இலங் கையின் அரச படையினர் போன்ற சீருடை அணிந்தவர்கள், கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட சிலரை சுட்டுக்கொல்வதுபோல சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த வீடியோ காட்சி உண்மையானவைதான் என ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் என்னும் அமைப்பினாலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் காட்சி முதலில் அனைவருக்கும் அனுப்பட்டிருந்தது. ஆரம்பம் முதலே இலங்கை அரசாங்கத் தரப்பினர் இந்த வீடியோ போலியானது என்று கூறிவருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்த ஐ.நா.வின் சிறப்பு நிபுணர்கள், இந்த வீடியோ குறித்த அனைத்து சந்தேகங்களையும் களைந்துவிட்டதாக சட்டத்துக்கு புறம்பான, எதேச்சதிகார மற்றும் விசாரணையற்ற கொலைகள் குறித்த ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்டன் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்தால் இந்த வீடியோ குறித்து ஆராயுமாறு நியமிக்கப்பட்ட குழுவின் முடிவுகளில் குறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டனவா என்பது குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் சிறப்புத் தூதர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வீடியோ விடுதலைப் புலிகளின் பிரச்சாரமே என பிரிட்டனுக்கான இலங்கையின் தூதுவர் ஜஸ்டிஸ் நிஹால் ஜயசிங்க கூறியுள்ளார்.
BBC
satan
சதாம் உசைனை அமெரிக்கா அநியாயமாக கொல்லும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா.வுக்கு அடுத்த நாடுகளைப்பற்றி விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கின்றது.ஐ.நா இன்று உலகில் பொய்-நா வாகிவிட்டதே.
chandran.raja
ஐ.நாடுகளின் சிறப்பு தூதுவர் பிலிப் அலஸ்டன் கூற்று “இது உண்மை சம்பவமே” இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. சிறீலங்கா இராணுவத்தின் சீர்யுடை துப்பாக்கி வழிந்தோடும் இரத்தம் நிர்வாணமாக்கப்பட்ட உடல் சதுப்பு நிலம். இது சினிமாவுக்கு போடுகிற “செற்றிங்” என்று இல்லாமல் நிஜயமாகவே இருக்கிறது.(சினிமாவிலும் நிஜயமான மாதிரியே எடுக்கிறார்கள் அது வேறு விஷயம்) இது பேர்லின் இருந்து லண்டன் தொலைக்காட்சி சணல் நாலுக்குப் போய் இன்று ஐ.நாடு வரை சென்றுள்ளது. ஆய்வுகளை தொடர்ந்து நடத்தட்டும். எமக்கு தேவையானது அதில் கொல்லப் படுகிறவர் யார்? எந்த இனத்தை சேர்ந்த மனித உயிர்கள்?. அது ஏன் உயிருடன் பிடிபட்ட இராணுவ வீரர்களாக இருக்கக்கூடாது?. மதிநுட்பம் வாய்ந்த தேசியத்தலைவர் உலக அரங்கில் இலங்கை இராணுவத்தை ஒழுக்கங் கெட்டவர்களாக காட்டுவதற்கு எத்தனை முயற்சிகள் எடுத்திருக்கிறார்.அதில் இதுவும் ஒன்றே!. இப்பொழுது மேற்குலகநாடுகள் தொப்பிக்குள் இருந்து முயல் எடுக்க காத்திருக்கின்றன. இப்படித்தான் ஈராக்கிலும் எடுத்துக் காட்டினார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
DEMOCRACY
/இப்பொழுது மேற்குலகநாடுகள் தொப்பிக்குள் இருந்து முயல் எடுக்க காத்திருக்கின்றன. இப்படித்தான் ஈராக்கிலும் எடுத்துக் காட்டினார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்./– திரு.சந்திரன் ராஜா!, நீங்கள் டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர் என்று என்னால் அனுமானிக்க முடிகிறது!. இடதுசரிகள்? என்று கூறிக் கொள்ளுபவர்கள் “மேற்குலகம்” என்ற வார்த்தையை, உபயோகிக்கும் போது, சராசரி மக்கள், பணத்தேவை காரணமாக ,மேற்குலகத்தை ஆதரிக்கிறார்கள். அதனால், “நவீன என்.ஜி.ஓ. திருடர்கள்” அதில் ஒளிந்துக் கொள்ள முடிகிறது.
இலங்கை ஒரு சிறிய நாடு, அதில் தமிழர்கள் நெருக்கமான குடும்ப – சமூக அமைப்பைக் கொண்டவர்கள்.தங்கள் சமூகத்தில் யாராவது கொலை செய்யப்பட்டால், இந்த நவீன “தகவல் தொடர்பு யுகத்தில்” நிச்சயமாக “இப்படிப்பட்ட” இரகசிய கொலைகள் நடக்க வாய்ப்பேயில்லை!. இயக்கங்கள் “சமூக அமைப்புகளிலிருந்து” விலகி,”புலநாய்வுத்துறை”, புண்ணாக்குத்துறை, இராணுவ ரகசியங்கள் என்று ஜேம்ஸ்பாண்ட் வேலை காட்டியதன் விளைவுதான் இது, அதனால் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. தமிழகத்திலும் இந்தவியாதி 1985 க்கு பிறகு பரவியது. விருதுநகர் பெ.சீனிவாசனும், வைக்கோவும் தி.மு.க. மீது வைத்த குற்றச்சாட்டு, “முரசொலி மாரனும் கலைஞரும் மட்டும்” எந்தப் பிரச்சனையானாலும்(அரசியல்) “குசுகுசு” என்று தங்கள் குடும்பத்திற்குள்ளேயே பேசுவார்களே தவிர கட்சிகாரனை புரியவிடமாட்டார்கள் என்பது. சமூக அமைப்புகளை சிதைத்தால், “சூரிச்,வியன்னா” மாநாடுகளே நடைபெரும். மக்கள் குரல் இல்லை என்றால், அரசியல் உரிமை இல்லை. அரசியல் உரிமை இல்லை என்றால், ஸ்திரமான அரசாங்கம் இல்லை. ஸ்திரமான அரசாங்கம் இல்லையென்றால், ஊழலை ஒழிக்க முடியாது. ஊழல் இருந்தால், தற்போதைய நடைமுறை முதலாலித்துவம்? செயல்படாது, நிவாரணப் பணிகளில், மூன்றாம் உலக பொருளாதாரப் பணிகளில், என்.ஜி.ஓ. க்கள் நிர்வாகிகளின் சுயநலப்பாடு வெகு கொண்டாட்டம்.