மீள் குடியேற்றத்துக்கான இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்தார். தற்போது வவுனியா நலன்புரி முகாம்களில் 79965 பேர் தங்கியுள்ளனர். மேலும் யாழ்ப்பாணத்தில் 1349 பேர் தங்கியள்ளனர். இதேவேளை வைத்தியசாலைகளில் 1626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி இன்னும் மீள் குடியேற்றத்துக்கு 82940 பேர் மாத்திரமே உள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் 2 இலட்சத்து 70000 பேராக இருந்ததாகவும் தற்போது அவர்களில் 169891 பேர் மீளக் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்