7209
    பெப்ரவரி 03 2009

    ”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

    http://thesamnet.co.uk/?p=7882
    பெப்ரவரி 18 2009

    ‘என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள் அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்!’ எம் கெ சிவாஜிலிங்கம் – நேர்காணல் : த ஜெயபாலன்

    எம் கெ சிவாஜிலிங்கம்: கடந்த தேர்தல்களில் விக்கிரமபாகு கருணாரட்ன பெற்ற வாக்குகள் குறைவானது. இதுவொரு தந்திரோபாய நடவடிக்கையே. எமது நோக்கம் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் விழும் வாக்குகளைச் சிதறடிப்பதே. இதன் மூலம் இவர்களுக்கு 50 வீதமான வாக்குகளைக் கிடைக்காமல் செய்வதில் தான் எமது வெற்றி தங்கியுள்ளது. 50 வீதமான வாக்குகள் கிடைக்காத நிலையில் 2வது தெரிவை கணிக்க வேண்டிய நிலையேற்படும். இன்று என்னைத் துரோகி என்பவர்கள் நான் இந்நிலையை ஏற்படுத்தினால் என்ன சொல்வார்கள்.

    தேசம்நெற்: நீங்கள் சுயேட்சையாக நிற்பதற்கு பின்னாலுள்ள அரசியல் பற்றிய சந்தேகங்கள் உள்ளது. நீங்கள் மகிந்த ராஜபக்சவின் உந்துதலால் அல்லது இந்தியாவின் உந்துதலால் தமிழ் வாக்குகளை பொன்சேகாவுக்குச் செல்ல விடாமல் தடுப்பதற்காகவே தேர்தலில் களம் இறங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

    எம் கெ சிவாஜிலிங்கம்: இப்படி பல ஊகங்கள் வெளிவரும். இவர்கள் ஒரு விசயத்தை மறக்கிறார்கள் இன்று யாழ்ப்பாணத்தில், வவுனியாவில் புளொட், கிழக்கில் ரிஎம்விபி கருணா, ஈபிஆர்எல்எப் என இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பார்கள். இதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யாவிட்டால் பெருமளவு தமிழ் வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது. அதனையும் தடுப்பதற்காகவே நான் தேர்தலில் நிற்கின்றேன்.

    இன்று இலங்கையில் உள்ள எந்தப் பாராளுமன்ற உறுப்பினர் யுத்தக் குற்றங்கள் தமிழ் மக்களின் படுகொலைகள் பற்றிக் கதைக்கிறார்கள். அப்படிக் கதைக்கும் ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பியைக் கூறுங்கள். நான் இன்றைக்கும் இலங்கையில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக் குரல் கொடுக்கின்றேன். சுயாட்சி ஒன்றே தமிழ் மக்களுக்கு தீர்வு என்கின்றேன்.

    மஞ்சள் கண்ணாடியைப் போட்டுப் பார்த்துக் கொண்டு மஞ்சளாக இருக்கிறது என்றால் என்ன செய்ய. தமிழீழ விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவன். இன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. புலிகள் அழிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை கொலை செய்தவனுக்கு அல்லது கொலை செய்யச் சொன்னவனுக்கு வாக்குப் போடு என்று தமிழ் மக்களிடம் போய்க் கேட்க முடியாது.

    ஒருசிலர் திட்டமிட்ட பிரச்சாரங்களை என்மீது நடத்துகின்றனர். நான் இலங்கை அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு விட்டேன் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நான் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதால் மட்டும் இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதாகி விடாது.

    http://thesamnet.co.uk/?p=18287
    டிசம்பர் 18 2009

    Reply
  • BC
    BC

    ஈழமாறன் சொன்னதை டக்ளஸின் மனித உரிமை மீறலுக்கு ஆதாரமாக ஜெயபாலன் எடுத்தது ஆச்சரியமாக உள்ளது.

    Reply
  • த ஜெயபாலன்.
    த ஜெயபாலன்.

    வணக்கம் அஜித் பதில்களுக்கு நன்றி.

    //I never read that Sampathan said that he will leave TNA if others don’t support Sarath. According to eight MPs voted againt his motion and Nine supported his motion. Now you are telling except 3, all were against Sampathan’s motion.//

    சரத்துக்கு ஆதரவளிக்காவிட்டால் தான் ரிஎன்ஏயை விட்டு வெளியேறுவேன் என்றும் சம்பந்தர் தெரிவித்து இருந்தார். சரத்தை ஆதரிப்பது என்ற முடிவுக்கு சிலர் ஆதரவளிக்கக் காரணம் ரிஎன்ஏ உடைந்துவிடக்கூடாது என்பதனால் இவற்றை வெளிப்படையாகத் தெரிவிப்பது ரிஎன்ஏ யை உடைப்பதற்கு காரணமாகிவிடும்.

    ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவில்
    பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: இரா சம்பந்தன் (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்) சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்) ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி) பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு) ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்) கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை) வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல) தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு) சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்).

    எதிராக வாக்களித்தவர்கள்: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்) நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி) எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்) நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்) சிவநாதன் கிசோர் (வன்னி) கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்)

    //When Sarath spoke about minorities, he was an employee of Rajapakse. Rajapakse never disputed that statement or took any action against him. so, you don’t see any difference between Rajapake and Fonseka.The man who had the power should take responsiblity for a whatever his ministers or commanders say. So, Rajapakse is worse than Fonseka. //

    மகிந்த ராஜபக்சவை ஒரு இனவாதி என்று உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அவ்வாறான முடிவையே வைத்திருக்கிறீர்கள். ஆனால் சரத் பொன்சேகாவை காப்பாற்றுவதற்கு நீங்கள் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றிர்கள். உலகின் மிக மூர்க்கமான ஒரு கொரில்லா அணியைச் சந்தித்த முப்படைகளின் தளபதியை அவர் செய்த அத்தனை மனித உரிமைக் குற்றங்களில் இருந்தும் காப்பாற்ற அவரை ஒரு தொழிலாளி என்று வாதிடுகின்றீர்கள். ஒரு உயர் அதிகாரியின் கட்டளைக்குப் பணிந்து கொலை செய்த படிநிலை அதிகாரிகள் சட்டத்தில் இருந்து தப்பலாம் என்று நீங்கள் தீர்ப்பு வழங்குகிறீர்கள். அப்படியானால் கிட்லரைத் தவிர அவரது எந்த இராணுவத் தளபதிகளையும் தண்டித்திருக்கக் கூடாது. ஸ்லோபிடான் மிலோசவேசைத் தவிர யாரையும் தண்டிக்க முடியாது. அவ்வாறு அவர்களைத் தண்டிக்கும் சர்வதேச நீதிமன்றம் விவஸ்த்தை அற்றது என்றா கூற வருகின்றீர்கள்.

    //I would have welcome if he decided to boycott the election to prove that tamils are no longer interested in participating in an election that is to elect both who ordered kill the people and who killed the people.//

    //So, it is not advisable to boygott under the current circumstances.// Ajith on January 9, 2010 10:57 pm

    சிவாஜி தேர்தலைப் பகிஸ்கரிக்கலாம் என்றும் சொல்கிறீர்கள். ஆனால் இருபத்திநான்கு மணிநேரத்திற்குள் விட்ட ஒரு பின்னூட்டத்தில் பகிஸ்கரிப்பது ஏற்புடையதல்ல என்றும் கூறுகின்றீர்கள். சிவாஜிலிங்கம் பொன்சேகாவுக்கு மட்டும் வாக்குப் போட வேண்டாம் என்று கேட்கவில்லை. மகிந்தவுக்கும் பொன்சேகாவுக்கும் வாக்குப் போடாதீர்கள் என்றே கேட்டள்ளார். அவருடன் வாக்குக் கேட்கும் பாகு என்றைக்குமே தமிழ் மக்களுக்கு அதரவாகவே பேசி வந்துள்ளார்.

    அஜித் நீங்கள் சரத்தை ஆதிரிக்க முற்பட்டு கொள்கையற்ற அரசியலை முன்வைக்கின்றீர்கள். இது தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை. மகிந்த தோற்றுப் போனால் அதற்குக் காரணம் கண்டு பிடிக்க ஒரு கூட்டம் உள்ளது. அதுபோல் சரத் தோற்றுப் போனாலும் என்ற பயத்தில் நீங்கள் காரணங்களை இப்போதே கண்டு பிடித்திருக்கின்றீர்கள். ஆட்டத்தில் தோற்றுப் போனவர்களுக்கு நிறையக் காரணங்கள் இருக்கும். அது சரத்தாக இருந்தாலென்ன மகிந்தவாக இருந்தாலென்ன.

    //The man who accused Rajapakse for war crimes was allowed to freely enter to Sri Lanka while journalist Tissanayagam who is a friend of Rajapakse for wrting against him was sentenced for 20 years and a colleague of him arrested and kept secretly in the dock.//

    தேசியத் தலைவர் என்று தலையில் தூக்கியவர்கள் சரணடைந்த போது அவரது மனைவி பிள்ளைகள் குழந்தை என்று எவ்வித பாரபட்சமும் பார்க்காது படுகொலை செய்த இராணுவத்தின் தளபதியையே அவர் வெறும் கூலியாள் என்று மன்னித்து விடும் போது தெற்கிற்கு சவப்பெட்டி அனுப்புவோம் சிங்களவனின் முதுகுத் தோலில் செருப்புத் தைப்போம் யுத்தக் குற்றவாளிகளாக நிறுத்துவோம் என்றவர்களை ஒப்புக்காக ஜனநாயகம் இருக்கின்றது என்று காட்டவாவது விட வேண்டுமல்லவா. நிங்கள் சரத்தை மன்னித்தது போல் மகிந்தவும் பெரும்தன்மையாக மன்னித்துவிட்டாரோ என்னவோ?

    //The interview he gave to Thesamnet (which I am 100% sure that is backing Rajapakse regime and reliably I know one of them already in Sri Lanka to Campagin for Rajapakpse – you didn’t deny) is clearly indicate that he is contesting in support of Rajapakse. //

    ஊகங்களுக்கு பதில் அளிப்பது அர்த்தமற்றது.

    //So, if Sivagi is genuine about to reject both candidates it is logical to withdraw from election and to ask tamils to reject the election, Can he do that?//

    //So, it is not advisable to boygott under the current circumstances.// Ajith on January 9, 2010 10:57 pm

    //Sivaji was part of TNA who accepted the LTTE as a sole representative of tamils and Tamil Eelam is the solution for resolving the tamil problem. No one will agree that you give your support to Sivaji because he asked for surrender of weapons is the reason you support for Sivaji. I know very well that your group fully against to LTTE and TULF even before the formation of LTTE. //

    நீங்கள் குறிப்பிட்டது 100 வீதம் உண்மை. சிறு திருத்தம் எல்ரிரிஈ யினதும் ரியுஎல்எப் இனதும் அரசியலுக்கு எதிரானவன். அவ்வமைப்புகளைச் சேர்ந்த பல நண்பர்களும் உறவுகளும் எனக்கு உண்டு.

    //The Last sentence itself tell us that your enemy is Prabakaran and not Rajapakse.//

    நீங்கள் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக எனக்காக நீங்கள் சிந்திக்க முற்படுகிறீர்கள். என்னைப் பொறுத்தவரை ராஜபக்ச ஒரு சிங்கள பிரபாகரன். பிரபாகரன் ஒரு தமிழ் ராஜபக்ச.

    //However, did you ever ask yourself why you or the organisation or the philosophy you believe never get the support of either sinhalese or tamils in Sri Lanka. //

    விரல் விட்டு எண்ணக் கூடிய மாதங்களுக்குள் வகைதொகையின்றி மக்களைக் கொன்று குவித்துவிட்டு இன்று அவ்வாறு கொண்றவர்களுக்காக வாக்குப் பிச்சை கேட்கின்ற தமிழ் தலைமைகளை நம்பி தமிழ் மக்களில் ஒரு பகுதி சரத்துக்கும் மகிந்தவுக்கும் வாக்களிப்பார்கள் அதற்காக அந்த மக்கள் தங்கள் சுய அழிப்பிற்கான கொள்கைக்காக வாக்களிக்கிறார்கள் என்று கொள்ளமுடியுமா?

    தமிழ் மக்களாக இருந்தாலென்ன சிங்கள மக்களாக இருந்தாலென்ன ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதே சரியானது என்பதற்கு மேல் எனக்கு எந்தத்தத்தவமும் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமா அல்லது மக்களை ஒடுக்க வேண்டுமா என்று வாக்கெடுப்பு வைத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்கே பெருமளவில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். எங்களுடைய கருத்துக்கு ஆதரவில்லை என்ற முடிவுக்கு எதனை வைத்து வருகிறீர்கள்.

    This is the political mantra for ”R Sampanthan & Co” Bandaranayaka or Dudley நமக! Srimavo or JR நமக! Chandrika or Premadasa நமக! மகிந்தவும் or Fonseka Namaga!

    //Whatever tactics played by enemies of Pirabakaran,the truth of the matter is that Pirabakaran is the only leader who stood for what he believed is right and never be an opportunistic as like others. He is a man of principle and tamils will love him forever./

    பிரபாகரன் தான் எதை நம்பினாரோ அதற்காக அவர் மட்டும் உயிரைக் கொடுத்திருந்தால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் தான் சரியென்று நம்பியதற்காக வன்னி மக்களையும் முள்ளிவாய்காலில் விட்டுவிட்டு சரத் பொன்சேகாவுக்கும் மகிந்தவுக்கும் எவ்விதத்திலும் குறையாமல் அம்மக்களை கொன்று குவித்தும் கொன்று குவிக்கக் காரணமாயும் இருந்துள்ளார். சரத் பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களின் எதிரகள் என்றால் வே பிரபாகரன் வன்னி மக்களுக்கு இழைத்தது வரலாற்றுத் துரோகம். மகிந்தவுக்கு கட்டுப்பட்டு சரத் பொன்சேகா தமிழ் மக்களை கொன்றார் என்று நீங்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்வது போன்று அதற்கு ஒத்து ஊதிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரபாகரனது கட்டளைக்கு கட்டுப்பட்டு அப்படிச் செய்தார்கள் என்று மன்னிப்பது மிகக் கடினம். உங்களுக்குள்ள அந்தப் பெருந்தன்மை எனக்கில்லை.

    Reply
  • k.naveenan
    k.naveenan

    ‘புலிகள் அராஜகவாதிகள் என்று வாய் கிழிய பேசிக் கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பானத்திலிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டபின் செய்து முடித்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை உதிரம் உறைந்து போகும் செய்தி. புலியைக் கண்டவனைஇ கண்டவனைப் பற்றிச் சொன்னதைஇ கேட்டவனைஇ கேட்டுக்கொண்டு நின்றததைக் கண்டவனைஇ பக்கத்தில் நிண்டவனை என்று சுட்டுத் தள்ளப்படும் அப்பாவி மக்களின் பிணங்களை சிலவேளை நாம் எண்ண மறந்திருக்கலாம்.’-ஈழமாறன்

    தயவு செய்து டக்ளஸ தேவானந்தா செய்த கொலைகளை அண்ணளவாக என்றாலும் பெயர் விபரங்களோடு தாருங்கள் ஈழமாறன். எதுகை மோனைக்காக கவிதை பாடுவது நல்லதல்ல. டக்ளஸன் அரசியல்- இன்று மகிந்தாவுக்கு பின்னால அலைவது என்ற விமர்சன்ஙகள் வேறு எனக்கும் உண்டு. இங்கு புலிஆதரவாளா;கள் போல விழுந்தபாட்டுக்கு…நான் நினைக்கிறேன் ஒவ்வோருவரும் தங்களை நடுநிலமையாளராக காட்டிக்கொள்ள இப்படி எதுகைமோனையில் எழுதவேண்டியிருக்கிறது போலும். உதிரம் உறையவேண்டாம். தாங்காது. டக்ளசின் கொலைகளில் ஒரு பத்துப்பேரையாவது பெயர்விபரங்களோடு தாருங்கள் பிளீஸ். (நாமறிய> 1. அற்புதன் 2. நிமலராஜன் 3. அதிபர் சிவகடாட்சம்….)

    Reply
  • jalpani
    jalpani

    ஈழமாறன் சொன்னதை டக்ளஸின் மனித உரிமை மீறலுக்கு ஆதாரமாக ஜெயபாலன் எடுத்தது ஆச்சரியமாக உள்ளது.”

    அது மட்டுமில்லை. யாழ்ப்பாணத்தில் நடந்த அப்போதைய படு கொலைகளை முன்னின்று செய்தவர்கள் இராணுவத்திடம் பிடிபட்டிருந்த புலி உறுப்பினர்கள் என்ற தகவல்கள் முக்கியப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படவில்லை. டக்ளஸை கரித்து கொட்டுவதே முக்கியம் என்பதால் யாரும் அதை கண்டு கொள்ள விரும்பவில்லை.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /மகிந்தவுக்கு கட்டுப்பட்டு சரத் பொன்சேகா தமிழ் மக்களை கொன்றார் என்று நீங்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்வது போன்று அதற்கு ஒத்து ஊதிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரபாகரனது கட்டளைக்கு கட்டுப்பட்டு அப்படிச் செய்தார்கள் என்று மன்னிப்பது மிகக் கடினம். உங்களுக்குள்ள அந்தப் பெருந்தன்மை எனக்கில்லை./— த.ஜெயபாலன். — முள்ளிய வாய்க்காலுக்கு முன்பு என்னுடைய பின்னூட்டத்தப் பார்த்தால் தெரியும்,பிரபாகரனைப் பற்றி அறிந்தவரை,”காடுகளில் ஒளிந்திருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட காடுகள்,கடற்கரைவரை நீண்டிருந்தால்,யாரும் பிடிக்க முடியாது” என்றும் பிரபாகரன் தப்பிச் செல்ல நிறைய வழியிருக்கிறது,வன்னிப் பிரதேசத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த மக்களை கொலைக் களத்துக்கு தள்ளுவதிலிருந்து “பிரபாகரனே! வன்னியை விட்டு வெளியேறவேண்டும்!” என்று எழுதியிருந்தேன்(பிரபாகரனின் நன்மைக்காகத்தான்).ஆனால் எங்கேயோ “காட்டிக் கொடுப்பு தவறு நடந்து”,வருங்கால “சொகுசு போர்க்கப்பல்” அரசியலுக்காக,அவரை,”கூண்டோடு கைலாசம் ஆக்கினார்கள்”.எதற்கென்றால்,”தமிழ்தேசிய கூட்டமைப்பு,பிரபாகரனின் கட்டளைக்கு கட்டுப் படவில்லை,பிரபாகரன்தான் தமிழ்தேசிய கூட்டமைபின் கட்டளைக்கு கட்டுப் பட்டிருக்கிறார்”.. ஏனென்றால், இதனால் இலாபமடைந்திருப்பது “சொகுசு போர்க்கப்பலில் இருப்பவர்க்ளே”,”பண்டாரவன்னியன்?+ “! பிரபாகரன் இல்லை!.

    Reply
  • jalpani
    jalpani

    டக்ளசின் கொலைகளில் ஒரு பத்துப்பேரையாவது பெயர்விபரங்களோடு தாருங்கள் பிளீஸ். (நாமறிய> 1. அற்புதன் 2. நிமலராஜன் 3. அதிபர் சிவகடாட்சம்”

    அற்புதனை புலிகளே சுட்டுக் கொன்றார்கள் எனவே புலம்பெயர்ந்த நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். அற்புதனுக்கு யுத்தக் களம் தொடர்பான சம்பவங்களின் தகவல்களை வழங்கி தாக்குதல்கள் பற்றி துல்லியமாகவும் சுவையாகவும் எழுத புலிகள் தகவல்களை வழங்கி தினமுரசின் போக்கை மாற்றினார்கள். அச்சமயத்தில் புலிகளிடம் அற்புதன் விலை போய்விட்டார். அதனால் எழுந்த முரண்பாடுகளின் சந்தடிசாக்கில் புகுந்து கொண்ட புலிகள் அவரை சுட்டுக் கொல்ல பழி டக்ளஸின் மேல் விழுந்தது.

    Reply
  • பல்லி
    பல்லி

    :://1. அற்புதன் 2. நிமலராஜன் 3. அதிபர் சிவகடாட்சம்….)//
    இதை தோழர் ஏற்று கொள்வாரா??பெயர் விபரம் பல்லியும் சிலது தருவேன்; ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு யார்; இப்பெல்லாம் புலிக்கோ அல்லது பொட்டரின் பொட்டுக்கோ மக்கள் பயம் இல்லை; ஆனால் கொழும்புக்கு பயம்; கனடாவில் ஏதும் மாறி கதைத்தாலும் வடமராட்ச்சியில் அடி விழும் அளவுக்கு தமிழர் தொழில் நுட்ப்பம் வளர்ந்து விட்டது; சங்கரியர் மகிந்தாவுக்கு ஒரு அன்புமடல் எழுதியதை யாரும் மறந்திருக்க முடியாது; அதில் தோழரின் மறுபக்கம் சாட்ச்சியங்களுடன் சொல்லியிருந்ததை மறந்து விட்டு தோழர் செய்த செய்கிற கருனைகொ;;;;;பேசலாமா??

    Reply